Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 22

அடுத்த நாள் விடியலில் தன் ஊருக்கு வந்து சேர்ந்து இருந்தான் ராஜன். அவன் பிறந்து வளர்ந்த ஊர் தான், இங்கு அவன் சொன்னது சொன்னபடி நடக்கும், ஆனால் இன்று ஏனோ அன்னியமாக தேன்றியாது. இதுவரை சென்னையில் இருந்த இதம் இங்கு தொலைந்து போய் இருந்து.

தானாக ஒரு இறுக்கம் அவனுக்குள், வீட்டில் நுழைந்தவன், தன் அறைக்கு சொல்ல நினைக்கும் போது, அங்கு வள்ளி அவன் அருகே வந்து இருந்தார், இத்தனை நாள் தள்ளி நின்று பார்த்து இருப்பார், இதுவரை அவனிடம் அவர் பேசிய வார்தைகளை விரலு விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இன்று அவன் முன் வந்து நின்று இருந்தார். வந்துவிட்டார் தான் ஆனால் ஏதும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்த படி இருந்தார்.

அதில் ஒரு தாயின் தவிப்பு இருந்து தான், ஆனால் அதற்கு பிரதிபலிப்பு தான் அவனிடம் இல்லை. இல்லை என்பதை விட அவனுக்கு அது வரவில்லை. இன்னும் அவரிடம் அவனுக்கு எப்படி நடந்துக்கொள்வது என்பது புரியாத புதிர் தான். சற்று நேரம் நின்றவன் அவரை தாண்டிக்கொண்டு செல்ல நினைக்க, ராசா ஒரு நிமிஷம் என்றார்.

நின்றவன் திரும்பவில்லை, இத்தனை நாள் எங்க போனிங்க, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல, என்றவர் கண்களில் ஈரம், அவனுக்கு புரிந்து இது ஒரு தாய்யின் பதற்றம், ஆனால்……………………… அதற்காக என்று அவன் யோசனை செல்ல, அதை தடை செய்து அவர் குரல்.

எனக்கு புரியிது நீங்க இங்க இருக்க விரும்பல, இங்க உங்களுக்கு பழசு எல்லாம் மறக்க கொஞ்சம் நாள் ஆகும் தான்………………..

என்றவர் மீண்டும், அந்த புள்ள உங்க மேல உசுரே வைச்சி இருக்கா……….. அதனால தான் அப்படி ஒரு முடிவு எடுத்து செத்து பிழைத்து வந்து இருக்கா………………….

அவள கல்யாணம் பன்னிகிட்டு இங்கு இருந்து போய் நீங்க சந்தோஷமா புள்ள குட்டியோட வாழனும், நீங்க நல்லா இருக்கனும் தான் நான் இத்தனையும் செய்தேன். என்று மேல சொல்ல போனவரை தடுத்தவன்.

இங்க பாருங்க, நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் உடனே சரியாகாது. ஆனா நீங்க சொல்ற மாதிரி இந்த கல்யாணம் நடக்காது. இதுவரைக்கும் எல்லாத்தையும் நீங்க எல்லோரும் உங்க இஷ்டத்துக்கு நடத்திகிட்டு போதும்.

இது என் வாழ்க்கை அதை எப்படி முடிவு எடுக்கனும் எனக்கு தெரியும், என்றவன் அங்கு நில்லாமல் சென்றுவிட்டான். மகன் தன்னை புரிந்துக்கொள்வான், தன்னிடம் இனக்கமாக இருப்பான் என்று நினைத்த வள்ளிக்கோ பெரும் ஏமாற்றம். 

எப்படியாவது பார்கவியை அவனுக்கு திருமணம் முடித்துவிட்டால் மகன் தன்னுடனே இருப்பான் என்று நினைத்து இருந்தவருக்கு இது பெரும் ஏமாற்றமே.

…………………………………………………..

இதே நேரத்தில் சென்னை வந்து  இறங்கி இருந்தார் சண்முகம், முதலில் நாயகியை பார்த்து பேசலாம் என்று நினைத்து இருந்தவர், தன் முடிவை மாற்றிக்கொண்டு செந்திலை பார்க்க அவர் அலுவலகம் வந்து இருந்தார்.

இவரை யார் என்று தெரியாத செந்தில் இவரை வரவேற்று அமரவைத்து என்ன என் கேட்க,அவர் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். சண்முகம் தன்னை அறிமுகம் செய்த பின் செந்திலின் முகமாற்றத்தை வைத்தே அவருக்கு தன்னை பற்றி எல்லாம் தெரிந்து இருக்கிறது என்று ஊகித்துக்கொண்டவர், நேரடியாக நாயகியின் திருமணத்தை பற்றி பேசினார். சார் இந்த நிமிஷம் நான் நல்லவனா? கெட்டவனா? அப்படினு ஆராய்ச்சி பன்னாம, நான் சொல்ற விஷயத்தை பத்தி மட்டும் யோசிங்க, நீங்க ஒரு வக்கீல் உங்கிட்ட வர கேஸ் எல்லாம் நீங்க எப்படி எடுத்துபிங்களோ அதே மாதிரி என்னை நினைச்சுக்கோங்க என்றவர் பேச்சில் செந்தில் அசந்து தான் போனார். எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் பன்னிட்டு எப்படி இந்த ஆளாள இப்படி பேச முடியுது என்று எண்ணி வியந்தார்.

இங்க பாருங்க சார் நான் சுத்தி வளைக்க விரும்பல, நாயகிக்கு இதுவரைக்கும் என்ன நடந்து இருந்தாலும் அவளுக்கு நான் இருந்தேன். நான் இருந்தேன்னா? அவ இங்க வந்துல இருந்து அவளை கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவ என் மூலமா வந்த எந்த உதவியும் ஏத்துகல, அதில் அவள் கஷ்டபட்டு இருந்தாலும், அவளுக்கு வேற ஏதும் பிரச்சனைகள் வராம நான் என் பாதுகாப்பு வளையத்தில் தான் அவளை வைத்து இருந்தேன்.

அந்த காரணத்தில் தான் அவ இன்னிக்கு இப்படி இருக்கா……….. உங்களுக்கு தெரியாது இல்ல, இன்னிக்கு பெம்பளபிள்ளைகளுக்கு எந்த அளவுக்கு இங்க பாதுகாப்பு இருக்குனு, இதுவரைக்கும் நானோ, நீங்களோ அவளை பாத்துக்கிட்டாலும், இப்படியே எப்பவும் காலம் இருக்காது, அவளுக்குனு ஒரு வாழ்க்கை அமையறது தான், அவளுக்கு பாதுகாப்பு, எல்லாத்தையும் விட என் பெண்ணு நல்ல வாழனும் தான் நான் எல்லாத்தையும் செய்தேன், அதுவே இல்லைனு ஆக கூடாது, அவ நீங்க சொன்னா கேட்பா, அவளை கல்யாணம் பன்னிக்க சொல்லுங்க, அது யாரா இருந்தாலும் எனக்கு ஒகே தான், ஆனா அது ராஜன்னா இருந்தா அவளுக்கு நல்லது, என்ன தான் நாம மாறி இருந்தாலும், அவளுக்கு வேறு ஒருத்தர் கூட கல்யாணம் நடந்தா இன்னிக்கு இல்லைனாலும் நாளைக்கு ஒரு பிரச்சைனை வரும் போது இந்த பேச்சு வரும், அதனால் தான் அவள் திருமணம் அவனுடன் நடக்க வேண்டும் என்றும், அதை அவர் சொன்னால் அவள் கேட்பாள் என்றும் அவர் செந்திலிடம் பேசியவர், தன் பேச்சு முடிந்துவிட்டது என்பது போல் எழுந்துக்கொண்டார்.

முதலில் அவர் அதிர்ந்தாலும் அவர் பேசியவிததில் அசந்து தான் போனார். இப்படி ஏதுவுமே நடக்காது போல் ஒருவரால் பேச முடியுமா? அதுவும் அவளின் இந்த நிலைக்கு அவர் தான் காரணம் என்ற எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், சண்முகம் நாயகி திருமண விஷயம் பற்றி பேசி அவள் எப்படியாவது ரங்கராஜனை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் எப்படி  கூறினார் என்று அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவர் ஏதும் சொல்லாமல், இதை பற்றி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது, நீங்க சொல்லவது எனக்கு புரியுது நான் நாயகியிடம் பேசுறேன் ஆனால் என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது என்றார். செந்திலும் சரி என்ற படி தலை அசைத்து அங்கு இருந்து கிளம்பி இருந்தார்.

அதன் பின் தன் வீட்டில் கீதாவுடன் அதை பற்றி செந்தில் பேச, கீதாவும், அவர் சொல்லவதும் சரி தான் செந்தில், நாம எப்பவும் அவ கூட இருக்க முடியாதே, நாம்மால முடியும் என்றால் அவளை திருமணத்திற்க்கு சம்மதிக்க வைக்கலாம் என்றார் அவரும், அதே சமயம் அவள் இந்த வீட்டிற்க்கு வந்தால் நான்றாக இருக்கும் என்றும் கூறினார்.

…………………………

முதல்  3 நாட்களில் ராஜனுக்கு வேலை சரியாக இருந்து, சண்முகம் இல்லாது அவனது வேலை பளுவை மேலும் அதிகரித்து இருந்து. முதல் 3 நாட்கள் அதன் பின் ஒடியவன் எல்லாம் முடிந்து வழக்கமான வேலைக்கு வந்த உடன், அவள் நியாபகம் வந்து, இப்போது என்ன செய்துக்கொண்டு இருப்பாள்.

அங்கு இருக்கும் போது அவளை பார்த்து பேசவில்லை என்றாலும், இப்போது அதிகம் நினைக்க தோன்றியது அவனுக்கு, அதுவும் அன்று செந்தில் அவள் திருமணம் பற்றி பேசியது, அது பற்றி அவள் என்ன முடிவு எடுப்பாள் என்று தெரிந்துகொள்ள மனம் அடித்துக்கொண்டது.

அவள் ஒரு வேளை அசோக்கை திருமணம் முடிப்பாளோ, அப்போது எங்கள் எதிர்கால சந்திப்புகள் எப்படி இருக்கும். அவள் வேறு யாரையாவது திருமணம் முடித்தாலும் கண்டிப்பாக அவளை தவிர்க்க முடியாது, அவர்களின் தொழில் நிமித்தமாக அவர்களின் சந்திப்புகள் இருக்கும் அப்போது அவளை எப்படி எதிர் கொள்ளவது. என்று அவன் மனம் கேள்வி கேட்க. அவள் தான் உன்னை கண்டு கொள்ளவதே இல்லையே பிறகு என்ன என்று மற்றோரு மனம் கேள்வி எழுப்பியது.

இப்படி இவன் சிந்தனை போய்கொண்டு இருக்க, அலைபேசி அழைத்து, அழைத்து தமிழ், எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனைக்கு பின் அவன் அழைப்பை எடுக்க, அந்த புறம் பேசியதோ கவி.

அவள் குரல் கேட்டதும், முதலில் என்ன பேசுவது என்று அதிர்ந்தவன், அடுத்து அவளிடம் சொல்லு எப்படி இருக்க என்றான். குரலில் என்ன இருந்து அவளுக்கு அது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நெருக்கம் இல்லை. எல்லாம் சரியாக சென்று இருந்தால் அவர் இப்படியா இருப்பார். எல்லாம் என் முட்டாள் தனத்தால் என்று எண்ணி வருந்தியவள், அமைதியாக இருந்தாள். அவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.

சிறிது நேரம் பெறுத்தவன், ஒன்னும் இல்லைனா வைக்கிறேன் என்று  கூற………………….

இல்லை…………………. இல்லை…………………. வேணாம்……………. அது…………….. என்று இழுத்தவள், என் மேல இன்னும் கோவமா? என்றாள் ஒரு வழியாக……………. அவன் இல்லை என்றான் ஒற்றை வார்த்தையில், அதில் மகிழ்தவள் அடுத்து பேசும் முன். உங்க மேல கோவபட நான யாரும் இல்லை உங்களுக்கு……………….. என்றவன் வார்த்தையில் இவள் கண்களில் கண்ணீர் மழை…………………..

இங்க பாருங்க பார்கவி நான் சொல்லவரதை சரியா புரிந்துக்கொள்ளுங்கள். யாரையும் வற்புறுத்து எதையும் செய்ய வைக்க முடியாது………… 

நீங்க எனக்கு வீட்டில் பார்த்த பெண் தான், இருவரிடமும் கேட்டு தான் திருமண ஏற்பாடு செய்தார்கள் இல்லைனு சொல்லை, ஆனா இன்னிக்கு நிலை அப்படி இல்லை, நாம ஒன்னும் உயிருக்கு உயிரா காதலித்து பிரிந்து போகலா, உண்மையில் நம்ம  இரண்டு பேருக்கும் புரிதல் இருந்து இருந்தா, எந்த சந்தர்பத்திலும் உங்களை நான் வேண்டாம் என்றோ, நீங்க என்னை வேண்டாம் என்றோ சொல்லி இருக்க மாட்டோம்.

எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள வீட்டு கொடுக்க கூடாதுனு நீங்களோ நானோ நினைக்கவில்லை. அப்படி இருக்கும் போது இப்போது என் வீடு இருக்கும் நிலையில் இந்த திருமணம் சாத்தியம் இல்லை. அப்படியே நடந்தாலும் எதிர் காலத்தில் ஏன் இந்த திருமணம் செய்தோம் நினைக்க தான் தோனும், அதனால் தான் சொல்றேன் ப்ளிஸ் இதை பற்றி இனிமே பேசதீங்க, அது தான் இரண்டு பேருக்கும் நல்லது என்றான்.

அவன் சொல்வதை எல்லாம் கேட்டவள் மனம் வருந்தினால், ஏதும் பேசாமல் அழைப்பை துண்டித்தவள். கண்ணீர் வீட்டு கறத ஆரம்பித்தாள். அவள் பேசியது எல்லாம் தமிழ் கேட்டு இருந்தாலும் எதும் சொல்லவில்லை, அவளே யோசித்து நல்ல முடிவுக்கு வரட்டும் என்று விட்டுவிட்டான்.

……………………………………………………..

Advertisement