Advertisement

அசோக், எல்லாம் முடிந்தா, வேற ஏதாவது சந்தேகம்? என்றாள் ராஜனை பார்த்தபடி கேள்வியாய். அசோக் என்ன சாப்பிடுற?

என்று கேட்க………………….

அதில் இதுவரை இருந்த நிலை மாறி இலகுவாக் அவனிடம், முதலில் எனக்கு ஒரு காபி சொல்லு அப்புறம் ……………. என்று அவள் தொடர…………….

ஹலோ……. நாங்க என்ன இங்க சர்வீசா பன்றோம்….. நீங்க பாட்டு ஆடர் போடுட்டு இருகிங்க என்றான் அவள் மேல் சற்று முன் இருந்த கேபத்தை மனதில் வைத்து.

ஹலோ………….. உங்க கிட்டயா கேட்டேன். என்றவள் மேலும் பேசும் முன்………..

அசோக் இடையிட்டு உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை, பேச ஆரம்பித்தாலே கடிச்சுகிறிங்க…………. என்றவன். ஹேய் இது என் காலேஜ் பிரண்டு, இது தான் நான் கல்யாணம் பன்னிக்க போற பெண்ணு, இப்போதைக்கு என் காதலினு வைச்சுக்கலாம் என்றான் அசோக், அவன் சொன்ன விதத்தில் அதிர்ந்தவன், என்ன? என்றான் அவனிடம், ஆமடா, மேடம் என்னோட 15 வயசுல இருந்து பிரண்டு. தீடிர்னு எங்க அப்பாகிட்ட வந்து மாமா உன் பையனை கல்யாணம் பன்னிக்கிறேன் சொல்லிட்டா!!!!!!!!!!!!!!!!! னா பாரேன் என்றான் சிரிப்புடன். 

இதை எல்லாம் கேட்டவன், அவளை திரும்பி பார்க்க, அவளே அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அமர்ந்து மெனு கார்டை பார்த்துக்கொண்டு இருந்தாள். டேய் பொய் சொல்லாத, அங்க ஒரு ரியக்சனையும் கானோம் என்றான் அசோக்கை பார்த்து.

அசோக் நாயகி என்றான், உடனே அவள் அவனை பார்த்து புன்னகைத்து எனக்கு மசால் தோசை ஒகே என்றாள்.

அதில் அவன் கடுப்பாக. ராஜன் முகத்தில் சிறு புன்னகை. ஏய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…………… என்றான் அவளை பார்த்து. சரி விடு அசோக் அதான் சொல்லிட்டியே மாமா எப்போ பையன் கொடுக்குறார் சொல்லு வந்து துக்கிட்டு போறேன் என்றாள். சற்றும் அலட்டாமல்…………..

அவள் அப்படி சொல்லியதில் அவன் முகம் இருக, நான் கிளம்புறேன் என்றவன் அங்கு இருந்து கிளம்பி இருந்தான். அப்போதும் அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. சரிடா பார்க்கலாம் என்ற அசோக், இவள் புறம் திரும்பிவிட, அதே ஒட்டலில் அவன் தங்கி இருந்த அறைக்கு வந்தவன் கொதிப்பு மட்டும் அடங்கவில்லை. அவன் தான் காதலினு சொல்றான்னா………. இவளும் பல்லை காட்டிக்கிட்டு உக்காந்து இருக்கா……………. இவளுக்கு என்னை தெரியாதா?…………….என் பெயர் தெரியாதா?  

எவ்வளவு திமிரு இருந்தா அப்படி இருப்பா………….. என்ன பார்த்த எப்படி தெரியுது அவளுக்கு என்று மனதில் பெருமியவன்…… அதை யாரிடம் பகிர்வது என்று தெரியவில்லை.

அடுத்து அவனுக்கு தெரிந்த, தற்பொது நெருங்கிய நபர் என்றால் அது தமிழ் தான், அவனுக்கு அழைத்தான். அவன் அழைத்த போது சாப்பிட அமர்ந்து இருந்தவன். இவன் அழைப்பை பார்த்தவன்.

யோசனையுடன் அலைபேசியை காதில் வைத்தான். 

டேய் தமிழ் அவளுக்கு என்னை தெரியாத மாதிரி இருக்காடா……. என் பெயர் தெரியாதாம். அவன் வேற அவனோட காதலினு அவளை சொல்றான், இவளும் பல்லை காட்டிகிட்டு ஓக்காந்து இருக்காடா……….

எனக்கு வந்த கோவத்துக்கு அப்படியே ஒன்னு போட்டு இருக்கனும்………. என்று பேசிக்கொண்டே போனவனை ………… நிறுத்தியவன். 

இங்க தான் நான் பேசினதுக்கு எல்லாம் புரியாம பேசிட்டு இருந்தேனு பார்த்தேன், எங்க இருந்தாலும் ஏன்டா இப்படி………………. என்றவன்

முதல யாரை பத்தி பேசுற, எதை பத்தி பேசுறே? அதை சொல்லிட்டு பேசு என்றான்………………..

நீ வேற ஏன்னடா……… நான் வேற யார பத்தி பேச போறேன் எல்லாம் அந்த நாயகி தான் என்றான் கோவம் அடங்காமல். 

நாயகி?????????? என்று அவன் இழுக்க……

ம்மம்ம ரங்கநாயகி என்றான் கோவத்துடன்..

கேட்டவன் அதிர்ந்தாலும், சிறிது நேரத்தில் சுதாரித்தவன், இப்போ அவளுக்கு என்ன என்றான் சாகவாசமாய்.

என்னடா இப்படி சொல்லுற என்றான் ராஜன்.

பின்ன என்ன அந்த பெண்ணுக்கு கல்யாணம்னா உனக்கு என்ன வந்துச்சு, என்றவன் மேலும் ஏன் நீ கூட தான் கவிய கல்யாணம் பன்ன இருந்த…………. 

அப்போ அந்த பெண்ணு கல்யாணம் பன்ன கூடாதா? என்றவன் கேள்வியில் ராஜனுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

சொல்ல போன இதுக்கு நான் சந்தோஷம் தான் படனும் நீ வேற ஏதோ வீரமான பெண்ணு வேனும், எங்க அம்மா இடத்தை நிரப்பனும் பேசினத பார்த்து, அந்த பெணு மேல உனக்கு விருப்பம் இருக்கும் நினைத்தவிட்டேன் ஒரு வேளை அவளை தான் கல்யாணம் பன்னுவியேனு நினைச்சுட்டேன்.

இப்பதான் நிம்மதியா இருக்கு, இன்னும் கவிக்கு வாய்ப்பு இருக்கு என்றான் மகிழ்வாய்.

அதை கேட்டதும் இவன் முகம் வேப்பங்காய் தின்றது போல் ஆக. அடுத்து என்ன பேசுவது என்று அவனுக்கு தெரியவில்லை. அது இல்லைடா, அவன் எப்படி பட்டவன், என்ன பன்றான் எல்லாம் தெரியாமா……… அதுவும் இல்லாம முன்னாடி நடந்து எல்லாம் அவனுக்கு தெரிந்தால்……….. அதான் என்றான் குரலில் சோர்வை காட்டி.

உனக்கு என்ன தெரியனும், அவ இங்க இருந்து போனதுக்கு பிறகு அரசு பள்ளியில் சேர்ந்தா, அங்கேயே விடுதியில் தங்கிட்டா. அதுமட்டும் இல்லாம, அங்க லாயர் ஒருத்தர் கிட்ட பார்ட் டைம் வேலை பார்த்தா, அவர் பேர் செந்தில், அவர் மனைவி பேர் கீதா, அவங்களுக்கு ஒரு பையன் அசோக். உன் காலேஜ் தான்.

அங்கயே வேலை பார்த்து அவளோட கலோஜ் முடிச்சு, பி எல் முடிச்சு சென்னையில் ஒரு நிறுவனத்தின் குழுமத்திற்க்கு சட்ட ஆலோசகர் (legal Advisor) இருக்கா,  இது தவிர்த்து ஷேர் மார்கட்டுல இருக்கா. என்று பேசிக்கொண்டு போனவனின் பேச்சை நிறுத்தி இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்றான் ராஜன்………….

எப்போ உங்க வீட்டுல இருந்து பெண்ணு கேட்டிங்களோ அப்பவே நான் இதை எல்லாம் விசாரிசிட்டேன். எனக்கு உங்க இரண்டு பேருக்கும் நடந்து எல்லாம் தெரியும். அப்படி இருக்கும் போது என் தங்கச்சி வாழ்க்கை நல்லபடியா இருக்கனும் இல்ல. அதான் அவளை பத்தி எல்லாம் தெரிந்து கொண்டேன், என்றவன் மேலும் இதுக்கு அப்புறம் அவள் இங்கு வரமாட்டா என்று உறுதியா தெரிந்த அப்புறம் தான் இந்த கல்யாணத்தையே மேல பேச சொன்னேன் என்றான் தமிழ்.

அவன் சொன்னவற்றை கேட்டவன் என் உணர்ந்தான் என்று அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவன் அவளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்க. தனக்கு அவளை பற்றி ஒன்றுமே தெரியவில்லயே? என்ற நினைப்பில் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இனைப்பை துண்டித்தான்.

இவன் மட்டும் என் தங்கச்சிய கல்யாண் பன்னுவானாம். அவ இங்க இருக்கும் போது அவளுக்கு முன்னே நிச்சயம் வைப்பானாம். ஆனா அவ காதலிக்கறேன் சொன்னா மட்டும் இவனுக்கு கொடையுதாம்………… என்று மனதில் நினைத்தவன் தன் வேளையை பார்க்க போய்விட. 

இங்கு ராஜனின் மனசாட்சியும் அதே கேள்வியை தான் அவனை கேட்டது. 

ராஜன் அங்கு இருந்து சென்றதும், அவளை பார்த்த அசோக், என்ன ஆச்சு நாயகி, யார் கிட்டயும் நீ  இப்படி பேசமாட்டியே, அவன் கிட்ட ஏன் அப்படி நடந்துகிட்ட, அவனை உனக்கு தெரியுமா? என்றான் கேள்வியுடன். …………….

சிறிது நேரம் மௌனமாய் இருந்தவள், ம்மம்மம ………….. என்று தலையாட்டியவள். அவன் மிஸ்டர். ரங்கராஜன், சன் ஆப் கலாதரன், சிங்கம்பட்டி என்றாள், அவனை பார்த்து. அவள் சொல்லியதில் அதிர்ந்தவன், ஏய்………… என்னடி சொல்லுற இது…………. இது……………. உன்னோட மாமா பையன் னா? என்றான் அதிர்வுடன்…………………….

அவனுக்கு இந்த அதிர்வை தாங்க முடியவில்லை. அவளை பற்றி அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் அனைத்தும் தெரியும், கடைசியாக நடந்த பிரச்சனை வரை. ஊரில் இருந்து வந்தவுடன் அவள் செந்திலை சந்தித்து அனைத்தையும் சொல்லி இருந்தால்.

கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான், இப்படியும் மனிதர்களா என்று. ஆனால் அவன் தான் இவன் என்பதை அசோக் நினைக்கவில்லை…………. 

அதன் பின் அறைக்கு வந்தவள், இப்போது அதை பற்றி தான் நினைத்துக்கொண்டு இருந்தாள். நான் ஏன் அப்படி அவனிடம் நடந்துக்கொண்டேன். அவனை வெறுப்பு ஏற்றவா அப்படி செய்தேன். என் மனதில் அவன் மீது ஏதும் எண்ணம் இருக்கிறதா?!?!??

என்று தன்னையே ஆராய்ந்துக்கொண்டாள்?

அதே போல் தான் ராஜனும் தன்னிடம் கேட்டு கொண்டு இருந்தான் அவளுக்கு திருமணம் என்றால் எனக்கு என்ன வந்து? என்க்கு இப்பொது இருப்பது போல் தான் அவளுக்கும் இருந்து இருக்குமோ?

என் மனதில் என்ன இருக்கிறது? 

இப்படியே யோசித்துக்கொண்டு இருந்தவன், சிறிது நேரத்தில் இனி அவள் வாழ்வில் நான் தலையிட விரும்பவில்லை, அவள் வாழ்க்கை அவள் இஷ்டம் என்று முடிவு எடுத்தவன்………….. நிலை அடுத்து அவளை அசோக் வீட்டில் பார்க்கும் போது எப்படி இருக்கும்……………….

 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement