Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிரவும் நன்றி.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 20

ரங்கநாயகி அவள் ஆசிரியர் சிவாவுடன் சென்னை வந்த போது அரசு பள்ளியில் கணிதம், அறிவியல் பிரிவில் சேந்ததோடு அங்கேயே விடுதியிலும் சேர்ந்துக்கொண்டாள். என்ன தான் அரசு பள்ளியில் எல்லாம் இலவசமாக கிடைத்தாலும், அவளுக்கு என தனிபட்ட செலவுகள் இருக்க தான் செய்தது, முதலில் சிவா மாத மாதம் அவளுக்கு சிறு தொகை கொடுத்து உதவினாலும். தனக்கு என ஒரு பகுதி நேர வேலை வாங்கி தருமாறு அவள் சிவாவிடம் கேட்க. 

அவன் அழைத்து சென்றது அசோக்கின் பொற்றோரிடம் தான். அசோக் அவனிடம் சிறப்பு வகுப்புக்கு வரும் மானவன், அவன் பெற்றோர் செந்தில் மற்றும் கீதா இருவரும் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள், அவர்களிடம் சிவா இவளின் நிலையை சொல்லி உதவுமாறு கேட்க, அவர்களும் உதவ முன் வந்தனர். ஆனால் தனக்கு வேலை தான் வேண்டும் என்று இவள் பிடிவாதம் பிடிக்க, 18 வயதுக்கு உள்ள இருக்க உனக்கு என்ன வேலைமா தர முடியும், அது சட்ட படி தப்பும் கூட என்று அவர்கள் கூற. இவள் நீங்கள் எனக்கு செய்யும் உதவிக்கு நானும் பதிலுக்கு உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று பிடிவாதமாக கூற, அவர்களின் வழக்கு பற்றிய கூறிப்புகளை கணினியில் பதிவு செய்ய சென்னார்கள், அதுவும் விடுமுறை நாட்களில் மட்டும்.

முதலில் அவள் தடுமாறினாலும், விரைவில் அந்த வேலையை நேர்த்தியாக செய் கற்றுக்கொண்டாள். அவள் வேலை செய்யும் பாங்கு அவர்களுக்கு பிடித்து போக, அவளை கணினி பயிற்சி வகுப்பிலும் சேர்த்தனர். தனக்கு இது தேவையா இல்லை என்ற எந்த எண்ணமும் இல்லாமல். படிப்பதற்க்கு என்ன வழிகள் எல்லாம் இருந்தோ அதை எல்லாம் பயன்படுத்திக்கொண்டாள் ரங்கநாயகி. அவபோது வீட்டில் சம வயதில் உள்ள அவளையும், அசோக்கையும் ஒப்பிட்டு போசுவது உண்டு, அப்போது எல்லாம் அசோக்கு  அவள் மேல் கொலை வெறியே வரும், ஆனால் அவன் பள்ளி படிப்பு முடித்து, கல்லூரி சேர்ந்த போது வெளி உலக அனுபவம், அவனுக்கு ரங்கநாயகி மேல் நல்ல எண்ணத்தை ஏற்படுத்து இருந்து. அதனால் அவளிடம் நட்புடனே இருப்பான், முதலில் ரங்கநாயகி விலகி சென்றாலும். பின் நாட்களில் அவளுக்கு அசோக் நல்ல நன்பன் தான். அவள் மனம் விட்டு பேசும் ஒரே நபரும் அவன் தான்.

ரங்கநாயகி வீட்டில் அவள் கல்லூரி படிப்புக்கு உதவி செய்யாத போது, அசோகின் பெற்றோர் அவளை படிக்க வைக்க முன் வந்தாலும், அதை மறுத்து அவள் பட்ட படிப்பையே தேர்ந்து எடுத்தாள். அதோடு அவர்களை தன் முன் மாதிரியாக கொண்டு சட்டம் படித்தால். தங்கள் மகன் பொறியியல் படிப்பை தேர்ந்து எடுக்க, இவள் சட்டம் படித்து அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். அன்றில் இருந்து அவர்களின் செல்ல பிள்ளை அவள் தான்.

அசோக் அவபோது அதை செல்லி வம்பு செய்தாலும், அவர்களின் கூட்டில் அவளையும் சேர்த்து இருந்தான். அவன் படிப்பு முடிக்க அவன் தாத்தா தொழில்கள் அவன் வசம் வந்து இருந்து. இவள் ஒரு முன்னனி நிறுவனத்தின் குழுமத்திற்க்கு சட்ட ஆலோசகர் (legal Advisor), பணியை தேர்ந்து எடுத்தாள், மேலும் பங்கு சந்தையிலும் நல்ல முதலீடுகள் செய்து சிறிது காலத்திலேயே நல்ல லாபம் பார்த்து இருந்தாள். முதலில் சில சருக்கல்கள் இருந்தாலும், பின் அதன் நெலிவு சுலிவுகளை கற்றுக்கொண்டாள்.

அவள் தன் ஊருக்கு கிளம்புவற்க்கு முன்னால் அவர்கள் வீட்டுக்கு வந்து இருந்தவளிடம் செந்தில் அவள் திருமணம் பற்றி பேச, அவளோ சும்மா காமெடி பன்னாதிங்க அங்கிள், எனக்கு கல்யாணமா? எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி பேசுறீங்க. நாம என்ன தான் செய்வாய் கிரகத்துக்கு போனாலும், இன்னும் இங்க பல விஷயங்கள் மாறல, மாறாது……. என்றாள்.

அப்படி இல்லை டா மா என்று அவர் அவளிடம் மீண்டும் பேச……….

சரி அங்கிள் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், என்னை பத்தி எல்லாம் தெரியும் உங்களுக்கு, என்னை அசோக்கு கல்யாணம் பன்னி வைப்பிங்களா என்ற கேள்வியில் அவர்கள் அமைதியாக இருந்த நொடியில், சரி எப்போ கல்யாணம் பன்னிக்கலாம் என்று அவள் பின்னால் இருந்து கேட்டு இருந்தான் அசோக்.

அவனின் இந்த பதிலில் அவள் அதிர்ந்து பார்க்க. அப்புறம் என்னமா என் பையனோ ஒகே சொல்லிட்டான் எப்போ கல்யாணம் என்றனர் அந்த தம்பதியினர். இப்போது அமைதியாக இருப்பது அவள் முறையானது.

அவள் அமைதியை பார்த்தவர் சரி யோசித்து சொல்லு என்றார்கள் மகிழ்வுடன். அன்று இரவே அவள் ஊருக்கு கிளம்பிவிட, அதன் பின் அதை பற்றி பேசும் சந்தர்பம் அமையவில்லை அவர்கள் இருவருக்கும்.

………………………………………….

எல்லா ஏற்படுகளூம் செய்து அடுத்த இரு நாட்களில் ராஜன் சென்னை வந்து இருந்தான். ஒரு ஒட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தவன். அசோக் போன் செய்து சந்திப்பது பற்றி கேட்க, அவன் அவனை அங்கயே வர சொல்லி இருந்தான்.

அங்கு உள்ள உணவு விடுதியில் சென்று அவனுக்காக காத்து இருந்தவன் முன் சில நிமிடங்களில் வந்து அமர்ந்தான் அசோக். அவர்கள் இருவரும் நலன்களை விசாரித்து முடித்தபின். தன் வீட்டில் சில குடும்ப பிரச்சனைகள் என்றும், அதனால் சில காலம் சென்னையில் தங்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும், இங்க தொழில் தொடங்க விரும்புவதாகவும் கூறினான்.

அவன் சென்னவற்றை எல்லாம் கேட்ட அசோக், அது பற்றி சிலதை கூற இருவரும் அடுத்த அரை மணிநேரம் அவர்கள் தொழில் பற்றி விவாதித்தனர்.

முடிவில் அசோக் தற்போது புதியதாக தொடங்க உள்ள ஏற்றுமதி தொழிலில் அவன் இடத்தில் இருந்து தேங்காய் நார் மற்றும் பால் பொருட்களை ஏற்றுமதி சொய்யலாம் என்றும், அதற்க்கு என்ன செய் வேண்டும் என்பது பற்றிய விவாத்த்தில் இருந்தனர்.

அப்போது அந்த உணவு விடுதிக்குள் நுழைந்த ரங்கநாயகி, அங்கு அசோக் உடன் பேசிக்கொண்டு இருக்கும் ராஜனை பார்த்து அதிர்ந்தாலும். பின் தன்னை சமன்படுத்திக்கொண்டவள். அவர்களை நோக்கி சென்றாள்.

இருவரும் பேச்சில் கவனமாக இருக்க, தங்கள் அருகில் யாரே நிற்பதை உணர்ந்து நிமிர்ந்த ராஜன் அவளை கண்டு அதிர்ந்து தான் போனான். ஆனால் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதற்குள் அவளை வரவேற்ற அசோக் வாங்க மேடம் உட்காருங்க என்று தன் அருகில் இருந்த நாற்காலியை காட்ட அவளும் அமர்ந்தாள்.

ராஜன் இவங்க ரங்கநாயகி, நம்ம பன்ன போற பிஸ்னஸ்க்கு இவங்க தான் சட்ட ஆலோசகர் (legal Advisor), நம் இப்போதைக்கு பேங்கல தான் லோன் அப்ளை பன்ன போறோம் அது தவிர்த்து சட்டபடி நம்ம என்ன பன்னும், என்னென தேவை அது பத்தி பேச வந்து இருக்காங்க என்றவன்,  அவளிடம் இவர் ரங்கராஜன் என்று அவனையும் அறிமுகம் படுத்தி வைத்தான்.

அவளோ அவன் புறம் திரும்பி ஒர் புன்னகையை உதிர்த்துவிட்டு, சொல்லுங்க, என்ன பிஸ்னஸ், உங்க பிராஜட் ஒட வேல்வியு என்ன, என்று அவர்கள் இருவரை பார்த்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

ராஜனுக்கு இவளுக்கு நம்மளை தெரியலையா, இல்லை இது வேற யாரோவா? என்று அவள் முகத்தில் ஏதும் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்த படி அமர்ந்து இருந்தான். அதற்குள் அசோக்கும், நாயகியும் தொழில் சம்பந்தமாக பேசில் இருக்க, இவன் எங்கே அதை எல்லாம் கவனித்தான்.அவன் கவனம் முழுவதும் அவளுக்கு தன்னை தெரியுமா? இல்லை யா? என்ற எண்ணத்திலேயே ஊழன்று இருந்தான்.

நாயகி இதை கவனித்தாலும், அசோக்குடன் பேசிக்கொண்டு இருந்தாள். அவன் எல்லா விவரங்களையும் சொல்லி முடித்து, என்னடா எல்லாம் ஒகேவா என்று கேட்க. அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. 

அது நாயகிக்கு புரிந்தாலும், எதையும் முகத்தில் காட்டாமல் சரி நாளைக்கு சொத்து பத்திரங்களை கொடுத்தால் தான் அதை சரிபார்த்து விட்டு சொல்வதாக அவள் சொல்ல, என்ன சொத்து என்றான் அப்போது தான் அவர்கள் பேசுவதை கவணித்து. 

என்னது என்ன சொத்து?

என்று விழித்தான்………………

ஏன்டா இவ்வளவு நேரம் எல்லாத்தையும் கேட்டு மண்டைய ஆடிட்டு இப்போ வந்து என்ன சொத்துனு கேட்கிற என்றான் தீராத கடுப்புடன். அதில் அவன் மீண்டும் விழிக்க. ரங்கநாயகி அவன் புறம் திரும்பி, இங்க பாருங்க மிஸ்டர். ………………. என்று இடைவேளை விட்டவள்.        

அவள் முகம் பார்த்தான்………………..

சற்று யோசித்தவள்……….. மிஸ்டர்.ரங்கராஜன் என்ற அவள் அழைப்பில் நெற்றிக்கண் திறந்தான் அவன்……………

அதை எல்லாம் அவள் கண்டுக்கொள்ளாமல், நீங்க பேங்கல லோன் வாங்கனும்னா. உங்க சொத்த சூரட்டி கொடுக்கனும், அதை தான் அசோக் சொல்றாங்க என்றாள்.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் அவளிடத்தில் காட்டியது அலட்சிய முகம் தான், அவளை ஒரு மனுஷியாக எப்போதும் அவன் பார்த்து இல்லை. அவன் தாலி கட்டும் போது கூட அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. அதன் பிறகும் கூட, அது எல்லாம் அவள் நினைவில் இருக்க, இப்போது இவன் காட்டும் இந்த ஆர்வம் அவளை சீண்டி இருந்து. நீ சிரிச்சா நான் சிரிக்கனுமா போடா……….. என்று மனதில் நினைத்தவள், அவனை மேலும் சீண்டவே நினைத்தாள்……………….

அவனுக்கோ இவளுக்கு என் பெயர் தெரியாதா? யோசிக்கறா…………….

ரொம்பதான் பன்றா இவளை என் பல்லை கடிக்க மட்டும் தான் முடிந்து அவனால்……….அவளை முறைத்தவாறே அவன் ஏதோ பேச வர.

Advertisement