Advertisement

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 2

இன்னும் நீங்க சாகாம உயிரோட தான் இருக்கீங்களா?  இந்த கேள்வி அங்கு இருந்தவர்களை மட்டும் அல்ல, அப்போது தான் அந்த வீட்டின் கூடத்தில் நுழைந்த ரங்கநாதன் காதிலும் விழுந்து.

தன் கேட்டது சரிதானா, இந்த வீட்டில் யார் அப்படி கேட்பது? யாருக்கு இப்படி கேட்கும் தைரியம் இந்த வீட்டில்? என்று அவன் மனம் கேட்டது. 

அவள் இப்படி கேட்பாள் என்று படுக்கையில் இருந்தவர் சற்றும்  எதிர்பார்க்கவில்லை போலும் அவர் முகமும் வேதனையை சுமந்து இருந்து. அருகில் இருந்த கணபதி (கணக்குப்பிள்ளை) கலக்கத்துடன் இருந்தார், அவரும் இப்படி ஒர் கேள்வியை அவளிடம் எதிர்பார்க்கவில்லை.

அவர் ஏதோ பேச வர அவரை தடுத்தவள், சொல்லுங்க இப்ப எதுக்கு என்ன வரவச்சி இருக்கிங்க, உங்ளுக்கு இன்னும் என்ன வேனும்? என்றாள் அவரை பார்த்தபடியே.

ஏற்கனவே காதில் விழுந்ததை நம்பமுடியாமல் இருந்தவன், இந்த குரலில் திடுகிட்டான். யார்…. யார் வந்து இருக்கா……….  அவளா? அவளா வந்து இருக்கா? இது இந்த குரல் என்று நினைத்தவன், முகம் கடுமையை தத்து எடுத்து இருந்து. கூடத்தில் இருந்த ஷோபாவில் அமர்ந்தவன். அங்கு என்ன நடக்கிறது? ஏன் யாரும் இல்லை என்று கவணிக்க தொடங்கினான். 

உள்ளே அவர் நலிந்து குரலில் அவளிடம் பேசுவது கேட்டது. இங்க பார்டாமா, என் மேல இருக்க கோவத்தை நீ இன்னும் விடலயா. இப்போது நீ இங்க இருக்க வேண்டியது அவசியம். உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இது எல்லாம் உன்னோடதும் கூடதான். 

என்று அவர் அவளிடம் கூறிக்கொண்டு இருந்து இவன் காதிலும் விழுந்து. அவன் முகம் மேலும் இருகியது. அதற்கு அவள் பதில் என்னவாக இருக்கும் என்று அவன் காதுகள் மேலும் கூர்மையாக அவர்களின் உரையாடல்களை கேட்டவாரம்பித்தது. ஆனால் அவள் இடம் இருந்து எந்த பதிலும் வந்து போல் தெரியவில்லை.

நீ இந்த வீட்டில் வாழனும், நான் பார்க்கனும், என்றார் மிகுந்த சிரமத்துடன். அவரை மேலும் வெறித்து பார்த்தவள் ஏதும் பேசாமல் வெளியேறினாள். அவர் ஏதும் செய்ய முடியாதா நிலையில் அவளை பார்த்து இருந்தார். அவளை தொடர்ந்து கணபதியும் வெளிவந்தார். வெளிவந்தவள் யாரையும் பார்க்காமல் அந்த வீட்டின் வெளி வாயிலை நோக்கி நடந்தாள்.

இவன் போல் கலா ராணியும் அறைக்குள் இருந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார். . அவள் அந்த அறையில் இருந்து வந்தது முதல் அவளை பார்வையால் தொடர்ந்தவன், அவளில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களை பார்த்தபடி இருந்தான். 

வெளிவாயிலை அடையும் முன் அந்த குரல் அவளை நிறுத்தி இருந்து திரும்பாமல் அப்படியே நின்றாள். எங்க போற உன்ன இங்க ஒன்னும் விருந்துக்கு கூப்பிடல, இதுக்கு அப்புறமும் எங்களால இதை எல்லாம் பார்த்துக்க முடியாது. உன் கூடவே அள்ளிட்டு போ என்றார் கலாராணி. அதற்கும் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை, மீண்டும் நடந்தாள், அதில் இன்னும் ஆங்காரம் ஆனவர், இப்போ நீ அள்ளிகிட்டு போகலனா உன்ன மாதிரி அவளையும் என்று என்ன சொல்லி இருப்பரோ, திரும்பி அவர்வரை பார்த்த பார்வையில் கலாராணி ஆடிப்போனார். 

அதற்குள் திலகா வந்து கலாவிடம் சாப்பாடு தயார் என்று சொல்ல, ரங்கநாதன் சாப்பாடு மேஜையை நேக்கி நடந்தான். 

அவளும் ஏதும் போசாமல் அவரை நேக்கி வந்தவள் அங்கு இருந்து சாப்பாட்டு மேஜையில் ஒர் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள். ஏதும் சொல்லாமல் அவரை ஒர் பார்வை பார்த்தவள். அருகில் உணவு பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு இருந்த திலகாவை பார்த்தாள்.

அவரும் அவளைதான் பார்த்துக்கொண்டு இருந்தாள். என்ன திலகா அக்கா எப்படி இருக்கிங்க என்றாள் அவரை பார்த்து இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை அசைத்தால் அவள்.

அங்கு இருந்த தட்டை எடுத்து தன் அருகே வைத்துக்கொண்டவள், என்ன டிபன் கா?  என்றாள் மீண்டும் அவரிடம். அவர் ஏதும் பேசாமல் கலாவை நேக்க, இரு பக்கமும் தலையை ஆட்டியவள். அங்கு இருந்தவற்றை பார்த்து தனக்கு தேவையானதை எடுத்து உண்ண தொடங்கினாள்.

ம்மம்ம உங்க டேஸ்டு இன்னும் அப்படியே இருக்கு. நேத்து சரியாவே சாப்பிடல, செம பசி என்றவள் மேலும் இரண்டு இட்லி எடுத்து வைத்து உண்டாள்.

இது எல்லாவற்றையும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த அவர்கள் இருவரையும் அவள் கண்டுக்கொள்ளவில்லை. கலாவையாவது அமர்ந்த போது ஒரு பார்வை பார்த்தாள். ரங்கநாதனை என்ற ஒருவனை அவள் கணக்கிலே எடுக்கவில்லை.

ஆனால் அவன் பார்வை எல்லாம் அவள் மேல் தான் இருந்து. அவள் செயல்களை பார்த்துக்கொண்டு இருந்த கலாவிற்க்கு இன்னுப் ஆத்திரம் அதிகமானது, அதுவும்  தன்னை எதிர்த்து அவள் செய்யும் எல்லா செயல்களும் அவளுக்குள் ஓர் ஆங்காரத்தை ஏற்படுத்த, ஏய் என்ன திமிரா ஒழுங்க எல்லாத்தையும் எடுத்துகிட்டு இடத்தை காலிபன்னு, இல்ல என்னை தெரியும் தானே என்றார் குரலில் வன்மத்தை கூட்டி, அதற்கும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. பெறுமையாக சாப்பிட்டு முடித்தவள்.

எழுந்து சென்று கைகழுவி வந்தாள், மீண்டும் இருக்கையில் அமர்ந்தவள். தன் கைபேசியை எடுத்தவள், எண்களை அழுத்தி காத்து இருந்தாள். அந்த பக்கம் எடுக்கப்பட்டதும் 

குட் மானிங் சொல்லுங்க மேம் என்னும் ஒர் ஆண் குரல் கேட்டது குட் மானிங் வருண் என்று பேச தொடங்கியவள் அன்று என்ன  வேலைகள் செய்வேண்டும் என்று அவனுக்கு பணித்துவிட்டு. அவன் சந்தேகங்களை தெளிவுபடுத்தியவள், எதிரில் இருந்தவர்களை பார்த்த வண்ணம் தன் விடுமுறையை இன்னும் 1 வாரம் நீட்டிக்க போவதாக கூறினாள். அவள் அப்படி கூறியதும் மேம் என்றான் அதிர்ந்த குரலில், அவளின் அந்த பேச்சில் அதிர்ந்து அவளை பார்த்த கலாவை பார்த்துக்கொண்டே இங்க இருந்து எல்லாத்தையும் எடுத்துகிட்டு வர வேண்டி இருக்கும் அதான் என்றாவள்  ஏதும் அவசரம்  என்றால் தன்னை தொடர்பு கொள்ள கூறினாள்.

அவள் அங்கு தங்க போவதை விட எல்லாத்தையும் எடுத்துகிட்டு வர வேண்டி இருக்கும் என்ற அவள் வார்த்தைகளில் அவர் மணம் சுற்றி வந்து.

கலா வாய் திறக்கும் முன் திலகாவை அழைத்தவள் தன் உடமைகளை மேலே இருக்கும் அறையில் வைக்கும்படி கூறியவள் ஏதும் பேசாமல் மேல் ஏறினாள்.

அதே சமயம் அவள் அங்கு தங்க போவதை கேட்டு அந்த படுக்கையில் இருந்தவர் மெல்ல புண்ணகைத்துக்கொண்டார்.

முதல் முறை தன் கணக்குகள் தவறுகிறதோ என்று தோன்றியது அவருக்கு. அதன் பின் நன்றாக துங்கி எழுந்தவள். இரவு உணவை அறைக்கே வரவழைத்து உண்டவள் மீண்டும் உறங்கி இருந்தாள்.

காலையில் சீக்கிரம் எழுந்தவள் தன் அறையில் தன் காலைகடன்களை முடித்தவள். தயார் ஆகி கீழே வந்தாள். வீடு விழா கோலம் பூண்டு இருந்து. ஒரு புறம் சமையலுக்குகான ஆயத்தங்கள் நடந்துக்கொண்டு இருக்க, மற்றோர் புறம் பூக்கள் குவித்து வைத்து கட்டிக்கொண்டு இருந்தனர்.

இவள் வந்தும் அவர்களிடம் சிறு சலசலப்பு எழ, அவர்களை எல்லாம் பார்த்தபடி ஷோபாவில் அமர்ந்தவள் முன் திலகா காபியை நீட்டினால், எடுத்துக்கொண்டவள், இன்னிக்கு என்ன வீட்டில் விஷேசம் என்றாள்.

திலகா உடனே ஏதும் கூறாமல், சிறு நேரம் கழித்து இன்று வீட்டில் ரங்கநாதன் ஐயாக்கு நிச்சயதார்த்தம் என்று கூறினாள், அதை கேட்டு அவள் என் சொல்லவாள் என்று இருந்த திலகாவிற்க்கு, ஆனால் அவள் முகத்தில் எந்த மாற்றம் இல்லை. 

அவளுக்கு ஆச்சிரியமாக இருந்து, அவளுக்கு மட்டும் இல்லை, அவளை கவனித்துக்கொண்டு இருந்த கலாவுக்கும்.

திலகா சமையல் அறைகுள் புகுந்தவள், அங்கு இருந்த  பாட்டியிடம் என்ன இந்த அம்மா இப்படி கல்லுமாதிரி இருக்கு என்று புலம்பினால் அவள் உள்ளே வந்ததில் இருந்து அவள் புலம்பலை கேட்டுக்கொண்டு இருந்த பாட்டி ஏதும் சொல்லாது அவளுக்கு இன்னும் எரிச்சலை கிளப்ப. பாத்திரத்தை நங் என்று வைத்தாள்.

பாட்டி இப்ப என்ன ஆச்சுடி உனக்கு என்றாள். பின்ன என்ன கிழவி அந்த புள்ள புருஷனுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம் சொல்றேன் அந்த பெண்ணு கல்லு மாதிரி இருக்கு என்றாள் ஆதங்கமாக……………

நிறம் மாறு(ம்)மோ

Advertisement