Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 19

பார்கவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு இருகிறாள் என்பதே அந்த செய்தி!!!!!!!!

கேட்ட அந்த நொடி அடுத்து என்ன என்று அவனால் யோசிக்கமுடியவில்லை, ஏற்கனவே தாங்க முடியாத மன அழுத்ததில் இருக்கிறான். இதில் இது வேறா? என்று தான் இருந்து அவனுக்கு.

நான் இன்று அவளிடம் ஏதும் அதிகமாக பேசிவிட்டோம்மா…………….. தன் நினைவடுகில் தேடினான் இல்லை, அப்படி ஏதும் இல்லை, ஆனால் ஏன் அவள் இப்படி ஒரு பைத்தியகாரணத்தை செய்தால், அந்த நேரத்தில் அவனுக்கு அப்படி ஒர் ஆற்றாமையாக இருந்து. ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?

தங்களுக்கு என்று விருப்பு வெறுப்பு இருப்பது போல் அடுத்தவர்களுக்கும் இருக்கும் என்று ஏன் இவர்கள் நினைப்பது இல்லை, தான் நினைத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லநினைப்பவர்கள், அதில் அடுத்தவரின் மனம் காயப்படுவதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

இப்படி கட்டாயபடுத்தி இவர் கொடுப்பதும், பெறுவதும் அவர்களுக்கு கூட மகழ்ச்சியை தராது என்று ஏன் எண்ணிபார்க்க மறுக்கிறார்கள். அந்த நேரம் அவனுக்கு பார்கவி மேல் கொலைவெறியே எழுந்து. ஆனால் இப்போது ஆத்திரபட்டு ஏதும் பேச போய் மறுபடியும் ஏதும் அசபாவிதம் நடந்து விட்டால்……………….. அதை நினைக்கவே அவனுக்கு தலைவலித்து.

ஆனால் இவன் மனநிலைக்கு முற்றிலும் மாறான மனநிலையில் இருந்தார் வள்ளி, தன் மகன் மேல் எத்தனை உயிராக இருந்தால் அவள் இப்படி ஒர் முடிவை எடுத்து இருப்பாள். என்ன ஆனாலும் சரி அவள் தான் இந்த வீட்டின் மருமகள். இதை காரணமாக வைத்தே அவனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற முடிவில் இருந்தார் வள்ளி.

இருவரும் இருவேறு மனநிலையில் மருத்துவமனையை அடைந்து இருந்தனர். முதலில் ராஜனை பார்த்து அவளின் தந்தை தான், மிகவும் தளர்ந்து போய் இருந்தார் மனிதர். ஏற்கனவே இரு முறை இந்த திருமண ஏற்பாடு நின்று போனதில் மிகவும் மன நொந்து போய் இருந்தார்.  இதில் ராஜன் வந்து மகளை பற்றி பேசியது, அதனால் மகள் தன்னிடம் சண்டை இட்டது என்று எல்லாம் அவரை மிகவும் தளர்ந்து போக செய்து இருந்து.

இதில் திடீர் என்று அவள் இப்படி செய்யவும் முற்றிலும் உடைந்து போய்விட்டார். அவருக்கு யாருக்காக பார்ப்பது என்று தெரியவில்லை. மகன் வேறு இங்கு இல்லை. இப்போது தான் மகனுக்கு தகவல் சொல்லி இருந்தார். அவன் கிளம்பிவிட்டாத கூற ஒய்ந்து போய் அந்த மருத்துவமணை வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அருகில் கண்ணீரை அடக்கியபடி மனைவி.

அந்த நேரத்தில் அங்கு வந்து இருந்தான் ராஜன். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்கவில்லை அவர். அவன் அங்கு வந்து ஒரு ஆசுவாசத்தையும், ஆதங்கத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியது அவருள். இந்த வயதில் துனைக்கு யாரும் இல்லாமல் இப்படி இருப்பது, அவருக்கு அடுத்து என்ன என்று தெரியாமல் திகைத்து இருந்தார். என்ன தான் மகனுக்கு தகவல் சொல்லிவிட்டாலும், அவன் வரும் வரை அவருக்கு ஒரு ஆறுதல் தேவைபட்டது. ராஜனை பார்த்தும் அவருக்கு அந்த ஆறுதல் மனதில் கிடைத்து, அதே சமயத்தில் இவனால் தானே எல்லாம் என்ற ஆதங்கமும் எழாமல் இல்லை.

இருந்தும் ஏதும் பேசாமல் அவனை பார்த்து தலை அசைத்தார். அவர் மனைவிக்கு அவனை பார்த்தும் அப்படி ஒரு அழுகை, இதுவரை கணவனுக்காக அடக்கிக்கொண்டு இருந்தவர், இப்போது இவனை பார்த்தும் பொங்கிவிட்டார்.

அவனுக்கு நேரக வந்தவர் அவன் காலில் விழுந்துவிட்டார்!!!!!!! இதை அவன் மட்டும் இல்லை, பிராகஷமும் எதிர் பார்க்கவில்லை. சுதா என்ன பன்ற என்றார் பிராகாஷம். இங்க பாருங்க தம்பி என் பெண்ணு உங்க மேல ஆசைபட்டது தவற வேற ஏதும் தப்பு பன்னல. நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கலனா எங்க பெண்ணு எங்களுக்கு இல்ல. இன்னிக்கு பார்த்து காப்பாத்திடோம், எப்பவும் இது மாதிரி காப்பாத முடியுமா? இல்லை இந்த ஊரில் தான் அவளுக்கு வேற மாப்பிள்ளை கிடைக்குமா?

எனக்கு என் பெண்ணு வேணும், உங்க கால விழுந்து கேட்கிறேன் அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க……… என்று கதறி இருந்தார். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் மனதிற்க்கு முற்றிலும் மாறான ஒரு விஷயத்தை அவனால் எப்படி செயமுடியும். அவனால் அதை நினைக்க கூட முடியவில்லை.

அவன் ஏதும் சொல்லாமல் இருக்க, நிச்சயம் உங்க பெண்ணு தான் எனக்கு மருமகள் என்றார் அங்கு வந்து இருந்த வள்ளி. அவர் குரல் கேட்டதும் நிமிர்ந்த சுதா அவரின் கையை பற்றிக்கொண்டார். கவலை படாம இருங்க, என் மகன் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பாள். அவளைவிட இவனுக்கு வேறு யாரும் பெருத்தமாக இருக்க முடியாது. என்றவர் அவர் கையை பிடித்துக்கொண்டார்.

இதில் ஆண்கள் இருவரும் அவர்கள் பிடித்தமின்மையை முகத்தில் காட்டினாலும் அதை பார்பவர்கள் தான் யாரும் இல்லை. இப்படியான 2 மணி நேரத்திற்க்கு பிறகு பார்கவி கண்விழுத்துவிட்டதாக மருத்துவர் கூற, அவள் பெற்றோர்கள் அவளை பார்க்க சென்றனர். 

அவன் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்துவிட, அவனை ஒரு பார்வை பார்த்த வள்ளி அவனை கடந்து அறைக்கு சென்றார். சிறிது நேரம் இருந்தவன், அவர்கள் வரும் அரவம் கேட்க, எழுந்தவன் பிரகாசத்திடம் வந்தவன் நான் கிளம்புறேன், என்றவன் அவர் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் நடந்துவிட்டான்.

அதில் வள்ளியின் முகமும், சுதாவின் முகமும் சுருங்கிவிட, அமைதியாக அமர்ந்தவிட்டனர். சிறிது நேரம் கழித்து வள்ளி அவர்கள் இருவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட, சுதா கணவன் முகத்தை பார்ப்பதும், மகள் இருந்து அறையை பார்ப்பதுமாக அமர்ந்து இருந்தார்.

அந்த நேரத்தில் மகளின் உயிர் முக்கியமாக போய்விட, எதை பற்றியும் யோசிக்காமல் ராஜனிடம் அப்படி கேட்டுவிட்டார். ஆனால் அதன் பின் கணவன் தன்னிடம் ஏதும் பேசாமல் அமர்ந்து இருப்பது அவருக்கு ஒரு மாதிரியாக இருந்து. 

மெல்ல அவரே அவரிடம் என்னங்க என் மேல் கோவமா என்றார். ஏதும் பேசாமல் சுதாவை பார்த்தவர். அமைதியாக இருந்துக்கொண்டார். அவருக்கு மறுபடியும் என் பேசுவது என்று தெரியவில்லை.

என்னங்க என்றார், பிரகாசம் மனைவி முகம் பார்க்கவும், நம்ம பெண்ணு………. வாழ்க்கை முக்கியங்க, என்று மேலே ஏதோ சொல்லவந்தவரை தடுத்தவர். அவள் எனக்கும் பெண்ணு தான் சுதா. அதனால அவ செய்யறது எல்லாம் சரி என்று என்னால் தலையாட்ட முடியாது. அந்த பையனுக்கு விருப்பம் இல்லை அவ்வளவு தெளிவா சொல்லிட்டான். அதுக்கு அப்புறமும் இவ இப்படி பன்னா, என்ன அர்த்தம் என்றார்.

இந்த பையன் தான் என் பெண்ணை பிடித்து இருக்கு சொல்லி நிச்சயம் வரைக்கும் வந்தார், இன்னிக்கு அவர் வீட்டு பிரச்சனை அதனால் அவர் அப்படி சொல்லாம், அதான் அங்க அம்மா சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன? நீங்க இனிமே இதில் எந்த குழப்பமும் பன்னாமல் இருங்க என்றார் கணவனிடத்தில்.

பெருமூச்சுவிட்டு இருபக்கமும் தலையை ஆட்டியவர் ஏதும் பேசாமல் கண்களை முடிக்கொண்டார். இங்கு நடந்து எல்லா விஷயமும் சண்முகம் காதிற்க்கும் போனது. அவர் அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் இருக்க.

வீட்டிற்க்கு வந்த ராஜன் பெரும் மன உலைச்சலில் இருந்தான். எல்லாவற்றையும் விட்டு எங்காவது சென்றுவிட வேண்டும் என்று அவன் மனம் ஏங்கியது. இந்த சூழ்நிலை அவனுக்கு மூச்சுமுட்டியது. எல்லாம் இப்படி இருக்க, இவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்கவென வந்தான் ஒருவன் ! அவன் தமிழ் பார்கவியின் அண்ணன்…………..

அடுத்தநாள் தன் அலுவலகத்தில் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தவன் போன் அலறியது, ஏதோ புதிய எண், யோசனையாக எடுத்து காதில் வைத்தான். மருத்துவமணையில் இருந்து பேசினார்கள். அதை கேட்டதும் அவனுக்கு தான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்து.

எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு மருத்துவமணைக்கு விரைந்தான். அங்கு பார்கவி அறையில் அவள் பெற்றோர்கள், வள்ளி மற்றும் இரு மருத்துவர்கள் இருக்க, இவன் உள் நுழைந்தான், அவனை பார்த்தவுடன் பார்கவி முகத்தில் புன்னகை, ஆனால் அவன் முகம் வெறுமையாக இருந்து. உடனே முன்னாடி வந்த மருத்துவர் ஒருவர், இப்பவாவது எங்க டிரிட்மென்டுக்கு ஒத்துழைக்கனும் இல்லைனா………… என்றார் சற்று கோவமாக, அவள் ஏதும் சொல்லாமல் சரி என்று தலையை அசைத்தால்.

அதன் பின் அவளுக்கு மருந்துகள் சொலுத்தப்பட்டது, அவளுக்கு வயிறு சுத்தம் செய்பட்டு இருப்பதால் எப்படி, என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்று அவள் அம்மாவிடம் கூறியவர்கள் அடுத்த நோயாளியை பார்க்க கிளம்பி இருந்தனர்.

அவள் காலையில் கண்விழித்தில் இருந்து, எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை, உண்னவும் இல்லை, தாதியர்களும், மருத்துவர்களும் எவ்வளவு முயன்றும் முடியாமல் தான், அவனுக்கு அழைத்து இருந்தனர்.

பிரகசத்திற்க்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அவருக்கு தெரிந்து, ராஜனுக்கு மகளை திருமணம் செய்விருப்பம் இல்லை. அதை அவன் அவரிடம் தெளிவாக கூறியபின், மகளும், மனைவியும் செய்யும் இந்த செயல்கள் எல்லாம் அவருக்கு சற்றும் பிடிக்கவில்லை தான். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் இப்போது வள்ளியும்……………

இதை எல்லாம் எண்ணியபடி வந்தவர், அங்கு அமர்ந்து இருந்த ராஜனை பார்த்து அவன் அருகில் அமர்ந்தார், இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

அப்போது அங்கு வேகமாக வந்த ஒருவன், பிரகாசத்திடம் வந்து அப்பா என்ன ஆச்சு கவிக்கு என்றான் பதட்டத்துடன். வந்தவன் இருந்த கோலமே சொல்லியது அவன் இரவு முழுவதும் பிரயாணம் செய்து வந்து   இருக்கிறான் என்று, அவனை கண்டதும் எழுந்தவர் அவன் கையை பற்றியபடி வா தமிழ் என்றவர் அவனை பார்கவி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்.

அவர்களையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவன், பின் அங்கு இருந்து கிளம்பிவிட்டு இருந்தான். அதன் பின் தன் அலுவலகம் வந்தவன் தன் வேலைகளில் முழுகி போக மதியம் உணவு நேரமும் கடந்து போய் இருந்து. அப்போது உள்ளே வந்தவன் ஐயா, உங்கள பார்க்க தமிழ்னு ஒருத்தர் வந்து இருக்கார் என்றான்.

அது வரை தன் வேலையில் முழுகி இருந்தவன், இதை கேட்டதும் பெருமூச்சு விட்டான், இவன் என்ன வைத்து இருக்கிறானோ? என்ற எண்ணமே முதலில் வந்து.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், ம்மம்மம……………. வர சொல்லு என்றான், ஐயா குடிக்க ஏதும் கொடு வரனும்மா? என்றான் அவன் பதிலுக்காக………..

ம்மம்மம்மம்ம……………… இரண்டு இளநி கொண்டு வா என்றவன், தான் பார்த்துக்கொண்டு இருந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழை எதிர் கொள்ள தயார் ஆனான்.

உள்ளே வந்தவன், முகத்தில் காலையில் இருந்த சோர்வு இல்லை, வேட்டி சட்டை அனிந்து இருந்தான். எப்போதும் முகத்தில் இருக்கும் அதோ சிநேகமான புன்னகை. தமிழ்செல்வன், இருவரும் ஒன்றாக படித்தவர்கள் தான், ஆனால் அவனுடன் அதிக ஒட்டுதல் கிடையாது, அவனுடன் மட்டும் இல்லை, யாருடனும் கலா அதை விரும்புவதில்லை என்பதால் அவன் நன்பர்கள் வட்டம் விரல் விட்டு எண்ணு படியாக தான் இருக்கும், இப்போது அதுவும் இல்லை.

வந்தவன் ராஜன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். என் ஆச்சு ராஜன் என்றான் எந்த மேல் பூச்சும் இல்லாமல், ஏதும் சொல்லாமல் அவனை பார்த்து இருந்தான். தமிழ் அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால் பதில் தான் இல்லை. 

இளநீர் வந்து, அதை எடுத்துக்கொண்டவன் அருந்தினான். இப்போதும் ராஜன் இடத்தில் மௌனம். இங்க பார் ராஜன் முதலில் திருமணம் உன்னை கேட்டு தான் முடிவு செய்தார்கள், இரண்டாவது தடவை நீயும், கவியும் உறுதியா இருந்து ஏற்பாடானது. அதுக்கு அப்புறம் நடந்து எல்லாம் அப்பா சொன்னார். இப்போ என்ன ஆச்சு ஏன் கவி வேணாம்………………

என்ன ஆச்சு சொல்லு என்றான், அப்போது அவனிடம் மௌனம் மட்டுமே, பொறுமை இழந்தான் தமிழ், இங்க பார் ராஜன் எனக்கு உன்ன சின்ன வயதில் இருந்து தெரியும், உன் வாழ்கையில் எல்லாம் உன் அம்மாவின் தேர்வுதான். கவியும் கூட அப்படி தான்……….

இப்போ அது தான் பிரச்சனையா………… என்றான்…………..

இன்னும் அவன் மௌனம் நீடித்து…………..

இங்க பார் ராஜன் நீ தான் உனக்காக பேசியாகனும், உனக்கு என்ன பிரச்சனை, என்ன வேணும் சொல்லி தொலை என்றான் கோவமாக….

எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம், அவ இப்படி பன்னது மூட்டாள் தனம்னா.. இதைவச்சு அம்மா உன் கிட்ட பேசினது அதவிட மூட்டாள் தனம். இந்த கல்யாணம் நடந்து எல்லா பிரச்சனையும் முடியும்னா பரவாயில்லை. ஆனா உன்ன பாத்த அப்படி தெரியல. அதே தான் அப்பாவும் சொன்னார். அதனால் தான் உன்னை பார்த்து பேச வந்தேன்…………. என்றவன் அவன் முகம் பார்த்தான்.

அதுவரை அமைதியாக இருந்தவன் வாய் திறந்தான். ஆம் நீ சொல்லவது உண்மை தான். கவி கலா அம்மாவோட தேர்வுதான், அதனால கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். அது பிரச்சனைக்கு அப்புறம் நின்னுபேச்சு. ஆனா இரண்டாவது தடவை கவி என்கிட்ட வந்து பேசுனா, அதுவரைக்கும் என் வாழ்க்கையில் அம்மாவ தவிர வேற பெண் எனக்கு நெருக்கம் இல்லை. முதல் முறை அவள் எனக்கு கொடுத்த முக்கியதுவம் எனக்காக என்கிட்ட வந்து பேசினது, என்னை கல்யாணம் பன்னிக்க விருப்பம் சொன்னது எல்லாம் எனக்கு பிடித்து இருந்து. அதனால் சரி சொன்னேன், அதனால தான் உங்க அப்பா சொன்ன கன்டிஷனுக்கும் சரி சொல்லி அவளுகாக எல்லாத்தையும் கொடுக்க அளவுக்கு போனேன். ஆனா அது எல்லாம் ஒன்னுமே இல்லைகிற மாதிரி எல்லாத்தை உடைச்சுடா…….என்னை வேணாம் என்று தூக்கி போட்டுடாடா………..

அதுக்கு அப்புறம் நடந்து எல்லாம் உணக்கு தெரிந்து இருக்கும். நான் முழுசா உடைந்துடேன். இதுவரைக்கும் எனக்கு எல்லாமா இருந்த அம்மா அந்த நிமிஷத்துல என்னை துக்கி போட்டுடாங்க. ஒரே நிமிஷத்துல இப்படி ஒருத்தரை ஒதுக்க முடியுமா……….. என்னால் முடியல……………

அந்த நேரத்தில் மறுபடியும் வந்து நீக்கறா………… எனக்கு அவளை பிடிக்குமா பிடிக்காதா என்பதை விட எனக்கு இப்போ என்ன தேவை…………..

என்னோட மொத்த வாழ்க்கையும் என் அம்மா தான்.  யாருக்கு அவங்க எப்படி இருந்தாலும் எனக்கு அவங்க நல்ல அம்மா தான்.  இப்போ இவகள போல இந்த மாற்றத்தை என்னால் உடனே ஏத்துக்க முடியல இதுல கல்யாணம் வேற………. என்னால முடியல, அதை விட இப்போ எனக்கு இந்த பரிதாப பார்வை தேவை  இல்லை, எல்லோரும் என்னமோ என்னை பரிதாபமா பாக்கறது எனக்கு பிடிக்கல, என்று பேசிக்கொண்டு போனவனின் மேல் பார்வையை பதித்து இருந்தான் தமிழ், தான் பேசுவதை நிறுத்துவிட்டு நான் சொல்லவரது புரியுதா என்றான்.

அவனை பார்த்து இருபக்கம் தலையாட்டியவன், ஒரு மண்ணும் புரியல!!!!!!!!! என்றவன், ஏன்டா என் தங்கச்சி கூட கல்யாணம் வேண்டாம் சொல்றனு கேட்டா? அது நீ பக்கம் பக்கமா பேசுற, என்னை விடு உனக்காவது நீ என்ன பேசுன புரிஞ்சுதா? என்றான்……..

அவனை கொலை வெறியில் பார்த்தவனை……….. சிரித்தபடி பார்த்த தமிழ், இங்க பார் எனக்கு நீ சொன்னது ஏதும் புரியல. ஆனா எனக்கு என் தங்கச்சியோட சந்தோஷம் முக்கியம். நீ இங்க இருந்து இப்படி குழம்பி போறதவிட, முதல இந்த சுழலில் இருந்து வெளியவா, அப்புறம் மற்றதை பத்தி யோசிக்கலாம். நானும் கவிய என் கூட கூட்டி போகபோறன், அவளுக்கும் இந்த மாற்றம் தேவை,  இங்க  இருந்த இதையே தான் நினைத்துக்கொண்டு இருப்பா……… அவளும் கொஞ்ச நாள் இதை எல்லாம் விட்டு இருக்கடும் அதுக்கு அப்புறமும் உங்க மனசு என்ன சொல்லுதோ அதை செய்யலாம் என்றவன் கிளம்பி இருந்தான். 

அவனுக்கும் தமிழ் சொன்னது சரியாக பட்டது, எங்கு போகலாம் என்று யோசித்தவன் மனதில் வந்து அவன் நன்பன் அசோக் தான், அவனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்துவன், அவனுக்கு சற்று நெருக்கமானவனும் கூட, சொன்னை அவன் பூர்விகம் அங்கு அவன் குடுபத்தொழிலில் இருக்கிறான்.

படிக்கும் காலத்தில் அவனுடன் சேர்ந்து தொழில் செய்யவும் விரும்பினான். ஆனால் கலா அதை மறுத்துவிட, அதன் பின் அவன் அதை நினைக்கவில்லை. 

ஆனால் இப்போது அங்கு போகலாம் என்று தோன்றியது. அவனுக்கு அழைத்தவன் அவன் அங்கு வருவதை கூறியவன் கிளம்புவற்கான ஏற்பாடுகளை செய்தான்.

அவன் யாரிடமும் சொல்லவில்லை என்றாலும், சண்முகம் மற்றும் வள்ளிக்கு அவன் சென்னை சொல்லும் விஷயம் தெரியும், சண்முகத்துக்கு அது மகிழ்ச்சி தான் இங்கு இருந்தால் பார்கவியை அவனுக்கு திருமணம் முடித்துவிடுவார்களோ என்று நினைத்தவர், அவன் ஏற்பாடுகளை தடுக்கவில்லை.

வள்ளியே ஏதும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தார்.

இப்படியாக அவன் தமிழிடம் மட்டும் தான் சென்னை கிளம்புவதாக சென்னவன், தன் பயனத்தை தெடங்கினான். 

அங்க அவன் சந்நித்து அசோக்கை மட்டும் இல்லை, அவன் காதலிக்கும் ரங்கநாயகியும் தான்!!!!!!!!!!!!!

         

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement