Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 18

காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே இருந்து, இன்று என்னன்ன வேலைகள் என்று மனதில்  பட்டியல் இட்டவன், காலையில் பால் பன்னைக்கு செல்ல வேண்டும், இன்றும் இருநாட்களில் சம்பளம் கொடுக்க வேண்டும், இன்று கணக்கு வழக்கு பார்த்தால் தான் சரியாக இருக்கும். 

வயல் வேலைக்கு வருபவர்களுக்கு வார/தின கூலி என்பதால் அது அப்போதைக்கு அப்போதே முடிந்துவிடும். இதை தவிர்த்து தேங்காய்களை கணக்கு பார்த்து அனுப்புவது, மற்றும் அது சார்ந்த அவன் தொழிகளை இன்று கணக்கு பார்த்து முடிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் முடித்து இன்று இரவு வர நேரமாகிவிடும், எல்லாவற்றையும் மனதில் கணக்கிட்டவன் எழுந்து குளியல் அறைக்கு புகுந்துக்கொண்டவன் அடுத்த அரை மணி நேரத்தில் தயார் ஆகி கீழே வந்து இருந்தான்.

அவன் வரும் நேரத்திற்க்கு சரியாக திலகா உணவை மேஜையில் வைத்து இருந்தார். அங்கு அமர்ந்தவன் அவர் வைத்த இட்லியை சாப்பிட ஆரம்பித்து இருந்தான்.

அந்த நேரம் அங்கு இருக்கும் ஷோபாவில் அமர்ந்த படி அவனையே பார்த்து இருந்தார் வள்ளி, ஆம் வள்ளி தான் இது கடந்து இரு மாதமாக நடக்கும் தொடர் கதைதான் என்றாலும், அவர் வந்து அமர்ந்தும், அதுவரை அவன் உண்டுக்கொண்டு இருந்த உணவு தொண்டையில் சிக்கி கொள்ள, தண்ணீரை குடித்து அதை கஷ்டபட்டு விழுங்கினான்.

சாப்பிட்ட படியே பார்வையை ஒரு முறை சுற்றி பார்த்தான், அங்கு எங்கும் கலா இல்லை, மனதில் ஒர் ஏமாற்றம் வந்து, ஆனாலும் ஏதும் செய்யமுடியாது. தட்டில் இருந்தை சாப்பிட்டு முடித்தவன், மேலும் வைக்க போனவரை வேண்டாம் என்று தடுத்தவன், எழுந்துவிட்டான்.

கைகளை துடைத்தபடி வந்தவன், திலகாவிடம், மத்தியம் வரமாட்டேன், இராத்திரி லேட் ஆகும் வெளியில் பார்த்துகிறேன் என்றவன் தன் கார் சாவியை கையில் எடுத்து கிளம்பிவிட்டு இருந்தான்.

எப்படி இவர்களால் முடிகிறது நான் அவர் மகன் இல்லை என்றவுடன் ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள, என்னால் முடியவில்லையே, வள்ளி மற்றும் கலா இருவரின் மாற்றத்தையும் இவனால் ஏற்கமுடியவில்லை. என்று எண்ணியபடியே தன் காரை நேக்கி போனான்.

அவன் அங்கு இருக்கும் வரை அமர்ந்து இருந்த வள்ளி, அதன் பின் மேஜையில் சாப்பிட அமர்ந்தார். வீட்டில் மற்றவர்கள் யாரும் சாப்பிட வரமாட்டார்கள் என்பதால் அதன் பின் திலகா எல்லாவற்றையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துவிட்டு, தன் வேலையை பார்க்க போய்விட்டார்.

காரில் சென்றுக்கொண்டு இருந்தவன் மனதில் வெறுமை சூழ்ந்து இருந்து, இது என்ன வாழ்க்கை, இரு மாதங்களுக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கையை அவன் கனவிலும் நினைத்து இருக்க மாட்டான்.

அன்று கோவிலில் இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தவன் யாரிடம் பேசவில்லை தன் அறையில் அடைந்துக்கொண்டான். அவனுக்கு நடந்த எல்லாவற்றையும் புரிந்துக்கொள்ளவே சில மணி நேரம் தேவை பட்டது. இதுவரை என் வாழ்க்கையில் இருந்து எதுவும் உண்மை இல்லையா?

கலா………. கலா என் அம்மா இல்லையா? அவனால் அதை ஏற்றக்கொள்ள முடியவில்லை. பிறந்து முதல் இன்றுவரை அவன் வாழ்க்கையில் எல்லா பக்கங்களிலும் கலா தான் இருக்கிறார். ஆனால் இன்று அவர் இவன் புறம் திரும்பவே இல்லை.

அதுவே அவனுக்கு மனதில் சுருக்கு என்று இருந்து. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக வள்ளியின் பார்வை அதை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவி்ல்லை, நிரகரிக்கவும் முடியிவில்லை.

அன்று வீட்டுக்கு வந்தவனுக்கு இது ஏதும் மே வேண்டாம் எல்லாவற்றையும் விட்டு எங்காவது போய்விடலாம் என்று தான் இருந்து, ஆனால் அப்படி அவனால் நினைக்க மட்டுமே முடிந்து, நடைமுறையில் அது சாத்தியபடவில்லை.

அந்த தொழில்கள், வயல்கள் எல்லாம் அவர்களுக்கு மட்டும் அல்ல, அந்த ஊரின் பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரம் அவை. அதனால் அவன் நினைத்து போல் எதையும் உடனே உதரிவிடமுடியவில்லை.

எல்லாம் முடிந்து 1 வாரம் ஒடி இருந்து, ஆனால் கலாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு எவ்வளவு பேசினாரோ இப்போது அவ்வளவு அமைதி. சுந்தரவடிவின் நடமாட்டம் கூட அறைக்குளே முடங்கி போனது, அவருக்கு தன்னால் தான் மகன் இப்படி ஆகிவிட்டான் என்ற குற்ற உணர்வு இருந்து, அதனால் அவரும் அமைதியாகி போனார்.

அன்று வீட்டுக்கு வந்தும் கலாவிடம் சண்முகம் பேச முற்பட கலா அவர் பார்த்து ஒரே கேள்ளவி தான் கேட்டார், இந்த 26 வருஷத்துல ஒரு முறை கூட அவ தான் என் பெண்ணு உங்களுக்கு சொல்ல தோனலையா? என்றார்.

ஆனால் சண்முகம் அதற்கு பதில் அளிக்காமல் இந்த கல்யாணம் மட்டும் நடந்து இருந்தா எந்த பிரச்சனையும் இல்லாம போய்யிருக்கும், எல்லாத்தையும் அந்த வள்ளி கெடுத்துட்டா………….. இத்தனை நாள் மனதில் வஞ்சம் வச்சி என்னை பழிவாங்கிட்டா ச்சே…………… என்றவர் அறையில் இருந்து வெளியேறி இருந்தார்.

அதன் பின் கலா அவரிடம் பேசவே இல்லை, அவரிடம் மட்டும் அல்ல வீட்டில் யாரிடமும் பேசவில்லை. சில சமயங்களில் திலகா கொண்டு வந்து தரும் உணவை உண்ணுவார், பல சமயங்களில் அது அப்படியே இருக்கும். 

மனதால் மிகவும் தவித்து போனார், இத்தனை நாள் தான் போற்றி பாதுகாத்து தன் மகன் இல்லை, இத்தனை நாள் தான் தூற்றியது தன் மகளை தான் என்ற நினைப்பு அவரின் மன அமைதியை குலைக்க போதுமானதாக இருந்து.

இப்பொது அவர் மனதில் ஏதும் இல்லை, வீடு, சொத்து, கணவன்…………….. என்ற ஏதுவுமே, நாயகி பற்றி அவர் நினைக்கவே பயந்தார், அவளை பற்றி நினைக்க நல்ல நினைவுகள் ஏதும் இல்லையே, அவளை நினைத்தால் அவர் செய்து எல்லாம் நினைவுக்கு வந்து…………………….. அதற்கு மேல் அவரால் முடியாது, மனம் விட்டு அவரால் அழ கூட முடியவில்லை. அதனால் அமைதியாகி போனார். யார் சொல்லிம் மனம் வருந்தாதவர், திருந்தாவர் இன்று தனக்குள்ளே சுருங்கி போனார். 

இதற்கு முற்றிலும் மாறாக வள்ளி அந்த வீட்டில் சுகந்திரமாக வலம் வந்தார், எல்லாவற்றிலும் அவர் பங்கு இருந்து, அவர் நெருங்க முடியாத ஒரே இடம் ராஜன் மட்டும் தான். அன்று முதல் இன்று வரை அவன் அவரிடம் பேசவில்லை, நேர்பார்வை கூட பார்க்க மாட்டான். 

மகனின் பார்வைக்காக அவன் வீட்டில் இருக்கும் போது எல்லாம் அவனையே சுற்றுவார் வள்ளி. ஆனால் நெருங்க மாட்டார், ஏனோ அவருக்கு தயக்கமாக இருந்து, இத்தனை நாள் தள்ளி இருந்து மறைந்து பார்த்தவர், இன்று எல்லோருக்கும் தெரிய பார்த்தார்.

சண்முகம் அந்த வீட்டுக்கு எப்போது வருவார், போவர் என்று அவருக்கே தெரியும், வீட்டுக்கு வரும் போது தாய்யை பார்ப்பார், கலாவை பார்ப்பார், இருவரும் அவரிடம் பேசுவது இல்லை. ஆரம்பத்தில் சுந்திரவடிவு எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு மண்ணிப்பு கேட்கும் படி பேச பெரிந்து தள்ளிவிட்டார்.

யாரு யாருகிட்ட மண்ணிப்பு கேட்கனும், இது எல்லாம் நான் இல்லைனா மண்ணா போய் இருக்கும், என் உசுரை கொடுத்து எல்லாத்தையும் உருவாக்கி இருக்கேன், உன் மாப்பிள்ளை அன்னிக்கே என்னை நம்பி இருந்தா இன்னிக்கு எல்லொரும் என்னை குற்றவாளி மாதிரி பார்ப்பாங்களா?

எல்லாத்தையும் நாங்க செய்வோம்மா? இவர் மருமகன் அதை நேகாம புள்ளைக்கு துக்கி கொடுப்பாராம்………..

இன்னிக்கு சொல்றேன் கேட்டுக்க நான் எந்த தப்பும் செய்வில்லை, நடந்த விஷயத்தை எல்லாம் எனக்கு சாதகமாக மாத்திகிட்டேன். இன்னோறு முறை என்னை குற்றவாளி மாதிரி பேசின பாத்துக்க………. என்று கத்தியவர் அதன் பின் தாயிடம் பேசவில்லை.

கலா அவரை முற்றிலும் தவிர்த்தார். ஆனால் அதை எல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையில் அவர் இல்லை. அவரை பெருத்த வரை தான் செய்து எல்லாம் சரி தான், அப்படியே இதில் பாதிக்கபட்டு இருந்தாலும் அது தன் மகள் தான், மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக தான் இருந்தனர் என்று நினைத்தார்.

அதனால் என்று இருந்தாலும் இந்த வீட்டுக்கு தன் மகள் தான் மருமகள், வேறு யாரும் வர விடமாட்டேன் என்று நினைத்து இருந்தார்.

வள்ளியும் இதே மனநிலையில் இருந்தார், எனக்கு ஆதரவு என்று யாரும் இல்லை, என் வீட்டை சார்ந்தவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்து இருந்தால் எனக்கு இந்த நிலை வந்து இருக்காது, என் மாமியாரும், மாமனாரும் கூட எனக்கு நியாயம் செய்வில்லை, அதனால் நான் என் மகனை பாதுகாக்க தான் செய்து எல்லாம் சரிதான். நான் எந்த தவறும் செய்வில்லை.

என்று நம்பினார், மொத்ததில் இப்போது மனநிலையில் மாற்றம் இல்லாமல் இருப்பவர்கள் சண்முகமும், வள்ளியிம் தான். சண்முகம் தான் ராஜன் இன்னும் இங்கு இருப்பதற்கு காரணம், மறைமுகமாக எல்லாவற்றையும் அவன் தான் பார்க்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தார் அப்படி இருந்தால் தான் அவன் இங்கு இருப்பான், இல்லை என்றால் அவன் இங்கு இருந்து சென்றுவிட்டால் அவன் மனநிலை மாறிவிடும் பின் அவர் எண்ணம் எப்படி நிறைவேறும். அதனால் மறைமுகமாக இந்த பெறுப்புகள் எல்லாவற்றையும் அவன் மீது சுமத்தி இருந்தார் அவனை நகரவிடாத படி.

வள்ளிக்கு எல்லாம் மகன் கைவசம் வந்து சந்தோஷம், இன்னும் கொஞ்ச நாட்கள் கடந்தால் அவன் எல்லாவற்றையும் மறந்துவிடுவான், அதன் பின் அவன் மனம் விரும்பும் பெண்ணை அவனுக்கு மனம் முடித்து அவன் நன்றாக வாழ்வதை பார்க்க வேண்டும் என்பது அவரின் நினைப்பாக இருந்து.

இருவரும் அவர்களின் எண்ணங்களில் நிலையாக இருக்க, இதை எல்லாம் நினைத்தபடி கார் ஒட்டிக்கொண்டு இருந்த ராஜன் மனதிலே நாயகியின் நினைவு இப்போது.

அவளை சிறுவயது முதலே அவன் ஒரு ஆளாய் நினைத்து கிடையாது, அப்படி கலா நினைக்கவிட்டதும் இல்லை, அவளுடன் விளையாடிய ஞபாகம் கூட அவனுக்கு இல்லை. ஆனால் இப்போது எல்லாம் அவன் அவளை நினைக்காத நாளே இல்லை. இந்த இரண்டு மாதத்தில் இந்த தனிமை அவனை கொன்று கொண்டு இருந்து. ஆனால் 15 வயது முதல் அதை மட்மே அனுபவிக்கும் அவள் மனது எப்படி இருந்து இருக்கும்.

ஒரு பெண்ணாக அவள் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பாள், சொந்தங்கள் துனையில்லாமல் தனித்து நி்ன்று இன்று இந்த நிலையில் இருக்கிறாள். வக்கீலுக்கு படித்து ஏதொ வங்கியில் பணி புரிகிறாள் என்று அவர்களி்ன் குடும்பவக்கீல் சொல்லி கேட்டு இருக்கிறான். அது தவிர அவனுக்கு அவளை பற்றி ஒன்றும் தெரியாது. அப்போது அதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை. இப்போது கேட்பதற்க்கு ஆட்கள் இல்லை. வக்கீலிடம் கேட்டால் இன்னும் சில விஷயங்கள் தெரியவரலாம், ஆனால் அதில் அவனுக்கு தயக்கம், அதனால் அப்படியே விட்டுவிட்டான்.

அவன் யோசனையில் இருந்து வெளிவரவும், அவன் பன்னைவந்து இருந்தது, அதன் பின் அவன் வேலை பளு அவனை வேறு எதுவும் யோசிக்கவிடவில்லை.

அன்று மாலை தான் அவனுக்கு சிறிது ஒய்வுகிடைத்து, தலை வலிப்பது போல் இருந்தால், ஒரு காப்பியுடன் அமர்ந்து இருந்தான்.

அப்போது அவன் அலுவலக அறையை தட்டிவிட்டு உள்ளே வந்தவன் ஐயா அந்த பெண்ணு வந்து இருக்கு என்றான். இது இந்த இரண்டு மாதமாக தொடர் கதை, இதை எப்படி கையாள்வது என்று அவனுக்கு தெரியவில்லை.

வந்து இருப்பது பார்கவி, அன்று அவன் கோவிலில் மாலையை கழட்டிவிட்டு வந்த பின், அடுத்து வந்த இருநாட்களும் அறையில் அடைந்து கிடந்தான். பின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன, தான் அங்கு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், அலுவலகம் வந்து இருந்தான், அன்று அவனை சந்திக்க வந்து இருந்தாள் பார்கவி, தன்னால் தான் இந்த பிரச்சனைகள் என்றும், தான் மட்டும் திருமணத்தை நிறுத்தாமல் இருந்து இருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்காது என்றும் அவனிடம் மண்ணிப்பு கேட்டவள், அங்கு இருந்து சென்று இருந்தாள். அவளுக்கு தெரியவில்லை என்றாலும், அவனுக்கு தெரியுமே அவள் இந்த திருமணத்தை நிறுத்தாவிட்டாலும் சண்முகம் வேறு வகையில் நிறுத்தி இருப்பார் என்று, அதனால் அவனும் ஏதும் பேசவில்லை.

ஆனால் அதன் பின் அவளின் வருகை தொடர்கதையாகி போனது தான் அவனின் இப்போதைய தலைவலிக்கு காரணம். மீண்டும் அவனை அவள் மணக்க விரும்புவதாக கூறினாள். இப்போது உங்கள் அம்மாவிற்க்கும் இதில் விருப்பம், நாம் மணம் முடித்து வேறு எங்காவது கூட சென்றுவிடாலாம் என்று முதலில் கூறிக்கொண்டு இருந்தவள், இப்போது எல்லாம் வற்புறுத்த தொடங்கி இருந்தாள்.

இப்போது அவள் வந்து இருப்பதும் அதற்கு தான். இத்தனைக்கும் அவள் வந்தாள் அவன் அறையில் வைத்து பேசுவது இல்லை. யாரின் தேவையற்ற பேச்சும் அவனுக்கு வேண்டாம் என்று பண்ணையில் தான் பேசுவான். அவளிடம் வேண்டாம் இது சரிபடாது என்று எடுத்து கூறினாலும், அவளின் வருகை மட்டும் நிற்கவில்லை, அதற்கு மறைமுக காரணம் வள்ளியும் ஆவார்.

அவனும் அவள் அப்பாவை சந்தித்து இது பற்றி பேசினான், ஆனால் பலன் தான் இல்லை, அவள் தன் அப்பாவையே குறை கூறினாள், அன்னிக்கு நீங்க மட்டும் முழுமனதாக எங்கள் திருமணத்திற்கு சம்மதித்து இருந்தால், இன்று இந்த நிலை வந்து இருக்காது. என்ன ஆனாலும் சரி நான் அவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறியவள் அதன் பின் அவள் வீட்டில் அதை பற்றி தாய், தந்தை என்ன சொல்லியும் கேட்பது இல்லை.

இதை வளர விடுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை, இதற்கு இன்றே முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தவன், அவளை கான சென்றான், அவள் இவனை ஆவலாக பார்த்து இருக்க, இவனுக்கு அப்படி ஏதும் இல்லை.

வழக்கமாக அவன் பன்னையில் பேசினாலும் அவள் மனம் நேக ஏதும் பேசியது இல்லை. ஆனால் இந்த இரண்டு மாத வெறுமை அவன் பெறுமையை கடந்து இருந்து. 

இப்போது எதுக்கு இங்க வந்து இருக்க பார்கவி, நீ இந்த விஷயத்தில் எந்த தப்பும் செய்யவில்லை, நீ இந்த கல்யாணத்தை நிறுத்தவில்லை என்றாலும் இந்த கல்யாணம் நின்று இருக்கும், அதை முதலில் புரிந்துக்கொள். இனிமே இங்க வர வேலை வைத்துக்கொள்ளாதே எனக்கு இப்போது திருமணம் செயும் எண்ணம் இல்லை. அப்படியே நான் செய்து கொள்வதானலும் அது நீயில்லை. இனிமேல் உன்னை நான் இங்கு பார்க்க விரும்பவில்லை. அதனால் தயவு செய்து இந்த இடத்தைவிட்டு கிளம்பு என்று கடுமையா கூறியவன் அவளை திரும்பியும் பாராமல் அங்கு இருந்து சென்று இருந்தான். தன் அலுவலக அறைக்குள் நுழைந்தவன் சற்று தளர்ந்து இருந்தான். கொஞ்சம் மனது சமன்பட்டு, இனி அவள் தொல்லையிருக்காது என்று நினைத்து பெருமூச்சுவிட்டவன். தன் வேலைகளை முடித்துக்கொண்டு இரவு தாமதமாக வீட்டுக்கு சென்றவன், உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு படுக்கையில் விழுந்தான்.

ஆனால் அவனின் அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை, அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் அறை கதவு தட்டபட, திறந்தவன் கேட்ட செய்தியில் மீண்டும் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

பார்கவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு இருக்காள் என்பதே அந்த செய்தி!!!!!!!!…….. 

         

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement