Advertisement

இங்க பாருங்க நான் சுத்தி வளைத்து பேசவிரும்பவில்லை, நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துகிறேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னால உங்க மகன் செய்யும் தொழில் எல்லாவற்றையும் என் மகளையும் இனைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு எல்லாவற்றிலும் சம்பங்கு எழுதிவைத்து விடுங்கள். என் என்றால் நாளை திருமணம் முடிந்து பின் உங்கள் அண்ணன் மகள் எந்த பிரச்சனையும் கிளப்ப கூடாது, அதனால என் மக வாழ்க்கை பாதிக்கபட கூடாது அதனால தான் என்றார்.

இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், ரங்கநாயகி எல்லா சொத்துக்கும் வரவு சொலவு கணக்கு கேட்டு இருக்கு பஞ்சாயத்தில், நாளைக்கு உங்கள் மகன் தொடங்கி இருக்கும் தொழில் மூலதனம் எல்லாம் என் சொத்தில் இருந்து வந்து என்று அந்த பெண்ணு சொல்லிட்டா? என்றார்.

நீங்க எப்படி என் மகளுக்கு சீர்வரிசை கேட்கிறிர்களோ அதே போல் நான் என் மகள் நல்ல இடத்தில் வாழ ஆசைபடுகிறேன். அதனால் தான் இந்த ஏற்பாடு, கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் அவங்க இரண்டு பேருக்கும், அவங்க குழந்தைகளுக்கும் தானே என்றவர். அதை ஏன் இப்ப கேட்கிறேன் என்று உங்களுக்கு தோனலாம். 

இப்பவே இதை முடித்து விட்டால் சட்டசிக்கல் ஏதும் இல்லாமல், அவர்கள் சந்தோஷமா வாழ்க்கையை தொடங்கலாம் அதனால் தான் என்றார்………….

சண்முகம் முகத்தில் ஈயடவில்லை, தான் நினைத்து வந்து என்ன இந்த ஆள் பேசும் பேச்சு என்ன, இவனே கல்யாணத்தை நிறுத்திவிடுவான் என்று நினைத்தால், இப்போது நம்மிடம் இப்படி ஒரு ஈக்கட்டில் மாட்டி விட்டான், நாம் ஏதாவது பேசி நிறுத்தினால், மகன் நம்மாள் தான் திருமணம் நின்று விட்டது என்று நினைத்து ஏதாவது செய்துவிட்டுவான்.

இப்போது என்ன செய்வது  என்று கலாவை பார்த்தார், அவரும் அதே மனநிலையில் தான் இருந்தார். ஊர் முன் தன் கௌரவம் குறையகூடாது என்று நினைத்தவர். திருமணத்துக்கு பேசி இருந்த அதே சீர்வரிசை செய்ய வேண்டும் என்று கேட்டுவிட்டார். அவர் என்ன கேட்டார் என்று கூட மகனுக்கு தெரியாது, இப்பொது சொல்லவும் முடியாது.

நாமாக திருமணம் வேண்டாம் என்று சொன்னால் மகன் என்ன நினைத்துக்கொள்ளவான் என்று அவர் மனதில் பல எண்ணங்கள்.

ஆனால் ரங்கராஜன் மனதில் அது போல எந்த குழப்பமும் இல்லை, அவர் கேட்பது நியாயம் தானே என்று நினைத்தவன் யாரும் எதிர்பாக்காமல், இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் கேட்டது போல் எல்லாம் உங்கள் மகள் மேல் மாற்றுகிறேன் என்று கூறிவிட்டான்.

சண்முகத்துக்கு தலையில் இடி விழுந்து போல் இருந்து தான் நினைத்து வந்து என்ன? இங்கு நடப்பது என்ன?

கலாவோ தன் நிலை இப்படி ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் இருந்தார்.

தான் கேட்டதும் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று நினைத்து இருந்த கவியின் தந்தைக்கு அவன் பதில் அதிர்ச்சியே, ஆனாலும் தன் மகள் ஆசைபட்ட வாழ்க்கை கிடைக்கும் போது அதற்கு தான் ஏன் தடையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். சரி என்றார்.

அனைவரும் புறபட்டு இருந்தனர்.  வீட்டுக்கு வந்தும் அவரவர் அறையில் முடங்கியவர்கள் அடுத்து என்ன என்று பார்த்தனர்.

சண்முகம் தன் அலுவலக அறைக்கு வந்தவர், புலம்பி தீர்த்துவிட்டார். இவன வைத்து என்ன செய்வது. யாராவது இப்படி முட்டாள் தனமா சொல்லுவாங்களா?

யார் வீட்டு சொத்து எடுத்து யாருக்கு கொடுக்கறது, எல்லாம் அவன் அப்பன் கலாதரன் புத்தி, அவன் இப்படி தான் வர போறவங்களுக்கு எல்லாம் கணக்கு வழக்கு இல்லாம கொடுப்பான் அப்படியே இருக்கான். இவன் எல்லாம் என் தொழில் பன்றான், அவன் என்ன நேக்க பேசி எல்லாத்தையும் அவனுக்கு சாதகமா மாத்திட்டான்.

இத்தனை நாள் கஷ்டப்பட்டது எல்லாம் பேச்சே ச்சே……… என்று புலம்பிய வண்ணம் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டு இருந்தார்.

இதுக்கா எல்லாத்தையும் பெறுத்துக்கொண்டேன், என் மகளை என் கண்ணு முன்னால என் பொண்டாட்டியே எப்படி நடத்தினா, எல்லாத்தையும் இந்த சொத்துகாக தான் பொருத்துக்கிட்டேன், என்னிக்கு இருந்தாலும் இது எல்லாம் என்க்கும் என் மகளுக்கும் தான் நினைத்தேன். எல்லாம் போச்சு……………..

ஆம் அன்று மருத்துவமனையில், பிரசவ வலி கண்டு காலராணியும், வள்ளியும் ஓரே நேரத்தில் அனுமதிக்கபட்டு இருக்க. கூட கலாதரனும், சண்முகமும் மட்டுமே இருந்தனர்.

முதலில் கலாராணிக்கு பெண் குழந்தை பிறக்க, அங்கு இருந்த செவிலியர் குழந்தையை வெளியே எடுத்து வந்தவர் கலாக்கு பெண் குழந்தை என்று சொல்ல. அங்கு அதுவரை எதிலும் கவனம் இல்லாமல் எங்கோ வெறித்த படி இருந்த கலாதரன், தன்னை தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து நான் தான் என்று குழந்தையை வாங்கிக்கொண்டார். (அவரை வீட்டில் கலா என்றே அழைப்பார்கள்) அதை சண்முகம் கவணித்து, கலாதரன் அருகில் சொல்வதிற்குள், அடுத்த ஒரு செவிலி வள்ளிக்கு பிறத ஆண் குழந்தையுடன் வெளியேவர அந்த குழந்தையை சண்முகம் கையில் கொடுத்தார்.

குழந்தை பிறந்து இருவரும் நலமாக இருப்பாக மருத்துவர் கூற, சண்முகம் தனக்கு தான் பெண் குழந்தை பிறந்து என்று கூறுவதற்காக கலாதரனிடம் சொல்ல அந்த நேரத்தில் வந்த அவன் அக்காவும், மாமாவும் குழந்தைகளை பார்த்து மகிழ்ந்து போயினர். அவர்களுடன் வந்த பெரியவர் ஒருவர் அட என்னபா கலா பெண் குழந்தை பிறந்து இருக்கு, குடும்பத்துக்கு பெறந்த முதல் வாரிசு இப்படி பெண்ணாய் பேச்சே என்றார்.

அதை கேட்ட  ரங்கநாயகி மகன் வருத்தபடுவான்னோ என்று எண்ணியவர் நிலைமையை சமாளிக்கும் பெருட்டு அதுக்கு என்ன பெரியப்பா, கலாக்கு ஆண் குழந்தை பொறந்து இருக்கு, மருமகன் இங்கேயே இருக்கும் போது, சொத்தும் சொந்தமும் எங்க போய்விடும் என்று விட்டார்.

அதை கேட்ட அந்த பெரியவர் அதுவும் சரிதான். இதுவே பையனா இருந்த நம்ம சொல்வதை கேட்டு கல்யாணம் கட்டுமோ என்னவோ? இதுவே பெண்ணுகறதுனால நாம சொன்னா கேட்டுக்கும். என்றார் விடாமல், (அவர் தான் ரங்கராஜனுக்கு பெண் பார்தவர் ஆனால் அவர் இவர் சொல்லை கேட்காமல் ரங்கநாயகியை மனந்துக்கொண்டாள் அந்த ஆதங்கத்தை இப்படி தீர்த்துக்கொண்டார்.)

இதை எல்லாம் கேட்ட சண்முகம் அப்போதைக்கு ஏதும் பேசவில்லை. செவிலியர் வந்து குழந்தைகளை வாங்கி சென்ற பின்னர். அப்படியே அமர்ந்து இருந்தவர் மனதில் குழப்பம் இப்போது குழந்தைகள் பற்றி சொல்வதா வேண்டாமா என்று. ஒரு வேளை எனக்கு பெண் குழந்தை பிறந்தாக தெரிந்தால் அதை இந்த வீட்டில் எப்படி நடத்துவர், அவளும் என்னை போல் தான் இந்த வீட்டில் கடைசி வரை இருக்க வேண்டும். ஆதுவே ஆண் என்று இருந்தால் சொத்துக்ககள் வெளிய போக்கூடாது என்று, அதுவும் இல்லாமல் எல்லாம் இவன் பெருப்பில் வரும். 

இதுவே இவன் கலாதரன் மகனாக வளர்ந்தால் அவன் தாத்தா, அப்பா அதுக்கு அடுத்து இவனுக்கு கைகட்டி பதில் சொல்ல வேண்டும். அந்த பெரியவர் சொன்னது போல் பின்னால் இருவருக்கும் திருமணமு முடித்துவிட்டால் எல்லாம் தன் மகளுக்கு தானே? அதுவும் இல்லாமல் அவன் தன் கண்முன்னால் தான் வளர போகிறாள் பிறகு என்ன?  என்று பலவாறாக யோசித்தவர், மருத்துவரை பார்க்க சென்றார் அவர் பணத்தால் விலை பேசி எல்லாவற்றையும் மாற்றிவிடவர். 

அவர் நினைத்து எல்லாம் நடந்து இருவரின் திருமணம் உட்பட, ஆனால் சில வேண்டாதவைகளும் நடந்து தான் ஆனால் அப்போது கூட அவர் இந்த சொத்துக்காக எல்லாம் சரியாவிடும் என்று அதை கடந்துவிட்டுவார்.

ரங்கநாயகி வீட்டைவிட்டு சென்ற போது கூட அவளை கண்காணித்தபடி தான் இருந்தார், அவர் சிவாவின் மூலம் உதவி செய்ய முன்வந்த போது அதை அவள் மறுத்துவிட்டாள்.

அவள் வளர்ச்சியும், துணிவும் கண்டு அவள் இந்த சொத்துக்களை பிற்காலத்தில் தனகட்டுபாட்டில் வைத்துக்கொள்ளாவாள் என்று அவர் எண்ணம் இருந்து. அதற்காக தான் சரியான நேரம் பார்த்து அவளை இங்கு வரவழைத்து இருந்தார்.

ஆனால் இப்போது நடப்பவை எல்லாம் அவரை மண்டை காய வைத்து. அடுத்து என்ன?????? என்பதே அவர் சிந்தனையாக இருந்து. என்ன நடந்தாலும் சரி இந்த திருமணம் நடக்க விடமாட்டேன்…….

இல்லை விடமாட்டேன்,………………. இது வரைக்கும் நான் நினைத்து தான் நடந்து இனியும் நடக்கும் என்று எண்ணியவர் அடுத்து எண்ண செய்வது என்று யோசித்தார். ……………………..

………………………………….

வீட்டில் வேலை செய்யும் பெண் வள்ளி ரங்கநாயகியை அழைப்பதாக கூறவும், அங்கு சென்றால், வந்த அன்று பார்த்தோடு சரி அதன் பின் அவள் அந்த அறைக்கு போகவில்லை.

அவள் வந்தும் வள்ளி எழுந்து அமர்ந்து இருந்தார், இப்போது கொஞ்சம் தொளிந்து போல் இருந்தார். ரங்கநாயகியை அருகில் அழைத்தவர். அவள் கையை பற்றிக்கொண்டு. இங்க பார் மா…….

இந்த வீட்டில் நடப்பது எல்லாம் என்க்கு மனசுக்கு கஷ்டம்மா இருக்கு. நான் இருக்கும் போதே எல்லாம் நல்லதா முடிய வேணும் நினைக்கிறேன். உனக்கு ராஜன் கூட நடந்த கல்யாணம் அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காது, அது மட்டும் இல்லை அது அப்புறம் நடந்தும்.

உனக்கு விருப்பம்னா அவன் கூட வாழு இல்லையா அவன் வாழ்கையை அவன் பார்க்கட்டும், உனக்கு சேர வேண்டியதை நீ எடுத்துக்கொண்டு அவன் வாழ்கையில் இருந்து விலகி போய்டு.

நான் தான் வாழலை நீயாவது உனக்கு பிடித்த மாதிரி வாழு என்றவர்.அவள்வளவு தான் என்று மீண்டும் படுத்துவிட்டார்.

அம்மாவின் அறையில் இருந்து வந்தவள், இரவு முழுவதும் யோசித்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக, மறுநாள் காலையில் தன் குடும்ப வக்கீலை வர வழைத்து இருந்தாள்.

நாளை தான் ஊருக்கு செல்ல இருப்பதால், எல்லாவற்றையும் ஒப்படைக்கும் படியும், அதற்கு உண்டான பத்திரங்களை தயார் செய்யும்படியும் கூறினாள்.

வக்கீலும் பார்கவிவீட்டில் நடந்த வற்றை கூற, ரங்கராஜனும் பத்திரங்களை தயார் செய்ய சொல்லி இருப்பதாக கூறினார்.

சரி என்று தலையசைத்தவள், தன் பயன ஏற்பாடுகளை கவணித்தாள்.

அடுத்து என்ன நடக்கும்? திருமணம் யாருக்கு நடக்கும்? அடுத்து என்ன உண்மை வெளிவரும்?……………… 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement