Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 14

காலை எழுந்தவுடன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்து மகனை பார்த்த கலா, ராஜன் இன்னிக்கு ஒரு முக்கியமான வேலையா போகனும்பா கிளம்பு என்றார். அம்மா இப்படி சொல்லவும் என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவன் அம்மாவிற்கு தெரியாமல் செய்வதில் ஏற்கனவே மனகலக்கத்தில் இருந்தவன். இப்போது அம்மாவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான் என்ன பா போய் கிளம்பு நல்ல நேரத்தில் போகனும் என்றார்.

அவன் இருந்த மனநிலையில் அம்மா சொன்ன நல்லநேரம் மற்றும் அங்கு நடந்துக்கொண்டு இருந்த ஏற்பாடுகளை கவனிக்கவில்லை. சரி என்றவன், அறைக்கு சென்று கவிக்கு அழைத்தான், அழைப்பு அந்த பக்கம் எடுக்கபடவில்லை, என்றவுடன், அவளுக்கு ஒரு செய்தியை அனுப்பியவன். மீண்டும் வெளியே வந்து கிளம்கலாம் என்றான்.

நடக்கும் அனைத்தையும், பார்த்துக்கொண்டு இருந்த சண்முகத்துக்கு கடுப்பாக  இருந்தாலும், நேற்று தான் பேசி பேச்சிற்க்கு கண்டிப்பாக அவன் பெண் கொடுக்க மாட்டான். இரண்டு பேரும் போய் அவமானபட்டு திரும்பி வர போறாங்க, இதையே காரணமா சொல்லி, நாயகிய இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்துடுவேன். என்று மனதில் நினைத்தவர், வெளியில் எதையும் காட்டாமல் அவர்களுடன் கிளம்பி இருந்தார்.

நல்ல காரியமாக செல்லும் போது 3வராக செல்லக்கூடாது என்று முருகனையும், உறவுக்கார பெரியப்பா ஒருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டார் சண்முகம். எல்லாரும் காரில் அமர்ந்து கிளம்பி இருந்தனர்.

வண்டியை ரங்கராஜன் ஒட்டிக்கொண்டு இருந்தவன் சற்று நேரம் கடந்து தான் வண்டி கவியின் வீட்டின் பக்கம் ஒட்டிக்கொண்டு இருப்பதை பார்த்தவன், தன் அம்மாவை திரும்பி பார்த்தான். அவரும் மகனையே பார்த்துக்கொண்டு இருந்தவர் புன்னகையுடன் தலை அசைத்தார்.

அதற்குள் அவர்கள் வீடு வந்து இருக்க, பார்கவியின் வீட்டினர் வண்டியின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சிதான். பார்கவியும் நேற்று அம்மாவிடம் இன்று அவன் வருவான் என்று கூறியிருக்க. பார்கவியின் தந்தை பிரகாசம் நேற்று சண்முகம் வந்து பேசிபோனதை தன் மனைவிடம் கூறியிருந்தார்.

ஆனால் இன்று எல்லாரும் சேர்ந்து வந்து இருப்பது அவருகளுக்கு ஆச்சிரியம், அதிர்ச்சியுமாக இருக்க, இன்று என்ன பேச போகிறார்களோ என்று பிரகாசமும் அவர் மனைவியும் நினைக்க, கவியோ வீட்டில் பேசி எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள் போல் என்று மகிழ்ச்சியாக நினைத்தாள்.

வந்தவர்கள் எல்லோரையும் அழைத்து அமரவைத்தவர்கள், சிறிது நேரம் அமைதியாக இருக்க, யார் பேச்சை துவங்குவது என்று அமர்ந்து இருந்தனர்.

சண்முகம் மனதிலே நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு இத்தன பிகுவோ சீக்கரம் முடிங்கபா!!!!!!!!! வேலை இருக்கு என்று மனதில் பேசிக்கொண்டு இருந்தார்.

பிரகாசமும் அவர் மனைவியும் அவர்களே தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்தனர்.

கலாவோ வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தார். ரங்கராஜன் பெற்றவர்கள் முகத்தை பார்ப்பதும், வீட்டை பார்பதும்மாக இருந்தான்.

உடன் வந்த பெரியவர், என்ன பா அமைதியா இருந்தா எப்படி, அம்மா கலா வந்த விஷயத்தை சட்டுபுட்டு பேசி முடிக்க வேண்டியதுதானே என்றார்.

உடனே கலா சண்முகத்தை பார்க்க அவர், சரித்த முகத்துடன் எல்லாம் நல்ல விஷயம் தான், நம்ம ஏற்கனவே பேசினது தான். நம்ம பசங்க கல்யாண விஷயமா பேச வந்து இருக்கோம் என்றார்.

உங்களுக்கு தெரியாது இல்லை, இத்தனை நாளா எல்லாத்தையும் பார்த்து இன்னிக்கு எங்களுக்கு தான் மனசு வருத்தம் என்ன செய்ய, அதை விடுங்க………………

பரம்பரையா வந்த வீடு நிலம் எல்லாம் இல்லைனாலும், ராஜன் சொந்தமா தொழில் வைத்து நடந்தி வரான், அது போக என் மனைவி கலாவிக்கு அவங்க அப்பா, அம்மா கொடுத்த சொத்துபத்து எல்லாத்தையும் அவன் தான் பார்த்துக்கொண்டு இருக்கான்.

அது எல்லாம் அவனுக்கு தான், எங்களுக்கு இருக்க ஒரே பையன் அவன் ஆசைக்கு முன்னால சொத்து மத்த எல்லாம் ஒரு விஷயம் இல்லை. அதான் அவன் மனசுக்கு புடிச்ச பெண்ணை பேசி முடிக்கலாம் வந்து இருக்கோம் என்றார். 

அவர் பேசியதை கேட்ட பிரகாஷம் நேற்று இவர் பேசியதற்கும், இன்று இவர் பேசுவதற்குகம் இருக்கும் வித்தாசத்தை உணர்ந்து இருந்தார்.

நேற்று தன் மகளை திருமணம் பேசிய நேரம் தங்கள் சொத்துகள் எல்லாம் போய்விட்டதாக கூறியாவர் இன்று, மகனுக்காக எது வேண்டுமானும் செய்வேன் என்பது போல் பேசுவது கண்டு மனிதர் அயர்ந்து தான் போனார்.

நேற்று இவர் பேசியதை வைத்து நான் வேண்டாம் என்று பேசினால் எண் வீட்டிலேயே எண்ணை நம்பமாட்டார்கள் போல என்று நினைத்தவர், அடுத்து என்ன என்பது போல் அமர்ந்து இருந்தார்.

கலா அடுத்து பேச ஆரம்பித்தார். அவருக்கு தன் வீடு கைவிட்டு போவது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், மகன் முன் அனைத்தும் அவருக்கு இரண்டாம் பச்சம்தான்.

இங்க பாருங்க நாம ஏற்றகனவே பேசினது போல் நீங்க பெண்ணுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்துவிடுங்கள், கல்யாணத்தை நாம முன்னாடி நினைச்ச தேதி இல்லாம, முன்னாடியே எங்க குலதெய்வ கோவில் வைத்துக்கொள்ளாம் என்றார்.

அதை கேட்டதும் கவியின் அப்பா, அவர்களை பார்த்தவர், தன் மனதில் சில கணக்குகளை போட்டவர், நீங்களே எங்கள் வீட்டுக்கு வந்து என் மகளை கேட்டபது எனக்கு சந்தோஷம் தான், என்றார் சண்முகத்தை பார்த்தவாரே, அதில் நான் ஒன்றும் உன் வீடுக்கு வரவில்லை, நீ தான் என் வீட்டுக்கு வந்து இருக்கிறாய் என்ற பொருள் இருந்து.

மேலும் தொடர்ந்தவர், இந்த ஊர்க்கே பெரிய குடும்பம் நீங்க தான் அதில் என் மகள் வாழப்போது எனக்கு சந்தோஷம் அதனால தான் உங்க வீட்டு சம்மந்தை சந்தோஷமா நடத்தலாம் நினைத்தோம். அதுக்குள்ள ஏதுஏதோ பிரச்சனை, என்றவர் சரி போனது எல்லாம் போகட்டும்.

அன்னிக்கு எங்க பக்கத்துல இருந்து தான் பிரச்சனை ஆரம்பித்து, ஆனாலும் அதுவும் நல்லதுக்குதான், இல்லைனா நாளைக்கு கல்யாணத்துக்கு பிறகு இந்த மாதிரி பிரச்சனை வந்து இருந்தா நாங்க எங்க வீட்டு பெண்னை திருப்பியா கூட்டி வர முடியும் என்றார். அதுவும் இல்லாமா என் மக வந்த நேரம் தான் எல்லா பிரச்சனையும் வந்து என்று பழியை என் மகள் மேலேயே பேசி இருப்பார்கள் இந்த ஊர்மக்கள் என்றார் சண்முகத்தை பார்த்துக்கொண்டே.

கலாவும், சண்முகமும் அவர் பேசியதில் முகம் கருக்க அமர்ந்து இருந்தனர்.

சண்முகம் மனதில் இவன் எல்லாம் என்னை பேசுர நிலையில் இருக்கு என் நிலைமை, இருடா இந்த கல்யாணம் வேண்டாம் என்று உன வாயில் வந்த அடுத்த நிமிஷம் என் மகளை இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்து இந்த எல்லா சொத்துக்கும் அவளை வாரிசா ஆகிகாட்றேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

கலாவோ இதுநாள் வரை தன் முன்னால் பேச கூட தயங்கும் இவர்கள் எல்லாம் தன்னை பேசும் படி ஆகிவிட்டதே என்று நினைத்தவர், மகன் மட்டும் தான் சொன்னதை கேட்டு இருந்தாள் இந்த நிலை வந்து இருக்காது என்ற எண்ணத்தில் இருந்தார்.

ஆனால் ரங்கராஜன் மனதோ வேறு யோசித்துக்கொண்டு இருந்து, இவர் என்னவோ மனதில் வைத்து பேசுகிறார். அடுத்து இவர் என்ன குண்டு வைத்து இருக்கிரோ என்று அவரை பார்த்த படி இருந்தான். அவர் எண்ண சொன்னாலும் கவி தான் தன் மனைவி என்பதில் உறுதியாக இருந்தான்.

ஆனால் அடுத்து அவர் சொன்னதை கேட்ட எல்லோர் முகமும் அதிர்ச்சியில் இருந்து. 

Advertisement