Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 12

சன்முகம் வந்து பேசிவிட்டு போனதும் கலா மிகவும் குழம்பி போனாள், என் சொல்கிறார் இவர், திருமணம் ஆன இத்தனை வருடங்களில் இப்படி இவர் பேசியது இல்லையே. தான் என்ன சொன்னாலும், செய்தாலும் தன் பக்கம் நிற்பவர், தன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் தான் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்பவர், இன்று இப்படி பேசி போக காரணம் என்னவாக இருக்கும்.

அவர் சொல்வது போல் ரங்கநாயகியை ஏன் நான் என அண்ணன் மகளாக பார்க்கவில்லை, வள்ளியின் பெண்ணாகவே பார்த்தேன். இத்தனை நாள் இதை சொல்லாமால், இப்போது இதை சொல்வதற்க்கு என்ன காரணம். 

இதுவரை தான் செய்து எல்லாம் சரியானது என்ற மனநிலையில் இருந்தவர், தன் அன்னை தன்னிடம் இதை பற்றி பேசியபோது கூட அதை கணக்கில் கொள்ளாதவர், இன்று அதிகம் குழம்பி போனார். சண்முகம் அவளை அந்த அளவிற்க்கு குழப்பி இருந்தார். 

அவருக்கு நன்றாக தெரியும், மனைவி எடுக்கும் எந்த முடிவையும் ரங்கராஐன் மீற மாட்டான் என்று. தன் மகளை இந்த வீட்டின் மருமகளாக கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு மனைவி தான் சரி என்று, அதனால் தான் தன் ஆட்டத்தை மனைவியிடம் இருந்து தொடங்கி இருந்தார்.

அதே சமயம் நயாகி இந்த வீட்டின் மருமகளாக வந்தாள் தான் வீடும், சொத்தும் அவர் வசம் இருக்கும் என்பதை அவர் நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக அவளும் இந்த வீட்டின் பெண் என்று கூறியிருந்தார்.

அதாவது தான் சொல்லி மனைவி இந்த முடிவை எடுக்கவில்லை, ஆனால் அவள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்து அந்த முடிவை நேக்கி மனைவியை செலுத்தி இருந்தார்.

………………………….

ரங்கநாயகியும் யோசனையில் அமர்ந்து இருந்தாள், இந்த நேரத்திற்க்கு கண்டிப்பாக கலாவிற்க்கு விஷயம் போய் இருக்கும். அடுத்து என்ன நடக்கும்??

அவள் அறிந்த வரை கலா கண்டிப்பாக இந்த சொத்துக்களை கண்டிப்பாக எளிதாக விட்டுவிடமாட்டார். அவருக்கு அந்த சொத்தின் மேல் இருக்கும் ஆசையைவிட, அந்த மூலம் கிடைக்கும் கௌரவம், மரியாதை மிக முக்கியம். இப்போது அவர் எப்படி முடிவு எடுப்பார்.

சொத்துக்காக தன்னிடம் பேசுவார இல்லை, சண்முகம் நினைத்து போல் தன்னை அவர் மருகளாக ஏற்றுக்கொள்வாரா?

அப்படி கேட்டாள் தான் கட்டாயம் இதற்கு சம்மதிக்க போவது இல்லை என்பதும் அவருக்கு தெரியும், பின் எதை கொண்டு இதை செய்வார். அடுத்து சண்முகம் என்ன செய்வார். ஒரு வேளை வள்ளியை கொண்டு என்னை மீரட்ட நினைப்பார்களோ?

இல்லை இதை பற்றி சண்முகம் என்னிடம் நேரில் பேசினால்?  என்று அவளுக்குள் பல கேள்விகள். 

தன் எதிரி யார் என்று தெரியாமல்? தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல்? அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியாமல் தன் முன்னே இருந்த குடும்பத்தினர்களை பற்றிய யோசனையில் இருந்தாள்.

அடுத்த அடி என்னவாக இருக்கும் என்பதும், அதை தான் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்றும் மனதினுள் கணக்குகள் போட்ட வண்ணம் இருந்தாள்.

………………………………….

சுந்திரவடிவுக்கு தன் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள் குறித்து அந்த வீட்டின் மூத்த பெண்மணியாக கவலை இருந்து. என்ன தான் ஆரம்ப நாட்களில் மகளின் மேல் அதிருப்பதி இருந்தாலும், மகள் இறந்து, பேரன் இறந்த பின், அவன் பெண்ணும் இந்த வீட்டில் இல்லாமல் போனதில் அவருக்கு வருத்தமே…………

அந்த நிகழ்வுகள் நடக்கும் போது தான், நியாயமாக நடந்துக்கொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவருக்கு. ஒரு வேளை அன்று தன் பேத்தி இந்த வீட்டில் இருந்து போகாமல் இருந்து இருந்தாள், காலபோக்கில் தன் பேரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பாள். என்ன இருந்தாலும் இருவரும் என் வீட்டின் பிள்ளைகள் தானே தான் ஏன் அன்று அவ்வாறு யேசிக்கவில்லை, என்ற எண்ணம் அவருக்கு, அதனால் தான் அன்று பேத்தி வந்த போது கூட அவருக்கு அத்தனை மகிழ்ச்சி, ஒரு வேளை மருமகள் தான், அவளை ஏற்றுகொள்வாளோ? என்ற எண்ணத்தில் தான், இவள் ஏன் இப்பொது வந்து இருக்கிறாள்? என்று கலாவிடம் பேசி அவள் எண்ணத்தை அறியவிரும்பினார். 

ஆனால் கலா அதை ஒரு பெருட்டாக எடுக்காதில் அவருக்கு வருத்தமே. எது நடந்தாலும் தன் பேரன், பேத்திகளை சந்தோஷமாக வைக்கக்கொள் கடவுளே என்று வேண்டிக்கொண்டார்.

அன்று நிச்சயம் நின்ற போது கூட அவருக்கு மீண்டும் இவர்கள் இனைந்து விடுவார்கள் என்ற எண்ணம் தோன்ற அவர் முகத்தில் சந்தோஷம் வந்து போனது.

இப்போது காலையில் நடந்துக்கொண்டு இருப்பதை பார்த்தவர், அடுத்து என்ன என்ற கவலையில் இருந்தார்.

…………………………….

சண்முகம், முருகனிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அதே நேரம் ரங்கராஜன் மற்றும் நாயகியையும் கண்காணிக்க சொல்லி இருந்தார்.

அடுத்து அவர்கள் இருவரும் என்ன செய்வார்கள் என்று அவருக்கு தெரியவேண்டி இருந்து. 

…………………………..

ரங்கராஜன் காலையில் நடந்த நிகழ்விற்க்கு பிறகு வீட்டிற்க்கு வந்தவன், அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ஊர் பெரியவர் வந்து சொன்னதும் சேர்ந்துக்கொள்ள தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

நிச்சயம் இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று, அது மட்டும் இல்லாமல், அவள் சம்பந்தபட்ட ஏதும் இனி தனக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருந்தான்.

அதே யோசனையில் அமர்ந்து இருந்தவன் முன் நிழலாட நிமிர்ந்தவன் முன் நின்று இருந்தாள், பார்கவி!!!!!!!!!!!!!!!

சட்டென்று எழுந்தவன் அவளை அதிர்வாக பார்த்தான், திருமணம் என்று முடிவான பின் இத்தனை நாட்களில் இவர்கள் எங்கும் சந்தித்துக்கொண்டது இல்லை, பொது இடங்களில் பார்த்துக்கொண்டாலும், ஒர் பார்வையும், புன்னகையுமாக கடந்து சென்றுவிடுவார்கள்.

இத்தனை நாட்களில் தொலைபேசியில் கூட பேசியது இல்லை. இன்று இவள் தன்னை தேடி இங்கு வந்து இருக்கிறாள் என்றாள்? என்ன?

அவள் பின்னால் பார்த்தான் யாரும் இல்லை.

தனியாகவா வந்து இருக்கிறாள்?

என்று அவளை பார்த்து இருந்தவன் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அவளை பார்த்து இருந்தான்…………

பின் தன்னை சுதாகரித்துக்கொண்டவன் என்ன விஷயம் கவி! என்றான்.

அவனின் கவி என்ற அழைப்பில், அவள் கண்ணில் தோன்றிய மகிழ்ச்சியுடன் அவனை பார்க்க………

அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும்மாக இருக்க………

மீண்டும் அவளிடம் என்ன? என்றான்…..

அது………. அது வந்து……… அது வந்து…………….. இன்னிக்கு எங்க வீட்டில்……… என்று தயங்கிக்கொண்டு இருந்தவளை பார்த்தவன் தன் பொறுமை இழந்து, இங்க பார் கவி நான் ஏற்கனவே நிறைய பிரச்சனையில் இருக்கேன்…………

நீயும்…………………. சொல்லவந்த சொல்லு என்றான்………

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின், அவன் முகம் பார்த்து, இன்னிக்கு வீட்டில் அப்பா அம்மாவிடம் கல்யாணத்தை பற்றி பேசினாங்க.

உங்க அத்தை பெண் உங்க மேல பஞ்சாயத்தில் புகார் கொடுத்து இருக்காங்கலாம்…….

அது தெரியுமா என்பது போல் அவள் அவனை பார்க்க……….

ம்மம்மம்மம…………… என்ற தலை அசைப்பு அவனிடம்.

அதனால அந்த வீடு, சொத்துக்கள் எல்லாம் உங்களோடது இல்லை, என்றும், அதனால் அடுத்து இந்த பேச்சுவார்த்தை எல்லாத்தையும்…………. 

என்று கூறிக்கொண்டே வந்தவள் நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்.

அடுத்து என்ன வரும் என்று அனுமானித்தவன், அதை சொல்லும் மாறி அவளை ஊக்கினான்.

எல்லாத்தையும் இதோட நிறுத்திடலாம் சொல்றாங்க……… என்றாள் கண்ணில் நீர் திரள.

எதிர்பார்த்து தான் என்றாலும், கோவத்தில் கைகளை மடக்கியவன், இப்போது நான் என்ன பன்னனும் என்றான் அவளை பார்த்து.

என்ன என்பது போல் அவள் அவனை பார்த்தாள்.

அவளுக்கும் அது தெரியவில்லை. முதலில் வீட்டில் சொன்னதின் பேரில் தான் திருமணத்திற்க்கு சம்மதித்து இருந்தாள். ஆனால் இந்த இதைபட்ட நாட்களில் அவளுக்குள் திருமண கணவுகள் வளர்ந்து இருந்து. இந்த ஊரின் பெரியவீட்டின் மருமகள் என்று அவளை எல்லோரும் கொண்டாடி இருந்தனர்.

ஆனால் அது எல்லாம் இப்படி ஒரே நாளில் மாறி போகும் என்று அவளும் என்னவில்லை. இன்று வீட்டில் பேசியது வேறு அவளை குழப்பி இருக்க. 

அவனை சந்திக்க வந்துவிட்டாள், இப்போது இவன் கேட்கும் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

அதனால் அமைதியாக இருந்தாள்.

இங்க பார் கவி, உனக்கு என்னை பிடித்து இருக்கா? என்றான் அவள் முகம் பார்த்து.

அது என்று சிறிது யேசித்தவள், எனக்கு தெரியவில்லை, ஆனால் இத்தனை நாள் நமக்கு திருமணம் என்ற நினைப்பில் இருந்து விட்டேன் இப்போது அது இல்லை என்றாள் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை.

நம்ம கல்யாணம் நடக்காதா? என்றாள் அவன் முகம் பார்த்து?

இதற்கு என்ன பதில் சொல்வது………

இப்போது அமைதியாக இருப்பது அவன் முறையானது.

பின் அவளிடம் நடக்கனும்மா? என்றான்

அவள் அவனை அனைத்துக்கொள்ள, இதை எதிர்பார்க்காதவன், ஏய் கவி என்றான் அதிர்வுடன். அவன் முகம் பார்க்காமல் அவனை அனைத்து இருந்தவள்.

பின் விலகி திரும்பி நடக்க தொடங்கினாள்.

கவி என்றான் அவன், அவன் அழைப்பில் நின்றவள், திரும்பாமல் இருக்க. 

நான் பார்த்துகிறேன். கல்யாணம் நடக்கும் என்றான் புன்னகையுடன்.

மகிழ்வுடன் திரும்பி பார்த்தவள், திரும்பி சென்று இருந்தாள்.

மனதில் ஏதோ புத்துனர்வு பொங்க மகிழ்வுடன் வீட்டுக்கு சென்றான்.

தனக்கான வாழ்வு, தனக்கான வீடு, தன் அம்மாவுடன் சந்தோஷமாக என்ற எண்ணத்தில் இதை பற்றி இன்றே அம்மாவுடன் பேசி, சீக்கரம் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என்று எண்ணத்துடன் வீட்டுக்கு சென்றான்.

…………………………………

சுந்திரவடிவு மருமகளிடம் வந்தவர், கலா நான் செல்றத கேளு, ஏற்கனவே உன் அம்மா போட்ட மூடிச்சு, அதை பிரிச்சு வைச்சு என்ன கண்ட, அது தான் நடக்கனும் இருக்கு போல, அதான் இந்த கல்யாணம் நின்னு போச்சு, இனிமே அதை பத்தி யோசிக்காத.

ரங்கநாயகியை உன் மகனுக்கு கட்டிவை இரண்டு பேரும் நல்லா இருப்பாங்க. எல்லா பிரச்சனையும் முடிந்து போகும். என்றவர் எழுந்து சென்று இருக்க.

 கலாவும் அந்த முடிவுக்கு வந்து இருந்தார்.

மகன் தன் திருமணத்தை கவியுடன் நடத்தும் எண்ணத்துடன் இருக்க.

இங்கு கலாவோ அவன் திருமணத்தை ரங்கநாயகியுடன் முடிக்க நினைத்தார்.

கலாவோ மகன் தன் முடிவை மீற மாட்டான் என்று இருக்க……………..

ரங்கராஐன் தன் அம்மா தனக்கு விருப்பமானதை செய்து வைப்பார் என்று நினைக்க………………..

இதில் யார் எண்ணம் ஈடுடோறும்………………………………………

  

 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement