Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 10

காலையில் விஷேசத்திற்க்கு என எவ்வளவு பரபரப்பாக இருந்தோ, அதற்கு முற்றிலும் மாறாக இப்போது அந்ந வீடு அமைதியாக இருந்து. நடந்து முடிந்த கலாட்டாவில், எல்லோரும் தங்கள் அறைகளில் முடங்கி இருக்க. சுந்திரவடிவும், சண்முகமும் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டனர்.

வந்த சொந்தங்கள் எல்லாம் விடை பெற்று சென்று இருக்க, வீட்டு வேலையாட்கள் எல்லோரையும், சுந்திரவடிவு அனுப்பி இருந்தார். மற்றவற்றை சண்முகம் பார்த்துக்கொள்ள, இரவு உணவுக்கு கூட யாரும் கீழே வரவில்லை.

இது அத்தனையும் நடக்க காரணமான ரங்கநாயகியோ தன் அறையில் மடிக்கணினியுடன் அமர்ந்து அன்றைய பங்குகளை பற்றி பார்த்து இருந்தாள். இடை இடையே அவள் அலுவல் சம்பந்தமாக வந்த தொலைபேசி அழைப்புகளையும் ஏற்றவள் அதற்கு தக்கவாறு பதில் அளித்து, தன் வேலையில் முழுகிருந்தால்.

ரங்கராஜன் எல்லோரும் போனபின் அவன் அறைக்கு சென்றவன் தான் அதன் பின் வெளியே வரவே இல்லை. அவனுக்கு ரங்கநாயகி மேல் கொலை வெறியே வந்தது. இத்தனை வருஷம் எங்கேயோ இருந்தாள்ளே அப்படியே போய் தொலைந்து இருக்க வேடியதுதானே, இப்ப எதுக்கு இங்க வந்தா?

எல்லாம் இந்த அம்மாவை சொல்லனும், அவள இங்க வரைவழைத்து தேவையில்லாமல்……………. 

எதுக்கு கொல்லிக்கட்டைய எடுத்து தலையில் சொறுவிக்கனும்?  

இவளாள எனக்கு எப்பவுமே நிம்மதி இல்ல?

அன்னிக்கும் இப்படி தான் நான் கட்டுன தாலிய எந்த உறுத்தலும் இல்லாம கழட்டிக்கொடுத்துட்டு போன, இன்னிக்கு ……………. ச்சே………

என்று மனதில் குமுறியவாறே அவன் அறையில் அடைந்து கிடந்தான்.

கலாவே அடுத்து என்ன செய்வது என்று அறியாது இருந்தார்.

இந்த வீட்டில் இதுவரை அவர் நினைத்து தான் நடந்து, நடத்தி இருந்தார். அம்மா, அப்பா இருந்த போதும் சரி அதற்கு பின்னும் சரி எல்லாம் அவர் விருப்பம் தான். 

ஆனால் இன்று தன் மகனின் திருமணத்தை ஒருத்தி நிறுத்துவதா?

அதுவும் அந்த வள்ளியின் மகள்?

இவளை சாதாரணமாக நினைத்துவிட்டோம்மோ?

வந்த அன்றே எல்லாவற்றையும் எழுதிவாங்கிக்கொண்டு துரத்தி இருக்க வேண்டும்………

ஆம் அவள் மகனின் கல்யாண பேச்சுவார்த்தை ஆரம்பித்து போதே தன் குடும்பவக்கீலை அழைத்து பேசிவிட்டார் எல்லாவற்றையும் அவன் பெயரில் மாற்றிவிடும் படி, ஆனால் அது ரங்கநாயகி இங்கு வரமால் சாத்தியம் இல்லை. இத்தனை நாள் நீங்கள் வள்ளியின் சம்மத்தின் பேரில் அனைத்தையும் அனுபவித்து வந்தாலும், இனிமேல் அது முடியாது. உயில் படி ரங்கநாயக்கு தான் எல்லா உரிமையும் உண்டு, அவள் இங்கு வந்து எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைத்தாள் எனக்கு ஆட்சேபனை இல்லை. அது இல்லாமல், உங்களிடமோ.. ஏன் வள்ளியிடமோ கூட என்னால் இவற்றை ஒப்படைக்க முடியாது என்றார் முடிவாக.

இது இன்று ஆரம்பித்து இல்லை, என்று ரங்கநாயகிக்கு 18 வயது அடைந்தாளோ அன்றே வக்கீல் சொல்லியது தான்.

இனி இந்த சொத்துகளின் முழு அதிகாரம் ரங்கநாயகியை சார்ந்து என்று, அதுவரை நீங்கள் இங்கு இருக்கலாம், ஆனால் சொத்தில் எதையும் அனுபவிக்க முடியாது, அதாவது இந்த சொத்தின் மூலம் வரும் வருமாணங்கள் இனி உங்களிடமோ, இல்லை வள்ளியிடமோ கொடுக்க முடியாது, அது ரங்கயாகிக்கு தான். 

அவர் வரும் வரை இது எல்லாம் வங்கியில் சொலுத்தப்படும். வீடு வயல், தோப்பு என்று எல்லாவற்றிக்கும் நீங்கள் போகலாம், வரலாம், விளைவிக்கலாம், ஆனால் அதன் வரவுகள் எல்லாம் ரங்கநாயகிக்கு தான் என்றார்.

இது தான் கலாவிற்கு பெருத்த அடியாக இருந்து, இது எல்லாம் தனது இல்லை என்று பிறருக்கு தெரிந்தால் தன் மரியாதை, கௌரவம் என்னவாகும், அதனால் எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொண்டார். சுருங்க சொன்னால், ரங்கநாயகியின் சொத்துக்களை அவர் செலவில் பார்த்துக்கொண்டார்.

அவளுக்கு அவள் தந்தை நிறை செய்து இருந்தார், அதனால் இந்த வருமாணத்தில் தான் அவர் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. அதுவும் இல்லாமல் அவருக்கு கிடைத்த சொத்துக்களை மூலதனமாக கொண்டு ரங்கராஜன் பல தொழிகளை நடத்திவந்தான். அவர்களின் சொத்துக்களும் பல மடங்கு பெறுகி இருந்து.

அதனால் இது எல்லாம் கலாவிற்க்கு ஒரு பெருட்டு இல்லை, இன்று இல்லை என்றாலும், ஒரு நாள் இது எல்லாம் தனக்கு தான் என்ற நம்பிக்கையில் இருந்தவர், எல்லாவற்றையும் செலவு செய்து பார்த்துக்கொண்டார்.

அப்படியும் ரங்கயாகி 12ஆம் வகுப்பு முடித்த பின் சிவா இவர்களை தொடர்புக்கொண்டு, அவள் மேலே படிக்கவைக்க பணம் கேட்க, அதை கொண்டு அவளை இங்கு வரவழைக்க கலா, வள்ளி மூலம் காய் நகர்த்தினார் தான், அவள் வந்தாள் அவளை படிக்க வைக்க ஆகும் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு பதில் அவளிடம் கையெழுத்து வாங்கி விடவேண்டும் என்று அவர் என்னிக்கொண்டு இருக்க, அவர் எண்ணத்தில் மண்ணை போட்டவள், அவர்கள் உதவியே வேண்டாம் என்று முற்றிலும் ஒதுங்கிக் கொண்டாள், அதன் பின் என்ன முயன்றும் அவளை இங்கு வரவழைக்க முடியவில்லை கலாவால். கடைசி 3 வருடமாக வள்ளியில் படுக்கையில் இருந்தும் அவளை கூட பார்க்க வராத மகளை நினைத்து அவருக்கு பயமாக இருந்து.

ஆம் பயமாக தான் இருந்து, இப்போதே இப்படி இருப்பவள் நாளை வள்ளியும் இறந்துவிட்டாள், இவளிடம் எப்படி கையொழுத்து வாங்குவது. அதனால் அவள் இருக்கும் போதே அவளை எப்படியாவது இங்கு வரவழைக்க வேண்டும், இல்லை என்றால் இத்தனை நாட்கள் பாடுபட்டது எல்லாம் வீணாய் போய்விடும் என்று நினைத்தவர், நினைப்பை இன்னும் வலுவாக்கியவர்கள் பார்கவி வீட்டினர்.

அவர் முதலில் மகனுக்கு பெரிய இடங்களில் பெண் பார்க்க, எல்லோரும் அவர் சொத்துக்கள் பற்றிய பேச்சைதான் முதலில் எடுத்தனர், அதில் சிலர் இது எல்லாம் உங்கள் அண்ணனுக்கு சொந்தம் ஆனாது தானே என்று அவர்கள் தரப்பில் இருந்தும் பேச்சுகள் வர, சிலர் அவர்களின் முந்தைய திருமணத்தை பற்றியும் கேட்க என்று எல்லாவற்றிக்கும் முற்றுபுள்ளி வைக்க தான் அவர் அவளை இங்கு வரவழைத்து, ஆனால் இன்று நடந்தோ அவர் முற்றிலும் எதிர்பாத்திராத ஒன்று, இன்று வரை எல்லாம் தன் கட்டுபாட்டில் தான் என்று நினைத்தவர் எண்ணத்தை ஒர் நொடியில் துளாக்கி இருந்தாள் ரங்கநாயகி.

இவர் நினைப்பு இப்படி இருக்க, ரங்கநாதனுக்கோ அவளிடம் மீண்டும் தோற்றுவிட்ட உணர்வு, அந்த வயதிலே அவள் தன்னை மதிக்கவில்லை, தன்னை வேண்டாம் என்று விட்டு போனாவள், இன்று அவள் முன்னாள், தன் திருமண ஏற்பாடு கூறித்து மகிழ்ந்து இருந்தவன். அவள் எல்லாவற்றையும் ஒர் நொடியில் கெடுத்துவிட்டதாகவே நினைத்தான். அவள் மேல் தீராத கோபமும் வன்மும் கொண்டான்.   அவளை எப்படியாவது இங்கு இருந்து துரவேண்டும் என்று நினைத்தான்.

சண்முகமும், சுந்திரவடிவும் இதில் பார்வையார்கள் மட்டுமே, அவர்கள் ஏதும் செய்ய முடியவில்லை, சொன்னாலும் கலா கேட்கமாட்டாள் அதனால் அமைதிகாத்தனர்.

தாய்யும் மகனும் இதே யேசனையில் இருக்க, அடுத்தநாள் காலையில், எழுந்தவள் தன் காலை கடன்களை முடித்துக்கொண்டவள், தன் பண்ணை மற்றும் வயல்களை பார்க்க கிளம்பிவிட்டாள். இரவு தாமதமாக உறங்கியதால் எழுந்து வந்த, தாயும் மகனும், காலையில் தாமதமாக எழுந்து வந்த போது விடு அமைதியாக இருந்து. அவர்களின் பார்வை அவளை தேடிய போதும் ஏதும் இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. 

சாப்பிட்டு முடித்த ரங்கராஜன் வெளியில் கிளம்புமுன், கலா அவனை பண்ணைக்கு சென்று என்ன வேலை நடக்கிறது என்று பார்த்து வருமாறு கூறினார், இன்று அவர்கள் லோடு அனுப்பும் தினம், அவர் இருக்கும் மனநிலையில் அங்கு சொல்ல முடியாது, அதுவும் இல்லாமல் நேற்று நடந்தை பற்றிய பேச்சுக்கள் வேறு இருக்கும், அதனால் அவனை அனுப்பினால், ஆனால் அங்கு செல்லும் மகன் வெடிகுண்டுடன் திரும்பி வருவான் என்று தெரிந்து இருந்தாள் கலா அவனை அங்கு செல்ல சொல்லி இருக்கமாட்டாள்.

அம்மா சொன்னதால் அங்கு சென்றவன் தன் வண்டியை அங்கு நிறுத்திவிட்டு வேலைகளை பார்வை இட, அங்கு ஒர் மரத்தின் அடியில் நின்றுக்கொண்டு முருகனுடன் எதையே காட்டியபடி பேசிக்கொண்டு இருந்தாள் ரங்கநாயகி, அதை பார்த்தும் அவன் இரத்த அழுத்தம் கூட, அங்கு வேலை செய்துக்கொண்டு இருக்கும் ஆளை அழைத்து , அவள் எப்போது வந்தாள், என்ன செய்துக்கொண்டு இருக்கிறாள் என்று கேட்டான்.

ஐயா, சின்னம்மா காலையிலே வந்துடாங்க, இங்கு என்ன பன்றாங்க, என்ன விளையுது, இங்க இருந்து எங்க எல்லாம் ஏற்றுமதி ஆகுது, என்ன பொருள், தரம், விலை எல்லாம் அவங்களுக்கு தெரியுது ஐயா, காலையில் வந்தும் எல்லாத்தையும் அப்படி புள்ளி விவரத்தோட சொல்றாங்கனா பார்த்துக்கோங்க, நான் கூட இத்தனை வருஷமா பட்டினத்தில் இருந்த புள்ளைக்கு இங்கஎன்ன தெரியும் பார்த்தேன், ஆனா எல்லாம் தெரிந்து இருக்கு, என்ன இருந்தாலும் சொத்துக்கு உரிமைப்பட்டவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும், என்றவன் வார்த்தை அவனை சரியாக தாக்கியது. 

இங்கு இருக்கும் வேளை ஆள் முதல் இது அவர்களுடையது இல்லை என்பது பதிந்து போய் இருக்கிறது. அதை அவன் உணர்ந்து சொல்லவில்லை தான் இருந்தாலும், அவன் மனதிலும் இது அவர்களுடையது இல்லை என்ற நினைப்பு தான் இருக்கிறது. இதை தானே நேற்று அவளும் சென்னால். என் வீட்டின் அவள் மருமகளாய் வாழமுடியாது என்று……………..

கலா இங்கு எல்லாவற்றையும் கவணித்துக்கொண்டாலும் அதில் ஒர் மெத்த போக்கு இருக்கும்.  இதன் வருமாணத்தில் கைவைக்க முடியாது என்பதால், வருவது வரை வரட்டும் என்பது தான் அவர் நிலை, அவள் மகனும் தன் தொழிலில் இருப்பதால் இதில்  அவனுக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. எப்போதாவது இங்கு வருவான், மற்றபடி இதை பற்றி எல்லாம் அவன் கண்டுக்கொள்வது இல்லை.

இவர்களின் மரங்களில் விலைவிக்கும் பழங்கள், தேங்காய், மற்றும் காய்கறிகள் எல்லாம் உள் ஊர் மற்றும் வெளியூர் சந்தைகளில் விற்கபடுவதை பார்த்துக்கொள்ளவது சண்முகம், வரவு செலவை கலாவிடம் கொடுத்துவிடுவார். 

யாருக்கும் இதுவரை இது பெரிய விஷயமாக தெரிந்து இல்லை, ஆனால் இன்று இவள் வந்து எல்லாவற்றையும் பார்ப்பது, அவனுக்கு தலையிறக்கமாக இருந்து.

இங்கு இருந்து அவர்களின் ரைஸ் மில்லுக்கு சென்று இருந்தான் அங்கு இதே நிலைதான், காலையில் அவள் இங்கு வந்தாகவும், எல்லாவற்றையும் பற்றிக்கேட்ட தாகவும் கூறினர். அடுத்து சக்கரை ஆலையிலும் இதே நிலை தெடர நேர வீட்டிற்க்கு சென்றவன். தன் அம்மாவிடம் கத்தி தீர்த்துவிட்டான்.

இனிமேல் நாம் இங்கு இருக்க வேண்டாம் என்றும், தனியாக போய்விட வேண்டும் என்றும் அவன் கூறியதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது எல்லாவற்றையும் வள்ளியும் கேட்டுக்கொண்டு இருந்தார். அவர் முகத்திலும் கவலையின் ரேகைகள்.

எல்லாவற்றையும் கேட்ட கலா ஒர் முடிவுக்கு வந்தவராக, அவள் வரவுக்கு காத்து இருந்தாள், ஆனால் அவர் நினைப்பது எதுவும் இனி நடக்காது என்பது போல், அங்கு வந்தவர் சென்ன செய்தியில் அவருக்கு நெஞ்சுவலியே வந்து இருந்து.

அதற்கு காரணமாவளே அவர்களின் மற்றோர் பண்ணைவிட்டில் உறங்கிக்கொண்டு இருந்தாள்………………………… 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement