Advertisement

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 1

அந்த அதிகாலை வேலையில் தன் ஐ10 னில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தால் அவள். அவள் செல்லும் சாலையில் இப்போது வேறு வாகணங்கள் இல்லை என்பதாலும், உள்ளத்தின் கொதிப்பை வேறு யாரிடமும் காட்ட வழியில்லை அதனால் அதை தன் வண்டியின் வேகத்தில் காட்டி இருந்தால்.

நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு இருந்தால்,அந்த அழைப்பு வந்த பிறகு அங்கு இருக்க முடியவில்லை, இதுவரை எத்தனையோ முறை வேறு வேறு நபர்கள் அழைத்து இருந்தார்கள் தான், அதை எல்லாம் தட்டி கழித்த அவளால் இந்த அழைப்பை அப்படி விட முடியவில்லை.

அதே சமயம் ஊருக்கு செல்லவும் அவளுக்கு வருப்பம் இல்லை. ஆனால் இந்த முறை …………..ச்சே அதை நினைக்கியிலே அவள் ரத்த அழுத்தம் உச்சத்தை தெட்டது.  இன்னும் வேகம் எடுத்தது அவள் கார். இன்னும் 1 மணி நேரத்தில் ஊரை நெருகிவிடும். 

மீண்டும் இந்த மண்ணில் அவள் கால் வைக்க வேண்டும் என்று அந்த நினைப்பே அவளுக்கு கசந்து வழிந்தது.

எல்லாவற்றையும் அவள் தன் வண்டியில் காட்டிக்கொண்டு இருந்தாள். 

அவள் முகத்தில் இரவு முழுவதும் வண்டி ஒட்டிய களைப்பு அவள் முகத்தில் இல்லை. 26 வயது நிமிர்வுடன், தைரியமும் நிறையை கொண்ட பெண்ணவள், அவள் பார்வையே அவளின் தனித்தன்மை, தேவையில்லாமல் என்னிடம் ஏதும் பேச வேண்டாம் என்று எட்டி நிக்க வைக்கும்.

ரங்கநாயகி BA BL சென்னையில் உள்ள முன்னனி நிறுவனத்தின் குழுமத்திற்க்கு சட்ட ஆலோசகர் (legal Advisor), அவள் மாத வருமாணம் சில லட்சங்களை தாண்டும். தனியாளக  தான் இருக்கிறாள், தன் தேவை போக அவை எல்லாம் முதலீட்டில் பெருகிக்கொண்டு இருந்து.

அவளுக்கு எண வசதியாக தான் வேளை பார்க்கும் நிறுவனத்தின் அருகில் ஒர் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறாள், அவள் தேவைக்கு என ஒர் ஐ10, அவ்வளவு தான், அது திவிர அவளிடம் தன்னை கண்ணியமாக, நிமிர்வாக காட்டும் உடைகள் ஏராளம். நகைகள் அவள் விருப்பம் இல்லை என்பதால் அவற்றுக்கு அவளிடம் வேலை இல்லை.

எப்போதாவது ஒன்று இரண்டு தன் உடைக்கு தகுதார் போல் அணிவாள். இப்போது கூட பயனத்திற்க்கு தகுந்து போல் ஜீன்சும், டாப்பும் அதன் மேல் ஒர் ஜாக்கெட் அணிந்து இருந்தால், எப்போதும் தன் தலை முடியை பாப் செய்து இருப்பாள், அது அவள் வசதிக்கு. பல சமயங்களில் கண்களில் இருக்கும் கூலர்ஸ்.

வலது கையில் டைடன் ராக, அவ்வளவு தான் ஆனால் அதிலும் அவள் கம்பீரமாக இருந்தால். 

அவள் பயனபட்டுக்கொண்டு இருப்பது அவள் பிறந்து வளர்ந்த ஊர்,  சொந்த ஊர், கிட்ட தட்ட 11 வருடங்களுக்கு முன் அந்த ஊரை விட்டு வந்தவள், இதுவரை அங்கு கால் வைக்கவில்லை.

போக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவளுக்கு வந்து இல்லை. அதைவிட அவள் அங்கு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் யாரும் இல்லை.

ஆனால் அழைப்புகள் எப்போதாவது வரும். அவைற்றையும் அவள் தவிர்த்துவிடுவாள்.

 

ஊரின் எல்லையை கடந்து கார் அந்த பெரிய வீடு இருக்கும் தெருவில் நுழைந்தது. காலை வேளையில் தங்கள் பணிக்கு செல்லும் ஊர் மக்கள் யார் இது என்பது போல் பார்த்து சென்றனர்.

அவர்களில் ஊரில் கார் இருக்கும் வீடு என்றார் அது பெரிய வீடு தான், அது ஒரு கணிசமான மக்கள் தொகை கொண்ட ஊர் தான், பெரும்பாலும் விவசாயம் தான் அங்க தொழில், பிள்ளைகள் படித்தாலும் அதே ஊரில் இருக்கும் சக்கரைமில்லுக்கோ, கரும்பு ஆலைக்கோ, இல்லை மில்லுக்கோ தான் வேலைக்கு செல்வார்கள், பட்ட படிப்பு படித்தவர்கள் மிகவும் செர்ப்பம் தான், அவர்களுக்கும் வெளியூர் வேலை என்பது குதிரை கொம்பு தான்.

அந்த மொத்த ஊரும் அந்த பெரிய விட்டின் கட்டுபாட்டில் தான் அந்த ஊரில் எது நடந்தாலும் அது அவர் விருப்பட்டால் தான்.

அதற்காக அது பின் தங்கிய கிராமும் இல்லை, ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை, மருத்துவமனை, போக்கு வரத்து வசதிகள் கொண்டர் ஊர் தான், ஆனால் இது எல்லாம் அந்த வீட்டின் கட்டுபாட்டில் தான் இருந்து.

அவர்களின் முன்னோர்கள் வெளையர்கள் காலத்தில் (சிங்கம்பட்டி) ஜமீன்தார்களாக இருந்துவர்கள், இப்போது இல்லை என்றாலும், இன்னும் அந்த அதிகாரம் அப்படியோ இருந்து.

அது அந்த மக்கள் மீது மறைமுகமாகவும், சில சமயம் நேரடியாகவும் இருக்கும், அவர்களுக்கு எதிராக செயல்படாதவரை அவர்கள் நல்லவர்கள் தான்.

அப்படி பட்ட ஊரில் கார் வருவது என்றால் யார் ? என்று அனைவரும் பார்த்து இருக்க, அதுவும் அந்த கார் பெரியவீட்டில் நிற்க்க மக்கள் இன்னும் ஆர்வம் ஆனார்கள்.

அந்த மாளிகையின் முன் இருந்த இடத்தில் அந்த காலை நேரத்துக்கு உண்டான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்து.

இவள் வண்டி வந்து நின்றதும் எல்லோரும் தங்கள் வேலைகளை விட்டு விட்டு பார்வையை அங்கு வைத்து இருந்தனர். யார் என்பது போல்.

காரை வீட்டின் முன் நிறுத்தியவள் தன் பக்க கதவை திறந்து, வெளியோ தன் வலது காலை எடுத்து வைத்து வெளியே வந்தாள்.

தன் குளிர் கண்ணாடியை அணிந்து கெண்டவள், அந்த வீட்டை பார்த்துக்கொண்டு இருந்தால்.

அதில் பழைய ஞாபகங்கள் எல்லாம் ஒரு நிமிடம் அவள் நினைவில் ஊர்வலம் போக கதவை சாற்றிவிட்டு, சுற்றிலும் பார்வையை சொலுத்தி இருந்தால். அதற்குள் அவள் வரவு அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கபட்டு இருக்க, அந்த வீட்டின் கணக்குபிள்ளை வெளியில் வந்தார்.

அவளை முதலில் அவருக்கு யார் என்று தெரியவில்லை, அவர் அறிந்த அந்த ஊர் பெண்கள் இப்படி உடுத்தியது இல்லை, எப்போதாவது தொழில் விஷயமாக சென்னை செல்லும் போது அங்கு பெண்கள் பழக்க வழக்கங்களை பார்த்து இருக்கிறார், ஆனால் தங்கள் ஊரில் அப்படி யார் என்று அவருக்கு தெரியவில்லை. ஆனாலும் அருகில் வர வர அவருக்கு முகம்  மலர்ந்தவர் வா மா என்றார்.

அப்போது தான் அந்த வீட்டின் ஆட்கள் தங்கள் அறையில் இருந்து வெளிவர தொடங்கி இருந்தனர். 

எல்லோர் முகத்திலும் யார் இது என்ற கேள்வி இருந்தாலும், யாரும் அவளை நெருங்கவில்லை, அந்த வீட்டின் மாப்பிள்ளையான சன்முகம் மட்டும் அவளை பார்த்தபடி இருந்தார். அவர் முகத்தில் என்ன உணர்வு என்பது அவர் மட்டுமே அறியமுடியும், அவரை போலவே அவர் தாய் சுந்தர வடிவும், அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.

இதற்குள் கணக்குப்பிள்ளை அவளை நெருங்கி இருக்க வாங்க மா எப்படி இருக்கிங்க? எத்தனை வருஷம் ஆச்சு உங்கள பார்த்து, அப்படியே பெரியம்மா மாதிரியே இருகிங்க என்றார் முகம் கொள்ளா புன்னகையுடன், ஆனால் அதற்கு தான் அவளிடம் எந்த பிரதிபளிப்பும் இல்லை.

அவள் அந்த வீட்டிக்குள் வந்த நெடியில் இருந்து அங்கு இருந்தவர்களை தன் பார்வையால் அளந்துக்கொண்டு இருந்தால், ஆனால் அதை அவள் குளிர் கண்ணாடி மறைத்துவிட்டு இருந்து. 

அவள் வந்து முதல் இப்போது வரை அவளையே பார்த்து இருந்த அந்த வீட்டின் தற்போதைய எஜமானி கலாராணி, என்ன கணக்கு வந்தது யார் என்ன கேட்டகாமா? அங்க என்ன பேச்சு.

நடுவீடு வரைக்கும் கூட்டி வந்து இருக்க, இது பையனா? பெண்ணா? என்று தன் அதிகாரத்தை காட்டி பேசி இருந்தார் அவர்.

அவரை புறம் ஒர் பார்வை பார்த்தவள், பின் அவரிடம் திரும்பி எங்கே என்று கேட்டாள். தன் பார்வைக்கும், பேச்சுக்கும் யாரோ ஒருத்தி தன் வீட்டில் நின்றுக்கொண்டு, தன்னை மதிக்காமல் போவதா என்று கோபம் கொண்டவர், கண்ட நாய்கள் எல்லாம் வீட்டில் விட்டால் அப்படி தான். யார் என்ன என்று ஒரு தராதரம் பார்த்து வீட்டுகுள்ள வீடனும் என்று இன்னும் என்ன பேசி இருப்பாரோ, அதற்கு முன் கணக்குப்பிள்ளை, பெரியம்மா இது நம்ம ரங்கநாயகி, பெரியவர் பெண் சென்னையில் இருந்து வந்து இருக்கு என்றார் அவசரமாக……….

அவரின் அந்த வார்த்தைகளில் தன் பேச்சை நிறுத்தியவர், அவளை அதிர்ந்து நேக்கினார். 

ரங்கநாயகி என்ற பெயர் அவரை அந்த அளவிற்க்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்து. அதன் பின் ஏதும் பேசாமல் அவளை பார்த்தவர் பின் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டார். அவரை தொடர்ந்து மற்றவர்களும்.

அதுவரை அவர்களை சளைக்காமல் பதில் பார்வை பார்த்தவள், பின் அவரிடம் திரும்பி போகலாம் என்பது போல் தலை அசைத்தால். அவரும் அவருக்கு கீழ்பகுதியில் இருக்கும் ஒர் அறையை காட்டியவர், அந்த அறை நோக்கி நடந்தார் அவளுடன்.

எல்லோரும் அவர் அவர் அறையில் இருந்தாலும், அவர்கள் காதுகள் வெளியில் என்ன நடக்கின்றன என்று கவணித்த வண்ணம் இருந்து. வேலைகார்கள் கூட அவள் பெயரை கேட்டதும் கவனத்தை அவள் புறமே வைத்து இருந்தனர்.

அந்த வீட்டில் தரை தளத்தில் பெரிய கூடம், சமையல் அறை, சாப்பாட்டு அறை மற்றும் இரண்டு விருந்தினர் அறையை கொண்டது, அதில் ஒரு அறைக்குள் நுழைந்தவர்கள், அந்த அறையில் போடப்பட்ட கட்டிலில் இதற்கு மேல் இளைக்க முடியாது என்றபடி ஒர் உருவம் படுத்து இருந்து. அருகில்  இருந்த மருந்துப்பொருட்கள் மற்றும் அந்த அறையில் நிறைத்து இருந்த ஒர் மக்கிய நெடி எல்லாம் அவர் நீன்ட நாட்களாக அவர் படுக்கையில் இருக்கிறார் என்று காட்டியது.

எல்லாவற்றையும் பார்த்தவள் அவர் அருகில் சென்றார். யாரோ வரும் அரவம் உணர்ந்து படுக்கையில் இருந்த அந்த உருவம் மெல்ல கண்விழித்து பார்த்து. அதை பார்த்த அந்த வீட்டின் கணக்குப்பிள்ளை ம்மா யார் வந்து இருக்கா பாருங்க.

ரங்கநாயகி வந்து இருக்குமா. என்ற அவர் பேச்சில் அவர் முகத்தில் சட்டு என்று ஒர் மலர்ச்சி வந்து, அருகில் இருந்தவரை பார்த்தார். மெல்ல அவளை நேக்கி கையை நீட்டினார்.

நீட்டிய கையை பற்றாமல் அவரையே சிறிது நேரம் வெறித்தவள், இன்னும் நீங்க சாகாம உயிரோட தான் இருக்கீங்களா?  என்றாள்  என்றாள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்.

அவளின் இந்த கேள்வியை கேட்டு எல்லோரும் அதிர்ந்து நின்று இருந்தனர். என்ன தான் அவள் அறையில் இருந்து பேசி இருந்தாலும் அவள் அந்த வீட்டில் நுழைந்த நேரத்தில் இருந்து அங்கு நிலவிய ஒர் அசாத்திய அமைதி அவள் பேச்சை எல்லோரும் கேட்க நேர்ந்தது.

அந்த நிமிடம் அங்கு இருந்த எல்லார் மனதிலும் எழுந்த கேள்வி ஒன்று தான், எந்த மகளாவது தன் அம்மாவை இப்படி கேட்க முடியுமா என்பது தான்…………………..

நிறம் மாறு(ம்)மோ

 

Advertisement