Advertisement

அவனுக்கு கலாவை பற்றி நன்கு தெரியும் அதனால் அதன் பிறகு அதை பற்றி கலாவிடம் அவன் பேசவில்லை. ஆனால் முடிந்தவரை கலாவிடம் இருந்து மறைமுகமாக குழந்தையை காப்பாற்றினான்.

குழந்தையாக இருந்த வரை எதும் புரியாவிட்டாலும், வளர வளர வீட்டில் தான் ஒதுக்க படுவதை 6 வயதில் அவள் புரிந்துக்கொண்டாள், அதை அவள் கேட்கவும் செய்தால்.

அதற்க்கு அவர்கள் நீதான் இந்த வீட்டின் அடுத்த வாரிசு, இது எல்லாம் உனக்கானது தான் என்று அவளிடம் சொல்லி வளர்த்தனர், அதை எல்லாம் பார்த்த வள்ளியும், மகளிடம் அடிக்கடி இது எல்லாம் உனக்காது என்று சொல்லியே வளர்ப்பாள். அது அவள் மனதில் ஆழபதிந்து.

ஆனால் இது எல்லாம் கலாவின் மனதில் அந்த குழந்தையின் மீது வன்மத்தையே வளர்த்து.

அவள் வயதுக்கு வந்த போது கூட கலா தன் மகனை எந்த சடங்கும் செய்யவிடவில்லை. இது எல்லாவற்றையும் பார்த்து இருந்தாலும், அவர்கள் அப்போது எதையும் சொல்லவில்லை.

ஒரு நாள் வீட்டில் சொத்துவாங்குவதை பற்றி பேசும் போது அது பேத்தி பேரில் வாங்குவதாக கலாவிற்க்கு தெரியவர, அதை பற்றி கணக்குபிள்ளையிடம் கேட்க, அவர் எல்லாம் கலாதரன் பேரில் தான் இருக்கிறது, அவரை அடுத்து அவனின் மகளுக்கு தான் என்றும் கூறினார்.

அதை அவள் அப்படி அவள் அப்பாவிடம் கேட்க, அவர் ஆம் உனக்கு திருமனத்தின் போது எல்லாம் கொடுத்துவிட்டேன், இது தவிர அவள் மேல் இருக்கும் சொத்துகள் பற்றியும் கூறினார். 

ஆனால் அது எதுவும் அவளை திருப்தி படுத்தவில்லை. எல்லாம் தனது என்று நினைத்து இருக்க, அது அப்படி இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. அது பற்றி வீட்டில் பிரச்சனை செய்தாள், தனக்கு தான் ஆண் வாரிசு இருப்பதால் இது எல்லாம் தன்னை தான் சேரும் என்றும், கலாதரன் மகளுக்கு கொடுத்தால் எல்லாவற்றையும் அவளால் பார்த்துக்கொள்ள முடியாது என்றும் வாதாடினால். மேலும் அவள் திருமணம் செய்து சென்றுவிட்டாள் இவையனைத்தும் யாரோ ஒருவருக்கு போய் சேர்ந்துவிடும் என்றும் சண்டையிட்டாள்.

நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகமாக, இந்த கவலையிலேயே ரங்கநாதன் மரணத்தை தழுவி இருந்தார். அதன் பின் இன்னும் கலாவின் ஆட்டம் அதிகமானது. எல்லாவற்றிலும் வள்ளி மற்றும் அவள் மகளை ஒதுக்கினால், தாய் பேச்சை அவள் கண்டுக்கொள்ளவே இல்லை.

சுந்தரவடிவும் அவள் செயல்களுக்கு ஆதரவளிக்க, சண்முகம் எதற்கும் வாய்திறக்கவில்லை. 

ஆனால் ரங்கநாயகியின் படிப்பு மட்டும் தடையில்லாமல் சென்றது, அந்த வயதிலே அவள் அதிக பக்குவம் அடைந்து இருந்தால். வீட்டில் நடக்கும் சொத்து தகராறு, தாத்தாவின் மரணம் என்று எல்லாம் அவளை பக்குவபடுத்தி இருந்து.

ஆனால் இதற்கு நேர்மாறாக, ரங்கராஜன் வீட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் வள்ளியும், அவர் மகளும் தான் காரணம் என்ற எண்ணம் அவன் மனதில் படிந்து, அவன் ஆண் பிள்ளை, அவனுக்கு தான் முன் உரிமை என்று அவன் மனதில் அந்த சொத்தின் மீதான உரிமையை ஆழபத்தித்து இருந்தார் கலா.

மேலும் வீட்டின் பெரியவர்கள் ரங்கநாயகியின் மீது அதிக கவனம் கொண்டு இருந்தனர், அதுவும் ரங்கநாதன் அவர்களிடம் இருந்து இன்னும் ஒதுங்கி போக வைத்து.

நிலைமை இப்படி இருக்க 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர் இருவரும், ரங்கநாயகிக்கு உடல் நிலை சரிஇல்லாமல் போனது. சில நாட்களாக அவர் மனதில் பல எண்ணங்கள், தனக்கு எதாவது நடத்துவிட்டாள், அதன் பின் அவர்களின் நிலை, என்ற எண்ணித்தில் இருந்தவர், ஒரு முடிவுக்கு வந்து இருந்தார்.

அன்று தான் இருவருக்கும் தேர்வு முடிவுகள் வந்து இருந்து. ரங்கநாயகி படிப்பில் கொட்டி 95% பெற்று தேர்ச்சி பெற்று இருந்தாள். ரங்கராஜன் 70% பெற்று தேர்ச்சி பெற்று இருந்தான்.

அவளின் ஆசிரியர் அவளின் மேல் படிப்பை பற்றி அவளிடம் வள்ளியிடம் பேசிக்கொண்டு இருந்தார். 30 வயது உடைய அவன் கடந்த 1 ஆண்டாக அந்த பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். ரங்கநாயகிக்கு படிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவளுக்கு மேலும் படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கி இருந்தான்.

அதனால் அவள் அடிக்கடி அந்த ஆசிரியரை சந்தித்து பேசிவது வாடிக்கைதான், மேலும் தன்னிடம் யாரும் சகஜமாக பேசாத போது ஒருவர் பேசுவது, அவளுக்கு மகிழ்ச்சியை அளித்து. அவள் எல்லாவற்றையும் அவரிடம் பகிர்ந்துக்கொள்ளவாள்.

மருத்தவர் ஆக வேண்டும் என்பது அவள் கனவு, அதற்கு என்ன படிக்க வேண்டும் , எங்கு படிக்க வேண்டும், எப்படி தயார் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை அவரிடம் கேட்பாள்.

முடிவுகள் வெளிவந்து இருந்து அன்று இரவு, ரங்கநாயகிக்கு  உடல் நிலை மேலும் மோசம் ஆனது, எல்லா உறவினர்களும் வந்து இருந்தனர்.

அப்போது ரங்கநாயகி அந்த முடிவை எடுத்தார், அந்த முடிவால் தன் பேரபிள்ளைகளின் வாழ்க்கை சிறக்கும், எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விடும் என்று அவர் நினைக்க.

அவரின் அந்த முடிவுதான் அவர்களின் வாழ்க்கை முற்றிலும் திருப்பிபோடும் என்று அப்போது அவருக்கு தெரிந்து இருந்தாள், அந்த முடிவை எடுத்து இருக்கமாடார்.

அவர் உறவினர் முன்னால், தனக்கு பின் இந்த சொத்துக்கள் அனைத்தும் தன் மகன் வழி வாரிசுக்குதான் என்றும். தன் பேத்தியை தன் பேரன் ரங்கராஜன் திருமனம் செய்துக்கொண்டாள் அவர்கள், இந்த வீட்டில் தொடர்ந்து இருக்கலாம். இல்லை என்றால், அவள் தந்தை அவளுக்கு கொடுத்த சொத்துகளுடன் வெளியேறிவிட வேண்டும். என்று கூறியவர், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் சொத்துகளை விற்கவோ வேறு யாருக்கும் மாற்றவோ முடியும், அதுவும் இருவரும் சேர்ந்து தான் செய்ய முடியும் என்றும் கூறினார்.

திருமனம் செய்ய மறுத்தால், 18ஆவது வயதில் மகனின் வாரிசு எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றும் கூறினார். இது தன் கணவன் இருக்கும் போதே முடிவு செய்து, அப்படி உயில் எழுதி இருப்பாதகவும் கூறினார்.

அவர் அப்படி கூறியவுடன் அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி, அவர் இப்படி கூறுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.  வள்ளிக்கு இதில் உடன்பாடு இ்ல்லை என்றாலும் அவள் அமைதியாக இருந்துவிட, கலாதான் கத்திக்கொண்டு இருந்தார்.

ரங்கநாயகிக்கு இதனால் தன் படிப்பு என்னவாகும் என்ற எண்ணமே மேலேங்கி இருந்து. ரங்கநாதனுக்கு அந்த திருமணத்தை நினைக்க கூடபிடிக்கவில்லை.

பின் எல்லாரும் சேர்ந்து பேசி சமாதனம் படுத்த, அவர் சரி என்ற ஒத்துக்கொள்ள, அடுத்த இடியை இறக்கினார் ரங்கநாயகி, இந்த திருமணம் இப்போது அவர் முன்னால் நடைபெற வேண்டும் என்பது தான். அது தன் கடைசி ஆசை என்றும் கூறினார்.

ஒருவழியாக அவர் முன்னால் ரங்கநாதன் வேண்டா வெறுப்பாக ரங்கநாயகி கழுத்தில் தாலிகட்ட, அதை பார்த்தபின் தன் உயிரை விட்டு இருந்தார் அவர்.

ஏற்கனவே பெரும்பாலான உறவினர்கள் வீட்டில் இருந்தால், அப்போதே அவரின் உடல் தகனத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன.

ரங்கநான் கொல்லி வைக்க வேண்டும் என்பதால் அவன் அங்கேயே இதர காரியங்களில் இருக்க. ரங்கநாயகி இறுகி போய் இருந்தால்.

காலையில் அந்த நாள் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தோ அதே நாள் அவள் வாழ்வில் தீராத மன வேதனையும் கொடுத்து சென்று இருந்து.

எல்லா காரியங்களும் முடிந்து, உறவினர்கள் வீட்டுக்கு வந்து இருக்க. ரங்கநாயகி நாளை மேல படிப்பது பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள். ஏற்கனவே கடுப்பின் உச்சத்தில் இருந்த கலா தன் உறவினர்கள் மத்தியில் அவள் இதற்கு மேல் படிக்ககூடாது என்று கூற, அது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

கலாவிற்க்கு ஆதரவாக சிலரும், வள்ளிக்கு ஆதரவாக சிலரும் பேச, முடிவில் கலாவின் விருப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு அவர் சொன்ன காரணங்கள் நாளை இவள் படிக்க போகும் இடத்தில் வேறு யாரையாவது விரும்பினால் தன் மகன் வாழ்வு கொட்டுவிடும். என்று அவள் கூறியதற்க்கு யாரும் ஏதும் பேசவில்லை.

இதை எல்லாம் பார்த்து இருந்த ரங்கநாயகிக்கு தன் எதிர்காலம் தன் கண் முன்னே அடுத்தவர்களால் முடிவெடுக்கபடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வள்ளியும் இவர்களுக்கு எதிராக பேசவில்லை. என்றதும் மிகவும் சோர்ந்து போனாள், எல்லாம் சேர்ந்து அடுத்து அவளை விவரித முடிவு எடுக்க வைத்து இருந்து.

அது அவள் வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது மட்டும் அல்லாது, அவன் எதிர்கால கனவையும் கானாலாக்கியது.

ஆம் அன்று இரவே அவள் அந்த வாத்தியாருடன் ஊரைவிட்டு போக முடிவு எடுத்து இருந்தால், அதை கண்டுக்கொண்ட கலா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவளை பஞ்சாயத்தில் நிறுத்தியிருதார்.

அதோடு அவளுக்கும் அந்த வாத்தியாருக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறியவர், ரங்கநாதன் கட்டிய தாலியையும் கழற்ற வைத்தவர். அவள் அந்த ஊரைவிட்டு வெறியேறவும் காரணம்மானர்.

அதன் பிறகு அவள் 11 வருடங்களாக அந்த ஊருக்கு வரவே இல்லை…………………………

நிறம் மாறு(ம்)மோ

Advertisement