Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது. மண்ணிக்கவும்.

தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த இருந்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 08

குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. வீட்டில் எந்த சூழ்நிலையும் மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு. வீட்டில் உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல், தங்கள் சிரிப்பில் கட்டிப்போட்டு விடுவார்கள். தங்கள் பக்கம் எப்போதும் எல்லார் கவணும் இருக்க வேண்டும் என்பதில் இவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது.

அப்படி ஒர் மிகிழ்ச்சியான சூழல் தான் அந்த வீட்டில். இரு குழந்தைகளும் தங்கள் கள்ளமில்லாத சிரிப்பால் எல்லோரையும் தங்கள் வசத்தில் வைத்து இருந்தனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழல் அங்கு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. குழந்தைகளுக்கு 1 வயது முடிவடைந்த நிலையில். அந்த வீட்டில் மீண்டும் சேக மேகங்கள் சூழ ஆரம்பித்து.

அன்று இரவு வழக்கம் போல் எல்லோரும் உணவு அருந்திய பின் அவரவர் அறைக்கு சென்று இருந்துந்தனர். இரவு சுமார் 2 மணி அளவில் வள்ளி கத்திய கத்தில் அந்த வீட்டின் உறுப்பினார்கள் எல்லோரும் அவர்கள் அறைக்கு சென்று இருக்க. அங்கு கண்ட காட்சியில் நிலை குலைந்து போய் இருந்தனர். ஆம் அங்கு கலாதரன் வலி மிகுதியால் கத்திக்கொண்டு இருந்தார்.

என்னவாயிற்று. ஏன் இப்படி தீடீர் என்று செய்கிறார், என்று யாருக்கும் ஏதும் புரியவில்லை. அவரை வலி மிகுதியில் கத்தியதில் அவர் அருகில் செல்லகூட பயந்தனர்.

சண்முகம் தான் அவரை பிடித்து துக்கி இருந்தான். உடனே ரங்கராஜன் வண்டியை எடுக்க செல்ல, அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னால் வேறு வண்டியில் மற்ற அனைவரும் வந்து சேர்ந்து இருக்க, மருத்துவர்கள் அவர்களிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

எல்லோரும் சாப்பிட்டு படுக்க சென்றோம், தீடிர் என்று அவர் முனகும் சத்தம் கேட்டது, காய்ச்சலா என்று பார்த்தேன் அப்படி ஏதும் இல்லை. ஒரு வேளை வயிற்றுவலியோ என்று கேட்டேன், அவர் எதற்கு பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் பயங்கரமா கத்த ஆரம்பித்துவிட்டார் என்று வள்ளி சென்னவற்றையே திரும்பவும் சொன்னார்.

ஏதாவது மருந்து சாப்பிடாரா?

என்ன சாப்பிட்டார்?

இதற்கு முன் இந்த மாதிரி வந்துள்ளதா?

என்று மருத்துவர்கள் எந்த கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

அப்போது மருத்துவர், அவருக்கு ஏதோ ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கு, அதற்கான மருந்துகள் செலுத்தினால் அவருக்கு அது வேளை செய்யவில்லை. அவர் வேறு ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டார் என்றால் அதன் விவரங்கள் தெரிந்தால் தான் மேறக்கொண்டு ஏதும் செய்ய முடியும் என்றனர்.

சண்முகம் அவர்களை அங்கேயே இருக்க சொல்லவிட்டு, வீட்டுக்கு சென்றவன், கலாதரனின் அறைக்கு சென்றான். அவன் இதற்கு முன் செய்துக்கொண்ட சிகிச்சை முறைகள், மருந்துகள், என்று எல்லாவறின் கூறிப்புகளை எடுத்தவன், ஏதோ தேன்ற அவனின் தனிபட்ட ஒவியம் வரையும் அறைக்கு சென்று பார்த்தான்.

அங்கு இருக்கும் அலமாரிகளை ஆராய்ந்த போது அங்கு சில மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கான கோப்புகள் இருந்தன. அவற்றையும் எடுத்துக்கொண்டு, மீண்டும் மருத்துவமனைக்கு வந்து எல்லாவற்றையும் அவர்களிடம் கொடுத்தான்.

அது எல்லாவற்றையும் ஆராய்ந்த மருத்தவர். அவன் வீட்டினரை அழைத்து பேசினார். கடந்த 1 வருடமாக அவன் சாப்பிடும் மருந்துகளை பற்றி கூறி அதை பற்றி கேட்டு இருந்தார். ஆனால் அது பற்றி யாருக்கும் ஏதும் தெரியவில்லை.

இது எல்லாவற்றையும் கேட்ட அவன் குடும்பத்தினர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். 

மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் எந்த மருத்தையும் கலாதரன் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் சிக்கிச்சை பலன் இன்றி அவன் இறந்துவிட்டான்.

பெரியவர்கள் முற்றிலும் உடைந்து போய் இருந்தனர். இத்தனை நாள் மகனை காபாற்றி, அவனுடனே பயனித்தவர்கள், இன்று அவன் இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

அந்த நேரத்தில் தான் அவர்களுக்கு அந்த அறிக்கை அவரின் மகனின் இறப்புக்கான காரணத்தை தெரியபடுத்தியது.

ஆம் அவன் மரணம் ஏற்பட்ட உடன் மருத்துவர்கள், கண்டிப்பாக போஸ்மாட்டம் செய்ய வேண்டும் என்று ரங்கராஜன்னிடம் கேட்டனர்.

எதனால் அவனுக்கு மரணம் ஏற்பட்டு என்று தெரிந்துக்கொள்ள வேண்டி அதற்கு சம்மதித்தார். போஸ்மாட்டம் முடிந்து வந்த அறிக்கை அவரகள் தலையில் இடியை இறக்குவதாக இருந்து.

கடந்து 1 வருடம்மாக கலாதரன் மீண்டும் தன் தோல் நோய்க்கான சிக்கிச்சையில் இருந்து தெரிவந்து. அதில் அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவனுக்கு சில ஒவ்வாமைகளை எற்படுத்தினாலும் அதில் நல்ல பலன் இருந்தால், அவன் அதை தொடர்ந்து எடுத்தால் அந்த பிரச்சனைகள் தீவிரமாகி இறப்பில் வந்து முடிந்து என்று இருந்து.

இது எல்லாவற்றையும் கேட்டவர்கள் மகனது நடவடிக்கைகளை நடுவில் கருத்தில் கொள்ளாமல் விட்ட தங்க மடதனத்தை என்னி மனம் வருந்தினர். அதே சமயம் அன்று கலா அதை பற்றி பேசியதால் தான் மகன் இந்த முடிவை எடுத்து இருப்பான் என்று நனைத்தனர்.

அதிலும் வள்ளி முற்றிலும் ஓடிந்து போனார். அவளுக்கு கலாதரன் கணவன் மட்டும் இல்லையே, நல்ல நன்பனும் கூட, இடையில் மனதில் இருந்த குழப்பித்தினால் அவனை கவணிக்காமல் விட்டுவிட்டோம் என்ற எண்ணம் அவளை முற்றிலும் முடக்கிபோட்டது.

கலாதரன் இறந்த போது அவள் பிறந்து வீட்டுக்கு சென்று இருந்தாள். அந்த நேரத்தில் அவளின் தங்கை தந்தையிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள். உங்காளல் தான் அக்காக்கு இந்த நிலை நீங்க தான் காசு, பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த வீட்டில் அக்காவை கொடுத்திங்க, இப்ப அவ இப்படி இருக்க நீங்க தான் காரணம் என்று சண்டை இட்டுக்கொண்டு இருந்தாள். 

வள்ளியின் திருமணத்தை முடிவு செய்த போது, அதன் பின் அவள் தந்தை அங்கு வேலை செய்ய முடியாது என்று ரங்கராஜன் அவர்களுக்கு 10 ஏக்கர் நிலமும், அவன் மற்ற இருபிள்ளைகள் படிக்கவும் உதவி இருந்தார்.

அது வள்ளிக்கு தெரியாது, ஒரு வேளை அப்போது தெரிந்து இருந்தாலும் அதை அவள் புரிந்துக்கொண்டு இருப்பாளோ என்னவே, ஆனால் இப்போது தெரியவந்த போது அப்பாவும் இப்படியா என்று தான் தோன்றியது. அதன் பின் அவள்  பிறந்த வீட்டில் இருந்தும் அவள் ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்தாள்

இப்படியே அந்த வீடு மீண்டும் கவலை மேகம் சூழ அடுத்து  3 மாதங்கள் கடந்து இருந்த நிலையில்.

வீட்டின் நிலையை ரங்கராஜன் மற்றும் ரங்கநாயகி கவனித்துக்கொண்டு இருந்தனர். வள்ளி எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிகொள்ளவதும். எதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது அவர்களுக்கு பெரும் கவலையை கொடுத்து. அதே சமயம் மகள் எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சி செய்வதும், எல்லாம் தனக்கு தான் சொந்தம் என்பது போல் நடந்துக்கொள்ளவதும் அவர்கள் அறிவர்கள். 

அதை மாற்ற என்னி வள்ளிக்கும் பெறுப்புகள் குடுக்க ஆரம்பித்தனர், முதலில் வள்ளி அவற்றை மறுத்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அதை தவிர்க்க முடியாமல் அவற்றை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தால். அது அவள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் இருந்து.

ஆனால் இது எல்லாம் கலாவிற்க்கு ஏற்புடையதாக இல்லை. அண்ணன் இல்லை, இனி இந்த வீட்டின் அடுத்த வாரிசு தான் தான் என்று நினைத்து இருந்தவள் என்னித்தில் மீண்டும் மண்விழ கொதித்து போனாள்.

அதன் வெளிப்பாடு மீண்டும் வீட்டில் சண்டை இட ஆரம்பித்தாள். வள்ளி இப்போது வேலையாக வெளியில் சென்று விடுவதால், மகளை மாமியார் தான் பார்த்துக்கொண்டார். 

அதனால் அவளின் அடுத்த இலக்கு குட்டி ரங்கநாயகி ஆகி போனால், அந்த குழந்தையின் மீது தேவை இல்லாத வெறுப்பை வளர்த்துக்கொண்டாள், வேலையாட்கள் காதுபட அப்பாவை போல் தான் மகளுக்கும் நோய் இருக்கும் என்று போச ஆரம்பித்தாள், முதலில் அதை பெரியதாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும். அவள் பேச பேச அதுவே அங்கு இருந்தவர்கள் மனதில் பதிந்து போக எல்லோரும் குழந்தையை ஒதுக்கு ஆரம்பித்தனர். 

பெரியவர்கள் தவிர யாரும் குழந்தையை துக்கவோ, விளையாடவோ செய்யவில்லை, அவள் தெடும் பெருட்கள் தவிர்தனர், இது எல்லாம் முதலில் பெரியவர்கள் கருத்தில் படவில்லை, அதை அவர்கள் கவனித்த போது எல்லாம் எல்லை மீறி இருந்து.

குழந்தைக்கு சிறியதாக ஏதாவது தேம்மல் வந்தாலும், அதை ஏதோ நோய் என்ற ரிதியில் பேசினர், மொத்தில் அவள் அந்த வீட்டில் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.

கலாவாவின் மகன் முற்றிலும் கலாவின் கட்டுபாட்டில், அவன் அந்த குழந்தையின் அருகில் கூட செல்ல விடமாட்டாள் கலா.

சண்முகம் இது எல்லாவற்றையும் பார்த்து இருந்தாலும், எதையும் கலாவிடம் கேட்கவில்லை. ஒரு முறை அவன் கலாவிடம் இது பற்றி கேட்கபோய் அதன் பலனை அந்த குழந்தைதான் அனுபவித்து. 

Advertisement