Advertisement

இதுவரைக்கும் என்ன நடந்து இருந்தாலும், அதுக்கு யார் காரணமாக இருந்தாலும், அதை எல்லாம் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை. இனிமே நடக்க போறதை நல்லதா நடத்திகிறது தான் நம் வாழ்க்கைக்கு நல்லது.

இத்தனை நாள் உன்னை பற்றி நான் பெருசா கவலைபட்டது இல்லை. அவ்வளவு ஏன் உன்னை பற்றி யோசித்து கூட இல்லை. ஆனால் இனிமே அப்படி என்னால இருக்க முடியாது. 

அதனால தான் என் கல்யாணம் முன்னாடி உனக்கு கல்யாணம் நடக்கனும் நினைக்கிறேன். நம்ம வாழ்க்கையில் நடந்து எல்லாம் நமக்கு தெரியும், ஆனா அதை எல்லாம் அப்படி தான் எல்லாரும் பார்ப்பாங்கனு சொல்ல முடியாது. நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தா ……………….. அதனால தான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்த பின்னால் தான் நான் கல்யாணம் பற்றி யோசிக்க போறான் என்றான்.

அவன் பேச ஆரம்பித்த போது எங்கே அவன் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாம் என்று கூறுவானோ என்று நினைத்தபடி அவனை பார்த்து இருக்க. அவன் சொன்ன விஷயத்தில் மனதில் சிறு ஏமாற்றம் ஏற்பட்டதோ…………………. அவளே அறிவாள்.

அவன் வந்து என்னவோ அவளின் திருமணம் பற்றி பேச தான், ஆனால் அவனுக்கு எந்த பெண்ணின் புகைபடத்தை பார்த்தாலும் அதை அவளோடு ஒப்பிட தோன்று கிறதே, அதனால் தான் அவளுக்கு திருமணம் முடிந்த பின் தன் திருமணம் பற்றி பேச முடிவெடுத்து இருந்தான், அதை அவன் மனம் அறியும்.

இருவரும் தங்களுக்குள் என்ன இருக்கிறது என்று பேசாமல், வேறு காரணத்தை முன்னிருந்தி அவர்கள் திருமண வாழ்வை பற்றி பேசினார்கள்.

அவன் பேசியதும் அது சரி அப்போ ஏன் இப்போ வந்த மாப்பிளையை விரட்டி விட்டிங்க.

யாரு அவன் மாப்பிள்ளையா, அவன் கேட்ட ஒரு கேள்வியாவது உன்னை பற்றி இருந்தா? உன் சொத்து, முதலில் நடந்த கல்யாணம், அதை வெச்சி ஏதும் உயில் இருக்கா. பின்னால் வாரிசு பிரச்சனை வருமா………….. இப்படி கட்சிகாரன் கிட்ட பேசுவது போல் பேசுறான் அவனை போய்………………… நீயும் அவனை பேச விட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க……………. என்றான்.

அவள் அவனை பார்த்து வேற என்ன கேட்கனும் என்றாள்…………….

ம்மம்மம்மம்மம்மம ஒரு பெண்ணு பார்க்க வந்தா பெணு பிடிச்சு இருக்கா, பெண்ணுக்கு நம்மளை பிடித்து இருக்கா, படிச்ச பெண்ணா, குடும்பம் எப்படி, குணம், இந்த பெண்ணோட நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்… இப்படி தான் பார்பாங்க……….. ஆனா அவன் பனத்தை பத்தி மட்டும் தான் பேசுறான் அதிலேயே அவனோட மென்டாலிட்டி தெரியலையா? என்றான் கோவமாக……………

ஆனால் அவள் முகத்தில் அதன் பிரதிபலப்பு ஏதும் இல்லை…….. அதுவரை அவன் பேசியதை கேட்டவள். அவனிடம் அதில் என்ன தப்பு இருக்கு என்றாள். நீங்க உங்களுக்கு ஒரு பெண்ணு  பார்த்தா முதலில் அந்த இடம் உங்க அளவுக்கு வசதி இருக்கா அப்படினுதான் முதலில் பார்பிங்க, அப்புறம் தான் நீ சொன்ன எல்லாம். இங்க அவருக்கு யாரும் இல்லை. அதை எல்லாம் பேச கேட்க எனக்கும் யாரும் இல்லை அதனால அதை எல்லாம் அவரே கேட்டார். இதில் என்ன தப்பு இருக்கு என்றாள்.

அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.  இங்க பார் சும்மா உனக்கு யாரும் இல்லை………….. யாரும் இல்லை சொல்லிட்டு இருக்காதே………. இது வரைக்கும் எப்படியோ, ஆனா இனிமேல் நான் இருப்பேன். உனக்கு எதுனாலும் நான் உன் கூட இருப்பேன்.

இன்னிக்கே உன்னோட தகவல் எல்லாத்தையும் மேட்ரிமோனி ல ரிஜிஸ்டர் பன்றோம் உனக்கு பெருத்துமான வரன தேடுறேன் என்றான். அவன் சொன்ன தோனியில் சிரிப்பு வந்தாலும், தலையாட்டியவள் கிளம்பிவிட்டாள்.

அவளிடம் சொன்னது போலவே அவன் அனைத்து தகவல்களையும் மேட்ரிமோனியில் பதிவு செய்தவன். அவளுக்கு பெருத்தமான வரன்களை தேட ஆரம்பித்து இருந்தான்.

நாட்கள் இப்படியே போய் கொண்டு இருக்க, அவன் சென்னை வந்து 1 வாரம் முடிந்து இருந்து. அவன் வந்த அன்று மாலை தான் அசோகிடம் தொடர்புக்கொண்டு சென்னை வந்து இருப்பதை கூறினான். மற்ற நேரங்களில் அவர்கள் தொழில் சம்பந்தமான வேலையும் பார்த்துக்கொண்டான். ஆனால் மறந்தும் நாயகியை பற்றி ஏதும் கூறவில்லை. அவளும் மற்ற யாரிடமும் ஏதும் கூறவில்லை.

அன்று போன சிவா செந்திலிடம் என்ன சொன்னோ அவரும் அதன் பிறகு சிவாவை பற்றி நாயகியிடம் ஏதும் பேசவில்லை.

என்ன தான் அசோக்கும் ராஜனும் அவ்போது சந்தித்து கொண்டாலும் அதில் தொழில் பற்றி பேச்சுகள் இருந்தோ தவிர் அப்போதும் அவன்  நாயகியை சந்தித்தை பற்றி ஏதும் கூறவில்லை. 

தினமும் இவன் வரும் வரன்களை பார்த்து தேர்ந்து எடுத்து அவளுக்கு அனுப்பி வைப்பான், அவளும் எல்லாவற்றையும் பார்ப்பாள். இவர்கள் இருவரும் தினமும் இரவில் அன்று அவளுக்கு தேர்ந்து எடுக்கும் வரன்களை பற்றி பேசுவார்கள் பாதியை அவள் கழித்தாள் மீதியை இவன் கழித்துவிடுவான்.

இப்படியே இவர் இருவரும் இரவு பேசிக்கொள்ளவது வாடிக்கையானது, தடையில்லாத பேச்சி இருவருக்கும். இவர்கள் வரன்களை அலசினார்களோ இல்லையே இவர்களை நிறைய அலசினார்கள். அவர்களின் சிறு வயது சேட்டைகள் நினைவுகள், பள்ளி மற்றும் கல்லூரி நடந்தவை, அசோக் பற்றி செய்திகள் என்று தினமும் அவளுக்கு பேச நிறைய இருந்து.

இவர்களா இதுவரை முகத்தை கூட பார்க்காதவர்கள் என்று இவர்களை தெரிந்தவர்கள் பார்த்தால் வியக்க கூடும். அந்த அளவிற்க்கு இவர்கள் மனதால் நெருங்கி இருந்தார்கள்.

மறந்தும் இவர்களின் கசப்பான பக்கங்களை இவர்கள் இருவரும் புரட்டவிட்டலை, ஆனால் இது ஏதுவும்மே இவர்களை தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை. இவர்கள் தெரியபடுத்தவும் இல்லை.

அவன் மனதால் மிகவும் மகிழ்வுடன் இருந்தான், அவனுக்கு கலா அவனைவிட்டு சென்ற போது ஏற்பட்ட இழப்பை இவள் ஈடுகட்டினால் கலாவின் எல்லா குணங்களும் இவளில் வெளிபடுவதாக நினைத்தான். மொத்தில் இவன் கலாவை இவள் உருவில் பார்த்தான்.

நாயகிக்கோ இத்தனை நாள் என்ன தான் எல்லாவற்றிலும் பேராடி வெற்றி பெற்று இருந்தாலும், தன்னை ஆராத்திக்கவோ, தன் கவணிக்கவோ, தன்னை பார்த்துக்கொள்ளவோ யாரும் இல்லை. விழுந்தாலும், எழுந்தாலும் நான் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை, இன்று தன்னை மட்டும் கவணிக்கும் ஒருவன் தனக்காக யோசிக்கும் ஒருவன். என்று எண்ணும் போது அவளுக்கும் அவன் அருகாமை மிகவும் பிடித்து தான் இருந்து. கலா அவனை சிறு வயதில் கவணிக்கும் போது, அவனுக்கு எல்லாம் செய்யும் போதும், தனக்கு இப்படி செய்ய யாரும் இல்லையே என்று நிறைய ஏங்கி இருக்கிறாள்.

ஆனால் பிறகு கலா தான் அவள் அம்மா என்று தெரிந்த பின் கூட அவர்களிடம் நெருங்க முடியவில்லை அவளால். ஆனால் இவன் எல்லாவற்றையும் தாண்டி எப்படி என் வட்டத்திக்குள் வந்தான் என்று யோசித்துக்கொள்ளாவள்.

இப்படியே இவள் யோசனையில் இருக்கும் போது, அவள் அலை பேசி அடிக்க, அழைத்து ராஜன் தான், இதழில் மலர்ந்த புன்னகையுடன் எடுத்தால். 

ஹாய்  என்ன பன்ற இன்னிக்கு அனுப்பின வரன் எல்லாம் பார்த்தியா என்று கேட்டான்.

இந்த 1 வாரத்தில் இவர்கள் செய்த சாதனை இவர்கள் இருவரும் வேண்டாம் என்று கழித்த வரன்கள் மட்டும் 100 தாண்டும்.  

அவன் கேட்டவுடன் புன்னகை மலர்ந்து அவளுக்கு, இப்போ நான் பார்த்து ஒகே சொன்ன மட்டும் நீ சரினு சொல்லிடுவியா? எப்படியும் நீ ஒரு காரணத்தை சொல்லி அதை வேண்டாம் சொல்ல போற, அப்புறம் எதுக்கு நான் வேற அதை பார்க்கனும் என்றான்.

இப்போ என்ன சொல்ல வர நான் தான் உனக்கு வரன் அமையவிடாம பன்றேன்னா? என்ன? நீ செலக்ட் பன்றது எல்லாம் அப்படி இருக்கும் அதுக்கு நான் என்ன பன்றது. அதான் சென்னோன் பேசாம அசோக்கை கட்டிக்க, நீ தான் கேட்க மாட்டிங்கீற என்றான்.

இவள் அமைதியானாள். உனக்கு எப்போ வரன் பார்த்து அது முடிச்சு, அப்புறம் நான் கல்யாணம் பன்னும் என்றான் அந்த பக்கம், அவன் இப்படி பேசவும் அவளுக்கும் சுருக்கு என்றது. அப்போ என்னால் தான் உன் கல்யாணம் தள்ளி போகுது சொல்லுரியா? என்றாள். அவனும் ஆமா பின்ன இல்லையா என்றான்…………..

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், தன் இனைப்பை துண்டித்துவிட்டாள். அடுத்த 30 நிமிடத்தில் அவள் அனுப்பி இருந்த செய்தியில் இவன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.

ஒரு வரனின் போட்டவை அனுப்பி இருந்தவள், அவனுடன் தற்போது பேசியதாகவும், அவன் தனக்கு பிடித்து இருப்பதாகவும் கூறியவள், நாளை மாலை அவனை சந்தித்து மற்ற விஷயங்களை பற்றி பேசிவிட்டு திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்றும் அனுப்பி இருந்தான்.

அதை பார்த்தும் அவனுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதோ விளையாட்டாக பேச போய் இப்படி ஆகிவிட்டதோ…………….

அந்த புகைபடத்தை பார்த்தான், இவனா முழியே சரியில்லை என்றான், அவன் தான் அந்த வரனை தேர்ந்து எடுத்து அவளுக்கு அனுப்பியது என்று இப்போது அவனுக்கு மறந்து போனது போல.

திரும்பவும் அவளுக்கு அழைத்தான், அழைப்பு எடுக்க படவில்லை. என்னவோ போல் ஆனாது, தனது கை பொருள் களவு போய்விடுமோ என்ற எண்ணம் அவன் மனதை அரித்து.

சரி எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக்கொள்ளாலாம் என்று நினைத்தவன் தூக்கம் இல்லாமல் அந்த இரவை கழித்தான்.

அடுத்த நாள் அவனுக்கு வைத்து இருந்த அதிர்ச்சி அறியாமல்.

இவன் அந்த பையனை வர சொல்லி இருந்த நேரத்திற்க்கு அவர்கள் வழக்கமாக சந்திக்கும் உணவு விடுதிக்கு வந்து இருக்க. அங்கு அவனுக்கு முன்பே வந்து இருந்த நாயகியும், அந்த பையனும் பேசிக்கொண்டு இருந்தை பார்த்து அவனுக்குதான் முகம் இறுகியது. 

அதோடு மட்டும் அந்த நாள் முடியாமல் கிளம்பும் போது அந்த பையன், ராஜன் கைபற்றி குலுக்கிவிட்டு, எனக்கு நாயகியை ரொம்ப பிடித்து இருக்கிறது. எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். சீக்கரம் எங்கள் வீட்டினர் அழைத்து வந்து சம்பந்தம் பேசுவாத சொல்லி சென்றான். அதை கேட்டவன் தலை தான் சுற்றியது.

ஆனால் அது வரை கூன நாயகி அவனிடம் பேசவில்லை, என்பது மேலும் அவனுக்கு கோவத்தை வர வழைக்க அவன் சென்ற உடன் அவளிடம் திரும்பினான். அவன் பேசும் முன், அவனை தடுத்தவள். அவனிடம் எனக்கு இந்த வரன் பிடித்து இருக்கு இதையே முடித்துவிடலாம். என்றாவள் அங்கு இருந்து சென்று இருந்தாள்.

அவள் சென்ற பின் தலையில் கைவைத்து அமர்ந்தவன், அடுத்து அழைத்து என்னவோ அசோக்கு தான். அவனை அழைத்துக்கொண்டு, அவனின் பீச் ஹவுஸ் சென்றவன், எல்லாவற்றையும் அவனிடம் புலம்பி தள்ளி இருந்தான். 

எல்லாவற்றையும் கேட்டவன், அவனிடம் கேட்ட கேள்ளவியில் என்ன பதில் சொல்லுவான் ராஜன்……………

அசோக் அவனிடம் கேட்டது……………. நீ நாயகிய விரும்புகிறாய்யா?????

      

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement