Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 23

நேற்று இரவு தான் செந்தில் அவளிடம் அவரின் ஜூனியர் பற்றி கூறியிருந்தார். அவள் அசோக்கை திருமணம் செய்ய முடியாது என்று அவள் கூறியருக்க இந்த பதிலை ஏற்கனவே எதிர்பார்த்த செந்திலே அவரின் ஜூனியர் சிவா பற்றி கூறியிருந்தர். அவனிடம் பேசிவிட்டு முடிவை கூறுமாறு சொன்னவர், அதில் எந்த நிரபந்தமும் இல்லை என்றும் சொன்னார்.

அவனை பற்றிய எல்லா விவரங்களையும் அவளுக்கு அனுப்பியவர், அலை பேசியை வைத்தும் அதை தான் வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளால் கண்டிப்பாக அவர் பேச்சை மீற முடியாது, சண்முகம் வந்து சென்ற விஷயமும் அவள் காதிற்க்கு வந்தது தான் ஆனால் அதை அவள் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இத்தனை நாள் எல்லோரையும் எப்படி தள்ளி நிறுத்தி இருந்தாலோ அப்படியே இப்போதும்.

அவளும் தன் மண வாழ்வை பற்றி யோசிக்கும் வயதில் தான் இருந்தாள், ஆனால் என்ன அதை எல்லோரும் தீடிர் என ஒரு கட்டாயத்தில் செய்ய வைப்பது தான் அவளுக்கு கடுப்பாக இருந்து.

இருந்தும் அவர் அனுப்பிய அவனின் தகவல்களை பார்த்துக்கொண்டு இருந்தாள். பெயர் சிவா, பி.எல் முடித்து அவரிடம் ஜூனியராக பனி புரிகிறான், தாய் தந்தை கிடையாது, சித்தப்பா உதவியதில் படித்து முடித்து இருக்கிறான். சொத்துக்கள் ஏதும் பெரியதாக இல்லை, எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவனையும் அவள் நிறைய முறை செந்திலின் அலுவலகத்தில் பார்த்து இருக்கிறாள், மறுப்பதற்க்கு அவளுக்கு ஏதும் காரணம் இல்லை, எல்லாவற்றையும் தகவல்களையும்  மேலோட்டமாக பார்த்தவள், அவனின் எண்ணிக்கு அழைத்தாள், இவள் அழைப்பாள் என்று எதிர்பார்த்து இருப்பான் போலும் அவள் அழைப்பை ஏற்றவுடன் சொல்லுங்க ரங்கநாயகி என்றான்.

அவன் இப்படி அழைக்கவும் திகைத்தவள், பின் சுதாகரித்து செந்தில் ஸார் எல்லாம் சொல்லி இருப்பார், நாம நாளைக்கு காலையில் சந்திக்கலாம் என்றவள் அசோக்குடன் எப்போதும் செல்லும் உணவு விடுதியின் பெயர் சொல்லி அங்கு வர சொல்லி இருந்தாள்.

அதன் பின் தன் மீதி வேலைகளை முடித்தவள், உறங்கிவிட்டாள், அடுத்து அவள் விழித்து என்னவே அலைபேசி அழைப்பி்ல் தான், எடுத்து காதில் வைத்தவள் அவன் சென்னை வந்து இருப்பதாகவும் அவளை காலை 10 மணிக்கு போன முறை சந்தித்த உணவகத்திற்க்கு வர சொல்லி இருந்தான்.

எழுந்தவள், இவன் எதுக்கு இப்போ வந்து இருக்கான், என்று எண்ணியவள் ஒரு வேலை சொத்து விஷயமாக ஏதும் பேச வேண்டி இருக்கலாம் என்று நினைத்தவள் பின் போனால் தெரிய போகிறது, என்று கிளம்பி இருந்தாள்.

அவள் சிவாவையும் 9 மணிக்கு அங்கு தான் வர சொல்லி இருந்தாள், அதனால் அதன் பின் ராஜனை சந்திக்கலாம் என்று முடிவு எடுத்துக்கொண்டாள்.

அவள் வந்து 5 நிமிடத்தில் சிவா வந்து இருக்க, இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பின் சிவாவே பேச்சை தொடங்கி இருந்தான். என்னை பற்றி எல்லாம் ஸார் சொல்லி இருப்பார். உங்களை பற்றியும் சொன்னார். என்றவன் ஒரு கணம் நிறுத்தி அவளை பார்த்தவன். பின் பேச்சை தொடர்ந்தான்.

அப்போது தான் அங்கு ராஜன் வந்து, முதலில் அவர்கள் பேசுவதை அவன்   கவணத்தில் கொள்ளவில்லை என்றாலும் பின், அவன் பேசியவை எல்லாம் அவனை கொதிப்படை செய்த்து.

எனக்கு உங்க முதல் கல்யாணம் பற்றி ஸார் சொன்னார், அப்போது உங்களுக்கு 18 வயசு ஆகலை அதனால் அந்த கல்யாணம் செல்லாது அப்படினாலும், உங்க மனசுல அப்படி ஏதும் எண்ணம் இருந்தா என்றான் அவளிடம், அவள் இல்லை என்று தலையை மட்டும் தான் ஆட்டினால்.

சரி உங்கவீட்டில் இருப்பவர்கள் உங்க அம்மா, அப்பா எல்லாம் கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா, உங்க முன்னால் கணவர் ஏதும் பிரச்சனை பன்ன வாய்ப்பு இருக்கா. அந்த கல்யாணம் உங்க வீட்டு பெரியவங்க ஆசைபட்டதுனு சொன்னாங்க, அதனால் அதை வைச்சு உயில் ஏதும் இருக்கா, சொத்து எல்லாம் உங்கள் இருவர் மேலும் இருக்கா. இல்லை …………………. ஏன் இப்படி எல்லாம் கேட்கிறேன் நினைகாதீங்க, நீங்களும் ஒரு வக்கீல் தான் பின்னாடி எந்த சட்ட பிரச்சனையும் வர கூடாது இல்லை அதனால் தான் என்றான்.

டேய் நீ கட்சிகாரன பார்க்க வரலை டா? பெண்ணு பார்க்க வந்து இருக்க என்று அவள் மனதில் நினைத்துக்கொண்டாள், ஆனாலும் வெளியில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

 

அவன் என்ன தான் பேசுகிறான் என்று அவனை பேசவிட்டு பார்த்து இருந்தாள். அவனு்ம் எல்லா விஷயத்தையும் பேசினாலும் எங்கு சுற்றியும், அவன் பேச்சு ஒன்று அவன் முந்தைய கல்யாணத்தில் வந்து நின்றது இல்லை என்றால் சொத்தை பற்றி இருந்து. அவனும் அதை உணர்ந்தானோ என்னவோ இங்க பாருங்க நான் திரும்ப இதை பற்றியே பேசுறேன் நீங்க நினைக்கலாம், ஆனால் என் பக்கம் யாரும் இதை எல்லாம் பேச யாரும் இல்லை. இன்னும் நான் எந்த பெரிய கேஸ் எடுத்து வாதாடலை. எனக்கு எந்த பெரிய பின் புலமும் இல்லை. அதனால் தான் என் வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லைமல் அமைதியா இருக்கும் நினைக்கிறேன்………..

நீங்க புரிந்துக்கொள்ளவீர்கள் என்று நினைக்கிறேன்.

என்று கேட்டுக்கொண்டே போனவனின் பேச்சை நிறுத்தும் வகையில் தான் ராஜன் இடையில் வந்து இருந்தான். வந்தவன் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான், அந்த புதியவனை பார்த்து, ஹலோ மிஸ்டர். ஐயம் ரங்கராஜன், நாயகி ஹஸ்பன்டு என்ற அவனின் அறிமுகத்தில் இருவரும் அவனை அதிர்ந்து பார்த்து இருந்தனர்……………………..

முதலில் அவனை அங்கு அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத நாயகி அதிர்ந்த இருந்தாள் என்றாள் அடுத்து அவன் அறிமுகத்தில் அவளுக்கு மேலும் அதிர்ச்சி, என் இவன் இப்படி செய்கிறான் என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிவாவுக்கே அவனின் அறிமுகத்தில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.

அடுத்து என்ன பேசுவது என்று எண்ணியவன் இல்லை………… அது………. வந்து…….. நான் நாயகி கல்யாணம்………… என்று ஏதோ உளற துவங்கி இருந்தான். இங்க பாருங்க சிவா பயபடாதீங்க, நீங்க இப்போ கேட்ட மாதிரி எந்த சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேளுங்கள், நான் தான் நீங்க இவ்வளவு நேரம் சொன்ன அவள் முன்னால் கனவன் என்றான். அவனின் இந்த வாக்கியத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் நாயகியை பார்த்தவன், சரி நாம் பிறகு பார்க்கலாம் என்றவன் அங்கு இருந்து கிளம்பி இருந்தான். அதை பார்த்த நாயகியே அவனை உறுத்து விழித்தாள், அவனோ அவள் புறம் திரும்பி, என்ன உன் வாய் எல்லாம் என்னிடம் மட்டும் தான் அவன் கிட்ட ஒன்னும் பேசிடாத, என்றவன் அவன் பாட்டுக்கு பேசிட்டே போறான் நீ அமைதியா இருக்குற. அவன் இரண்டு அப்பு அப்ப வேண்டியது தானே என்றான் கடுப்புடன்.

அவள் அப்பொதும் ஏதும் பேசவில்லை. என்ன ஏதும் பேசாமல் என் முகத்தை பார்த்துடு இருக்க என்றான் மறுபடியும். அதுவரையில் ஏதும் பேசாமல் இருந்தவள், நீங்க தான் என்னை பார்த்து பேசனும் சென்னிங்க…………… என் விஷயம் என்றால் அவனை பார்த்து. இது வரை பேசிக்கொண்டு இருந்தவன் அப்போது அமைதியானான்.

பின் அவளிடம், இங்க பார் நாயகி நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். எனக்கு வீட்டில் கல்யாணம் செய்னும் சொல்லிட்டு இருக்காங்க. எனக்கு இப்போதைக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும், எப்ப இருந்தாலும் நான் கல்யாணம் பன்னித்தான் ஆகனும். அதே போல் தான் உனக்கும்.

Advertisement