Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

மன்னிக்கவும் இந்த முறை பதிவு போட தாமதம் ஆகிவிட்டது. 

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிரவும் நன்றி.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 21

இவர்கள் சந்தித்து 1 வாரம் ஒடி இருந்து, இதற்கு நடுவே, அவர்கள் தொழில் தொடங்குவது சம்பந்தமாக வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தாலும், அவளை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை.

அசோக்  அவனும் ஒன்றாக இருக்கும் நேரங்களில் கூட அவளிடம் இருந்து அசோக்கு அழைப்பு வந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான். 

அசோக்கும் கூட அவர்களின் அன்றைய சந்திப்பை பற்றி அவன் பெற்றோரிடம் கூறியிருந்தான். அவனுக்கு அதன் பின் ராஜன்னுடன் இந்த தொழிலை தொடங்குவதா வேண்டாமா? என்ற மனக்குழப்பம் இருந்து, அதனால் தான் அவன் தந்தையிடம் அது பற்றி கூறியிருந்தான். எல்லாவற்றையும் கேட்டவர், பின் அவனிடம் ராஜன் பற்றி அவனின் எண்ணம் என்னவென்று கேட்டார், அசோக்கும் அவர்கள் கல்லூரி தொடக்கம் அவர்களின் அறிமுகம் மற்றும் அவனின் குணநலன்களை பற்றி கூறியவன், அவன் எனக்கு எப்போதும் நல்ல நன்பன் தான் அப்பா என்றான். அனைத்தையும் கேட்டவர், இங்க பார் அசோக், எல்லோரும் எல்லோருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. நான் ஒரு கேஸ் எடுத்து நடத்தினா எதிர் கட்சிகாரனக்கு நான் கெட்டவன் தான். அதுக்காக நான் நிலையை அவனுக்கு தகுந்தா போல மாத்த முடியாது. 

உனக்கு அவன் நல்லவன், தொழில் செய்ய விரும்புற நீங்க இரண்டு பேரும் ஒத்த மனநிலையில் இருக்கும் போது அது கண்டிப்பா வெற்றி அடையும். அவனோட தனிபட்ட வாழ்க்கைய நீ இதுக்குள்ள கொண்டு வராதே அது அவனுக்கானது, அதை பற்றி முடிவு எடுக்குற உரிமை நாயகிக்கும், அவனுக்குமானது என்றவரின் பேச்சில் தெளிந்தவன், அடுத்த அழைத்து நாயகிக்கு தான் அவளிடமும் அதையே கேட்க, அவளும் அவள் தந்தை சென்னதை தான் சொன்னால், அதன் பின் அவன் அவர்களின் தொழில் சம்பந்தமான வேலையில் இறங்கி விட இந்த ஒரு வாரத்தில் உண்ண கூட நேரம் இல்லாமல் ஒடிக்கொண்டு இருந்தனர் இருவரும். இடை இடையே அவளிடம் அசோக் அவளுக்கு அழைத்து ஏதும் சந்தோகங்கள் கேட்டு அதன் படி எல்லாவற்றையும் செய்தாலும், ராஜன் எதையும் கண்டு கொள்ளவில்லை, அவளுடன்னா பேச்சு வார்த்தை எல்லாம் அசோக்கே பார்த்துக்கொண்டான்.

அதில் அவனுக்கு நம்மதி என்றாலும், மனதில் சிறு தவிப்பு இருந்தோ அது அவனுக்கே வெளிச்சம். இப்படியே அவர்கள் ஆரம்பகட்ட வேலைகள் எல்லாம் முடிந்துவிட, இன்னும் 2 நாட்களில் வங்கியில் இருந்து அவர்கள் கேட்ட கடனும் கிடைத்துவிட்டது, என்ற தகவல் இருவரையும் மகிழ்ச்சிக்கொள்ள செய்து. அசோக் அதனை அவன் தந்தையிடம் கூற அவனுக்கு வாழ்த்து கூறியவர், ராஜனை ஒரு நாள் விட்டுக்கு அழைத்து வரும்படி கூறினார், சரி என்றவன் அதை ராஜனிடம் கூற அவனும் சம்மதித்து இருந்தான். அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை அதனால் மதியம் உணவிற்க்கு வருவதாக ஒத்துக்கொண்டான். இவன் காலையில் எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்தவன். அவன் தங்கி இருந்த ஒட்டலுக்கு அருகில் இருக்கும் வணிக வாளாகத்தில் நுழைந்தவன், அசோக்கின் வீட்டுக்கு முதல் முதலில் சொல்வதால் அவனின் பெற்றோருக்கு ஏதும் பரிசுப்பொருள் வாங்கலாம் என்று வந்து இருந்தான். சிறிது நேரம் அங்கு சுற்றியவன் ஒரு டைடன் சோஷரும்குள் நுழைந்தவன் அங்கு கணவன் மனைவி இருவரும் அனியும் படியான கைகடிகாரத்தை வாங்கி இருந்தான்.

அதை எடுத்துக்கொண்டு அவன் அவர்களின் வீட்டை அடைந்த போது மணி 12யை நெருங்கி இருந்து. நகரத்தின் மத்தியில் சற்று பெரிய அளவினான தனி வீடு அவர்களுடையது, வீட்டை சுற்றி சிறய தோட்டமும், டென்னீஸ் கோட்டும் இருந்து, வீட்டின் பின் புறம் நீச்சல் குளமும், அதை ஒட்டி சிறிய ஜிம்மும் இருந்து. அவனின் வீட்டில் அளவிற்கு பெரிய வீட்டு இல்லை என்றாலும், அந்த வீடு முழுமையாக அமைதியாக இருந்து, அவன் வந்த உடன் அவனை அழைத்து, தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவன் தந்தையும் அவர்களின் தொழிலை பற்றி கேட்டுக்கொண்டாவர், அவரும் சில விஷயங்களை அவனுடன் பகிர்ந்துக்கொண்டார்.

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, வெளியில் கார் வந்து நிற்க்கும் ஓசை கேட்டு திரும்பியவன் அங்கு வந்துக்கொண்டு இருந்தவளை பார்த்து, தன் பேச்சை நிறுத்திக்கொண்டாது. அசோக் அவளை பற்றி அவனின் கல்லூரி காலங்களில் நிறைய சொல்லி இருக்கிறான் ஆனல் அது இவள் என்று தெரியாமல் கேட்டு இருக்கிறான். இந்த இடைபட்ட காலங்களில் அவளை பற்றி அவன் அறிந்துக்கொண்ட விஷயங்கள் ஏராளம், அவன் கேள்விபட்டவை எல்லாம் அவனுக்கு அவள் பால் இருந்த மதிப்பை அதிகரித்தே இருந்து, ஆனால் அவன் அதை வெளி காட்டிக்கொள்ளவில்லை. அவனை பெருத்த வரை அவள் எப்போதும் தொன்டையில் சிக்கிய மீன் முள் தான், உள்ளேயும் செல்லாமல், வெளியிலும் வராமல் அவனை எப்போதும் கலங்கடிப்பவள் அவள். அவன் அவளை பற்றி  வைத்து இருந்து வரையறைகளை  எல்லாம் முற்றிலும் உடைத்து ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருந்தாள் இந்த நாட்களில், அவனை பெருத்த வரை அவள் எப்போதும்  அவனுக்கு ஆச்சரிய குறி தான். இத்தனை நாட்களில் அவளை தவிர்த்து விட்டதில் அவளை பற்றி முற்றிலும் மறந்து இருந்தான் (அப்படி நினைத்து இருதானோ?) ஆனால் அவன்  மனம் சொன்னது கார் சத்தம் கேட்டதும் வருவது அவள் தான் என்று. 

அவன் இங்கு இருக்கும் நாட்களில் அவளை எதிர் கொண்டால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஆயிரம் முறையேனும் மனதில் ஒத்திகை பார்த்து இருப்பான். ஆனால் இப்போது ஏதும் தோன்றவில்லை. ஏன் எனில் அவள் அவன் ஒருவன் அங்கு இருப்பது போலவே நடந்துக்கொள்ளவில்லை. உள்ளே வந்தவள் நேராக அவர்கள் அமர்ந்து இருந்த ஷோபாவின் எதிரில் அமர்ந்தவள், அசோக்கின் பெற்றோர் உடன் பேச ஆரம்பித்துவிட்டாள். 

அதை பார்த்து காதில் புகை வர இருவர் அமர்ந்து இருந்தனர், ஒருவன் அவர்களின் மகன் அசோக், இனிமே நான் இவங்க கண்ணுக்கு தெரியவ மாட்டேன்………… என்று நினைத்து (அவர்களை முறைத்த படி அமர்ந்து இருந்தான்……….. 

மற்றோருவன் ராஜன், தான் அவளை பார்க்கும் போது அவளை கவணியாது போல் நடந்துக்கொள்ள வேண்டும் என்று இவன் நினைத்து இருக்க, இங்க அது உல்டாவாக நடந்து கொண்டு இருந்து. 

பொறுத்து பார்த்தவன், அம்மாஆஆஆ என்று கத்தி இருந்தான்… அவனின் அவ்வளவு பெரிய கத்தலுக்கு கீதா நிதானமாக அங்கே என்னமா சத்தம்………… என்பது போல் பார்த்து வைத்தார்……

அதில் மேலும் கடுப்பானவன்……………… 

எனக்கு இன்னிக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்……….. என்றான் கடுப்புடன்.

டேய் நேத்து முதல் மரியாதை படம் பாத்தியாட? அதல வர மாதிரியே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சொல்லிகிட்டு இருக்க  என்று கீதா கேட்டக………. அதில் அவரை மேலும் முறைத்தவன்.

நான் நீஜமாகவே உங்க புள்ளை தானே இல்ல கோயில் வாசல் இருந்து எடுத்துகிட்டு வந்திங்களா?

அந்த கொடுப்பினை எல்லாம் எங்களுக்கு இல்லை ராசா…..!!!!!!!!!

நீ எங்க பிள்ளை தான்………………… என்றார் சிரிக்காமல்………..

ஆனால் அவர் சொன்ன தோனியில் அங்கு இருந்த அனைவரும் சிரித்து இருந்தனர். 

இவ வந்துட உங்களுக்கு என்னைய கண்ணுக்கு தெரியாம போயிடும் இல்ல……. எவ்வளவு நேரமா பசிக்குது சொல்லிகிட்டு இருக்கேன். இரண்டு பேரும் அவ வாய பாத்துகிட்டு இருக்கீங்க…………….

சரிடா வா சாப்பிடலாம். வாடா மா உனக்கு பிடிச்ச மீன் குழம்பு பன்னி இருக்கேன் என்றார் கீதா…..

ஏன் மேடம் அதை தவிர வேற ஏதும் சாப்பிட மாட்டாங்களா என்றான் அசோக். 

டேய் உனக்கு என்ன பிரச்சனை உனக்கு உலகமே பிரயாணில தான் இருக்கு, அதை விட்ட உனக்கு என்ன தெரியும். அவளாவது வாய்க்கு ருசியாக வகையா சாப்புறா அதுல கண்ணு வைக்காதே டா என்றார் கீதா………..

கொஞ்சமாவது ஒரு வக்கீல் போல பேசுங்க, இப்படி அவள கொஞ்சினா அவ என்னை மதிக்கவே மாட்டிங்கிறா…………. என்றவன் அன்று அவள் ஓட்டலில் சந்நித்த போது அவனிடம் மசால் தோசையை ஆடர் செய்தை கூற………..

அவன் பெற்றோரோ அதற்கும் அவனை கலாய்த்துவிட, இப்படியே இவர்களின் உணவு நேரம் முடிந்து. அது வரையிலும் கூட அவள் அவன் புறம் திரும்பவில்லை. அதில் கடுப்பானது என்னவே ராஜன் தான்.

மற்றபடி அவனுக்கு இந்த சூழல் நிரம்ப பிடித்து போனது, அவன் வீட்டும் இப்படி தான் அம்மா அருகில் இருந்து பரிமாற அவனுக்கு பிடித்தவைகளை பார்த்து சமைத்து, அவனுக்கு பரிமாறா என்று இருக்கும். இப்படி சிரிப்பும் கலாட்டாவும் அவன் வீட்டில் இருந்து இல்லை. ஆனால் அதுவும் சில மாதங்களாக இல்லாமல் இருந்து.

அதனால் இந்த சூழ்நிலையை நிரம்ப பிடித்து அவனுக்கு. ஆனால் அதில் குண்டு வைக்க வென இருந்து அடுத்து அவர்கள் பேசிய பேச்சு. என்ன மா கல்யாணத்தை பத்தி ஒன்னும் சொல்லவில்லையே என்று செந்தில் அவளிடத்தில் கேட்க, அது வரை இதமாக இருந்த அவன் மனநிலை முற்றிலும் மாறி இருந்து.

அவள் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், செந்திலே மீண்டும் தொடர்ந்தார், என்னோட ஜூனியர் ஒருத்தன் இருகான், அவனும் உன்னை போல தான் யாரும் இல்லை. ரொம்ப நல்ல பையன். என்று அவர் பேச்சு நீண்டுக்கொண்டே போக.

அவனுக்கு தான் யாரும் இல்லை, இவளுக்கு என்ன வந்தது, இவளுக்கு நான் இருக்கேன், அப்படியா தண்ணீ தெளித்த விட்டு இருக்கிறேன் இவளை……………. ஏதாவது அப்படி எல்லாம் இல்ல சொல்றாளா பார்…………………….( இத்தனை நாள் அவளை அப்படி தான் விட்டு இருந்தான் என்று நினைவில்லை போலும்)

அவர் பேச பேச இவன் மனதில் அவருக்கு பதில் கொடுத்துக்கொண்டு அவரை முறைத்த வண்ணம் அமர்ந்து இருக்க. அந்தோ பரிதாபம் அவனை கண்டுக்கொள்ள தான் அங்கு யாரும் இல்லை.

மற்ற மூவரும் தான் அவளின் திருமணத்தை பற்றி அவளிடம் பேசிக்கொண்டு இருந்தனரே……….. இவனை யார் கவணிக்க???

ஆனால் அவனை கவனித்த படி தான் நாயகி அமர்ந்து இருந்தாள், சிறு வயது முதலே அவனை பற்றி நன்கு அறிவாள். வீட்டில் அவன் எந்த முலையில் இருந்தாலும் அவனின் கவனம் அவளிடமும், அவளின் கவனம் அவனிடம் தான் இருக்கும்.

தாத்தா பாட்டி அவளிடம் மட்டும் அதிக பாசம் வைத்து இருக்கிறார்கள் என்று அவனும், அவன் அம்மா அவனை எப்படி பாசமாக பார்த்துக்கொள்கிறார்கள் என்று அவளும் பார்த்துக்கொள்ளும் பார்வை அது.

இருவரும் வேறு வேலைகளில் கவணமாக இருந்தாலும், இருவரும் இருவரையும் உணர்ந்தே இருப்பார்கள். அதனால் அவளுக்கு தெரியும் அவன் கவனம் எல்லாம் அவளிடம் தான் என்று. அவனுக்கும் தெரியும் அவள் தன்னை கண்டுக்கொண்டாள் என்று……..

இப்படியே பேசிய படி சாப்பிட்டு முடித்து இருக்க, இவர்கள் பேசியது கேட்டவன் காதில் புகை தான், அதிலும் அவள் இவ்வளவு பேசுவாளா என்ற எண்ணம் தன் அவனுக்கு, அவன் அறிந்த வரையில் அவள் எப்போதும் அவள் சிரிக்க தெரியாத ஒரு ஜந்து, அதை விட இப்பொது அவள் வீட்டிற்க்கு வந்த போது கூட அவள் யாரிடமும் இப்படி பேசி இவன் பார்த்து இல்லை.

இங்கு என்வென்றால் அவள் வாயில் இருக்கும் பல் எல்லாவற்றையும் எண்ணிவிடலாம் போல!!!

என்னவோ தான் அங்கு அதிக படி போல் அவனுக்கு தோன்றியது, அசோக்கிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப எத்தனித்தவனை அடுத்து, செந்தில் ஆரம்பித்த பேச்சு அப்படியே தேக்கியது.

போதும் விளையாட்டு ரங்கநாயகி, இந்த வருஷம் உனக்கு கல்யாணம் முடிச்சாகனும், ஒன்னு நீ யாரையாவது சேலக்ட் பன்னு இல்லை, அசோக் தான் உனக்கு, இன்னும் 1 வாரத்தில் எனக்கு முடிவு வேண்டும் என்றவர் எழுந்து கொண்டார், அவருடன் கீதாவும்.

அதுவரை இந்த குறும்பும் சிரிப்பும் போய் இப்போது அவள் முகம் முற்றிலும் மாறி இருந்து, அவள் கையை பிடித்த அசோக் சற்று அழுத்திவிட்டு எழுந்து சென்றான்.

ஆரம்பத்தில் இந்த பேச்சில் ராஜன் முகம் போன போக்கை பார்க்க அவளும் இதை தொடர்ந்தால், ஆனால் சொந்திலின் அழைப்பு அவர் எதை யாவது முடிவு செய்துவிட்டால் இப்படி தான் இவளை அழைப்பார். 

அங்கு இருந்து எழ போனவள் ராஜன் குரல் கேட்டு நின்றாள், என்ன அப்படி ஒரு சிரிப்பு உனக்கு, எங்க எப்படி நடக்கனும் இன்னும் உனக்கு தெரியலா என்றான் முகத்தை கடுகடுப்புடன் வைத்துக்கொண்டு. உன்னை எல்லாம் என்று ஏதோ மேல சொல்ல போனவனின் பேச்சு அப்படியே நின்று போய் இருந்து…………… அடுத்து அவள் சொன்ன வார்த்தையில்.

ஆமா என்க்கு எங்க எப்படி இருக்கனும் தெரியாது, அதை என் அம்மா எனக்கு சொல்லி வளர்க்கவில்லை என்றவள் அங்கு இருந்து சென்று இருந்தாள்.

அப்படியே அதிர்ந்து போனவன் தன் அலை பேசி அழைப்பை ஏற்று காதில் வைத்தான். அழைத்து இருந்து தமிழ் தான், அவன் தங்கையுடன் பெங்களூர் வந்துவிட்டதாக கூறியவன், அவனையும் விசாரித்துவிட்டு, நாயகியை பற்றி கேட்டான், அவளை அப்புறம் பாத்தியாடா என்ற அவன் கேள்விக்கு அவன் பதில் சொல்ல போகும் நேரம் மீண்டும் அவள் அங்கு வர, ஆமா பார்த்தேன் அவளுக்கு தான் மாப்பிள்ளை பார்க்க வந்து இருக்கேன் என்றான் கடுப்புடன். என்ன என்று அந்த பக்கம் தமிழ் அதிர, இவள் என்வென்று அவனை பார்த்து இருந்தாள்.

உடனே தமிழ் டேய் நிஜமாவாடா? அப்போ கவி என்றான், இப்போது கடுப்பாவது இவன் முறையானது. நான் அப்புறம் பேசுறேன் என்று இனைப்பை துண்டித்துவிட்டான்.

அவன் மாப்பிள்ளை பற்றி பேசவும் அங்கே நின்றவள், அந்த பக்கம் தமிழ் கவி என்று சொல்லவும் நகர்ந்துவிட்டாள்.

இவனுக்கு என்ன தான் வேனும், அவ தான் வேனும்னா அவளை கட்டிக்க வேண்டியது தானே, அதை விட்டு எதுக்கு என் விஷயத்தில் முக்கை நூழைக்கனும் என்று கடுப்புடன் சென்றாள்……….

எவன் எப்படி போனால் எனக்கு என்ன இனிமே இவன் விஷயத்தில் தலையிட கூடாது என்று அவளும், அவள் விஷயத்தில் தலையிட கூடாது என்று அவனும் முடிவு எடுத்துக்கொண்டனர்.

முடிவு செய்தவன் அடுத்த நாள் காலையில் தன் ஊருக்கு பயனமாகி இருந்தான்.

ஆனால் அடுத்த வாரமே நான் நாயகியை தான் திருமணம் செய்வேன் என்று அவன் கூற போவதும், அதற்கு அவள் அமைதியாக நிற்கப்போவதும் நடக்கும் போது இருவரின் மனநிலை என்னவாக இருக்கும்.

இதற்கு இடையில் சண்முகம் செந்திலை சந்திக்க அடுத்த நாள் அவர் அலுவலகத்தில் காத்து இருந்தார்…………..

 

       

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement