Advertisement

தனக்கு தான் மகன் இருக்கிறான் அவன் தான் அடுத்த வாரிசு என்று சொல்லி திரிந்தார்கள் சண்முகமும், கலாவும், அது பிடிக்காத என் மாமனார் எல்லாவற்றையும் மகன் கையில் ஒப்படைக்க முடிவு செய்தார், அதை தெரிந்துக்கொண்ட சண்முகம் மீண்டும் அவரிடம் அவர் குறையை பற்றி பேசி அவரை வேறு மருத்து எடுக்க வைத்தார், அது அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், எல்லாம் சரியாகி விடும் என்று கூறி அவரை அதை தெடர்ந்து சாப்பிடவைத்தார். 

இந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியாது, என் கணவர் இறப்பதற்க்கு இரண்டு நாட்கள் முன்னால் தான் அவர் இப்படி மருந்து எடுத்துக்கொள்வதும் அதை சண்முகம் வாங்கி வருவதையும் பார்த்தேன். அன்று எனக்கு வித்தியாசமாக ஏதும் தேன்றவில்லை. ஆனால் என் கனவர் மருத்துவமணையில் சேர்த்த அன்று டாக்டர் கேட்ட போது அதுபற்றி அவர் ஏதும் சொல்லவில்லை, அவ்வளவு ஏன் தெரிந்து போல் கூட காட்டிக்கொள்ளவில்லை. அப்போது தான் எனக்கு சண்முகத்தின் மேல் சந்தேகம் வந்து.

ஆனால் இப்போது இதை யாரிடம் சொல்வது, அதுமட்டும் இல்லாமல் அடுத்து அவர்கள் சொத்துக்காக கிளப்பிய பிரச்சனைகள் என்று வீடு நிலைகுலைந்து போனது, என் மாமனார் மரணம் வேறு என்னை அச்சபடுத்தியது. இவன் சொத்துகாக எதையும் செய்வான் என்று நினைத்தேன்.

அதுமுதல் அவன் நடவடிக்கைகளை கவணிக்க ஆரம்பித்தேன் அவன் எது செய்தாலும் எதிர்காமல் இருந்தேன். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, என்ற மன புழுக்கம் எனக்குள், அவனை ஒன்றுமே செய் முடியவில்லை என்ற கோவம், அது எல்லாம் திரும்பியது ரங்கநாயகி மேல் தான்.

ஆம் ரங்கநாயகியை என் பகடையாக மாற்ற முடிவு செய்தேன், அன்று முதல் சண்முகத்தின் ஆட்டத்தை நான் ஆடினேன் அவன் மகளை வைத்தே அவனை பழிவாங்க நினைத்தேன்.

குழந்தையை கவணிக்காமல் விட்டேன், அதற்கு காரணம் என் கணவனின் இழப்பு என்று எல்லோரும் நினைத்தனர். அடுத்து கலா அருகில் இருக்கும் நேரம் எல்லாம் ரங்கநாயகி தான் இந்த வீட்டின் வாரிசு, என்று மறைமுகமாக உணர்த்தினேன். அது கலாவிற்க்கு ரங்கநாயகி மேல் வெறுப்பை வளர்த்து. பெற்றவள் தன் மகளை வெறுத்தாள், ஆனால் இது எதுவும் சண்முகத்தின் முன் நடக்கவில்லை, என் மாமியாருக்குமே என் மேல் சந்தேகம் வரவில்லை, அதனால் தான் அவர் ரங்கராயகியை அதிகம் பார்த்துக்கொண்டார். அது கலாவிற்க்கு இன்றும் அவள் மேல் வெறுப்பை அதிகமாக்கியது.

இது எல்லாம் சண்முகத்துக்கு தெரியவந்த போது அவரால் கலாவை கட்டுபடுத்த முடியவில்லை, அவன் ரங்கநாயகிக்கு ஆதரவாக ஏதாவது செய்தால் நிலைமையை இன்னும் மோசமாகியது. 

நான் என்னவெல்லாம் செய்ய நினைத்தேன்னோ அதை எல்லாலம் கலாவை கொண்டே செய்தேன். அந்த நேரத்தில் அவள் குழந்தையாக தெரியவில்லை, சண்முகத்தின் மகளாதான் தெரிந்தாள், அதனால் அவள் படும் வேதனைகள் என்னை பாதிக்கவில்லை. நானும் இப்படி தானே கஷ்டபட்டேன் என்று நினைத்துக்கொள்வேன்.

ஆனால் அப்போது கூட சண்முகம் முன்வந்து உண்மையை சொல்லவில்லை, பெற்ற தகப்பனுக்கே இல்லாத அக்கரை எனக்கு எதற்கு என்று நினைத்துக்கொள்வேன்.

அந்த நேரத்தில் தான் நான் நினைக்காத ஒன்றும் நடந்து அது ரங்கராஜன், நாயகி திருமணம், அதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆனால் அன்று அந்த வாத்தியாரிடம் பேசி ரங்கநாயகியை ஊரைவிட்டு கூட்டி போக சொன்னது நான் தான்.

அதுமட்டும் இல்லாமல், அந்த திருமணத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று நினைச்சு தான் அன்னிக்கு, கலா அங்கு இருக்கறாள் என்று தெரிந்து நாயகியிடம் நான் பேசினேன். எல்லாம் என் திட்டபடி நடந்து. கலா ஊரைகூட்டி பிரச்சனை செய்து நாயகியை ஊரைவிட்டு துரத்தினார். எனக்கும் கஷ்டமாக தான் இருந்து, ஆனால் அப்போதும் சண்முகம் உண்மையை கூறவில்லை. அவனுக்கே இல்லாத கவலை எனக்கு எதற்கு நானும் நடப்பதை வேடிக்கை பார்த்தேன்.

அதன் பின் நடந்து எல்லாம் என் திட்டபடி அவள் இந்த ஊருக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டேன்.     11 வருஷம் கழிச்சு சண்முகம் அவளை இந்த ஊருக்கு வரவச்சான். அவன் நேக்கம் எனக்கு தெரியும், இருந்தாலும் இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்தி எல்லா உண்மையும் சொல்லி இந்த சொத்து எல்லாத்தையும் என் மகன் பேருக்கு மாத்த நினைச்சேன், ஆனா இந்த ஆள் எல்லாத்தையும் கெடுத்து இவன் பெண்ணா என் பையனுக்கு கட்டிவைச்சு எல்லாத்தையும் மறைக்க பார்த்தா விட்டுவேன்னா……….

இதுக்கா இத்தனை நாளா இந்த வலி எல்லாத்தையும் தாங்கிட்டு இருந்தேன்…………. என்று நீளமாக எல்லாவற்றையும் கூறி முடித்தார்…… அங்கு இருந்தவர்கள் எல்லோரும் அதிர்ந்து தான் நின்று இருந்தனர்.

யாருக்கும் என்ன சொல்லவது என்று தெரியவில்லை…………. சண்முகம் கலங்கி தான் போய் இருந்தார், ஆனால் அவரால் இதை அப்படியே விட்டுவிட முடியாதே, இங்க பார் ராஜன் வள்ளி சொன்னது எல்லாம் உண்மை தான், சின்ன வயசுல எனக்கு இந்த வீட்டில் நடந்த சில சம்பவங்கள் என்னை இப்படி நடக்க வைத்து. அதை எல்லாம் நான் நியாயபடுத்த விரும்பவில்லை. ஆனால் என் மகள் எந்த தப்பும் செய்யவில்லை. அவ பிறந்து இன்னிக்கு வரைக்கும் அவள் எந்த சந்தோஷத்தையும் அனுபவித்து இல்லை, அவளுக்கு நான் நல்ல அப்பாவா இல்ல……… இந்த ஒரு நல்ல விஷயமாவது அவள் வாழக்கையில் நடக்கட்டும் பா தயவு செய்து என் மகளை கல்யாணம் பன்னிக்க என்று அவன் கை பிடித்து கெஞ்சினார்.

வள்ளி பேச வாய் திறக்கும் முன், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று தன் மாலையை கழற்றி இருந்தாள் நாயகி, உங்களுக்கு எல்லாம் இப்போ தெரிந்த இந்த விஷயம், நான் இந்த ஊருக்கு வந்த அன்னிக்கு இராத்தியே எனக்கு தெரியும்.

இதோ இவரும், அந்த வேலையாளும் மறுநாள் நிச்சயத்தை எப்படி நிறுத்துவது என்று பேசிக்கிட்டு இருக்கும் போது கேட்டேன், அப்போதான் நான் இவரோட பெண்ணு எனக்கு தெரிந்து. ஆனால் எப்படி ஏன்? ரங்கராஐன் யார் இது எல்லாம் எனக்கு தெரியவேண்டு இருந்து அதனால தான் நிச்சயத்தை நிறுத்தினேன். இதனால யாருக்கு எல்லாம் லாபம், யாராவது உண்மைய சொல்லுவாங்களா பார்த்துக்கிட்டே இருந்தேன். அதனால தான் அடுத்து சொத்து எல்லாத்தையும் ஒப்படைக்க சொன்னேன். ஆனா அப்பவும் எதுவும் தெரியல, இப்போது கூட இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டது, கண்டிப்பா இந்த உண்மை தாலிகட்டுறத்துக்கு முன்னால வெளிவரும் தான்.  இப்போ எனக்கு தேவையானது எல்லாம் தெரிஞ்சிடுச்சி இனி இது அவசியம் இல்லை.

இப்போனு இல்ல எனக்கும் இந்த ஊருக்கும் இருக்கும் தொடர்பு 11 வருஷத்துக்கு முன்னாலே முடிந்து போய்ச்சு இப்பவும் அப்படியே இருக்கட்டும்.

என்றவள் வள்ளியையும், சண்முகத்தையும் பார்த்து நீங்கள் சொல்றதுக்கும், செய்த்துக்கும் ஆயிரம் நியாயம் இருந்து இருக்கலாம். ஆனால் உங்களால் நான் இழந்த எதையும் திருப்பி தரமுடியாது. உங்களை பார்த்து கேட்க ஆயிரம் கேள்விகள் என் மனசில் இருந்தாலும் அதனால, எனக்கு எதுவும் திரும்ப கிடைக்க போறது இல்லை, என்றவள் ராஜனிடம் திரும்பியவள் உனக்கு நடந்து எல்லாம் தப்பா இருந்தாலும் அதனால நீ உன் வாழ்க்கையில் இதுவரைக்கும் எதையும் இழக்கல, இனிமே அது நீ எடுக்கற முடிவில் தான் இருக்கு என்றவள் ஸாரி இந்த கல்யாண மேடை வரைக்கும் உன்னை வர வச்சதுக்கு.

என்றவள் அவர்களை கடந்து கலாவிடம் வந்தவள், நீங்க ஒருத்தர் கொஞ்சம் மாறி இருந்தா, இது எல்லாத்தையும் தடுத்து இருக்கலாம். நீங்க எனக்கு பன்னது எல்லாம் என்னால எப்பவும் மண்ணிக்க முடியாது, என் விஷயத்துல நீங்க ஒரு பெண்ணா கூட நடந்துகல, அப்படி இருக்கும் போது உங்கள அம்மாவா………………. என்னால முடியும் தோனல…………. நீங்க செய்து எல்லாம் மறக்க முயற்சி பன்றேன்.

இந்த எல்லா சொத்துக்கும் லீகல் பார்மாலீடீஸ் எப்போ முடிக்கிறிங்களோ அப்போ சொல்லி அனுப்புங்க நான் வந்து கையொழுத்து போடுறேன் என்றவள் அங்கு இருந்து கிளம்பி இருந்தாள், யாரின் பதிலையும் எதிர்பார்காமல்.

அடுத்து வள்ளி ராஜனை தான் பார்த்து இருந்தார், இத்தனை நாள் மகனை இப்படி பார்த்து இல்லை, அருகில் இருந்தாலும் தான் பார்பதை சண்முகம் பார்த்துவிட்டால், அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டால் தன்னையும் மீறி தன் தாய் பாசம் வெளிபட்டுவிட்டால் என்று நினைத்தே அவனை இன்று வரை அவர் நேரக பார்த்து இல்லை, இன்று கண்குளிர பார்த்தார், தன் மகன் இன்று யார் மீது பயமின்றி, தன்னால் தன் மகனை பார்க்க முடிகிறது அந்த நினைப்பே அவருக்கு அப்படி ஒரு புரிப்பை கொடுத்து, அருகில் சென்று அவன் கையை பற்றிக்கொண்டார், கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. 

ஆனால் அவனுக்கு தான் என்ன எதிர் வினையாற்றுவது என்று தெரியவில்லை, இந்த இரு நாட்களாக நடந்த சம்பவங்களால் மனதால் களைத்து இருந்தான். இந்த புதிய உறவை அவனால் ஏற்கவும் முடியவில்லை, கலாவை அவனால் நெருங்கவும் முடியவில்லை. ரங்கநாயகி எப்போது அவரின் மகள் என்று தெரியவந்தோ அப்போதில் இருந்து அவர் ஏதும் பேசவில்லை. இவன் புறம் திரும்பவும் இல்லை. சண்முகத்தை கூட அவர் பார்க்கவில்லை. அவர் பார்வை எங்க வெறித்து இருந்து. இத்தனை நாள் வாய் மூடாமல் பேசியபடி இருந்தவர், இன்று மௌனமாகி போனார்.

ரங்கராஜன் தன் மாலையை கழற்ற போக அவனை தடுத்தவர், கல்யாண மேடை வரைக்கு வந்த இப்படி செய்ய கூடாது ராஜன், உனக்கு பிடித்த பெண்ணோடு உன் திருமணம் இன்று நடக்கும், என்றவர் அங்கு இருந்த பார்கவியை அழைத்தார். 

அதுவரை ஏதும் பேசாமல் இருந்தவன், இங்க கொஞ்சம் நேரம் முன்னால் ஒருத்தி மாலையை கழட்டி வைத்துவிட்டு போனாளே அவள நீங்க உங்க மகளா பார்க்க வேணாம், ஆனா பெண்ணா பார்த்து இருக்கலாம், நீங்க பன்னது எல்லாம் எனக்காக தான்னாலும் அது எல்லாம் அவளுக்கு………………… என்றவன் மேலும் ஏதும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி இருந்தான்.

காலம் இவர்களின் நேசத்தை நிறம் மாற்றுமா……………… 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement