Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 17

வள்ளி அத்தனை பேர் முன்னிலையிலும் ரங்கராஜன் தன் மகன் என்று கூறியதில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்று இருந்தனர். அங்கு இருந்த உறவினர் ஒருவர் என்னமா சொல்ற? ராஐன் உன் மகனா?

எப்போதில் இருந்து?

ஏன் இத்தனை நாள் இதை சொல்லவில்லை, இப்போது தான் உனக்கு இது தெரியுமா? 

என்று கேள்விகளை அடுக்கி இருந்தார். அவர் கேட்ட எல்லா கேள்விக்கும் சண்முகத்தை நேர் பார்வை பார்த்தவள். என்ன சண்முகம் இவங்க கேட்கற கேள்வி காதுல விழலயா, இல்லை இதுக்கு உனக்கு பதில் தெரியாதா? இல்ல மறந்துட்டியா? என்றாள் நக்கல் வழியும் குரலில்.

சண்முகத்துக்கு பொறியில் மாட்டிய எலியின் நிலை, இப்போது என்ன சொல்லவது. இவளுக்கு எப்படி தெரியும்? 

யார் மூலம் தெரியும்? 

எந்த விஷயம் எல்லாம் தெரியும்?

எத்தனை நாட்களாக இது எல்லாம் இவளுக்கு தெரியும்? என்ற பல கேள்விகள் அவர் மனதில்.

அவள் அப்படி கேட்டதும் அவர் ரங்கநாயகியையும், கலாவையும் தான் பார்த்தார், இவர்களிடம் என்ன சொல்லவது………. இத்தனை நாள் நான் இந்த குடும்பத்தில் எப்படி இருந்தேன். இனி………………. அதை நினைக்கவே அவருக்கு வேர்த்து………

நிலைமையை சமாளிக்கும் பெருட்டு, என்ன சொல்ற வள்ளி, இத்தனை நாட்கள் வீட்டில் இருந்து உனக்கு மூளை குழம்பிவிட்டதா…… இங்கு வந்து எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறாய். முதலில் பிள்ளைகளின் திருமணம் நல்லபடியாக முடியட்டும். அதன் பின் எல்லாவற்றையும் பேசி கொள்லாம். நல்ல நேரம் முடிய போகிறது………. என்றார் அவசரமாக………..

என் மகனின் திருமணம் நடக்கும், கன்டிப்பாக இன்றே நடக்கும், ஆனால் அது உன் பெண்ணுடன் இல்லை. அவன் விரும்பி பார்கவியுடன், நான் நடத்தி வைப்பேன் என்றாள் தீர்மானமாக…….

என்ன பார்கவியுடனா? அவள் தான் ராஐனை மனந்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லவிட்டேளே? என்னமே நான் அவர்கள் திருமணத்தை நிறுத்தியது போல் என்றார் திமிராக………

அதை கேட்ட வள்ளிக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது……….. அதில் உனக்கு சந்தேகம் வேறா? நிச்சயமாக இந்த திருமணத்தை நிறுத்தியது நீ தான்………… எந்த நேரத்தில் எப்படி மாறுவாய், எப்படி எல்லாம் பேசி உனக்கு தேவையானதை நடத்திக்கொள்ளவாய் என்று இங்கு இருக்கும் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். அவ்வளவு ஏன் உன் மனைவி கலாவிற்க்கு கூட உன்னை பற்றி தெரியாது……… ஆனால் உன்னை பற்றி அடி முதல் நுனிவரை அனைத்தும் நான் அறிவேன். இப்போது இங்கு என் மகனுக்கு அவனுக்கு பிடித்த பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும் இல்லை என்றால் இத்தனை நாள் நீ பன்னியதை எல்லாம் நான் சொல்ல வேண்டி இருக்கும். என்றார் மிரட்டலுடன் வள்ளி………….

அவர் கூற்றில் அவருக்கு மனதில் பயம் எழுந்தாலும், இத்தனை நாள் எதற்காக அவர் பாடுபட்டாரே, தன் சொந்த மகளையே விலகி இருந்தாரே, அது எல்லாம் இன்று ஒன்றுமே இல்லாமல் போவதை அவர் விரும்பவில்லை. அதே சமயத்தில் வள்ளி வாய் திறந்தால் நிலைமையை தனக்கு முற்றிலும் எதிராக போய்விடும் என்று நன்கு அறிவார்.

உடனே எல்லார் முன்னிலையிலும் வந்தவர். என்னை எல்லோரும் மண்ணித்துவிடுங்கள், வள்ளி சொல்வது போல் ரங்கநாயகி என் மகள் தான், ரங்கராஐன் தான் வள்ளிக்கு பிறந்தவன், அன்னிக்கு இருந்த சூழ்நிலையில் என்னால் இந்த உண்மையை சொல்ல முடியவில்லை. எல்லோர் சந்தோஷத்துகாகவும், குடும்ப நிம்மதிக்காகவும் தான் நான் இந்த உண்மையை இப்போ வரைக்கும் சொல்ல முடியல. 

எல்லோரும் என்னை மண்ணித்துவிடுங்கள், முதல இந்த கல்யாணம் முடியட்டும், அப்புறம் என்ன நடந்து நான் சொல்றேன் என்றவர், ரங்கராஜனிடம், ராஜன் உனக்கு நல்லவே தெரியும் இது வரைக்கும் என பெண்ணு எந்த சந்தோஷத்தையும் அனுபவித்து இல்லை. அவள் பிறந்தில் இருந்து அவள் அனுபவித்த கஷ்டம் எல்லாம் போதும், தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி அவளுக்கு இன்னும் கஷ்டத்தை கொடுத்துடாதே என்றார் அவன் கைகளை பிடித்த வண்ணம். எல்லாவற்றையும் விட இது உன் பாட்டி செய்து வைத்த கல்யாணம், இத்தனை நாள் கழித்து இது தான் நடக்கனும் இருக்கு அதனால் தன் அந்த கல்யாணம் நின்று, மறுபடியும் உனக்கும் என் மகளுக்கும் இந்த கல்யாணம் நடக்குது என்றார்..

ரங்கராஜனுக்கு இன்னும் இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. நான் இவர் மகன் இல்லையா? என்ற கேள்வியிலே அவன் மனம் நின்று இருந்து. வள்ளி அதை சொன்ன போது அவன் பார்த்து கலாவை தான்.

அவன் உலகமே கலா தான், இது வரையில் அவன் எடுக்கும் எந்த முடிவிலும் தாய்யின் கருத்தை ஒத்தே இருக்கும். கலாவை கஷ்டபடுத்தும் எதையும் அவன் இன்று வரை செய்த்து இல்லை.  அவனுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவன் கலாவை சார்ந்தே வளர்ந்து இருந்தான். கலா தான் அவனுக்கு எல்லாம், அவன் அம்மாவை அந்த வீட்டில் பாட்டியும் தாத்தாவும் சரியாக நடத்தவில்லை, தன்னைவிட ரங்கநாயகி மீது தான் அதிக அக்கரை செலுத்துகிறார்கள் போன்ற எண்ணங்கள் அவன் ஆழ்மனதில் புதைந்து போனவை, அதனாலேயே அவன் எப்போதும் அம்மாவின்   இருப்பான். தன் தந்தை வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்ள, அத்தையும் மாமாவும் ஏதும் செய்யாமல் இவர்களை குறை கூறுவதாக நினைத்தான்.

சரியோ தப்போ எப்போதும் அவனுக்கு அம்மாதான், இப்போது இவர் சொல்வது என்ன இவர் என் அம்மா இல்லையா? 

ரங்கநாயகியோ இன்னும் ஏதும் பேசாமல் அமைதியாக தான் நின்று இருந்தாள். அவளுக்கு தெரியுமே கண்டிப்பாக இது சண்முகத்தின் உண்மை முகம் இல்லை… இதில் வேறு ஏதோ உள்ளது என்று…………

சண்முகம் சொன்னவற்றை எல்லாம் கேட்ட வள்ளி இன்னும் வெகுன்டார். என்ன சொன்ன இந்த குடும்பத்துகாக உன் குழந்தைய தியாகம் பன்னியா? ஆஹா………… ஆஹா…… இதை சொல்ல உனக்கே சிரிப்பா இல்லை………………………

நீ என்ன நினைச்சுட்டு இருக்க சண்முகம்…………. இத்தனை நாளா இந்த வீட்டில் நடந்து எல்லாம் நீ நினைச்ச மாதிரி நடந்துனா…………. இல்லை சண்முகம் எல்லாத்தையும் நடத்தினது நான்!!!!!!!!!!!!

நானே தான், குழந்தை பிறந்தில் இருந்து, அதை மாத்தி வைத்து, அதை டாக்டர்கிட்ட பேசி வெளியில் தெரியாம பன்னது இது எல்லாம் நீ தான் திட்டம் போட்டு பன்ன………….. 

குழந்தை பிறந்த அப்பவே எனக்கு தெரியும் எனக்கு தான் ரங்கராஐன் பிறந்தானு, அதை நீ எப்படி உனக்கு ஏத்த மாதிரி மாத்திகிட்டனும் எனக்கு தெரியும். அதை எல்லாத்தையும் விட நான் இன்னும் மயக்கம் தெளியவில்லை என்று நினைச்சு டாக்டர் கிட்ட நீ பேசின எல்லாத்தையும் நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன். இது எல்லாம் தெரிந்தும் ஏன் எதையும் யார் கிட்டயும் சொல்ல? நினைக்கிறயா?

அப்படி நான் சொல்லி இருந்தனா…………… என் முதல் குழந்தை என்னை விட்டு போன மாதிரி இந்த குழந்நையும் நான் இழந்து இருப்பேன்!!!!!!!!!!!!!!! என்றார் கோவமாக…………………….

வள்ளி சொன்னதை கேட்டு அதிர்ந்தவர்கள் என்னமா சொல்லுற, உன் முதல் குழந்தை கலைந்து போனதுக்கும் சண்முகத்துக்கும் என்ன சம்பந்தம். அன்னிக்கு விட்டில் யாரும் இல்லையே? என்றார் உறவினர் ஒருவர்…..

அவரை பார்த்த வள்ளி, இல்லை என் குழந்தை தானா கலையல, அதை செய்தது இந்த ஆள் தான். 

அன்னிக்கு எல்லோரும் வெளியில் கிளம்பி போனார்கள் தான், நான் மாடியில் இருந்து இறங்கும் போது அங்க தண்ணீர் கொட்டி இருந்து இருந்துச்சு, ஆனாலும் நான் மாடி கைபிடியை பிடிச்சு நின்னுட்டேன், ஆனால் என்ன யாரே பின்னார் இருந்து தள்ளிவிட்டாங்க, அப்போ என்ககு அது யார் என்று தெரியவில்லை. நான் கண் முழித்த போது ஆஸ்பிட்டலில் எனக்கு கரு கலைந்து விட்டதாக சென்னார்கள். ஆனா அன்னிக்கு ராத்திரி அங்க இருந்த நர்ஸ் பேசிகிட்டதுல இருந்து எனக்கு எங்க வீட்டில இருந்து யாரே பணம் கொடுத்து இப்படி செய்தாங்க தெரியவந்து.

அது பத்தி நான் என் மாமியார் கிட்ட சொன்னப்ப கூட அவங்க அதை பெரியவிஷயமா எடுத்துகல….. ஆனாலும் அது என் மனதை உறுத்திகிட்டே இருந்து. அந்த சமயத்தில் நான் மறுபடியும் கர்பமானேன், கலாவோட அடிக்கடி பிரச்சனை வந்து, எனக்கு கலா தான் அதை செய்து இருப்பாளோனு சந்தேகமா இருந்து, ஆனால் அதை நான் சொல்லவில்லை, அதன் பின் வந்த நாட்களில் என் மாமியார் என்ன நினைத்தார்களோ கலாவை தனியாக தோட்டவிட்டிற்க்கு அனுப்பிவிட்டார்கள்.

அதன் பின் நான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன், என் பிரசவ நாள் அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் அங்க இருக்கோம் எனக்கு முதலில் தெரியாது. எனக்கு குழந்தை பிறந்து நான் அரை மயகத்தில் இருக்கும் போது சண்முகமும், டாக்டரும் பேசினது எனக்கு கேட்டுச்சு முதல டாக்டர் இதுக்கு ஒத்துக்கல, அப்படி அவர் அதை செய்யவில்லை என்றால், என்னோட முதல் குழந்தை மாதிரி இதையும் கொன்றுவிடுவேன் என்றும் அதற்கு காரணம் நீதான் என்றும் சொல்லுவேன் என்றும் அவரை மீரட்டி அதற்கு சம்மதிக்க வைத்தார். அப்போது தான் என் முதல் குழந்தை இங்கு மருத்துவமனையில் கலைக்கபட்டு அதற்கு காரணம் சண்முகம் என்றும் எனக்கு தெரியும். ஆனால் இதை சொன்னால் யாரும் நம்பி இருக்கமாட்டார்கள், அதைவிட இதை எல்லாம் நிறுபிக்க என்னிடம் ஆதாரம் இல்லை. 

எல்லாவற்றையும் விட சண்முகம் அந்த வீட்டின் மருமகன் மற்றும் என் மாமியாரின் தம்பி, நான் இதை சொன்னால் நம்பமாட்டார்கள் என்பதைவிட, அதன் பின் எனக்கும் என் குழந்தைக்கும் அந்த வீட்டில் பாதுகாப்பு இருக்குமா? என்பதே என்னை மவுனமாய் இருக்க செய்தது.

எல்லாவற்றையும் விட என் மகன் என் கண்முன்னால் இருப்பான் என்பதே எனக்கு போதுமானதாக இருந்து. எல்லாம் சரியா இப்படியே போய் இருந்தால் நானும் அமைதியாக இருந்து இருப்பேன். ஆனால் மறுபடியும் என் வாழ்வில் பிரச்சனைகள் வர ஆரம்பித்து. 

Advertisement