Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 16

திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர வழைத்து இருந்தார் சண்முகம், ஆம் சொத்து சம்பந்தபட்ட எல்லா பத்திரங்களையும் வக்கீலை கொண்டு தயார் செய்தவர், அவளை எல்லாம் தயார் என்று  அடுத்த நாளே வரவழைத்து இருந்தார், இதை ரங்கநாயகியும் எதிர் பார்த்து தான் இருந்தாள். 

அவளுக்கு தெரியுமே சண்முகம் தன்னை அந்த வீட்டின் மருமகளாக நினைப்பது, அதனால் தன்னை இங்கு திருமணத்திற்க்கு முன் வரவழைத்து விடுவார் என்று எதிர்பார்த்து இருந்தாள். எந்த சந்தர்பத்திலாவது தன்னை பற்றிய உண்மை வெளிவந்து விடாதா என்பதே அவள் எதிர்பார்பாக இருந்து.

அதனலேயே சண்முகம் கால் செயத்தும் ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள். அன்று மதியம் குறிபிட்டவர்கள் முன்னிலையில் எல்லாவற்றையும் ஒப்படைக்க அங்கு கலா, சண்முகம், சுந்திரவடிவு, வள்ளி என எல்லோரும் கூடி இருந்தனர், அவர்களூடன் வக்கீல் மற்றும் ஊரில் உள்ள முக்கியத்தர்கள், கவியின் தந்தை பிரகாஷமும் இருந்தார்.

ரங்கநாயகி அங்கு அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்த படி இருந்தாளே தவிர ஏதும் பேசவில்லை. வக்கீ்ல் எழுந்து சொத்து பற்றிய விவரங்களை எல்லாம் கூறியவர், அவற்றின் கணக்குகளையும், அது சம்பந்தமான எல்லாவற்றையும் ரங்கநாயகியிடம் ஒப்படைப்பதாக கூறினார். மேலும் இதற்கு மேல் இந்த வீட்டில் கலா மற்றும் அவர் குடும்பத்தினர் தங்க இயலாது என்றும் நாளை அவர்கள் இந்த வீட்டை காலி செய்து முறைப்படி ரங்கநாயகியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதுவரை ஏதும் பேசாமல் அமர்ந்து இருந்த கலாவிற்க்கு இந்த வார்த்தைகள் நெஞ்சில் சுருக்கென்று இருந்து. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டவரால் இந்த வீட்டைவிட்டு போவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவும் இன்று காலை அவர்கள் வீட்டின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த இருவர் பேசியது இன்னும் அவர் காதுகளில் கேட்டுக்கொண்டு இருந்து. 

இந்த அம்மா இந்த வீட்டில் இருந்துட்டு என்ன ஆட்டம் போட்டுச்சு, அதுவும் அந்த புள்ளைய இந்த வீட்ட வீட்டு அனுப்பும் போது அதுக்கு 15 வயது, இன்னிக்கு என்ன நடந்து பாத்தியா, இந்த வீடு, சொத்து பத்து எல்லாத்தையும் அந்த பெண்ணு கையில் கொடுக்க வச்சுடான் அந்த கடவுள். அதை தான் அரசன் அன்று கொள்ளுவான், தெய்வம் நின்று கொள்ளும் சொன்னாங்க என்று பேசிக்கொண்டனர்.

வேறு நாள் இப்படி யாரவது பேசி இருந்தால் அவர் ஆடும் ஆட்டமே வேறு, ஆனால் இன்று அவரால் ஏதும் செய்யமுடியாது போனது. தன் மகனும், கனவனுமே தனக்கு எதிராக இந்த விஷயத்தில் செயல்படுவதால் கலாவிற்க்கு ஏதும் செய்ய முடியாத நிலை.

அந்த இயலாமையில், அங்கு அமர்ந்து இருந்தார், அந்த நேரத்தில் எல்லாவற்றையும் முடித்து வக்கீல் எல்லோரிடமும் சாட்சி கையேழுத்து வாங்கி முடித்தவர் ரங்கநாயகியிடம் அனைத்தையும் ஒப்படைத்து இருந்தார்.

ரங்கராஜன் தன் கையில் வைத்து இருந்து கவி சம்பந்தமான பத்திரங்களையும் வக்கீல்லிடம் கொடுத்து சரிபார்த்து பிரகாஷத்திடம் ஓப்படைக்குமாறு கூறினான்.

அவரும் சரி என்று எல்லாவற்றையும் வாங்கியவர், அவற்றில் இருப்பவற்றை அங்கு இருப்போருக்கு படித்து காண்பித்து, அதற்கும் சாட்சி கையெழுத்து வாங்கியவர் அதை பிரகாஷத்திடம் கொடுக்க போனார். 

அதுவரை அமைதியாக இருந்த கலா, சட்டென்று எழுந்து அதை வக்கீல் இடம் இருந்து வாங்கி கொண்டவர், அது தான் எல்லாவற்றையும் அவங்க சென்ன படி எழுதியாச்சே, பத்திரத்தையும் இப்பவே கொடுக்கனுமா என்ன?

நாளைக்கு கல்யாணம் முடிந்தும் கொடுத்துகலாம் என்றுவிட்டார். அதில் பிரகாஷத்தின் முகம் கருத்துவிட்டது. ஏன் என்றால் அவர்கள் திருமணம் பேசும் போது ஊரில் உள்ளவர்கள் யாரும் இல்லை, அவர்களுக்குள்ளாகவே பேசி தான் அந்து முடிவை எடுத்து இருந்தார்கள். அதன் பின்னும் கூட இந்த சொத்து எழுதி வைப்பது பற்றி யாரும் பேசவில்லை, கலாவிற்க்கு இதில் கௌரவ குறைச்சல் அதனால் அவர் இதை யாரிடமும் சொல்லவில்லை, சண்முகம் தனது வேலைகளில் இருந்தால் அவரும் இது பற்றி பேசவில்லை. ரங்கராஜனும் வக்கீலும் இதை பற்றி வெளியில் யாரிடமும் பேசவில்லை. இந்த சொத்து எழுதி வைக்கும் முடிவு பற்றி அங்கு வந்து இருந்த ஊர்கார்களுக்கு யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை.

இப்போது கூட வக்கில் அதை பற்றி பேசும் போது கேட்டு இருந்தவர்கள் அமைதியாக தான் இருந்தனர். ஆனால் கலா அவ்வாறு நடந்துக்கொள்ளவும் எல்லோர் பார்வையும் பிரகாஷத்திடம் தான் சென்று இருந்து.   

அதில் சிலர் நிச்சயத்து அன்னைக்கே சொத்து பிரச்சனையை கிளப்பிவிட்டவர், எல்லா சொத்தும் கைமாறுனதுக்கு அப்புறம் கூட பெண்ணு கொடுக்காறாரேன்னு நினைத்தேன் இப்பதானே தெரியுது மீதி இருக்க எல்லாத்தையும் எழுதிவாங்கிட்டு தான் கல்யாணத்தை நடத்தார்ன்னு என்று பேசியது வேறு அவர் காதில் விழ. 

மற்றோருவரோ எல்லா சொத்தும் ஒரே நாளில் கையவிட்டு போனா அதை ஏத்துக்கு முடியலை போல………….. இந்த வீட்டுல ராணி மாதிரி  வாழ்தவங்க, நாளையில் இருந்து எல்லாத்துக்கும் மருமகள் கையாதான் எதிர் பார்க்கனும்……….. எல்லாம் நேரம்………………. என்றவர்களின் பேச்சில்

ஏற்கனவே திருணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவர், கலாவின் நடவடிக்கையாலும், ஊராரின் பேச்சினாலும் இன்னும் மனம் வருந்தினார் பிரகாஷம்.

நடப்பவை எல்லாம் ராங்கராஜனுக்கு பிடிக்கவி்ல்லை என்றாலும், ஏற்கனவே இந்த திருமணம் முடிவானதில் இருந்து தன்னிடம் சரியாக பேசாத அம்மா இப்போது இதற்கு ஏதாவது சொன்னால் பிரச்சனை பெரியதாகிவிடுமோ என்று நினைத்தவன் அமைதியாக இருந்தான். மேலும் இன்று இந்த பத்திரங்களை கவியின் அப்பாவிடம் கொடுப்பது பற்றி அவரிடம் முன்னமே சொல்லியிருந்தால் இதை தவிர்த்து இருக்காலம் என்ற காலம் கடந்த யோசனை வந்து அவனுக்கு.

அதற்கு மேல் ஏதும் பேசாமல் பிரகாஷம் வெளியேறி இருந்தார். நேரக வீட்டுக்கு வந்தவர், மனைவியிடம் பெரிந்து தள்ளிவிட்டார். அதை எல்லாம் கேட்ட கவிக்கு தன் நினைத்து சரிதான் என்ற எண்ணம் இன்னும் வலுத்தது. அதை மேலும் நிருபிக்கும் வண்ணம் அடுத்த செயலும் நடந்து.

அறைக்கு சென்றவள் ராஜனுக்கு அழைப்பு எடுக்க, அப்போது தான் கலா அவனிடம் அந்த பத்திரங்கள் பற்றி சண்டை இட்டு முடித்து இருந்தார். இதில் மறுபடியும் இவளா என்று நினைத்தவன் முதல் அழைப்பை எடுக்கவில்லை.

மீண்டும் அவள் அழைக்கவே அதை எடுத்தவன், ஏதும் பேசாமல் அமைதியாக காதில் வைத்து இருந்தான். கவியோ அவன் ஏதாவது பேசுவான் என்று நினைத்து அமைதியாக இருக்க. இரு புறமும் அமைதி நிலவியது.

மௌனத்தை உடைத்த ராஜன் இப்ப எதாவது பேச போரியா? இல்லை வைக்கவா என்ற அவன் குரலில் எரிச்சல் மிகுந்து இருந்து, இந்த நான்கு நாட்களில் அவன் கொண்ட வேலை பளு அத்தகையது. எல்லாவற்றிக்கும் மேல் அவனுக்கு நாளை திருமணம் ஆனால் அந்த மகிழ்ச்சி அவனிடத்தில் துளியும் இல்லை. யாரின் முன்னால் தான் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தானே இன்று அவளின் முன்னாலே அவன் தாயும் வருங்கால மாமனாரும் நடந்துக்கொண்ட விதம் அவனை மேலும் மன உலைச்சலுக்கு ஆளாக்கியகு.

ஆனால் அது எதுவும் உணர்ந்துக்கொள்ளும் நிலையில் கவியில்லை, அவனின் அந்த எரிச்சல் மிகுந்த வார்த்தைகள் அவளை மேலும் குழப்பத்தில் தள்ளியது. வார்த்தைகள் வர மறுத்தாலும், பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள் கடினபட்டு வார்த்தைகளை கோர்த்தவள், அப்பா…………. அப்பாகிட்ட…………….. என்று ஆரம்பித்தவளின் பேச்சில் மேலும் அவன் பொருமை இருக்கவா? போகவா என்ற நிலை?

என்ன சொல்ல வர அத சீக்கரம் சொல்ல என்ற அவனின் அதட்டலில் மேலும் அவளுக்கு உதர, ஒரு வழியாக தான் கேட்டக வந்ததை அவனிடம் கேட்டுவிட்டவள் அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து தான் போனாள்.

அவள் கேட்டது உங்க அம்மா ஏன் அப்படி எங்க அப்பாகிட்ட நடந்துகிட்டாங்க என்றாள் சற்று ஆதங்கமாய்………… அதுக்கு நீங்களும் ஏதும் சொல்லாமல் இருந்தீங்களாம்? என்றாள்

அதில் சற்றி அமைதியாக இருந்தவன், இப்போ அதனால என்ன? உங்க அப்பா செய்து மட்டும் சரியா?  உடனே அந்த இடத்தைவிட்டு கிளம்பிட்டார்…………. என்றான்.

பின்னே அங்க இருந்து இன்னும் உங்க அம்மா பன்னுறது எல்லாம் பார்க்கனுமா?

அப்படி என்ன பன்னிட்டாங்க? 

இப்போ தர வேண்டாம் சொன்னாங்க அவ்வளவு தான் என்றான் அந்த பேச்சை முடித்துவிடும் நேக்கத்தில்……..

அவ்வளவு தானா இவ்வளவு சுலபமாக சொல்லிங்க………. என்று மேலும் பேச போனவளை…. 

தடுத்தவன் இங்க பார் கவி, நீ தான் என்னை தேடிவந்து இந்த கல்யாணம் நடக்கனும் சொன்ன………….

நானும் உங்க அப்பா, எங்க அம்மான்னு எல்லோரையும் சரிகட்டி எல்லார் கால்ளையும் விழாதது குறையா இந்த கல்யணத்துக்குகாக நாய வேலைபார்த்துட்டு இருக்கேன்.

ஆனா நீ அங்க இருந்துட்டு என்ன கேள்வி மேல கேள்வி கேக்கற என்றான் கோவமாக.

அப்போ உங்க அம்மா செய்த்து எல்லாம் சரியா? நான் எதுவும் கேட்க கூடாதா?

ஏன் எங்க அம்மா மட்டும் சொல்லற? உங்க அப்பா கூட தான் எல்லா சொத்தையும் மாத்திக்கேட்டார்…………… நீயே சொல்லு இது வரைக்கும் நீ பார்த்த கல்யாணத்துல இது மாதிரி யாராவது கேட்டு இருக்காங்களா? இல்ல கொடுத்து இருக்காங்களா?

அவ்வளவு ஏன் நாளைக்கே உன் அண்ணனுக்கு பெண் பார்த்து கல்யாணம் பண்ணா உங்க அப்பா எல்லாத்தையும் அந்த பெண்ணு மேல எழுதி வைப்பாரா? என்றான்.

அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. என்ன பேச வந்து இப்போது என்ன பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைத்தவள்……………

அப்போ நாளைக்கு உங்க அம்மா என்கிட்ட இப்படி நடந்தா கூட இப்படி தான் பேசுவிங்களா?  என்றாள் ஆற்றாமையாக  

அதை கேட்டவன் இன்னும் கடுப்பாக அப்போ என் அம்மாவை என்ன பன்னட்டும்? என் சொத்து மட்டும் வேணும்? வேற……….. என்று என்ன சொல்லி இருப்பானோ……..

அவன் சொல்லியதில் அதிர்ந்தவள்………. போதும் நிறுத்துங்க, கல்யாணத்து முன்னாலயே இப்படி பேசுறிங்க, அப்புறம் என்னவெல்லாம் பேசுவிங்க என்றவள் வீசும்ப தொடங்கி இருந்தாள்.

இப்போ இந்த கல்யாணத்தால தான் உங்களுக்கு பிரச்சனை இல்லாயா? 

ஆமா நான் பாட்டுக்கு இருந்தேன் நீயா வந்து தான் கல்யாணத்தை பத்தி பேசின………… நான் இங்க ஒத்தையா எத்தனை பிரச்சனைகளை சமளிக்க வேண்டி இருக்கு உனக்கு தெரியுமா? இப்போ என்ன கேள்வி வேற கேட்குற……………..

ச்ச………….. எதுக்கு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டேன்னோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று வார்த்தையை விட்டு இருந்தான்…………………..

சற்று அமைதியாக இருந்தவள் அப்படி ஒன்னும் இந்த கல்யாணம் நடக்க வேண்டியது இல்லை………………….. என்றவள் இனைப்பை துண்டித்து இருந்தாள்…………………

அவனுக்கு தான் பேசியது அதிக படி என்று தெரிந்து இருந்து. ஆனால் அவனால் என்ன செய் முடியும், அவனுக்கு ஏற்கனவே இது எல்லாம் பெரிய தலைவலியாக இருந்து,போன வாரம் வரை இந்த மாதிரியான கவலைகள் ஏதும் இல்லாமல் அவன் நினைத்து எல்லாம் நடந்துவிடும் சுக வாழ்க்கை வாழ்ந்தவன் அவன். ஆனால் இப்போது அம்மாவை சரிகட்டி, இவர்கள் குடும்பத்தில் பேசி, எல்லா சொத்துகளின் கணக்குகளையும் ஓப்படைத்து என்று மிகவும் களைத்து போய் இருந்தான்.

கடந்த இரு நாட்களாக அவனை சாப்பிட்டாயா? என்று கேட்க கூட அ்ந்த வீட்டில் யாரும் இல்லை? இப்படி பட்ட மன அழுத்ததை அவன் உணர்ந்தே இல்லை, அதுவே அவனை இப்படி பேச வைத்து இருந்து.

கவியும் கல்யாண கணவுகளோடு இருக்க, இப்போது நடக்கும் விஷயம் எல்லாம் அவளூக்கு குழப்பத்தையும் பயத்தையும்மே கொடுத்து.

அதனால் இருவரும் கணக்கு வழக்கு இல்லாமல் வார்த்தைகளை கொட்டி இருந்தனர்.

அடுத்து தன் தந்தையிடம் வந்தவள் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று கூறியிருந்தாள், அதில் அதிர்ந்தவர் தன்னால் தான் மகள் இப்படி சொல்கிறாள்ளோ என்று நினைத்தார், இந்த நிலையில் திருமணம் நின்றால் ஊரில் என்ன பேசுவார்கள்…………….

என்று நினைத்தவர் என்ன சொல்லியும் மகளை சமாதான படுத்த முடியவில்லை. அதோடு நில்லாமல் இதை மீறி இந்த திருமணத்திற்க்கு வற்புறித்தினால் தான் தற்கொலை செய்து கொள்வதாக வேறு கூற அன்று இரவே அவர் அதை ராஜன்னிடம் சொல்ல முயற்சி செய்ய அவன் போன் அனைத்து வைக்கபட்டு இருந்து, பின் யோசித்தவர் சண்முகத்திடம் சொல்லி இருக்க. அவரோ அதை அதிகாலையில் தான் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னார். அதில் பெரிய பூகம்பமோ வெடிக்க அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் அனைவரும் நின்று இருக்க. 

சுந்திரவடிவு மருகளிடம் இவர்கள் இருவருக்கும் தான் முடிச்சு இருக்கம் போல் அதான் அந்த இடம் தட்டி போய்விட்டது, அதே முகூர்த்தில் நம் புள்ளைக்கு கல்யாணம் நடக்கனும் நீ போய் நாயகிட்ட பேசு என்றார்.

அந்த நேரத்தில் தான் திருமணத்திற்க்கு செல்ல தயாராகி வந்த ரங்கநாயகியிடம் சுந்திரவடிவு எல்லாவற்றையும் கூற அப்போதும் அவள் சண்முகம் மற்றும் கலாவின் முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இருவரும் ஏதாவது பேசுவார்களா என்று, சண்முகம் இந்த நிலையிலாவது எதாவது கூறுவாரா? என்று

அவள் அவர்களை பார்ப்பதை பார்த்த சுந்திரவடிவு, கலாவிடம் வந்தவர் உனக்கு இப்போ உன் பிள்ளை கல்யாணம் நடக்கனும் நினைச்சா போய் பேசு, நீர் அடித்து நீர் விலகாது போ என்றார்.

கலாவும் ஒரு பெருமூச்சுடன் அவள் அருகில் வந்தவர்,அவள் கையை பற்றிக்கொண்டார், அவருக்கு சட்டென்று அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் நிலையை உணர்ந்தவர்.

நான் உனக்கு என்ன செய்து இருந்தாலும் அதை இந்த நேரத்தில் எண்ணாமல், என் மகன் வாழ்க்கைய காபாத்தி கொடுமா? என்றார் கண்ணீர் மல்க…………………

அப்போதும் அவள் பார்வை சண்முகத்தையே நேக்கியது? ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் எல்லாவற்றையும் கேட்ட ரங்கராஜன் இறுகி போய் இருந்தான் யார் முன் தன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும்………. யாரின் முன் தான் சந்சோஷமாக திருமண வாழ்வு வாழ வேண்டும் என்று நினைத்தானோ…………. எதற்காக எல்லாவற்றையும் வீட்டு கொடுத்து சென்றானோ அது எல்லாம் வீன். 

மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். இனி நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை அவனுக்கு………….

ஆனாலும் ரங்கநாயகி இந்த திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையில்லை…………………

ஆனால் அவன் நினைத்தற்க்கு மாறாக அவள் சரி என்று தலை அசைத்தாள்…………….. அவளுக்கு அந்த உண்மை தெரிந்தே ஆக வேண்டும், கண்டிப்பாக சண்முகம் இந்த திருமணத்தை நடத்தியே தீறுவார் என்று அவளுக்கு தெரியும், அதனால் அமைதியாக தலையாட்டினால் இவர் எது வரை போகிறார் என்று பார்க்கலாம்!!!!!!!!!!!!

அவள் சரி என்ற உடன் சண்முகத்தின் முகத்தில் மகிழ்ச்சியும், ரங்கராஜன் முகத்தில் அதிர்ச்சியும், சுந்திரவடிவு மற்றும் கால முகத்தில் நிம்மதியும் பரவியது.

உடனே துரிதமாக செயல்பட்டவர் எல்லாவற்றையும் தயார் செய்ய, வள்ளியை தயார் செய்து கோவிலுக்கு அழைத்து வரும்படி அவரை பார்த்துக்கொள்ளும் பெண்ணிடம் கூற, அவளும் வள்ளியின் அறையே நேக்கி போனாள்.

சென்றவள் வள்ளியை எழுப்பி அவரிடம் திருமணத்திற்காக கோவிலுக்கு போக  வேண்டும் என்று கூறி அவரை தயார் படுத்த, அதற்குள் மாப்பிள்ளை பெண் கோவிலுக்கு சென்று இருந்தனர்.

அதன் பின் வேறு வண்டியில், வள்ளியும் அவரின் கூட அந்த பெண்ணு சென்றுக்கொண்டு இருக்க. வெகு வருடங்கள் கழித்து வெளியில் வருக்கிறார் அதனால் அந்த சுற்று புறத்தை பார்த்தபடி வந்தார். முகத்தில் என்றும் இல்லாத தெளிவு வந்து இருந்து.

அதை கவணித்த அந்த பெண் இப்பதான் ம்மமா………………. உங்க முகத்தில் சிரிப்போ பார்க்கிறேன். நம்ம ஐயா கல்யாண முடிந்து சின்னம்மா இந்த வீட்டு மருமகளா வந்த பின் உங்கள அடிக்கடி வெளியில் கூட்டி போக சொல்லனும் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே கோவில் வந்து விட, இறங்கி அந்த பெண் கைதாங்களாக உள்ளே அழைத்து செல்ல, அங்கே மாலையும், கழுத்துமாக இருந்த ரங்கராஜன் மற்றம் ரங்கநாயகியை பார்த்தவர் அதிர்ந்தார்.

எது நடக்க கூடாது என்று இத்தனை வருடங்கள் எல்லா வலியையும் தனக்குள் அடக்கி பாடுபட்டாரோ, இன்று அதுவே தன் கண் முன்னால் நடப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரங்கராஜனை பார்தார் அவன் முகத்தில் திருமணத்திற்க்கு உரிய எந்த மகிழ்ச்சியும் இல்லை. தன்னுடன் வந்த பெண்னை அழைத்துக்கொண்டு வேகமாக அருகில் சென்றவர்.

அடுத்து சொன்ன வார்த்தையில் அந்த இடம் அதிர்ந்து அமைதியாகி போனது………………….

இந்த கல்யாணத்தை நிறுத்துங்க என்று பெரும் குரலில் கத்தி இருந்தார் வள்ளி………………………. 

அதோடு நிறுத்தாமல் யார்  கேட்டு என் மகனுக்கு விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணத்தை பன்றிங்க………………………….

என்ற அவர் வார்த்தைகளில் எல்லோரும் அதிர்ந்தே போயினார்……………

என்ன ரங்கராஜன் வள்ளியின் மகனா???????????????????

என்று எல்லோரும் பார்த்து இருக்க………… 

சண்முகமோ வள்ளியை பயத்துடன் பார்த்து இருந்தார்????????????

ரங்கநாயகியோ இதுவரை சண்முகத்திடம் வைத்து இருந்த தன் கவணத்தை அதிர்ச்சியுடன் வள்ளிபுறம் திருப்பினாள்!!!!!!!!!!!!!

அதிர்ந்தவர்கள் அவர்கள் மட்டும் அல்ல அவன் திருமண விஷயம் கேட்டு கோவிலுக்கு வந்து இருந்த பார்கவியும்!!!!!!!!!!!!!  

  

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement