Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 15

ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது என்று குழம்பி இருந்தாள். வள்ளியிடம் பேசிய பின் அவர் சொல்லவதும் சரிதானே தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால் அவன் வாழ்வில் தான் தடையாக இருப்பது சரியானது இல்லை தானே என்று பலவாறாக யோசித்தவள். வக்கீலிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்கும் படி கேட்டாள். 

தன் சென்னை போக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய் ஆரம்பித்தாள். ஆனால் இன்னும் அவளுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் தீரவில்லை. 

சண்முகம் எப்படி என் அப்பா, தன் அம்மா யார்? 

ரங்கராஜன் யார்?

அப்படியானல் வள்ளியின் குழந்தை என்னவானது?

ஒரு வேளை இவன் தான் அவர் மகனோ? 

என்ற பல கேள்விகள் இன்னும் அவளை சுழன்றுக்கொண்டு தான் இருந்து.

தான் சென்னைக்கு போவதற்க்கு முன் அதற்கான விடையை அறிய வேண்டும், அது முடியவில்லை என்றால் சண்முகத்திடமே நேரடியாக பேசிவிடுவது என்ற முடிவுக்கு வந்து இருந்தாள்.

சண்முகம் அடுத்து அடுத்து நடக்கும் கல்யாண வேலைகளை பார்த்து கடுப்பில் இருந்தார். இதில் வக்கீல் வந்த சொன்ன விஷயம் வேறு அவரை மேலும் மண்டையை காய வைத்து இருந்து. ரங்கநாயகி ஊருக்கு செல்லும் விஷயம், அவளை எப்படியாவது இங்கேயே திருமணம் வரைக்கும் இருக்க செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நடப்பவற்றை பார்த்தால் அது முடியாது என்று தோன்றியது அவருக்கு. அதன் படி

ரங்கநாயகி கேட்டது போல் எல்லாவற்றையும் தயார் செய்ய இன்னும்  சில நாட்கள் தேவைபடும் அதுவரை அவளை இங்க இருந்து எல்லாவற்றையும் பார்க்க சொல்லி வக்கீல் மூலம் சொல்ல வைத்தார். ஆனால் அதற்கு அவள் எல்லாம் தயார் ஆனதும் திரும்பி வருவதாக கூறனாள்.

அதை கேட்டவர் அவளை திருமணத்திற்க்கு முன் இங்க வரவழைக்க வேண்டும் என்று, நினைத்தவர் ரங்கராஜனிடம் சொல்லி எல்லா கணக்கு வழக்குகளையும் உடனே முடிக்கும் படியும் திருமணத்திற்கு முன் அவற்றை எல்லாம் ரங்கநாயகியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவனை வேறு எதிலும் கவனம் சொலுத்தபடியாத படி பார்த்துக்கொண்டார்.

அவனுக்கும் பெண் வீட்டில் சொல்லியபடி திருமணத்திற்க்கு முன் எல்லாவற்றையும் கவியின்  பெயரை இனைக்க வேண்டி இருந்தால் அவன் அந்த வேலையில் முழுகி போனான்.

அடுத்து திருமணத்தில் என்ன செய்வது,  என்று  யோசித்தவர் தன் மனைவி மற்றும் மகன் மூலம் ஏதும் செய்யமுடியாது என்று புரிந்து போனது. அதனால் அவர் தேர்ந்து எடுத்த நபர் பார்கவி. இந்த சந்தர்பத்தை சண்முகம் சரியாக பயண்படுத்திக்கொண்டார். கவியிடம் தான் நினைத்தபடி குழப்பங்களை ஏற்பாடுத்தினார். 

 

ஆம் திருமணம் இன்னும் 2 நாட்களில் என்னும் நிலையில், இருவீட்டினரும் சேர்ந்து தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டி இருந்து. திருமணம் கோவிலில் என்றாலும், உடைகள் எடுப்பது, நகைகள் வாங்குவது என்று சில வற்றை இவர்கள் இரு குடும்பத்தினரும் சேர்ந்தே செய்தனர் நேரமின்மை காரணமாக.

அன்று திருமண உடை எடுக்க கடைக்கு சொன்று இருந்த போது, ரங்கராஜனும், கவியும் அவர்களுக்கான உடையை எடுத்து முடித்த பின், சொந்தங்களுக்கு உடை எடுக்க வேண்டும் என்று அமர்ந்தனர். அப்போது கவிக்கு எடுத்த அதே விலையில் அவர் ரங்கநாயகிக்கும் எடுக்க, எல்லோரும் அவரை கேள்வியாக பார்க்க, கலா கேட்டேவிட்டார், கல்யாணம் யாருக்கு அவளுக்கா? எதுக்கு இத்தனை விலையில் புடவை என்று. 

அதற்கு சண்முகம் கூறிய பதில் தான் கவியன் மனதில் முதல் கல்லை எரிந்து இருந்து. என்ன இருந்தாலும் அவ எனக்கு மருமக!!!!!!!!!!!!!!!! என்றவர் பேச்சில் எல்லோரும் அதிர்ந்து தான் போயினர்…………….. கலா பார்த்த பார்வையில் இங்க பார் கலா ஏற்கனவே வீட்டில் ஏதோ பெரிய பிரச்சனை என்று எல்லோரும் நினைக்கறாங்க. இதில் ரங்கநாயகிக்கும் ராஜனுக்கும் இருக்கும் உறவு ஊர் அறிந்து……………………………

என்று கூறி இடைவெளிவிட்டவர்…………………. இது வீட்டில் நடக்கும் விஷேசம், அடுத்த வீட்டு பெணுக்கே இவ்வளவு செய்யும் போது ரங்கநாயகி நம்ம வீட்டு பெண்ணு அவளுக்கு இது வரைக்கும் எதுவும் செய்யல, இப்பவும் எதுவும் செய்யலனா, நாளைக்கு ஊருக்குள்ள உன் கௌரவம் என்னவாகும். தன் அண்ணன் மகளுக்கு கலா ஏதும் செய்வில்லை என்று உன்னை தான் சொல்லுவாங்க என்றார்.

கௌரவம் என்ற ஒற்றைவார்த்தையில் கலா அதன் பின் ஏதும் பேசவில்லை. புடவை எடுக்கும் போது என்ன நடந்தோ அதே தான் நகை எடுக்கும் போதும் நடந்து. காலையில் கடைக்கு கிளம்பும் போது இருந்த உற்சாகம் இப்போது அவளிடம் முற்றிலும் தொலைந்து இருந்து. அதற்கு ரங்கராஜனும் ஒரு காரணம். அவனுக்கு இருக்கும் வேலை பளூவில் இவற்றை எல்லாம் கவணிக்கும் மனநிலையில் அவன் இல்லை. மேலும்

பெண்வீட்டில் பேசிவிட்டு வந்து அன்றில் இருந்து கலா அவனுடன் சரியாக பேசுவது இல்லை, அவன் பிரகாசம் கேட்டவுடன் அதற்கு ஒப்புக்கொண்டு எல்லாவற்றையும் கவி பேரில் மாற்ற ஒத்துக்கொண்டது அவருக்கு பெருத்த ஏமாற்றம். ஏற்றகனவே தனக்கு இந்த வீடு இல்லை என்ற வருத்தில் இருந்தவர், பிரகாசம் வீட்டில் கேட்டதில் கோவத்தில் இருந்தவர் வாய் திறக்கும் முன் மகனும் தன்னை கேட்காமல் இப்படி முடிவு எடுத்து, அதையும் அவரை கேட்டாமல் அங்கேயே ஒப்புக்கொண்டது அவருக்கு மிகுந்த வருத்தம். இவனுக்காக தானே எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் மகனே தன்னை மதிக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு, அதனால் அவனிடம் ஏதும் பேசாமல் அமைதியில் தன் விருப்பமின்மையும், கோவத்தையும் காட்டினார்.

ராங்கராஜனுக்கு அது புரிந்து இருந்தால், அதன் பின் திருமண ஏற்பாடுகளில் அவன் தலையிடவில்லை. அதனால் தான் உடை எடுக்கும் விஷயத்திலும், நகை எடுப்பதிலும் அவன் எந்த ஆச்சேபனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இது கவிக்கு ஏமாற்றமாக இருந்து, திருமணம் தனக்கா, இல்லை அவளுக்கா, தனக்கும் அவளுக்கும் எல்லாம் சரிசமாக எடுக்க வேண்டும் என்றால் எனக்கு என்ன முக்கியதுவம் இருக்கும். அதற்கு இவரும் எதுவும் சொல்லவில்லை. ஒரு வேளை அவள் தன் முன்னால் மனைவி என்ற எண்ணம் இவருக்கு இருக்குமோ?

என்று எண்ணி குழப்பிக்கொண்டாள், அவளை அப்படி குழம்ப வைத்தார் சண்முகம். எல்லாவற்றிலும் ரங்கநாயகியை முன்னிலை படுத்தினார், அவள் அந்த வீட்டின் பெண் என்றும் தங்கள் வீட்டில் நடக்கும் விஷேத்துக்கு தாங்களே அவளுக்கு செய்யாவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்? என்று வேறு கேட்டு வைத்தார். 

அதோடு விடாமல் சீக்கரம் அவளுக்கும் நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைக்க வேண்டிய பெறுப்பு தங்களுடையது என்று கூறினார். அது கலாவை சரியாக தாக்கியது.

தன் மகனுக்கு எல்லாம் சிறப்பாக கிடைக்க வேண்டும் என்றே இத்தனை நாள் பாடுபட்டவர், அதற்காகவே எல்லாவற்றையும் செய்தவர், இன்று மகன் திருமணம் இப்படி நடக்க இருக்க. அவளுக்கு மகனைவிட நல்ல வாழ்வு அமைந்துவிட்டால்?

வீடும், சொத்தும் அவளுக்கு போவது பத்தாது என்று அவள் அந்த வீட்டில் மகாராணியாக வாழ வேறு செய்வளா? தான் மட்டும் எதும் இல்லாமல் மகன் மற்றும் மருமகள் தயவில் இருக்க வேண்டுமா? என்ற எண்ணம் அவரை அந்த திருமண வேலைகளில் ஒன்றவிடாமல் செய்து. மேலும் இத்தனை நாள் தான் சொல்வதை தான்டி ஏதும் செய்யாத கணவன் இன்று அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பேசுவது கலாவிற்க்கு அத்தனை ஆதங்கமாக இருந்து. என்ன செய்ய முடியும் இன்று தன்னிடம் ஏதும் இல்லை என்று தன்னை யாரும் மதிக்கவில்லை என்று எண்ணியவர் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அம்மா அப்படி இருப்பது ரங்கராஜனுக்கு வருத்தமாக இருக்கவே. சண்முகம் செய்யும் எதற்கும் அவன் மறுப்பு சொல்லவில்லை.

  

ஆனால் இது எல்லாம் இங்கு கவி மனதில் பூகம்பத்தை கிளப்பிக்கொண்டு இருக்கிறது என்பதை அவன் அறியவில்லை.

எல்லாம் முடித்து வீட்டுக்கு வந்தவர்கள் அடுத்த நாள் திருமண உடைகளை கோவிலில் வைத்து பூஜை செய் வேண்டும் என்று வந்து இருக்க. அதில் ரங்கநாயகிக்கு எடுத்த உடைகள் மற்றும் நகைகளையும் வைத்து இருந்தார் சண்முகம். அதை யாரும் கவணிக்கவில்லை. பூஜை முடிந்து எல்லாவற்றையும் பெண் வீட்டில் கொடுக்க அதில் மற்றோர் பை இருப்பதை அறிந்த பெண்வீட்டினர் அதை திறந்து பார்க்க அதில் ரங்கநாயக்கு வாங்கியவை இருந்து.

இதையும் இதோட சேர்த்து வைத்துவிட்டோமா என்று சண்முகம் பதறிபடி கூற, மற்றவர் அமைதியாகிவிட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்படும் போது, என்ன இருந்தாலும் அவளும் இந்த வீட்டின் மருமகள் தானே அதான் தெய்வ சன்னதியில் இப்படி நடந்து இருக்கு, எல்லாம் அவன் முடிவு பன்னுவது, என்று கவி காதில் படும்படி பேசியிருந்தார் சண்முகம்.

இது இன்னும் கலக்கத்து கொடுத்து அவளுக்கு. அவள் புடவையும் கல்யாண புடவையும் ஒன்றா, என் வாழ்வின் கடைசி வரை இந்த பேச்சு தெடருமோ?

அவள் இந்த வீட்டின் மருமகள் என்றால்? நான் யார்?

நாளைக்கு எந்த நல்லது கொட்டது இந்த வீட்டில் நடந்தாலும் இந்த பேச்சு வருமோ?

ஏன் என்றால் இந்த இரண்டு நாட்களில், இந்த திருமணத்திற்காக வந்து இருந்து சொந்தபந்தம், நன்பர்கள் என்று எல்லோரும் இவளிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கேட்ட கேள்வி இதுவாக தான் இருந்து.

அப்படி கேட்கும் படியான நிலையை உறுவாக்கி இருந்தார் சண்முகம் அந்த ஊரில் இருந்தவர்கள் மத்தியில் ரங்கநாயகியின் பேச்சு இருக்கும் படி தன் ஆட்களை கொண்டு பார்த்துக்கொண்டார்.

அவள் தான் முதல் மனைவி என்றும், அந்த வீட்டின் மருமகள் என்றும், சொத்துகள் எல்லாம் அவள் வசமே சேரும் என்றும் பல பேச்சுகள் அந்த ஊரில் எல்லோரிடமும் இந்த இரண்டு நாட்களாக பெரிதும் பேசப்பட்டது, அது கல்யாணத்து வந்தவர்கள் காதிலும் விழ சில அக்கரையிலும், சிலர் பொறாமையிலும் அதே கேள்வியை கவியிடமும், அவள் வீட்டினரிடமும் கேட்டது வைத்தனர்.

அவர்கள் என்ன தான் விளக்கம் சொல்லி சமாளித்தாலும், அந்த பேச்சு ஓய்ந்து போகவில்லை. இப்போது இந்த உடை விஷயமும் சேர்ந்துக்கொள்ள அவள் மனது சஞ்சலபட்டது. அது எந்த அளவுக்கு என்றால் தன் அம்மாவிடம் அம்மா இந்த திருமணம் சரிதான, நான் அங்கு சந்தோஷமாக இருப்போனா? என்று புலம்பி இருந்தாள். அதை கேட்ட அவருக்கும் மனதுக்கு கலக்கமாக இருந்து. அதை பற்றி அவர் தன் கனவனிடமும் பேசினார் தான். அவர் நான் அப்போதே இதுல விருப்பம் இல்லைனு சொல்லிடேன். நீயும் உன் மகளும் தான் ஒத்த கால நின்னு சாதிசிங்க இப்போ வந்து இப்படி பேசினால், என்னை அவன் ஊரில் மதிப்பான் என்று கோவபட்டவர் எழுந்து சென்றுவிட்டார். 

ஏன் என்றால் சண்முகம் பேசிய பின் அவருக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை, ஆனால் மனைவி மகளுக்கு இந்த திருமணத்தில் இருந்த விருப்பமோ அவரை ஒத்துக்கொள்ள வைத்து இருந்து. அந்த கோவம் அவருக்கு.

கவியின் மனது மட்டும் தான் எடுத்து இருக்கும் இந்த முடிவு சரியானதா? என்று ஏன் என்றால் அவளுக்கு இந்த திருமணத்தில் இருந்த விருப்பமே அவள் தாய்யை பிரகாசத்துடன் பேசி அவரை சம்மதிக்க வைத்து இருந்து. 

தாயிடம் தன் குழப்பத்தை தெரிவித்த பின் அவர் அதற்கு பிராகசாம் சொன்ன பதில் முற்றிலும் தளர்ந்து போனால். நாம் ஒரு முடிவு எடுக்கும் போதோ? ஓரு செயலை செய்யும் போது நம்மை சார்ந்தவர்கள் நம்மை நம் முடிவினால் ஏற்படும் விளைவுகளுக்கு நம்க்கு உறுதுனையாக இருப்பார்கள் என்றால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தாங்கலாம்.

ஆனால் அவர்களே இது உன் முடிவு அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினாள் பின்னால் ஏதும் பிரச்சனைகள் வந்தாள் நான் என்ன செய்வேன் என்று நினைத்து குழம்பினால்.

அதே சமயத்தில் தான் தான் அவனிடம் சென்று திருமனத்திற்க்கு பேசினோம், அவனுக்கு அந்த எண்ணம் இல்லையோ, அதனால் தான் நிச்சயம் ஆனா இத்தனை நாட்களில் அவன் ஒரு முறை கூட தன்னிடம் தானாக வந்து பேசவில்லை?!?!

ஆனால் அதே சமயத்தில் அவன் அவளுடனான திருமணத்திற்காக தான் அவன் தன் தந்தை சொன்ன எல்லாவற்றிக்கும் சம்மதித்தான் என்பதை மறந்து போனால்.

அனைவரும் அவரவர் சிந்தனைகளுடன் இருக்க நாளை திருமணம் என்ற நிலை வந்து இருந்து. ரங்கநாயகி அன்று மத்தியம் தான் ஊருக்கு வந்து இருந்தாள், அவளுக்கு தெரியும் சண்முகத்தின் குறிக்கோள் தன்னை இந்த வீட்டின் மருமகளா கொண்டு வந்து சொத்து அனைத்தையும் அடைவது தான் என்று. அதனால் அவர் இந்த திருமணத்தை நடத்தவிடமாட்டார் என்று நம்பினாள். 

ரங்கராஜன் எல்லாவற்றையும் முறைபடி பதிவு செய்தவன் அன்று மாலையே ரங்கநாயகியிடம் வக்கீல் முன்னிலையில் எல்லாவற்றையும் ஒப்படைத்து இருந்தான். பிரகாசத்திடமும் எல்லாம் கவி சம்பந்தமான பத்திரங்களை பற்றி பேச இருந்தான். அதை அவரிடம் கொடுக்க போகும் போது கலா அது எல்லாமும் நாளை திருமணம் முடிந்தவுடன் அவளிடம் ஒப்படைக்கபடும் என்று கூறிவிட்டார். அதில் அவர் முகம் கருத்தாலும் ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

எல்லோரும் எதிர் பார்த்த திருமணநாள் விடிந்து இருந்து. எல்லோரும் திருமணத்திற்க்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது.

ஆனால் சற்று நேரத்தில் கலாவையும், சண்முகத்தை மகிழ்ச்சிக்கொள்ளவைக்கும் அந்த செய்தி வந்துவிட்டது ஆம், திருமணம் நின்றுவிட்டது!!!!!!!!!!!!!!!!

பெண் வீட்டில் திருமணத்தை நிறுத்தி இருந்தனர் !!!!!!!!!!!!!!!!!!

கலா, சண்முகம் நினைத்து போல் ரங்கநாயகி, ரங்கராஜன் அவர்களின் குல தெய்வகோயிலில் மாலையும் கழுத்துமாக நின்று இருந்தனர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அந்த சமயத்தில் அந்த திருமணத்தை நிறுத்தவே அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்து இருந்தார் அவர்?!?!?!?

இவர்கள் திருமணம் நடக்கும்மா?

இந்த மகிழ்ச்சி கலாவிற்க்கும், சண்முகத்துக்கு நிலைக்குமா?????????????????

இன்னும் என்ன உண்மைகள் வெளிவர காத்து இருக்கிறதோ??????

அதில் யாரின் நேசங்கள் எல்லாம் நிறமாறுமோ????????????

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement