Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 13

வீட்டிற்க்கு வந்து ரங்கராஐன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலாவை முகம் மலர செயத்து என்றால். சண்முகத்தின் முகமே யோசனைக்குள்ளானது. 

அவர் மகனை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தாலும், பார்கவி வந்து அவனை சந்தித்து சென்ற விஷயம் அவருக்கு தெரியவில்லை.

வா ராஜன், வந்து சாப்பிடு காலையில் இருந்து நீ இன்னும் சாப்பிடவில்லை தானே… என்றார் தாய்யின் அக்கரையுடன். அவனும் பசியை உணர்ந்தான், அதனால் அம்மா சொன்னவுடன் அமர்ந்தவன் சாப்பிட ஆரம்பித்தான்.

சற்று நேரத்திற்க்கு முன்பு தான் பண்ணை வீட்டில் இருந்து வந்து இருந்தாள் ரங்கநாயகி. தன் உணவை அங்கேயே முடித்துக்கொண்டவள். வந்தும் மேலே தன் அறைக்கு சென்று விட்டு இருந்தாள். இப்போது பேச்சுக்குரல் கேட்கவும் கீழே வரமால் மேலே இருந்த படியே கவணிக்களானள்.

அவன் உண்டு முடித்தும், அவன் அருகில் அமர்ந்த கலா, ராஐன் நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கே பா. என்றார் அவன் அவரை நிமிர்ந்து பார்த்து என்ன மா என்றான் யோசனையாக.

நம்ம வீட்டில் தேவையில்லாமல் நிறையை பிரச்சனை, யாருக்கும் நிம்மதி இல்லாம…….. 

நாம எல்லாம் நிம்மதியா, சந்தோஷமா வாழனும் தான் எங்க கல்யாணம் முடிந்தும் நான் இங்க இருக்க விரும்பினேன். எல்லோரும் இங்க அப்படி தான் இருந்தோம், அதில் யார் கண்பட்டதோ நடுவில் தேவையில்லாமல் நிறைய பிரச்சனைகள், பிரிவுகள், எல்லாம் போதும்பா இனிமே நாம எல்லோரும் ஒன்னா இந்த வீட்டில் இருக்கனும் தான் என் ஆசை. அதே போல் ஆசைபட்டு தான் என்   அம்மாவும்  உனக்கும், என் அண்ணன் மகளுக்கும் கல்யாணம் பன்னி வைச்சாங்க போல. 

நான் என்னோட அவசரபுத்தியால, அதை இல்லாம பன்னிட்டேன். ஆனா எங்க அம்மா பன்னது தான் சரி, அதனால தான் இத்தனை வருஷம் கழித்தும், உன் பாட்டியோட முடிவுதான் சரியானது. அதனால தான் இப்போ இந்த கல்யாணம் நின்னு போச்சு, அதுவும் நல்லது தான். 

இந்த எல்லா பிரச்சனைக்கும் முடிவு வரவேணும் பா, நம்ம குடும்பமும் சந்தோஷமா இந்த வீட்டில் வாழனும். அதனால் உனக்கும், ரங்கயாகிக்கும் வர வெள்ளிகிழமை நம்ம குல தெய்வ கோயில் கல்யாணம் பன்னிடலாம் பா என்றார் அவனிடம். 

இதை கேட்டவன் அதிர்ந்தானே இல்லையே, ஆனால் ரங்கநாயகியும், வள்ளியும் கலா பேசியதை கேட்டு அதிர்ந்து தான் போய் இருந்தனர். இருவரும் மே கலா திருமணத்தை பற்றி பேசுவார் என்று எதிர் பார்த்தனர் தான்.

 

ஆனால் இப்படி யாரிடமுமஎ எதுவும் கேட்காமல் திருமண நாள் வரை ஏற்பாடு செய்வார் என்று எதிர் பார்க்கவில்லை. ரங்கநாயகி தன்னிடம் திருமணம் பற்றி பேசினால் என்ன பேண வேண்டும் என்று தான் கணக்கிட்டு இருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தை விட கலா ஒரு படி மேலே சென்று நாள் வரை குறித்து இருந்து அவளையும் தடுமாற செய்து இருந்து.

அதுவரை அம்மா சென்னவற்றை கேட்டுக்கொண்டு இருந்தவன். அவன் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு. ம்மமா… என்றான்.

நான் இன்னிக்கு பார்கவியை பார்த்தேன் மா, என்றான்.

அவன் அப்படி சொன்தில், சண்முகம் அதிர்ந்தார் என்றார். கலாவே கேள்வியாக அவனை பார்த்தார். 

எதுக்கு அவளை பார்த்த?

அவ என்னை பார்க்க ஆபிஸ் வந்து இருந்தா….

ஓ……….. என்றவர் அவனை பார்த்து இருந்தார்.

அம்மாவின் முகத்தை பார்த்தவன், பின் ஒரு முடிவுக்கு வந்தவன்னாக. 

ம்மமா என்னால நீங்க சொல்லற மாதிரி அவளை கல்யாணம் பன்ன முடியாது. என்றவன் மேலும் பார்கவி சொன்ன எல்லாவற்றையும் சொன்னவன், எனக்கு அவளை பிடித்து இருக்கு. நான் அவளை கல்யாணம் பன்ன ஆசைபடுறேன்.

நீங்க சொன்ன அதே வெள்ளி கிழமை நம்ம குலதெய்வ கோவிலில் கல்யாணத்தை வைத்துக்கொள்வோம். அன்றே நான் வாங்கி இருக்க வீட்டுக்கு நம்ம குடும்பத்தோட போய்விடலாம் என்று சொல்லிக்கொண்டு வந்தவன்.

கலாவிடம் இருந்து எந்த பதிலும் வரமால் போனதால் அம்மாவை பார்த்தான். என்ன ம்மமா………

இல்ல ராஐன் அது சரிவராது….. அந்த பெண்ணு நம்ம வீட்டுக்கு வேணாம் என்றார். 

ஏன் மா?

அவ எப்படி உன்ன பார்த்து தனி பேசலாம், இது எல்லாம் சரிபட்டு வராது ராஜன் என்றார்.

அம்மா இதுல என்ன இருக்கு, என்று மேலே சொல்லவந்தவன்……

இல்ல முடியாது என் அண்ணன் மகள் தான் இந்த வீட்டின் மருமகள் என்றார் முடிவாக…..

ஏன் ம்மா….. கவி என்னை வந்து பார்த்து பேசினது தான் அவள் வேணாம் சொல்றதுக்கு காரணமா? என்றான்

ஆமா………. என்றார்.

அப்போ கல்யாணம் பன்ன அன்னிக்கே தாலிய கழட்டி கொடுத்துட்டு ஒடி போய்ட்டாளே உங்க அண்ணன் மகள் அது பரவாயில்லையா…….

என்றான் கோவமாக……..

உண்மையை சொல்லுங்க மா? தீடீர் என்று உங்க அண்ணன் மகள் மேல் உங்களுக்கு பாசம் எல்லாம் வந்துடுச்சா? என்ன?

இத்தனை வருஷம் எங்க இருந்தா? எப்படி இருந்தா எந்த தகவலாவது உங்களுக்கு தெரியுமா?

இன்னிக்கு கார்ல வந்து இறக்கி இருக்காலே இந்த கார் எப்படி வந்து? என்ன வேலை செய்றா? எப்படி இத்தனை நாள் தனியா இருந்தா? தனியா தான் இருந்தாளா?

இப்படி எதும் தெரியாது. அவ்வளவு ஏன் அவள் இந்த வீட்டிற்க்கு வந்த அப்ப கூட முகம் கொடுத்து பேசலை நீங்க. அவளை உங்களுக்கு பிடிக்கவே செய்யாது. ஆனா இந்த வீடு பத்தி பிரச்சனை வந்தவுடன் அண்ணன் மகள் தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரனும் சொல்றிங்க…………………..

என்ன விட இந்த வீடும் சொத்தும் உங்களுக்கு பெருசா மா………..

என்னோட சந்தோஷத்தவிட இந்த வீடு தான் உங்களுக்கு முக்கியமா?

வேணாம் மா இந்த வீடு சொத்து ஏதும் நமக்கு வேண்டாம், தாத்தா நமக்கு நிறைய கொடுத்து இருக்கார். அதை விட நான் தொழில் செய்றேன். இன்னும் என்ன வேணும். எனக்கு கவிதான் வேணும் மா…….. என்றான் அம்மாவை பார்த்தபடி…………

மகன் கேட்ட எந்த கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. ஆனால் அவரால் இந்த வீட்டை விட்டு விட முடியுமா?

ரங்கராஐன் இவ்வாறு பேசுவது சண்முகத்துக்கு தலைவலியாக இருந்து. இப்போது என்ன செய்வது. ஒரு வேளை அவன் புறம் கலா சாய்ந்துவிட்டாள்………………….

என்று நினைத்தவர், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார். கலாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் அவரால் அந்த வீட்டைவிட்டு விட முடியாது அது மட்டும் அவரால் முடியவே முடியாது என்று அவர் மனம் கூச்சல் இட்டது.

ராஐன் அம்மாக்கு இந்த வீடு தான் எல்லாம். இந்த வீட்டைவிட்டு என்னால் வர முடியாது. என்றார் முடிவாக.

அப்போ என் முடிவையும் கேட்டுக்கோங்க ம்மா…

கவி தான் என் மனைவி, வர வெள்ளிகிழமை இந்த கல்யாணம் நடக்கும். நான் நடத்தி காட்டுவேன். என்றவன் அங்கு இருந்து சென்று இருந்தான்.

அவன் போகும் திசை பார்த்தவர், அப்படியே அமர்ந்துவிட்டார். சண்முகம் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார்.

வீட்டில் இருந்து நேராக தன் அலுவலகம் வந்தவன் தன் அறையில் அமர்ந்து விட்டான். அம்மாவிடம் அவன் இப்படி ஒர் பதிலை எதிர்பார்க்கவில்லை. தன்னைவிடவா அந்த வீடும் சொத்தும் அவருக்கு முக்கியமாக போய்விட்து. அதற்காக தன் வாழ்க்கையை கூட கருத்தில் கொள்ளமாட்டாரா?

அவனுக்கு அம்மா எப்போதும் ஸ்பேஷல் தான், சிறு வயது முதல் தாத்தா, பாட்டி இருவரும் ரங்கநாயகியின் மேல் தான் அதிக கவணம் கொள்வார்கள், அப்பா எப்போதும் வேலை என்று ஒடிக்கொண்டு இருப்பவர்.

அதனால் அவனுக்கு எல்லாமே அம்மா தான். மற்றவருக்கு கலா எப்படியோ? ஆனால் ரங்கராஜனுக்கு அவள் சிறந்த அம்மா. அவனை அவள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்க்கு அவன் மேல் பாசம். அவனுக்காக அவர் எதையும் செய்வார்.

அப்படிப்பட்டவர் இன்று அந்த வீட்டிற்காக தன் வாழ்கையை கூட கணக்கில் கொள்ளவில்லை என்பதி அவனுக்கு பெரும் வருத்தமாக இருந்து.

அதனால் தான் அப்படி சொல்லிவட்டு வந்து இருந்தான்.

சிறிது நேரம் கண்முடி அமர்ந்து இருந்தவன், அடுத்து அழைத்து கவிக்கு தான். வீட்டில் நடந்தவற்றை சொன்னவன். தன் முடிவையும் சொன்னான். அவள் புறம் மவுனம்.

என்ன கவி, பதில் சொல் கல்யாணத்துக்கு ஒகே தானே என்றான். எப்போ புடவை எடுக்கலாம் என்றாள்.

அவள் சொன்ன பதிலில் அவன் முகத்தில் புண்னகை விரிந்து.

என்ன நடந்தாலும் கவியை விட்டுவிட கூடாது என்று முடிவுக்கு வந்து இருந்தான். தன் திருமண வேலைகளை பட்டியல் இட தொடங்கினான்.

……………………….

இங்கு ரங்கநாயகிக்கு அடுத்து இவர்கள் என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியவில்லை. கண்டிப்பாக கலாவே, சண்முகமோ திருமணத்தை நடத்த விடமாட்டார்கள் என்று நம்பினாள்.

அதோடு ரங்கராஜன் பேசி சென்றவை எல்லாம் அவளுக்கு வலித்து, அவளுக்கும் அந்த திருமனத்தில் விருப்பம் இல்லை, அவள் எந்த தவறும் செய்வில்லை, ஆனாலும் அவன் சொன்ன ஒடிப்போனவள் என்ற வார்த்தை அவளை பெரிதும் காயபடுத்தியது.

………………………..

சண்முகமும், முருகனும் பார்கவியின் தந்தையை பார்த்து பேச முடிவு செய்தனர். அவருக்கு நன்றாக தெரியும் ரங்கராஜனை அவரால் எதும் செய்முடியாது என்று. அதனால் தான் அவர் கவி யின் தந்தையை பார்த்து பேசலாம் என்று முடிவுக்கு வந்து இருந்தார்.

இந்த நேரத்தில் கவி தன் வீட்டில் வந்து பேசும்படி ரங்கராஜனிடம் பேசிக்கொண்டு இருந்தாள். 

அவனும் நாளை வருவதாக கூற சரி என்றவள் தன் அம்மாவிடம் மட்டும் அவன் வரும் விஷயத்தை கூறி இருந்தாள்.

அன்று இரவு சண்முகம் கவி தந்தையை சந்தித்து பேசினார், இங்க பாருங்க நாம பேசின கல்யாணம் இப்படி பாதியில் நின்று போய்விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் சரியா நடந்து இருந்தா, இந்த நேரம் நாம கல்யாண வேலையா பார்த்து இருக்காலம். என்ன பன்னுறது. என்றார் வருத்தமாக.

அவரும் ஏதும் சொல்லவில்லை. இப்போ எதுக்கு என்ன பார்க்க வந்து இருக்கிங்க என்றார் கவியின் தந்தை. 

ஒரு பெரு மூச்சை இழுத்துவிட்டவர். இன்று தன் வீட்டில் நடந்து எல்லாம் சொன்னார். ரங்கராஜனுக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் கட்டினால் அவளை தான் கட்டுவேன் என்று முடிவாய் அவன் அம்மாவிடம் கூறிவிட்டான்.

இவளுக்கு தன் அண்ணன் மகளை கட்டிவைத்தாள் இத்தனை நாள் பிரிந்த குடும்பம் ஒன்னாகிவிடும். அதுவும் இல்லாமல் தன் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் விட அவளுக்கு விருப்பம் இல்லை. 

ஆனா பாருங்க நம்ம ஆசைக்கு இன்னிக்கு பன்னிட்டு பின்னால பிள்ளைகளுக்கு பிடிக்காம போய்ட்ட என் பன்றது, அதனால் எனக்கு மகன் விருப்பம் தான் முக்கியம். அதனால் உங்க மகள கல்யாணத்துக்கு கேட்க வந்து இருக்கிறேன். என்னடா இப்படி இந்த நேரத்தில் வந்து பேசுறேன் நினைக்காம. பிள்ளைகள் வாழ்க்கையை நினைத்து நீங்க ஒத்துக்கனும். என்றார் சண்முகம் அவரின் அந்த பேச்சில் முகம் மலர்ந்தவர், அடுத்து அவர் கூறியதில் அப்படியே அமைதியாகிவிட்டார்.

என்ன மகன் வாழ்கைய பார்த்தா என் பொண்டாட்டி என்கிட்ட கோவிச்சுகுவா. குடும்ப சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போய்டும். இத்தனை நாள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளிய வரனும். இதை எல்லாம் நினைத்து தான் மனசு வருத்தம்.

என்றவர் பேச்சில் அவர் முகம் சுருங்கிவிட, மேலும் தொடர்ந்தார் சண்முகம், என் மகன் தனியாக தொழில் நடந்தி இதை விட சொத்து பத்து வைத்து இருக்கிறான், அதற்கு முன் இது எல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும். நாளைக்கு ஒரு வேளை இந்த பெண்ணு அந்த தொழில் எல்லாம் எங்க பணத்தில் வந்துதான் சொல்லாம இருந்தா சரி என்றார்.

இதை கேட்டதும் அவரின் முகம் இன்னும் துவண்டது. 

உடனே முருகன் அய்யா சிலர் விட்டுக்கு வந்தா அந்த வீடு மேலும் சொழிக்கும், ஆனா சில சமயம் எல்லாத்தையும் துடைத்து எடுத்து போறதும் உண்டு. என்றான் கவலையாக.

அவன் அப்படி பேசியதும் அவர் முகம் கருத்துபோனது. அவர் கோவமாக வாய் திறக்கும் முன். சண்முகம், முருகனை அறைந்து இருந்தார், என்னடா பேசுற அப்போ அந்த பெண்ணு நம்மவீட்டுக்கு வந்தா எல்லாம் போய்டும் சொல்றியா?????

எது எப்படி இருந்தாலும் ரங்கராஜன் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் இந்த கல்யாணம் நடந்தே தீரும் என்றார் சண்முகம்.

ஆனால் கவியின் தந்தை மனதில் மகளை பற்றி இப்படி பேசுபவர்கள் நாளை ஏதாவது நடந்தால் அதை மகள் மேல் அல்லவா சொல்லுவார்கள் என்று மனதில் நினைத்தவர்.

சரி நான் வருகிறேன் என்றவர் விடைபெற்று சென்றுவிட.

சண்முகம் முருகனிடம் என்டா நான் சரியா பேசுனேன்னா என்றார். ஆம் ஐயா இனிமே அவர் இந்த வீட்டில் பெண் கொடுப்பார்………………

என்வர்கள் சிரித்துக்கொண்டனர். வீட்டுக்கு வந்தவர் மனைவி அமைதியாக இருப்பதை பார்த்து என்னமா என்றார்.

ஏங்க ராஜன் சொன்னது, அவனை விட எனக்கு ஏதும் முக்கியம் இல்லைங்க, அவன் விருப்படியே அந்த பெண்ணை முடித்துவிடாலம்மா? என்றார்.

அவருக்கு தெரியும் மனைவி இப்படி தான் முடிவு எடுப்பாள் என்று அதனால் தான் இன்று அவர் கவியின் அப்பாவிடம் பேசியது.

அப்போ நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் கல்யாணம் பத்தி போசலாம் என்றார் கலா சரி என்றவர், இதை இப்போது ராஜன்னிடம் சொல்ல வேண்டாம், நாளை எல்லாம் முடிந்த பின் சொல்லிக்கொள்ளாம் என்று முடிவெடுத்தனர்.

ரங்கராஜன் நாளை கவி வீட்டிக்கு போவது பற்றி யோசித்தபடி படுத்து இருந்தான்.

நாளை யார் முதலில் கவி வீட்டிற்க்கு செல்வார்கள்………….

யார் எண்ணம் ஈடேறும்……………………

 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement