Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 11

காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு இருப்பதை போல் இருந்து அவருக்கு. தன் மகன் திருமணம் இப்படி…………………..

என் மகன் திருமணத்தில் தடங்கள் ஏற்படுவதை அவரால் பெறுத்துக்கொள்ள முடியவில்லை. இது வரை எல்லாமே தன் இஷ்டப்படி நடத்தியவரால் இன்று, தன் மகன் வாழ்வில் நடப்பவற்றை பார்த்து எதும் செய்யமுடியவில்லையே என்ற எண்ணமே அவரை பெரும் மன உளைச்சலில் கொண்டு விட்டு இருந்து. 

அதனால் தான் மகனை காலையில் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துவர சொல்லி இருந்தார். ஆனால் மகன் இப்படி ஒர் இடியை அவர் தலையில் இறக்குவான் என்று தெரிந்து இருந்தால் அவர் அவனை அனுப்பி இருக்கவே மாட்டார்.

ஏற்கனவே அவனுக்கு இங்கு இருப்பதில் விருப்பம் இல்லை, அதனால் தான் அவர் அவன் திருமனத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று நினைத்து இருந்தார்.

அவன் திருமணத்தில் எந்த குழப்பமும் ஏற்படக்கூடாது என்று தான், அவர் எல்லாவற்றையும் முடித்துவிட நினைத்தார், ஆனால் இப்போது எல்லாம் தலைகீழ்……………..

மகன் வந்தவுடன் நாம் இந்த வீட்டைவிட்டு போய்விடலாம் என்று சொல்லியதிலேயே அதிர்ந்து இருந்தவர், அடுத்து அவர் வீடு தேடி வந்த செய்தியில் மேலும் கலங்கிதான் போனார்.

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் வந்து இருப்பதாக, முருகன் வந்து சொல்ல, வெளியில் வந்தவர் அவரை வரவேற்று என் என்று கேட்டார், கலாவின் மனதில் பெண்வீட்டில் இருந்து ஏதும் சொல்லி இருப்பார்களோ என்ற எண்ணம். 

ஆனால் வந்தவரோ, கலாவின் மீதும், அவரின் குடும்பத்தின் மீதும் ரங்கநாயகி பஞ்சாயத்தில் புகார் அளித்து இருப்பதாக கூற……… திகைத்துவிட்டார்.

மேலும் வந்தவர், இங்க பாருங்க ம்மா…. உங்க அண்ணன் மகள் ரங்கநாயகி, இந்த சொத்துகள் எல்லாம் சட்டபடி அங்களுக்கு உரிமையானது என்றும், அதை நீங்களும் உங்கள் குடும்பமும் அனுபவித்து வருவதாகவும், இது எல்லாவற்றையும் இன்று மூன்று நாட்களுக்குள் அவர்களிடம் சரியான கணக்கு வழக்குடன் ஒப்படைக்கவேண்டும். என்றும், தவிறினால் சட்டபடியான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் புகார் சொல்லி இருக்காங்க ம்மா….

உங்களுக்கு தெரியாது ஏதும் இல்லை. அதான் உங்கிட்ட சொல்லிட்டு போகலாம் வந்தேன்……………… பாத்துக்கோங்க………………… என்றவர் சென்றுவிட……………. அதோ இடத்தில் அப்படியே அமர்ந்து விட்டார் கலா. வாழ்வில் முதல் முறை  அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

எத்தனையோ பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக சமாளித்தவர், தன் குடும்பத்தையே தன் இஷ்டப்படி ஆட்டி வைத்தவர், இன்று ஒரு சிறு பெண் முன் ஏதும் செய்முடியாது நிற்பதா?

அப்படியே இதில் ஏதாவது செய்யலாம் என்றாலும் மகன் இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவு தருவது எந்த அளவு சாத்தியம்!?!!

எப்படியானாலும் கணவன் தன் பக்கம் தான் இருப்பார்.  என்று நினைத்தவர், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் முழுகினார். ஆனால் அவர் அப்போது அறிவில்லை கணவனும் இந்த விஷயத்தில் தனக்கு எதிராகதான் செயல்படப்போகிறார் என்று!!!!!!!!!!!!!

அறைக்குள் இருந்தாலும் வள்ளிக்கும் இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து தான் இருந்து, ஆனால் அவரால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரங்கநாயகி கண்டிப்பாக தான் சொல்லவதை கேட்கமாட்டாள். இப்படியே போனால் தன் பிள்ளையில் எதிர்காலம் என்னவாகும்!?!?!

எதை நினைத்து அவர் ரங்கநாயகியை இங்கு வரவழைத்தாரோ…………………… இப்போது நடப்பது எல்லாம் முற்றிலும் அதற்கு எதிராக நடக்கிறது……………………….. என்பது அவரின் கவலையாக இருந்து.

இது எல்லாவற்றிக்கும் காரணமானவளோ குழம்பிய குட்டையில் எந்த மீன் கிடைக்கும் என்று காத்து இருந்தாள். ஆம் அவள் வேண்டும் என்றே தான் இந்த பிரச்சனைகளை கிளப்பி இருந்தாள். அவளுக்கு இந்த சொத்துக்கள் மேல் எப்போதும் விருப்பம் இருந்து இல்லை. அவ்வளவு ஏன் அவள் இங்கு வரும் போது கூட, எவ்வளவு விரைவாக இங்கு இருந்து சென்றுவிட முடியுமோ அவ்வளவு விரைவாக திரும்பி விட வேண்டும் என்ற முடிவோடு தான் வந்து இருந்தாள். 

ஆனால் இங்கு நடப்பவற்றை கேட்டபின்? அவளுக்கு உண்மை வேண்டி இருந்து!!!!!!!!!!!!!!!!!!! ஆம் உண்மை தான்???

அன்று அவள் சென்னையில் வேலையில் இருந்த போது, ஊரில் இருந்து அவசர அழைப்பு அதுவும் இந்த முறை சண்முகம் அழைத்து இருந்தார். இத்தனை வருடத்தில் அவர் அவளிடம் ஒரு முறை கூட பேசியது இல்லை, அவ்வளவு ஏன் அவள் அந்த வீட்டில் இருக்கும் போது அவளை ஒர் பார்வை பார்த்து செல்வார் அவ்வளவே, ஆனால் அன்று அவர் அழைத்த போது, வள்ளி ரொம்ப சீரியஸ் கடைசியாக அவள் உன்னை பார்க்க விரும்புகிறாள் என்று அவர் கூறியதை ஏனோ அவளால் மறுக்க முடியவில்லை. 

அதுவும் கடைசி ஆசை என்ற வார்த்தை அவளை மொத்தமாக கடந்த காலத்திற்க்கு அழைத்து சென்று இருந்து. இதோ போல் தான் அவளின் பாட்டியின் கடைசி ஆசை என்று அவள் திருமணம் நடந்து. அதன் பின் நடந்தை எல்லாம் அவள் கண்முன், மறுபடியும் வந்து போக அப்படி ஒர் நிகழ்வு மீண்டும் என் வாழ்வில் வேண்டாம். என்று நினைத்தவள், அந்த அழைப்பை தவிர்த்துவிடவே நினைத்தாள். ஆனால் நேரம் ஆக ஆக மனம் கேட்கவில்லை……….. அதனால் தான் ஊருக்கு வந்து இருந்தாள்.

ஊருக்கு வரும் போது கூட அவள் மனதில் எந்த எண்ணமும் இல்லை, தன்னை அவனுடன் இனைந்து வாழ வற்புறுத்துவார்கள் என்று அவள் எதிர்பார்தாள், அப்படி ஏதாவது நடந்தால் அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற எண்ணத்துடன் தான் வந்து இருந்தாள்.

ஆனால் அவள் நினைத்தற்க்கு மாறாக வள்ளி அப்படி ஒன்றும் மோசமான நிலையில் இல்லை. அப்படி இருக்கும் போது தன்னை ஏன் இத்தனை அவசரமாக இங்கு அழைக்க வேண்டும்? அந்த கோவத்தில் தான் அவள் அப்படி ஓர் கேள்வியை அவரை பார்த்து கேட்டது.

அவளுக்கு நன்கு தெரியும் அவள் வரவு அங்கு யாருக்கும் பிடிக்கவில்லை என்று. அடுத்து அவளுங்கு அங்கு இருந்து எப்போது கிளம்புவோம் என்ற மனநிலையே இருந்து. பகலில் கார் ஒட்டி வந்த களைப்பில் தூங்கிவிட்டவள், இரவில் துக்கம் இன்றி தவித்தாள். ஏனோ அந்த இடம் அவளுக்கு மூச்சு அடைத்து. அதுவும் இல்லாமல் முருகன் மூலம் நாளை ரங்கராஜனுக்கு நிச்சயதார்த்தம் என்று அறிந்தவள் மேலும் நொந்துப்போனால். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை அவளுக்கு. 

அவள் மனது என்ன நினைக்கிறது? என்ன எதிர் பார்க்கிறது? தனக்கு ஏதும் வேண்டாம் என்று உதறிவிட்டு போனவள் அவள் தான். அதன் பின் வாழ்க்கை அவளுக்கு போராட்டம் தான். எல்லாவற்றையும் கடந்து இன்று நல்ல நிலையில் இருந்தாலும், அவ்வபோது மனதில் ஒரத்தில் எட்டி பார்க்கும் தனிமை உணர்வு, அவளை பெரிதும் துவண்டு போக செய்யும்.

அடுத்து என்ன செய்வது என்ற என்ற எண்ணத்தில் அறையில் இருந்து மாடிக்கு சென்றவள் மாடியில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள். அப்போது அவர்கள் பேசியது அவள் காதில் விழுந்து.

என்ன முருகா நாயகி கிட்ட சென்னியா என்றார் அவர், ஆமாங்க ஐயா சாயந்திரம் சின்னம்மாகிட்ட நாளைக்கு சின்ன ஐயாக்கு நிச்சயம் சொன்னேன். ஒரு நிமிஷம் அம்மா முகம் மாறிச்சு, அப்புறம் ஏதும் சொல்லலை.

ம்மம்மம………….. சரி பார்க்கலாம், நாளைக்கு என்ன நடக்கும்னு. அப்படி நாம எதிர் பார்த்த படி நாயகிட்ட இருந்து எந்த எதிர்ப்பும் வரலைனா. நம்ம பேசினபடி எல்லாம் நடக்கனும் முருகா என்றார் அவர்……….

அதை நீங்க சொல்லனும்மா? ஐயா… எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன் நாளைக்கு சின்னமா இந்த நிச்சயத்தை நிறுத்தலைனா, நம்ம போட்ட திட்ட படி நிறுத்திடலாம் என்றான் முருகன்?!?!

என்ன நிச்சயத்தை நிறுத்த போறாங்களா? என்று அதிர்தாள் ரங்கநாயகி……….. 

அதிலும் அதை நிறுத்த போவதாக சொல்வது சண்முகம்!!!!!!!!!!

ஆனால் ஏன்?

எந்த அப்பாவாது மகனின் திருமணத்தை நிறுத்தவாரா??

என்று அதிர்ந்து இருந்தாவள்……………..

அடுத்து அவர்கள் பேசியதை கேட்டதும் மயக்கம் வராத குறைதான்.

இந்த சொத்து, இந்த வீடு எல்லாம் என் பெண்!!!!!!!!!!!!! ரங்கநாயகிக்கு சொந்தமானது. அதை யார் கைக்கும் போகவிடமாட்டேன் இத்தனை நாள் நான் அமைதியா இருந்து இந்த நாளுக்கா தான்.

அவளை இங்க வர வரவழைத்தும் இதுக்கு தான். அவ இந்த வீட்டில் வாழனும். அதுக்கு தடையா யார் வந்தாலும் அவங்களை இல்லாம பன்னிடுவேன். என்று கூறியவர் சாட்சாத் சண்முகம் தான்.

அவர் சென்னதை எல்லாம் கேட்ட ரங்கநாயகிக்கு தான் என்ன என்று புரியவில்லை. தன்னை சுற்றி என்ன நடக்கிறது. இவர் என்ன சொல்கிறார், என்னை இவர் மகள் என்கிறார். என்னை இங்கு வரவழைத்தது நாளை நடக்க இருக்கும் நிச்சயத்தை நிறுத்த தானா?

இவர் சென்னது போல் அம்மா சிரியஸ் இல்லை. ஆனால் அவர் போனில் சென்னது அவர் இன்று வரை கூட இருக்கமாட்டார் என்பது போல் தான் கூறினார்,  ஆனால் அவரை பார்த்த போது அப்படி ஏதும் இல்லை என்று மனம் ஆறுதல் அடைந்தாலும், இத்தனை நாள் தன்னை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்ற எண்ணம் வந்தது அவளுக்கு, அதனால் தான் வந்தவுடன் அப்படி கேட்டு இருந்தாள்.

சண்முகம் பேசுவதை கேட்டவள், அது வரை அவர் அவள் வாழ்வில் நடந்துக்கொண்டவற்றை எண்ணிப்பார்த்தாள். எப்போதும் அவர் அவளை பாசமாக பார்த்து இல்லை. அவ்வளவு ஏன் அன்று அவ்வளவு பிரச்சனை நடந்து அவள் இந்த ஊரைவிட்டு போகும் நிலை வந்த போதுகூட அவர் ஏதும் எதிர் வினை ஆற்றவில்லை. தன் மகள் என்றால் அப்படி இருக்க முடியுமா??

நான் இவர் மகள் என்றாள் கலா என் அம்மாவா?

இல்லை வேறு யாரேவா?

ஒரு வேளை என் அம்மா வேறாக இருந்து, என்னை தெரியாமல் வளர்த்து வருகிறரா?

இது எல்லாம் முருகனுக்கு தெரியும் என்றாள்………… என் அம்மாவை பற்றியும் அவனுக்கு தெரியுமா?

ஆனால் கண்டிப்பாக அவன் வாயில் இருந்து ஒர் வார்த்தை கூட வாங்க முடியாது. எனக்கு இந்த வீட்டில் நடந்து எல்லாவற்றையும் பார்த்தும் கூட இருவரும் ஏதும் பேவில்லை. இப்போதா பேச போகிறார்கள்………

நினைக்க நினைக்க அவளுக்கு தலை வலித்து. கண்ணுக்கு தெரியாத நூல் எங்கே இருப்பது போல் இருந்து. தன்னை சுற்றி பின்னப்படும் இந்த வலை எப்போது யாரால் பின்னப்பட்டது. இதன் பின் யார் எல்லாம் இருக்கிறார்கள்.

அப்போது ரங்கராஜன் இவர் மகன் இல்லையா?

அவன் யார்?

இந்த எல்லா கேள்விக்கும் அவளுக்கு விடை தெரியவேண்டி இருந்து. 

இத்தனை நாள் அவளை வைத்து விளையாடியவர்களை கண்டுபிடிக்க நினைத்தவள், அந்த நொடி முதல் அந்த ஆட்டத்தை அவள் ஆடவிரும்பினால்.

அதானல் தான் அடுத்த நாள் விசேஷத்தில் அந்த பெரியவர் பேசியதை கொண்டு பிரச்சனையை கிளப்பினால். அந்த பிரச்சனை நடக்கும் போது அவள் அங்கு இருந்த எல்லோர் முகத்தையும் தான் பார்த்து இருந்தாள். இதில் யாருக்கு எல்லாம் மகிழ்ச்சி, யார் எல்லாம் கவலைபடுகிறார்கள். என்றே அவள் பார்வை இருந்து.

அப்படி அவள் பார்வை வட்டத்தில் சிக்கியவர்கள் சண்முகம், முருகன், சுந்திரவடிவு. அதை குறித்துக்கொண்டவள். அடுத்து என்ன செய்வது என்று முடிவு எடுத்தாள்.   

இப்படி அவள் அடுத்த என்ன செய்வது என்று அவள் மனதில் திட்டங்கள் வகுக்க…

இங்கு சண்முகமோ எல்லாம் கேட்டு இருந்தவர் முகத்தில் புன்னகை அரும்பி இருந்து. எல்லாம் அவர் நினைத்து போல் அல்லவா நடக்கிறது.

இதை வைத்து அவள் தன் மகளை இந்த வீட்டின் மருமகளாக கொண்டு வர திட்ட மிட்டார். இப்போது கலாவை எளிதாக அவர் வழிக்கு கொண்டு வந்துவிடுவார். இந்த வீடு கலாவின் பலவீனம் என்பது அவருக்கு தெரியும். இதற்காக அவர் என்ன வேண்டும்மானலும் செய்வார் என்றும் அவருக்கு தெரியும். அதனால் அதை கொண்டே காய் நகர்த்த முடிவு செய்தவர்.

சிறிது நேரம் கடந்து கலாவிடம் வந்தவர், அவள் தோள் மேல் கைவைத்து அவளை அறைக்கு அழைத்து வந்தார். 

சிறிது தண்ணீர் கொடுத்தவர், அவளிடம் பேச்சை ஆரம்பித்தார்…..

இங்க பார் கலா………………..

ஆரம்பத்தில் இருந்து இந்த பிரச்சனைக்கு நீ தான் காரணம்……………….

என்றவரை அதிர்ந்து பார்த்தாள் கலா………….

இத்தனை நாள் தான் என்ன செய்தாலும் தனக்கு துனை நின்ற கணவனா இப்போது இப்படி பேசுவது? என்று பார்த்து இருந்தார்.

அதை கவணிக்காமல் சண்முகம் மேலும் தொடர்ந்தார்………..

நீ ரங்கநாயகியை வள்ளி பெண்ணா பார்க்காம…………..

இந்த வீட்டு பெண்ணா பார்…………

அவ அந்த வீட்டு வாரிசு உங்க வீட்டு வாரிசு…………

உன் உடம்பில் ஒடும் இரத்தம் தான் அவள் உடம்பிலும் ஒடுது. அப்படி நீ நினைத்தால் இந்த பிரச்சனை ஒன்னும்மே இல்லை.

இந்த வீடு அது என்னைக்கும் உன்னை விட்டு போகாது என்றவர்…..

நல்லா யோசித்து முடிவு எடு என்று கூறியவர்………..

வெளியேறினார்………….

அவருக்கு தெரியாதா என்ன? எப்படி பேசினால், எதை முன் நிறுத்தி பேசினால் கலா தன் வழிக்கு வருவாள் என்று………………..

இந்த சதுரங்க ஆட்டத்தில் அடுத்து யார் எந்த காயை நகர்த்துவார்கள்…………  

 

 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement