Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 09

அன்று ரங்கநாயகியின் இறுதி காரியங்கள் முடிந்தபிறகு, எல்லோரும் ஆளுக்கு ஒரு முலையில் முடங்கி இருக்க, மகளை காணாமல் தேடிய வள்ளி, அவள் பின்கட்டில் தனியே அமர்ந்து இருப்பதை பார்த்து அங்கு சென்றவள்.

எங்கோ வெறித்து பார்த்த படி இருந்தவளை, தோள் தொட்டு உசுப்பினார், இந்த நேரத்தில் இங்க என்ன பன்ற, உள்ள வா என்றவள் திரும்பி நடக்க, மகளிடம் எந்த அசைவும் இல்லை என்று உனர்ந்து,

பெருமூச்சுடன் அவள் அருகில் அமர்ந்த வள்ளி, அவளை தன்னை நேக்கி திருப்ப, ஏன் மா இப்படி பன்ன என்றாள் கண்ணில் வழியும் நீருடன்.

நீ இதை நடக்கவிடாம பன்னி இருக்கலாம் இல்ல? என்றால் தன் கழுத்தில் இருக்கும் தாலியை காட்டி.

எனக்கு நிறைய படிக்கனும்மா……..

நாளைக்கு பக்கத்து ஊர்ல இருக்க பயிற்சி வகுப்புக்கு சிவா ஸார் கூட்டி போறேன் சென்னார். அங்கு படிச்ச கண்டிப்பா டாக்டர் படிப்பு படிக்க வைக்கற தேர்வில் செலக்ட் ஆகிடுவேன் சென்னார்.

இப்போ இப்படி……………………… நான் படிக்கனும்மா……….. என்று கதற துவங்கி இருந்தாள்.

இங்க பார் டா…. இந்த வீட்டில் உங்க அத்தை என்ன சொல்லறாங்களோ அது தான் இதுவரைக்கும் நடந்து இருக்கு. இது வரைக்குமே அப்படி தான். அப்போ இனிமே எல்லாம் அவங்க இஷ்டம் தான்.

எனக்கு தெரிந்து உங்க அத்தை உன்னை படிக்க விடமாட்டாங்க, இனிமே இது தான் உன் வாழ்க்கை, இங்க தான் உனக்கு எல்லாம் என்றாள் அவளை அனைத்துக்கொண்டு.

இல்லை மா இல்ல,  என்னால அப்படி முடியாது. இந்த வயதில் திருமணம் செய்வது எல்லாம் செல்லாது, அப்படி தான் எங்க மிஸ் சொல்லி கொடுத்து இருக்காங்க, 

இங்க வேண்டாம் மா இந்த ஊர் வேண்டாம், இங்க எனக்கு யாரும் இல்லை, யாரும் என கூட பேச கூட மாட்டாங்க. நாம வேற ஊருக்கு போகலாம், தாத்தா கிட்ட போலாம் அங்க போய் அங்க இருக்க பள்ளிகூடத்துல படிக்கிறேன்.

எனக்கு இந்த ஊர் வேண்டாம், இந்த வீடு வேண்டாம், இந்த கல்யாணமும் வேண்டாம்.

வா மா போகலாம் என்றால் வள்ளியின் கையை பிடித்தபடி. 

இல்லடா அது எல்லாம் முடியாது நான் இந்த வீட்ட விட்டு வரமுடியாது. உனக்கு அது எல்லாம் சொன்னா புரியாது.

நீ நினைக்கறது, ஆசைபடுவது எல்லாம் இந்த வீட்டில் இருக்கும் வரை நடக்காது?!?!

வள்ளி எந்த அர்த்த்தில் அதை சொன்னாறோ அது அவள் மனதில் ஆழபதிந்து போனது. இந்த வீட்டில் இருக்கும் வரை தன் கனவுகள் கைவராது என்று உணர்ந்தாள்.

அதன் பின் அன்று இரவு எல்லோரும் உண்டு உறங்கியபின் தன் ஆசிரியரை பார்க்க சென்றவள் தன் நிலையை விளக்கி சொன்னால், எப்படியாவது தான் படிக்க வேண்டும் என்றும். 

தன்னை இந்த ஊரைவிட்டு கூட்டிப்போகும்மாறும் அவரிடம் வேண்டினாள்.

அவர் அதற்கு சாத்தியம் இல்லை என்றும், அப்படி செய்தால் பிரச்சனைதான் பெரியதாகும் என்றும் கூறியவர், சில மாதங்கள் போனதும், தான் வந்து அவள் விட்டில் பேசுவதாகவும் கூறினார்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த அந்த நேரத்தில் வீட்டின் வெளியில் ஆட்களின் பேச்சுக்குரல்கள் கேட்டன.

இருவரும் வெளியில் வந்து பார்த்த போது அதிர்ந்து போயினர். அங்கு அவள் குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் இருத்தனர்.

இருவருக்கும் பேச வாய்பே தராமல் கலாவே பேச துவங்கினார். வள்ளியின் மகள் தன் மகனை திருமணம் செய்துவிட்டு, அவனுடன் வாழவிருப்பம் இல்லாமல், இந்த வாத்தியாருடன் ஊரைவிட்டு போக இங்கு வந்து இருப்பதாக கூறியவர், அவள் கையில் வைத்து இருந்த பையும் காட்டினார்.

உண்மையில் அதில் அவள் சான்றிதழ்கள் இருந்தன. ஆனால் அதை பார்கவோ, அதை பற்றி அவளிடம் கேட்கவோ இயலாமல் அடுத்து அடுத்த கலாவின் பேச்சில் எல்லோரும் அதிர்ந்து நின்று இருந்தனர்.

அவள் சற்றும் நேரம் முன் இந்த செய்தியை சொல்லி அழைத்த போது ஊர் மக்கள் நம்பாமல் அவள் கூட இங்கு வர, இருக்கும் நிலை கண்டு என்ன பேச என்று யாருக்கும் தெரியவில்லை.

பேச வேண்டிய வள்ளியோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தாள்.

சிவா அதிர்ந்தது அந்த நிமிடம் மட்டும் தான், பின் ஊர் மக்களிடம், என்ன நடந்து என்று கூற, அதை கேட்ட கலா மேலும் கத்த ஆரம்பித்தார். இந்த வயதிலேயே இப்படி படி தாண்டி வந்து இருக்கவ. நாளைக்கு படிக்க அனுப்பினா என்ன வேனா செய்வா……….

ஏன் என் அம்மா நடத்தின கல்யாணத்தை கூட பிடிக்கலனு சொல்லி யார்கூடவும் வந்து நிற்பா. அதனால் படிக்க எல்லாம் அனுப்ப முடியாது.

ஏற்கனவே வள்ளி சென்ன அந்த வார்த்தைகள், அத்தையை மீறி ஏதும் பன்ன முடியாது என்றவை அவள் மனதில் மீண்டும் வந்து போனது. அந்த பேச்சு தான் அவளை இந்த நேரத்தில் இங்கு வந்து நிறுத்தி இருந்து. இதில் மறுபடியும் கலா அதையே சொல்லவும்.தான் படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த ஊரில் இருக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தவள்.

யாரும் எதிர் பார்க்காத?!  அந்த வார்த்தையை சொன்னால். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம், இந்த ஊர் வேண்டாம். எனக்கு படிக்கனும் அதனால நான் சிவா ஸார் கூட போகவிரும்புறேன்.

என்னைய யாரும் தடுத்தா, நான் போலீஸ்ல புகார் கொடுப்போன் என்றாள். தன் கல்வி கனவு கலைந்து விடுமோ என்ற வேகத்தில் அவள் விட்ட வார்த்தைகள், அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட கலா அவள் ஊரைவிட்டு போனால், தாலியை கழற்றி தந்துவிட வேண்டும். இந்த திருமணத்தை ஊரா் முன் முறித்துவிட வேண்டும், என்றும், பஞ்சாயத்தில் பேசினார். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ரங்கநாயகி, தாலியை கழற்றிக்கொத்தாள். தனக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் ஊரார் முன் வாக்கு கொடுத்தாள்.

இது எதற்க்கும் வள்ளி வாய் திறக்கவில்லை, எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவரை போலவே சண்முகம் மற்றும் சுந்தரவடிவும் கூட. ஆனால் ரங்கராஜனுக்கு, இது பெரும் அவமானமாக இருந்து. என்ன இருந்தாலும் தன்னை ஒரு பெண் திருமணம் செய்து பின் பிடிக்கவில்லை என்று தாலியை கழட்டி கொடுப்பதா, என்பது அவனுக்கு பெரும் மணகாயத்தை ஏற்படுத்தியது.

அது அவனுக்கும் பிடிக்காத திருமணம் என்று அந்த நேரத்தில் மறந்து போனான்.

இங்கு நடக்கும் எல்லாவற்றையும் சிவா பார்த்து இருந்தாலும் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை. அவள் வீட்டாரிடம் பேசி அவளை அங்கு விட்டு செல்லவதால் எந்த நன்மையும் அந்த பெண்ணுக்கு ஏற்பட போவது இல்லை என்பதை அங்க நடப்பதை வைத்து அறிந்துக்கொண்டான்.

மேலும் நடந்த எதற்க்கும் வள்ளி வாய் திறந்து ஏதும் பேசவில்லை, என்பதே எதிர் காலத்தில் அவள் நிலை அந்த வீட்டில் எப்படி இருக்கும் என்று சொல்லியது. 

அவள் கல்வி கனவுகளை அவன் அறிவான். அந்த நேரத்தில் அவளுக்கு உறுதுனையாக இருக்க விரும்பியவன். அவளுக்கு துனை நின்றான்.

அந்த ஊர்மக்களிடம் அவளை தன் பெறுப்பில் எடுத்துக்கொள்ளவதாகவும், அவளுக்கு மேல படிக்க வழிகாட்டுவதாகவும் கூறியவன், அதே சமயத்தில் இதனால் எனக்கு எந்த சட்ட பிரச்சனையும் வர நான் விரும்பவில்லை, அதனால்  என்றவன் சற்று நிறுத்தி, வள்ளியின் அருகில் சென்றான், இங்கு நடப்பதை எல்லாம் பார்த்தும் நீங்க இப்படி அமைதிய இருக்கறது சரியில்லை, ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது, ரங்கநாயகியோட படிக்கற ஆசை அதை என்னால் நிறைவேற்ற முடியும். அதுக்கு நீங்க எனக்கு பன்ன வேண்டியது ஒன்னுதான். 

ரங்கநாயகிக்கு நான் தான் கார்டியன் சட்டபூர்வமா எழுதி கொடுங்க அது போதும் என்றான், அதே சமயத்தில்  அவள் படிப்புக்கு ஆகும் செலவுகள் அனைத்தும் இந்த குடும்பம் ஏற்றுக்கொள்ளும் என்றும் எழுதி கை யெழுத்து இட்டு தருமாறு கேட்டான்.

கலாவிற்க்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும். எல்லாவற்றிக்கும் அவள் தான் வாரிசு, இப்போதைக்கு அவள் இந்த ஊரைவிட்டு போனால் போதும் என்று தோன்றியது. அதனால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

இதை கேட்ட ஊர் பெரியவர்கள் வள்ளியிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர், சிறிது நேரம் அமைதியாக இருந்த வள்ளி அங்கு இருந்த சுந்தரவடிவு, சண்முகம் மற்றும் கலாவின் முகங்களை பார்த்தவள் பின்  அவ்வாறே எழுதி  தர சம்மதித்தாள்.. அவள் அந்த ஊரைவிட்டு தன் ஆசிரியர் உடன் தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை நேக்கி நகர்ந்து இருந்தாள்.

விட்டுக்கு வந்த வள்ளி அதன் பின் யாருடனும் அவ்வளவாக பேசவில்லை, தான் உன்டு தன் வேலை உன்டு என்று இருந்து கொண்டார்.

கலா தான் நினைத்து அனைத்தும் இத்தனை சீக்கரம் நடக்கும் என்று எண்ணி இராதவர், மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம் அவள் வள்ளியும், ரங்கநாயகியும் பின்கட்டில் பேசிக்கொண்டு இருந்தை அந்த பக்கம் வந்த போது கேட்டாள், அதன் பின் அவள் ரங்கநாயகியை கண் காணித்துக்கொண்டு இருந்தார். 

அவள் சிவா வீட்டுக்கு சென்றுவுடன் அங்கு நடப்பதை அறிந்தவர், அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.

மகனை இந்த திருமணத்தில் இருந்து விடுவித்து இருந்தார்.

அடுத்து வந்த நாட்களில் சொத்துகள் எல்லாம் கலாதரனை அடுத்து அவன் வாரிசுக்கு தான் என்றாலும், இப்போது அவை எல்லாம் வள்ளியின் கட்டுபாட்டில் இருந்து. அது எல்லாம் பெயர் அளவில் இருக்க எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தாள் கலா. வள்ளி எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது இன்னும் கலாவிற்க்கு வசதியாக இருந்து. மகனை படிக்க வெளி ஊருக்கு அனுப்பினார். 

சென்னை சென்ற சிவா மற்றும் ரங்கநாயகி, அங்கு இருக்கும் அரசு உதவி பெரும் பள்ளியில் சேர்த்தான் சிவா, அவள் எடுத்த மதிப்பெண் கண்டு அவளுக்கு கட்டணம் இல்லாமல் சீட் கிடைக்க. அங்கு அரசு விடுதியில் தங்கி கொண்டாள்.

அதன் பின் அவள் யாரிடமும் தெடர்புக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் வள்ளி அவளிடம் பேச முயசித்தார், ஆனால் அவள் பேசவில்லை. தனக்காக தாய் அந்த ஊரைவிட்டு வரவில்லை. தனக்காக அன்று ஏதும் பேசவில்லை என்பது எல்லாம் அவள் மனதில் ஆறாத வடுவாக இருந்து.

அதன் பின் சிவா வள்ளியுடன் அடிக்கடி தொடர்புக்கொண்டு அவள் படிப்பு பற்றி கூறுவான், வள்ளியும் கேட்டுக்கொள்ளவாள். இப்படி இரு வருடங்கள் ஒடிவிட, அவள் 12ஆம் வகுப்பு முடித்து அடுத்து மருத்தும் சேர நிறைய பனம் வேண்டி இருந்து, ஆனால் அவள் வீட்டில் இருந்து எந்த பதிலும் இல்லை. 

ரங்கநாயகி வள்ளியை தொடர்புக்கொண்டு கேட்கவும், அவள் நீ இங்கேயே வந்துவிடு, இது எல்லாம் உன்னுடையது தான் என்றாள். அதற்கு அவள் மறுத்துவிட அதன் பின் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.  அதனாலேயே அவள் தன் மருத்துவ கனவை கைவிட்டவள், பிகாம் படித்தவள், பகுதி நேரமாக சில அலுவலகங்களில் கணக்குகளை பார்த்தாள், அதானல் அப்போதே பங்கு சந்தை பற்றி அதிகம் அறிந்துக்கொண்டாள். அதில் முதலிடு செய்வது பற்றிய நுனுக்கங்களை கற்று தேர்ந்தாள் பின் சட்டம் படித்தாள். அதன் பின் அவளுக்கு எல்லாம்மே வெற்றி தான்.

இங்கு ரங்கராஜன் கல்லூரி படிப்பு வரை வெளியூரில் படித்தவன். தன் ஊருக்கு திரும்பி இருந்தான்.

சொத்துக்கள் எல்லாம் இன்னும் பெயர் அளவில் வள்ளியிடம் இருந்தாலும் எல்லாம முடுவும் கலா தான் எடுத்தார்.

எல்லாவற்றயும் தன் மகன், தன் வாரிசு தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்த கலா எல்லாவற்றயும் செய்து முடித்து இருந்தார்.

அவர் எண்ண படி எல்லாம் நடந்தும் இருந்து. மகனுக்கு திருமணம் முடிக்க நினைத்தவர். அவர் சொல்படி நடக்கும் குடும்பம் வேண்டும் என்றும், அதே சமயத்தில் நடந்தவைகள் எல்லாம் அவன் வாழ்வை பாதிக்க கூடாது என்றும் நினைத்தார். அதனால் தான் அவர் தேர்ந்து எடுத்த பெணு பார்கவி. செல்வநிலையில் தங்களுக்கு இனை இல்லை என்றாலும். படித்த பெண் தன் மகனுக்கு பொருத்தமானவள் என்று நினைத்து அவளை தேர்வு செய்தார்.

அவன் திருமணத்திற்க்கு முன் சொத்துகளை முறையாக அவனுக்கு மாற்றிவிட நினைத்தவர், வள்ளி முலம் ரங்கநாயகியை ஊருக்கு அழைத்து இருந்தாள்.

அங்கு தான் அவள் கணக்கு தவறாகி போனது, 11 வருடங்களுக்கு முன் ஊரைவிட்டு போனவள், இப்போதும் அதே போல் தன் பேசும் பேச்சால் எல்லாவற்றையும் விட்டு விட்டு போய்விடுவாள் என்று அவள் நினைத்தற்க்கு மாறாக அவள் நடவடிக்கை இருந்து.

அவள் முதல் நாள் வந்த போது வள்ளியை பார்த்து கேட்ட கேள்வியில் ஆடி போய் இருந்தவர். அடுத்த நாள் அவள் செய்த எல்லாவற்றையும் பார்த்து நடுங்கி இருந்தார்.

இப்போது கூட மனது வாழ்வு என்னவாகும், இந்த கல்யாணம் நல்ல படியாக முடியவேண்டும், மீண்டும் எல்லா சொத்துக்களும் தன் கீழ் வர வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்க்கு தெரியாது…………….. 

அவள் யாருக்காக இது எல்லாவற்றையும் செய்துக்கொண்டு இருக்கிறாளோ,  அந்த ரங்கராஜன் அவளின் மகனும் இல்லை?!!? அவளின் வாரிசு இல்லை ?!!? என்ற உண்மை ?

அது தெரியவரும் போது கலாவின் நேசம் என்னவாகும்…………………………     

  

 

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement