Advertisement

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 03

பாட்டி அவளிடம், இப்ப என்ன ஆச்சுடி உனக்கு என்றார். பின்ன என்ன கிழவி அந்த புள்ளயோட புருஷனுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம் சொல்றேன் அந்த பெண்ணு கல்லு மாதிரி இருக்கு என்றாள் ஆதங்கமாக……………

அவள் தலையில் இரண்டு குட்டு வைத்தவர், இது எல்லாம் உனக்கு தேவை இல்லாதா விஷயம். போய் உன் பொழப்பாரு, அதவிட்டு இப்படி நீ பேசுறது மட்டும் இங்க யார் காதுலயாவது விழுந்தது……….. என்று எச்சரித்தவர் தன் வேலையை தொடர, அதற்கு மேல் அவளும் ஏதும் போசாமல் தன் வேலையை தொடர்ந்தாள்.

அறைக்கு சென்றவள் குளித்து முடித்து ஒரு ஜீன்னும், மேல ஒரு குர்த்தியும் அனிந்துக்கொண்டவள், தன்னை தயார் படுத்திக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள். வீட்டில் இருக்கும் எல்லோரும் அவளைதான் கவணித்துக்கொண்டு இருந்தனர். காலையில் திலகா பேசியது எல்லாம் அவர்கள் காதிலும் விழுந்தாலும். அதற்கு அவளின் எதிர் வினை தான் அவர்களை குழப்பியது. இப்போது விட்டு விழாவின் போது ஏதும் பிரச்சனை செய்வாளோ என்று கூட தோன்றியது.

ஆனால் அவள் முகத்தில் இருந்து எதுவும் அவர்களால் கண்டுக்கொள்ள முடியவில்லை. தன் உணவை முடித்தவள் அங்கு இருந்த ஹால் ஷோபாவில் அமர்ந்து தன் கைபேசியை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சுந்தரவடிவு என்னடி கலா இப்படி கல்லுமாதிரி இருக்கா ஏதும் பிரச்சனை பண்ண போறா என்றார். கலாவிற்க்கும் அந்த பயம் உள்ளுற இருக்க தான் செய்தது. ஆனால் அதை அவர் காட்டிக்கொள்ளாமல். அப்படி அவ என்ன பன்னிடுவா 11 வருஷத்துக்கு முன்ன நடந்த எல்லாத்தையும் இந்த ஊர் முழுக்க எல்லாருக்கும் தெரியும். அதுவும் இல்லாம, பெண்ணுவீட்டில் எல்லாத்தையும் சொல்லிதான் கல்யாணம் ஏற்பாடு செய்து இருக்கோம்.

இவ என்ன பன்னிடுவா நானும் பார்க்கிறேன் என்றார் முகத்தை இடித்தவாரே.

ரங்கராஜன் குழப்பமான மனநிலையில் இருந்தான். இவளை இப்ப யார் வர சொன்னா, எங்கயோ கண்காணாமல் போய் தொலஞ்சா நினைச்சி நிம்மதியா இருந்தேன். இப்படி மறுபடும் வந்து என்ன குழப்பம் பன்ன போறாளோ?

அவனுக்கு பார்த்து இருக்கும் பெண் பார்கவி, தற்போது அந்த ஊரில் இவர்களுக்கு நிகரான வசதி படைத்தவர்கள். ஒர் வகையில் அவர்களுக்கு சொந்தமும் கூட, அவளின் அண்ணன் இவனுடன் ஒன்றாக படித்தவன். படிப்பு முடிந்தவுடன் அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட, அவன் குடும்ப பொருளாதாரம் சட்டென்று உயர்ந்து இருந்து.

கல்யாணம் பேசும் போது அவனுக்கு மறுக்க எந்த காரணமும் இல்லை, பார்கவியும் நல்ல அழகி அந்த ஊரில் அதிகம் படித்த பெண், என எல்லா வகையிலும் அவனுக்கும் பிடித்து இருந்து.

ஒரே ஊரில் இருந்தாலும் பெரிய சந்திப்புகள் ஏதும் இல்லை இருவருக்கும். ஆனால் இந்த இடைபட்ட நாட்களில் இருவருக்குள்ளும் கல்யாண கணவுகள் இருந்து.

நேற்றில் இருந்து அவனுக்கு தலை வேதனையாக இருந்து. அதற்காக அவன் ரங்கநயாகியை ஏற்றுக்கொள்வான என்றால் இல்லை, அவளுடன் அவனுக்கு நடந்த திருமணம் என்பது அவன் எதிர்பார்க்காத ஒன்று அதுவும் அன்று இரவே முடிந்துவிட, அதில் அவனுக்கு விடுதலை உணர்வுதான். அவள் நினைப்பு கூட அவனுக்கு அவளை பார்க்கும் வரை வரவில்லை.

அப்படி இருக்கையில் இப்போது மனதில் ஏதோ சஞ்சலம், ஏதோ நடக்க போவதாக அவன் மனம் தவித்து. ஆனால் என்ன ஆனாலும் அவளை தன் வாழ்க்கைகுள் கொண்டுவர அவன் விரும்பவில்லை.

சண்முகம் அவரின் தாய் சுந்தரவடிவும் தங்களுக்குள் யோசனையில் இருந்தனர். இந்த விஷயம் படுக்கையில் இருக்கும் வள்ளி காதுக்கும் போனது அவர் முகமும் கவலை கொண்டது.

ஆனால் இங்கு எல்லோரையும் யோசிக்க வைத்தவளோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அன்றைய நாளின் பங்கு சந்தை நிலவரத்தை அலசி ஆராய்ந்துக்கொண்டு இருந்தாள்.

அவளின் பெரும் முதலீடுகள் எல்லாம் அதில் தான். அவள் சாம்ராஜயம் அதில் தான் கட்டமைக்கபட்டு இருக்கிறது. பங்குகளை சரியான நேரத்தில் வாங்குவது மட்டும் இல்லாமல், அதை சரியான நேரத்தில் விற்றவும் தெரிந்து இருக்க வேண்டும். அதில் அவள் கரைகண்டவள் என்றே சொல்லவேண்டும்.

இப்படியே நேரம் சென்றுக்கொண்டு இருக்க நிச்சயவிழாவிற்கான உறவினர்கள் எல்லாம் வர தொடங்கி இருந்தார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டு இருக்க ரங்கராஜனும் வந்து தன் அறையில் தயார் ஆகிக்கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக பெண் வீட்டினர் எல்லாம் வந்துவிட விழா இனிதே ஆரம்பித்து. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அங்கே தான் அமர்ந்து இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் இருந்து ஏதும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவளிடம் யாரும் நெருங்கவும் இல்லை.

பெண்ணின் அம்மா, அப்பா, பார்கவி மற்றும் அவள் சொந்தங்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து இருந்தனர். எல்லோர் முகத்திலும் சந்தோஷ சாரல் தான். ரங்கராஜன் பக்கமும் முக்கிய ஆட்கள் மற்றும் சொந்தங்கள் என்று அந்த வீடே நிறைந்து இருந்து. இது எதிலும் அவள் தன் பார்வையை செலுத்தவில்லை என்றாலும், எல்லாவற்றையும் கவணித்துக்கொண்டு தான் இருந்தாள்.

இப்படியே போய் இருந்தால் விழாவும் நல்லபடியாக முடிந்து இருக்கும்மோ என்னவோ!

அதற்குள் கூட்டத்தில் இருந்து ஒர் பெரிய தலை இது என்ன புதுசா இருக்கு எப்பவும் மாப்பிளை வீட்டினர் தான் பெண்வீட்டில் சென்று நிச்சயம் செய்வர், இங்கே பெண்ணே மாப்பிள்ளை வீட்டிற்க்கு வந்து இருக்கிறாள் என்றார் சற்று உறக்கவே அருகில் இருந்தவரிடம். இந்த விஷயம் அப்படி இப்படி என்று இரு வீட்டினர் காதுகளிலும் விழ பெண் வீட்டை சேர்ந்தவர்கள் நெளிய தொடங்கினர்.

பின்னே அவர்களும் இதே விஷயத்தை தான் முதலில் அவர்கள் வீட்டில் சொன்னார்கள், அப்படி வீடு வசதி படவில்லை என்றால் கல்யாணமண்டபத்தில் வைத்துக்கொள்ளாம் என்றும் கூறினர். 

ஆனால் கலா இதை எல்லாம் மறுத்துவிட்டார், இத்தனை பெரிய வீடு இருக்கு, அதுவும் இந்த வீட்டின் ஆண் வாரிசு அவனுக்கு நடக்கும் முதல் சுபகாரியம் இந்த வீட்டில் தான் நடக்கவேண்டும். என்று கூறிவிட்டார்.

அதன் பின் அவரிடம் யார் சொல்லும் எடுபடவில்லை. பெண்வீட்டார் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டணர். ஆனால் அது இப்போது பேசுபொருள் ஆவது அவர்களுக்கு மனகஷ்டத்தை கொடுத்து.

ஆனால் கலாராணி அனைவருக்கும் முன் இது என் மகனும், மருமகளும் வாழப்போற வீடு. அவர்களுக்கான  நல்லவைகள் எல்லாம் இந்த வீட்டில்தான் நடக்க வேண்டும். இப்ப அவ யார் வீட்டுக்கோ போகல, இது இவ வாழபோறவீடு. அதனால யாரும் இதை பத்தி பேசாம வந்த வேலைய பாருங்க. நல்ல நேரம் தொடங்க போகுது நிச்சயபத்திரிக்கையை படிங்க என்றார்.

அவர் சொன்ன பின் அந்த சலசலப்பு அப்படியே அடங்கியது. ஐயர் நிச்சயபத்திரிக்கையை படிக்க ஆரம்பிக்கும் முன்.

ஒரு நிமிஷம் என்ற குரல் கேட்டது. இப்ப யாரு?

என்று அனைவரும் குரல் வந்த திசையை பார்க்க. நம்ம ரங்கநாயகி தான். அனைவர் முகத்திலும் அதிர்ச்சி இருந்தாலும், அதை விடுத்து என்ன மா இப்படி நல்ல காரியம் பன்னும் போது அபசகுனமா என்று அவர் தன் பேச்சை நிறுத்த………..

அனைவர் முன்னால் வந்தவள் இங்க வந்து இருக்க எல்லாருக்கும் நான் யார் என்று தெரியும்………..

என்றவள் சிறு இடைவெளிவிட்டு, அவள் ஆரம்பிக்கும் முன் கலாராணி ஏன் தெரியாம, நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும், அதே சமயத்தில் கழுத்தில் தாலி ஏறுன அன்னிக்கு இரத்திரியே ஒடிபோக பாத்தவனும் தெரியும், என்றார் அவளை அடக்கிவிடும் எண்ணத்தில். அவர் இப்படி சொன்னால் அவள் அமைதியாகிவிடுவாள் என்று எதிர்பார்த்தார் கலாராணி, ஆனால் அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. மேலும் அவர் அடுத்து ஆரம்பிக்கும் முன், என்னைவிட அந்த கல்யாணத்தை மறக்கமுடியாம அதிகமா நினைக்கிறது நீங்க தான் போல என்றாள் எள்ளல் குரலில், அதில் அவர் முகம் கருக்க, எல்லாரும் அமைதியாக இருக்க.  கலாவும் ரங்கராஜனும் அவளை முறைத்தபடி இருந்தனர்.

உடன் ஒர் பெரியவர் தெரியுமா…………

இப்போ அதுக்கு என்ன. 

உங்க பாட்டி மரணபடுக்கையில்  இருக்கும் போது தன் பேரன் பேத்திகள் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டதால உனக்கும், ரங்கராஜனுக்கும் அவர் முன்னால் வச்சு கல்யாணம் நடந்து.

அன்னிக்கு இராத்திரியே நீ அந்த வாத்தி பயலோட நீ ஊரைவிட்டு ஒடி போக முயற்சி பன்னது,   அது பஞ்சாயத்தாகி உங்க கல்யாணம் ரத்தாகி நீ அவன் கூடவே போயிட்ட. இது எல்லாம் இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும்.

அதுவும் இல்லாமா அந்த கல்யாணம் நடந்த போது உனக்கு 15 வயசு அதனால அந்த கல்யாணம் சட்டபடியும் செல்லாது என்று கூறிமுடித்தவர் அங்கு இருந்தவர்களை பார்த்து என்ன நான் சொல்வது சரிதானே என்று ஒர் பார்வை பார்த்தார்.

அவர்களின் அமைதி அதுதான் சரி என்பது போல் இருக்க. எல்லோர் பார்வையும் ரங்கநாயகி மீது பரிதாபமாக படிந்து.

அதை எல்லாம் அமைதியாக கேட்டவள். ஐயா பெரியவரே அந்த காலத்திலே 8வது வரை படிச்சு இது வரைக்கும் இந்த ஊரில் நடந்த எல்லா நல்லது கொட்டதுக்கும் போய், இதுவரைக்கும் இந்த ஊர் எல்லையை தாண்டாத நீங்களே அந்த கல்யாணம் சட்டபடி செல்லாது அப்படினு தெளிவா சொல்லும் போது. 15 வயசுல ஊரைவிட்டு ஒடி போய். சட்டம் வரைக்கும் படிச்சி இருக்கற எனக்கு அது தெரியாதுங்களா என்றால் குரலில் நக்கல் வழிந்து.

இப்போ இந்த பெண்ணு என்னைய பாரட்ட செய்யுதா, இல்லை கேலி பன்னுதா என்று குழம்பியவர். அந்த குழப்பத்துடன் அவளை பார்த்து அப்புறம் எண்ணம்மா என்றார்.

அது பெரியவரே, பொதுவா பரம்பரை சொத்து யாருக்கு போகும்? அந்த வீட்டின் பெண்ணுக்கா, பையனுக்கா? என்றாள் அவரை பார்த்தபடி. பையனுக்குதான் என்றார் பெரியவர். 

அப்போ இந்த வீடு யாருக்கு? என்றாள் 

அது … அது பெரிய ஐயாவோட மகன் கலாதரனுக்கு தான் என்றார். 

அதுக்கு அடுத்து என்றாள் மீண்டும்?

அவள் எங்கு வருகிறாள் என்று உணர்ந்த ரங்கராஜன் முகம் இறுகியது. 

அதற்கு அந்த பெரியவர் அவர் வாரிசுக்கு என்றார்.

அப்படி பார்த்த இந்த வீடு எனக்கானது இல்லையா? 

என்றாள் அவர்களை பார்த்து………

இதற்கு யாரும் உடனே பதில் சொல்லவில்லை….

இதை கேட்ட கலா பொங்கிவிட்டார்.  என்னடி சொன்ன இந்த வீடு உன்னதா? இவன் தான் இந்த வீட்டின் ஆண்வாரிசு இவனுக்கு தான் இந்த வீடு என்றார் அவளை முறைத்தபடி.

அது எப்படி உங்க பிள்ளை இந்த வீட்டின் வாரிசாக முடியும் நீங்க கல்யாணம் முடிந்து உங்க மாமியார் வீட்டுக்கு போகாமா உங்க புருஷன் இந்த வீட்டுக்கு மருமகனா வந்துடார். 

வீட்டோட மாப்பிளையா இருக்குறதும் இல்லாம,  அவர் பையன இந்த வீட்டுக்கு வாரிசு வேறயா? என்றாள் நக்கல் குரலில்.

இதுக்காக தான் என்ன வீட்ட விட்டு தெரத்திவிட்டிங்களா???

என்றாள்.

அது வரை அவள் ஏதோ பேசுகிறாள் என்று இருந்த ஊர்மக்கள், இப்போது அவள் பேச்சில் அதிர்ந்து போயினர். 

அப்படியும் இருக்குமோ என்று அவர்கள் பார்வை கலாவின் குடும்பத்தின் பக்கம் திரும்பி இருந்து. இதுவரை தான் வைத்து தான் இந்த ஊரின் சட்டமாக இருக்க, இன்று வந்தவள் தன்னை எதிர்ப்பதா என்ற ஆங்காரம் அவருக்கு.

ஏய்……….. என்ன பேசிட்டு இருக்க என்றார் அவளை முறைத்துக்கொண்டு.

அதற்கு எல்லாம் அசராதவள், பின்ன நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் அப்போல இருந்து உங்க மகனும், மருமகளும் வாழபோற வீட் சொல்லிகிட்டு இருக்கீங்க.

இங்க உங்க மகன் வாழ அவன் என்ன என்னையா கட்டி இருக்கான்? என்றவள், மேலும் நக்கலாக இந்த விஷேசம் வேனா இங்க நடக்கலாம்……… ஆனா இது உங்க மகன் வீடு இல்லை.  இந்த வீடும் சொத்தும் கலாதரன் பெண்ணான எனக்கு தான் சேரனும் சரியா என்றாள் எல்லோரையும் பார்த்து. அவள் இப்படி கூறுவாள் என்று எதிர் பார்க்காதவர்கள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்க.

என் வீடு நான் தான் இதுல யார் இருக்கனும் இருக்ககூடாது முடிவு பன்னனும் என்றாள் அங்கு இருப்பவர்களை பார்த்து.

ஏய் என்ன வீட்டா பேசிட்டே போற. நீ சொல்லுற சட்டம் எங்களுக்கும் தெரியும், இந்த வீட்டில் எனக்கும் பாகம் இருக்கு என்றார் விடாமல். சரி அப்போ கோட்டுல பாத்துக்கலாம், இந்த வீட்டு யாருக்கு சொந்தமனு என்றாள்.

இங்க எந்த விழாவேனா இங்க நடத்துங்க ஆனா இது இந்த பெண் வாழப்போ வீடு கிடையாது என்றாள் முடிவாக.

அவள் பேச்சில் அடுத்து என்ன பேசுவது என்று யாருக்கும் ஏதும் தெரியவில்லை. இது எங்க அப்பா வீடு என்றார் கலாராணி, அப்பாவீடு தான் உங்க புகுந்தவீடு இல்லை. அக்காவ கல்யாணம் பண்ணிகொடுத்த கையோட அம்மாவும் , மகனும் இங்க வந்து இருந்தாங்க, அப்புறம் அக்கா பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டு இந்த வீட்டோட மாப்பிள்ளையா இங்கே இருந்தா இது உங்க வீடு ஆகிடுமா? என்றாள் அவரை பார்த்து.

இப்ப என்னடி சொல்லவர என் பேரனை கட்டிக்க ஆசைபடுறியா? என்றார் சுந்திரவடிவு. 

கலா அடுத்து என்ன சொல்லி இருப்பாரோ அதற்குள் சண்முகம் குறுக்கிட்டு கலா அமைதியா இரு. இப்ப நடக்க வேண்டியத பார் என்றார்.

ஆனால் அதற்குள் பெண்வீட்டார் மத்தியில் சலசலப்பு எழுந்து இருந்து. பெண்ணின் தந்தை ஊர் பெரியவரிடம் ஏதோ சொல்ல. அவரும் ஆமோதிப்பாக தலையாட்டினார்.

அம்மா உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்லை. ஒரு நல்ல காரியம் நடக்கும் போது இது தடங்கள் மாதிரி இருக்கு, நீங்க உங்களுக்குள்ள பேசி ஒர் முடிவுக்கு வந்துட்டு அப்புறம் நிச்சயம் வைச்சிக்கலாம் பெண்ணு வீட்டில் நினைக்கறாங்க என்றார்.

சொன்னவர்கள் அவர்கள் பேசும் முன் எழுந்துக்கொள்ள, அப்போ நாங்க வரோம் என்று கூறி அவர்கள் பதிலுக்கு காத்து இராமல் கிளம்பி இருந்தனர்.

இதை எல்லாம் பார்த்தும் ஒர் வார்த்தை பேசாமல் இருந்த ரங்கராஜன் அவள் அருகில் வந்து பேசும்  முன்.

என்ன ராஜன் இதை எல்லாம் உனக்காக பன்றதா நினைக்கிற அப்படி தானே என்றாள்.

11 வருஷத்துக்கு முன்னாடி நெல் நாத்து பிடிங்கி போட்ட மாதிரி இந்த முறை என்ன பிடுங்க முடியாது…………… என்றவள்.

அப்புறம் இது இல்லாம் உனக்காக இல்லை……….

உன்ன இலவசமா கொடுத்தாலும் எனக்கு நீ வேண்டாம்……….

என்றாள் கண்ணில் அலட்சியத்துடன்.

சொன்னவள் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

இங்க நடப்பவை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த வள்ளி முகத்தில் கவலை கோடுகள்……

நிறம் மாறு(ம்)மோ

Advertisement