Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை.

 அத்தியாயம் 9.

 கமிஷ்னரும் விக்ரமும் மற்றும் விக்ரமின் போலீஸ் டீமும் மீரா கடத்தப்பட்ட கேஸ் பற்றி கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்..

” சார் ப்ளீஸ் நாம உடனடியாக செய்யவேண்டிய முதல் வேலை இந்த தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு இந்த கேஸ் சும்மா சாதாரணம் மாதிரியும் மீரா கடத்தப்படவில்லை. என்று ஒரு வாக்கு மூலமும் நாம் உடனடியாக கொடுத்தாக வேண்டும்.”

” அப்படி செய்யாத பட்சத்தில் சேனலின் டிஆர்பி ஏற்றுவதற்காக அவங்க உண்மை பாதி பொய் பாதி கலந்து நிறைய தகவல்களை பரப்பிக்கொண்டு இருக்கிறாங்க சார். அதை நாம தடுக்கணும். இல்லன்னா அதன் மூலமா மீராவை கடத்தியவர்கள் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அல்லது பதுங்கி இருப்பதற்கும் வாய்ப்பு ரொம்ப அதிகம். “

” அதனால நீங்க தான் மேலிடத்தில் சொல்லி இதற்கான ஒரு தீர்வை கூடிய சீக்கிரம் எடுக்கணும். நாம இந்த கேஸ் ஒன்னும் இல்ல அப்படின்னு வெளிய காட்டினால் மட்டும் தான் குற்றவாளிகள் திரும்பவும் தைரியமாக நடமாட ஆரம்பிப்பாங்க சார். அப்போதுதான் நமக்கு அவங்கள பிடிக்கிறதுக்கு வசதியாக இருக்கும்..” என்றான் விக்ரம்.

விக்ரம் கூறியவற்றைக் கேட்ட கமிஷ்னரும் அவனது முடிவு சரி என்பதை புரிந்து கொண்டு மேலிடத்தில் பேசுவதாக உறுதி கூறினார்..

அதன்பின் கேஸை பற்றி மேலதிகமாக இன்னும் சில விஷயங்களை கலந்துரையாடிவிட்டு அவர்கள் கலைந்து சென்றதும். விக்ரம் அங்கிருந்து புறப்பட்டு அவன் போலீஸ் என்பதை யாரும் கண்டுவிடாத படி அவனை அடையாளம் காண முடியாத அளவிற்கு முக கவசம் அணிந்து கொண்டு தனது அடையாளத்தை சிறிது மாற்றி மீராவை சந்திக்க மருத்துவமனை சென்றான்.

அப்பொழுதுதான் மீரா எழுந்து துளசியிடம் அவளது உயிரை உலுக்கும் அடுத்த கேள்வியைக் கேட்டுவிட்டு மீண்டும் அயர்ச்சியில் உறங்கி விட்டாள்..

ஓரளவிற்கு கொஞ்சம் வலி குறைந்ததும் மீரா கண் விழித்தாள்..

மகள் கண்விழித்து தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட மாட்டாளா?. என இந்த நான்கு நாட்களும் ஏங்கி தவித்துக்கொண்டிருந்த தாய்க்கு தற்போது மகள் கண் விழித்ததை பார்த்ததும் மிகுந்த ஆனந்தமாக உணர்ந்தாள் துளசி..

இந்த அளவிற்காவது மகள் தப்பித்து உயிரோடு தன்னிடம் வந்து விட்டாள் என்ற ஒரே மகிழ்ச்சி தான் அதற்கு காரணம்..

 ஆனால் அந்த மகிழ்ச்சியையும் அடியோடு துடைத்து எரிவது போன்று தான் மீரா துளசியிடம் கேட்டாள்..

 சோர்வான குரலில் அவள் தங்கியிருந்த அறையையும் அவளையும் ஒருமுறை கண்ணால் சுற்றி பார்த்து விட்டு.

” நான் யார்..? ” என்றும் துளசியையும் பார்த்து ” நீங்க யாரு..? நான் ஏன் இப்படி இங்கே படுத்து இருக்கேன். எனக்கு என்ன ஆகிவிட்டடது?.” என்றாள் குழந்தை மீரா.

மீரா கேட்ட கேள்வியில் துளசிக்கு ஒரு நிமிஷம் உயிரே அவளை விட்டு பிரிந்து சென்றது போன்ற வலியை உணர்ந்தாள்..

 மீரா தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும். வலியை முகத்தில் காட்டாமல் இருக்க பிரம்ம பிரயத்தனப்பட்டாள் துளசி. அவ்வாறு கஷ்டப்பட்டும் முடியாமல் லேசான புன்னகையுடன் மீராவின் தலையை தடவி ” நான் துளசி உன் அம்மாடா செல்லம்.. நீங்கதான் என்னோட ஒரே தங்க பொண்ணு மீரா..” என்றாள்..

 அதற்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க இயலாமல் அங்கிருந்த குளியலறைக்கு சென்று வாய்விட்டு கதறி அழுதுவிட்டாள் துளசி..

 மீரா அவளை கூப்பிடும் சத்தம் கேட்டதும் உடனடியாக முகத்தை சற்று தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டு மகளிடம் ஓடி வந்தாள்..

” நீங்க அம்மா. நான் உங்க பொண்ணு அப்போ அப்பா தங்கச்சி பாப்பா தம்பி பாப்பா எல்லாரும் எங்க?. அம்மா அவங்க எல்லாம் என்ன பாக்குறதுக்கு இங்கே வரலையா?.. ” என்றாள் மீரா.

 தலையில் அடிபட்டு பழையவற்றை மறந்தாலும் அவளது புத்தி சாதுரியமான கேள்விகள் மூலம் அவளது புத்திசாலித்தனம் மட்டும் மாறவில்லை என்பதற்கு இதுவே சாட்சி..

 மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் தவித்தவள். மகள் மீண்டும் தனது முகத்தையே பார்த்து இருப்பதை கண்டு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து பேச ஆரம்பித்தாள்..

 ” நீங்களும் நானும் மட்டும்தான் மீரா குட்டி இருக்கிறோம்.. ” என்றாள் துளசி..

 அதைக் கேட்டதும் மீராவிடம் இருந்து அடுத்த கேள்வி பாய்ந்து வந்தது..

” அப்போ மத்தவங்க எல்லாம் எங்க?.. அம்மா..” என்றாள் குழந்தை..

 துளசி என்ன நினைத்தாலோ மீண்டும் மகளின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாமல் அவளுக்கே யாரென்று தெரியாத மீராவின் தந்தையை ” மீரா குட்டியோட அப்பா ஊருக்கு போய் இருக்காங்க தங்கம்.. மீரா குட்டிக்கு தம்பி தங்கச்சி பாப்பா எல்லாம் இன்னும் கொஞ்ச காலம் கழிச்சு வருவாங்க….” என்றாள்..

 அதன்பின் மீரா துளசியை அருகே அழைத்து கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு தானும் தாயிடமிருந்து முத்தத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் இவ்வளவு பேசிய களைப்பில் உறக்கத்திற்கு சென்று விட்டாள்..

கேள்வி கேட்ட குழந்தை கேட்டு விட்டு உறங்கி விட்டாள். ஆனால் அதை காது கொடுத்து கேட்ட துளசியோ மீண்டும் மனதளவிலும் உடலளவிலும் துவண்டு விட்டாள்..

” இறைவா..! தயவு கூர்ந்து என்னை மன்னித்துவிடு. யாரென்று தெரியாத கணவனை குழந்தையின் மனதை புண் படுத்த விரும்பாமல் ஊரில் இருப்பதாக என்னோட பொண்ணுக்காக பொய் சொல்லி விட்டேன்.. நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஒரு அந்நிய ஆணிடமும் நான் பேசியதும் இல்லை. நெருங்கி பழகியதும் இல்லை. அப்படி இருக்கும் எனக்கு ஏன் இப்படி ஒரு நிலை.. இதன் மூலமாக எனது ஒழுக்கம் கேள்விக்குறியாகி விட்டது.. தயவுகூர்ந்து என்னையும் எனது பொண்ணையும் மன்னித்து இவ்வுலகில் இனிவரும் காலங்களிலாவது நிம்மதியாக வாழ விடு.. ” என்று கண்கள் மூடி மூடிய கண்களின் வழியாக கண்ணீர் வழிய மனதால் இறைவனிடம் மன்றாடினாள் துளசி..

 ஒரு தாயின் கண்ணீருக்கு சக்தி அதிகமோ..! இறைவனும் நினைத்து விட்டார் போலும். இனி வரும் காலங்களில் அவளது துன்பத்தை போக்கி அவளது வாழ்வில் வசந்தம் வீச வழிகள் அமைய ஆரம்பித்து விட்டது..

 இனிவரும் அவளது வாழ்க்கை காலங்கள் எவ்வாறு அமையப்போகிறது. மீராவை தொடர்ந்து எவ்வாறு சமாளித்து வருவது. என்கிற தீவிர யோசனையில் இருந்த துளசியின் சிந்தனையை கலைக்கும் விதமாக.

 தாதியர் ஒருவர் வந்து துளசியை டாக்டர் அழைப்பதாக கூறி விட்டு சென்றார்…

 அவளும் அங்கிருந்த குளியலறையில் முகம் கழுவி தன்னை சிறிது ஒழுங்குபடுத்தி கொண்டு அங்கிருந்து அறையை விட்டு வெளியேறி டாக்டர் அறைக்குள் சென்ற நிமிஷம் விக்ரம் மீராவின் அறைக்குள் சென்றான்..

 விக்ரம் அறைக்குள் வந்ததும் மீரா அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு தற்போது அந்த குழந்தையை தொல்லை செய்ய விரும்பாமல் அவளது கண்டிஷன் எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அவனும் டாக்டரின் அறைக்குள் சென்றான்..

கதவைத் தட்டிவிட்டு டாக்டரின் அனுமதி கிடைத்ததும் விக்ரம் உள்ளே சென்று அமர்ந்தான்..

 அப்பொழுதுதான் டாக்டர் துளசியை ஓரளவிற்கு அவர் சொல்லும் அதிர்ச்சியான தகவலை கேட்பதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்..

 விக்ரமும் வந்து துளசியின் அருகில் அமர்ந்ததும் டாக்டர் தர்சன் பேச ஆரம்பித்தார்.

விக்ரம் இங்கு வரும் முன்பே டாக்டர் தர்சனிடம் அவன் வருவதற்கான காரணத்தையும் ஏன் மறைவாக வருகிறான் என்பதையும் கூறி விட்டு தான் வந்தான்.

அதனால் அவரும் துளசியின் முன்பு யார் என்ன என்ற தகவலை விக்ரமை பார்த்து கேட்காமல் அவனை உள்ளே அனுமதித்து துளசியின் அருகே இருக்க வைத்தார்..

” துளசி உங்க பொண்ணு மீரா ரொம்ப சாதுரியமாக அந்த கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிச்சு இருக்காங்க. இருந்தாலும் அவங்களுக்கு தலையில அடி கொஞ்சம் ஆழமா பட்டதால தற்போது அவங்க பழசெல்லாம் மறந்துட்டாங்க அதனாலதான் நான் யாரு?..நீங்க யாரு?. என்கிற கேள்வியை உங்களைப் பார்த்து கேட்டு இருக்காங்க.. கடவுள் சித்தம் என்கிறது இதைத்தான் போல. உங்க குழந்தை மீரா பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து தற்போது புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்காங்க என்று நீங்க நினைத்து சந்தோஷப்படனும்.. இப்பதான் மீரா புது குழந்தையாய் பிறந்து இருக்கா என நீங்க நினைச்சு அவளோட இனிவரும் வாழ்க்கையில் அவளுக்கு மனம் நோகாதபடி சாதகமான நிலையை மட்டும் எடுத்து காட்டி வளத்துக்கங்க.. வெறுமையாக இருக்கிற மீரா மனசுல நீங்க இனி ஒவ்வொரு நல்லதையும் அவசிய தேவையான விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கணும்.. இப்ப நீங்க சொன்னதில் எந்தவிதமான தவறும் இல்லை துளசி. மீராவோட அப்பா ஊர்ல இருக்கார் என்று நீங்க சொன்னது சரியான விஷயம். அப்போதான் எனக்கு அப்பா இருக்கார் என்ற நினைப்பு அந்த குழந்தையின் மனதில் இருக்கும் அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்..” என்று துளசியிடம் கூறி விட்டு விக்ரமை பார்த்தார் டாக்டர் தர்ஷன்.

” மிஸ் துளசி இவர் விக்ரம் உங்களோட கொஞ்சம் பேசணும் என்று விரும்புகிறார். உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவார். நீங்க அவரோட பேசிட்டு இருங்க நான் ஓ பி பார்த்துட்டு இதோ வந்துடறேன்..” என்று கூறி டாக்டர் தர்ஷன் அங்கிருந்து வெளியேறினார்..

விக்ரம் துளசியிடம் பேச ஆரம்பித்தான்.

” ப்ளீஸ் துளசி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே..? ” என்றான்.

 ஆண்களிடம் அதிகம் பேசாதவள் அவன் கேட்ட இந்த கேள்வியில் சற்று திகைத்து விட்டாள்..

 தாயை தொலைத்த குழந்தை போன்று மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள் துளசி..

அதைக் கலைத்து அவளை இயல்புக்கு கொண்டு வருவதற்காக விக்ரம் தொண்டையை செருமி மேசையில் தட்டி அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தான்..

அவன் தனது பதிலை எதிர்பார்த்து இருப்பதை உணர்ந்து கொண்ட துளசி பேச ஆரம்பித்தாள்.. ” சொ. சொ சொல்லுங்க சார் என்ன கேட்கணும்.. ” என்று திக்கி தினரி ஒருவாறு கேட்டுவிட்டாள்..

” அது வந்து துளசி.. ” என்று போலீஸ்காரனே ஒரு பெண்ணிடம் எவ்வாறு அவளது தனிப்பட்ட விஷயத்தை கேட்பது என்று தயங்கி கொண்டிருந்தான்..

ஆனாலும் அவனுக்கு தற்போது மிக முக்கியமான ஒன்று மீராவின் உயிரைப் பாதுகாப்பது மட்டுமே.. அதற்காக துளசியிடம் சில விஷயங்களை பேசித்தான் ஆக வேண்டும் என்று அதை மனதில் நிறுத்திக்கொண்டு துளசியுடன் மீண்டும் பேச ஆரம்பித்தான்..

 ” துளசி அது வந்து. டாக்டர் உங்களிடம் பேசும்போது மிஸ் துளசி என்று சொன்னாரே நீங்க இன்னும் திருமணம் முடிக்கலையா?.. மீரா உங்க வளர்ப்பு பொண்ணா?..” என்றான்..

” இல்ல சார். நான் பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த என்னோட பொண்ணு தான் மீரா.. ஏன்? அப்படி கேட்டிங்கன்னு தெரிந்து கொள்ளலாமா சார்.. ” என்றாள் துளசி..

அதன்பின் அதிகமாக அவளது சொந்த விஷயத்தை தான் கேட்பது சரி இல்லை என்று தெரிந்து கொண்ட விக்ரம் மீராவைப் பற்றி மட்டும் பேச தொடங்கினான்..

” அதை விடுங்க அது பெரிய விஷயம் ஒன்னும் இல்லை துளசி. இப்ப நம்ம மீராவைப் பற்றி முக்கியமான சில விஷயங்கள் பேசணும் ப்ளீஸ் நான் சொல்வதை நீங்க ஏற்றுக் கொள்ளவேணும்.. ” என்றான் விக்ரம்..

” சொல்லுங்க சார் என்ன பண்ணனும்?. என் பொண்ணோட எதிர்கால வாழ்க்கை நன்றாக அமையும் என்று இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வேன்..” என்றாள் துளசி ஒரு சிறந்த தாயாக..

” மீராவை இந்த ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்தானே ரிஷி. அவன் என்னோடு காலேஜ் பெஸ்ட் பிரெண்ட். அவன் திருமணம் செய்த அவனோட வைஃப் மோனிஷா இறந்துட்டாங்க.. அவனோட பொண்ணு நிஷாவை உங்களுக்கே தெரியுமே பார்த்து இருக்கீங்க நீங்க.. அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு ஒரு நல்ல ஆள் வேண்டும். என்று நாங்க பேசும் போது ரிஷி சொல்லி இருந்தான் என்னிடம். இப்போ நீங்களும் மீராவும் தனியாக இருக்குறீங்க என்று டாக்டர் சொன்னார். அதனால இப்போ மீராவோட பாதுகாப்பும் ரொம்ப முக்கியம்.. குழந்தை மீரா பழையது எல்லாம் மறந்துவிட்டாள் என்று வெளியே சொன்னாலும் அவளை கடத்திய கூட்டம் எப்படியும் திரும்பவும் அவளை தாக்க முயற்சி செய்வாங்க. அதனால் ரிஷியோட வீடு உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பா இருக்கும். நான் போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதனால நீங்க எதற்கும் பயப்படாமல் முடியாது என்றும் சொல்லாமல் மீராவோட பாதுகாப்பை மனசுல வைத்து உங்க வீட்டை விட்டு கொஞ்ச காலம் இந்த பிரச்சினை ஓரளவுக்கு சரியாகும் வரை ரிஷி வீட்டில் தங்கி இருங்க துளசி.. ” என்றான் விக்ரம்..

 அதைத் தொடர்ந்து ” நாளைக்கே மீராவுக்கு திரும்பவும் தலையில் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கணுமாம். அதோடு ரிசல்ட் பாஸிட்டிவா வந்தால் நாளைக்கே மீராவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம் என்று டாக்டர் சொன்னார்.. நான் சொன்ன எல்லாத்தையும் யோசிச்சு நாளைக்கு நல்ல முடிவா சொல்லுங்க. இனி மீராவுக்கு தவறா எதுவுமே நடக்காது நீங்க பயப்படாமல் இருங்க.. ” என்று துளசியிடம் கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் ஒருமுறை மீராவை பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு இந்த கேஸ் விஷயமாக வெளியே சென்றான் விக்ரம்..

 துளசியின் முடிவு என்னவாக இருக்கும்..? கெஸ் பண்ணுங்க பட்டூஸ்???

Advertisement