Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 6

???????

 வழமைபோன்று இன்றும் பையாவின் கோட்டைக்குள் காலை நேர வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்களது தாரக மந்திர உச்சரிப்பிற்காக அனைவரும் ஒன்றுகூடல் மண்டபத்தில் கூடியுள்ளார்கள்.

 ஒரு சில நிமிடங்களுக்கு பின்பு மாமாஆ பையாஆ அங்கு வந்து சேர்ந்தான்.

” ஹாய் காய்ஸ் ஸ்டார்ட் பண்ணுவோம்.

 ஃபர்ஸ்ட் நான் யாரு உங்களுக்கு? ” என்றான்.

” மாமாஆஆஆஆஆஆஆஆஆ பையாஆஆஆஆஆஆஆஆஆ ” என்று அங்கு கூடியிருந்த அனைவரும் மிகவும் சத்தமாக கத்தினார்கள்.

 இந்த தடவையும் அதைக் கேட்டு அவன் கண்கள் சிவந்து கைகள் சற்று ஆட்டம் கண்டது..

” இப்போ சொல்லுங்க நம்ம என்ன வேலை பண்றோம். “

” மாமாஆஆஆஆ வேலை பண்ணுறோம்.” என்றார்கள் சத்தமாக.

” ஓகே காய்ஸ் இதன் மூலமா நம்ம ஒரு சேவை பண்ணிட்டு இருக்கோம் அப்படித்தான் நீங்க மனசுல நினைக்கணும். பெண்கள் தேவை படும் ஆண்களுக்கு அவர்களை அனுப்பி வைத்து ஆண்களின் கஷ்டங்களை போக்கி பெண்களுக்கும் ஒரு உழைப்பை தேடி தருகின்றோம்.. அப்போ அது ஒரு சேவை தானே.. அதனால் யாரும் குற்றவுணர்ச்சியில் பீலிங் ஆகிட கூடாது. நாம செய்ற தொழில் தான் நமக்கு தெய்வம் அப்படின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.. அதனால பாவ புண்ணியங்களுக்கு இடம் கொடுக்காமல் நம்மளோட வேலையை நாம திறம்பட செய்து முடிக்கனும்.. “

” நம்மளோட கடத்தல் ஆரம்பிச்சு ஐந்தாவது வருட ஆரம்பத்தில் நாம ஒரு சின்ன பார்ட்டி வைத்து வெற்றி விழாவாக கொண்டாடுவோம். ஏன் என்றால் ஐந்து வருஷமாக நாம பண்ற இந்த கடத்தல் தொழிலுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு கேள்வியோ கேஷ் பையிலோ போலீஸோ அப்படின்னு அந்த ஒரு வார்த்தையை நாம் யாரும் கேட்டதும் இல்லை நம்ம கோட்டைக்குள்ள அப்படி ஒரு விஷக் காற்று வந்ததும் இல்லை..”

” ஐந்து வருஷத்திலே நம்மளை அசைக்கமுடியாத அந்த போலீஸ் டீம் இப்போ வந்திருக்க அந்த ஏசிபியாலும் நம்மளோட —– எதையும் புடுங்க முடியாது.. நீங்க தாராளமா தொழில் பண்ணுங்க. இவங்களை கடத்தலாம் என்று உங்க மனசுல பாட்டுது அப்பிடின்னா கிடைக்கிற எல்லாரையும் கடத்திட்டு வாங்க. உங்களுக்கு பக்கபலமாக எப்பவும் இந்த மாமா பையா இருப்பேன். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் ஒரு போலீஸ் காக்கி டிரஸ் கூட இந்த கோட்டைக்குள் நுழைய முடியாது.. “

” ஓகே இன்னைக்கு இப்ப சந்தோஷ் இங்கே இல்லாததுனால நீங்களே உங்களுக்கான வேலையை பிரித்து செய்ய ஆரம்பிக்கலாம்.. ஜெகன் டீமிடம் இருந்து நாம கைப்பற்றிய பெண்களை சந்தோஷ் கை மாற்றுவதற்காக அழைத்து சென்று விட்டான். இன்றைய நைட் எப்படியும் வெற்றிகரமா கைமாற்றி விட்டு பாதுகாப்பா வந்திடுவான். யாரும் அவனை நினைத்து பயம் கொள்ளாமல் உங்க வேலையை பண்ணுங்க.”

” நம்மளோட மாங்கல்யமும் மாப்பிள்ளையும் அப்படின்ற திருமண சேவை அப் வெற்றிகரமா ஆரம்பித்து விட்டோம். அதன் மூலமா வரும் மணப்பெண்களை வைத்தும் நாம தொழிலை இன்னும் விரிவாக்கலாம்.” என்று கூறி அன்றைய காலை நேர மீட்டிங்கை முடித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றதும் பையாவும் அவனது அறைக்குச் சென்றான்..

 இன்று விடுமுறை கூறியும் அவளால் வீட்டில் இருக்க முடியாமல் அரக்கப்பரக்க துளசி வேலைக்கு வந்தும் அவளால் வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

 உடலில் வருத்தங்கள் இருந்தாலும் அதை துளசி என்றும் பெரிது படுத்துவதில்லை. நோயைக் காரணம் காட்டி அவள் வேலையிலிருந்து விலகுவதுமில்லை.

 ஆனால் இன்று கோவிலில் இருந்து மனம் தெளிந்து வீட்டிற்கு வந்த பின் ஒருமனதாக வேலைக்கு வந்தாலும் அவளால் வேலையை செய்ய முடியவில்லை.

” என்னமா துளசி ரொம்ப சோர்ந்து போய் இருக்கிற?. ” என்றார் அவருடன் வேலை செய்யும் பெண்.

 நெற்றியில் வழிந்த வியர்வையை அருகில் இருந்த துண்டால் துடைத்துக் கொண்டே ” ஒன்னும் இல்ல ராணியக்கா கொஞ்சம் சோர்வா இருக்கு. ஒரு டீ குடிச்சா சரியா போய்டும். ” என்றாள் துளசி.

” என்ன பொண்ணுமா நீ..! ஒரு பெண் குழந்தை மட்டும் தான் உனக்கு இருக்கு. அதுக்கும் இப்பதான் பத்து வயசு அப்படி இருக்கும் போது ஒரு நாள் கூட லீவ் எடுக்காமல் அவளுக்காக இப்படி ஏன் தான் உழைத்து ஓடா தேயுறியோ?. உன்னோட கணவன் எங்க என்று கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிற நீயும் உன் பொண்ணும் மட்டும் தான் அந்த வீட்ல தனியா இருக்கீங்க. அது உங்களுடைய தனிப்பட்ட குடும்ப விஷயம் அதனால நான் அதிகமா தலையிடுவதில்லை. இந்த ஆபீஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பூட்டுறாங்க அதனால அந்த ஒரு நாள் உனக்கு கட்டாய விடுமுறை கிடைக்கிது. இல்லன்னா மாதத்தில முப்பது நாளும் வேலை பார்ப்ப போல என்ன பொண்ணோ சில நேரம் உன்னை பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கும்.” என்று கவலை கொண்டார் ராணி.

” அது ஒன்னும் இல்லக்கா என் பொண்ணு மீரா நடந்தே பள்ளிக்கூடம் போகுது. நல்லா படிக்கக் கூடிய கெட்டிக்காரப் பொண்ணு. அந்த பெரிய ஸ்கூலுக்கு படிக்க வார பசங்க எல்லாரும் கார்லயும் அவங்க அம்மா அப்பாவோட ஸ்கூட்டர் வண்டிலயும் தான் வருவாங்க. ஆனா மீரா நடந்து போகும்போது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும் அக்கா. நான்தான் படிக்காம படிப்பு மண்டையில ஏறாமல் இருந்துட்டேன். மீரா படிக்கக்கூடிய கெட்டிக்கார பொண்ணு அதுக்கு ஏற்ற மாதிரி நாமளும் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணினால் தானே அக்கா அதுவும் நாளைக்கி பெரிய உத்தியோகத்தில இருக்கும்.. அதற்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்கணும். இங்க வரும் சம்பளம் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே சரியா இருக்கு. கிழமை நாளில் கிடைக்கிற லீவை எடுக்காமல் அன்னைக்கு வேலைக்கு வந்தால் டபுள் சம்பளம் வரும். அதுக்காக மட்டும் தான் நான் வேலைக்கு லீவ் எடுக்காமல் வர்றேன். டபுள் சம்பளம் வரும் அந்த பணத்தை அப்படியே என் பொண்ணுக்காக உண்டியல்ல சேர்த்து வைக்கிறேன்.. இந்தவார ஞாயிற்றுக்கிழமை நானும் என் பொண்ணும் கடைக்கு போயி என் பொண்ணுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கணும். இதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை.. எனக்கு என் பொண்ணு கிடைத்தது ஒரு வரம். இதுவரைக்கும் எதுவுமே அம்மா எனக்கு வேணும் அப்படின்னு கேட்டதே இல்லை. என்னோட கஷ்டத்த ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கா.” என்று மகளின் நினைவில் சந்தோசமாக கூறி கொண்டிருந்தாள் துளசி.

 ஏசிபி விக்ரம் சாகருக்கு கமிஷனரிடம் இருந்து அழைப்பு வந்தது. ” ஹாய் யங் மேன். ஒரு சீக்ரெட் மீட்டிங் நீ இமிடியட்டா வாட்ஸ்அப்ல நான் சென்ட் பண்றா அட்ரசுக்கு உடனே வந்துடு.” என அவன் பேச இடங்கொடுக்காமல் அவரே கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

 விக்ரமும் உடனே தனியாக அவனது வாகனத்தில் கமிஷனர் அனுப்பிய அட்ரசுக்கு சென்றான்.

 இங்கு ரிஷி வந்நியனின் ஆபிஸில் ஜானகியின் அழைப்பு வந்ததும் உடனே அங்கிருந்து புறப்பட்டு வரும் போது இடையில் மீண்டும் அவனை ஆபிசுக்கு வருமாறு அவனது பி ஏ சூரியகுமார் அழைப்புவிடுத்தான்..

 அந்த அழைப்பை ஏற்று ரிஷி மீண்டும் ஆபீஸ் சென்றான்.

அவனது ஆஃபீஸிலோ சில லேபர்க்கும் அசிஸ்டன்ட் மேனேஜருக்கு இடையில் சிறு தகராறு ஏற்பட்டு விட்டது. லேபர் மேனேஜரை தாக்கியதால் மேனேஜர் காயமடைந்து சீரியஸ் ஆகி விட்டார்..

 உடனே பிஏ சூர்யா மேனேஜரை ஹாஸ்பிடல் அழைத்து செல்லும் வழியில் தான் ரிஷிக்கு அழைப்புவிடுத்தான்..

 ரிஷியும் விரைந்து ஹாஸ்பிடல் வந்து மேனேஜரின் நிலையை பார்த்து டாக்டரிடமும் அதைப்பற்றி பேசிவிட்டு ஹாஸ்பிடல் செலவுகளை அவனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மேனேஜரை தாக்கிய லேபர்களை அழைத்து என்ன விடயம் என்று கேட்டு அவர்கள் கூறியதை கேட்டதும் அவர்களிடம் மேனேஜர் சார்பாக அவனே மன்னிப்பு கேட்டுவிட்டு மேனேஜர் குணமடைந்ததும் வேலையை விட்டு நீக்குவதாக வாக்குறுதி கூறி அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு சென்றான்..

 அவன் வீட்டிற்கு செல்லும் நேரம் நிசாவும் சமத்தாக ஸ்கூலுக்கு ரெடியாகி காத்திருந்தாள்.

 நிசா இவ்வாறு சமத்தாக ரெடியாகி இருப்பதற்கு காரணம் தேவி மட்டுமே.

 அவள் பொருட்களை தூக்கி எறிந்து சத்தம் போட்டுகொண்டு இருக்கும்போது நிஷாவிடம் வந்து ” பாப்பா பாட்டி கிட்ட வாங்க நீங்க இப்படியே அடமென்டா இருந்தா டாடிக்கு உங்களைப் பிடிக்காமல் போய்விடும்.அப்புறமும் உங்களை தள்ளி வச்சிட்டு இன்னொரு பாப்பா வாங்கிட்டு வருவாங்க. நீங்க சமத்து பொண்ணு தானே.! டாடி வீட்டுக்கு வரும் முன்ன நீங்க ஸ்கூலுக்கு ரெடியாகி இருங்க அப்போதான் டாடி க்யூட் கேர்ள் சொல்லி நிசா பாப்பாவ செல்லமா கொஞ்சிட்டு இருப்பாங்க.. ” என்று குழந்தையின் மனதை மாற்றி குழந்தையை தயார்படுத்த ஜானகிடம் ஒப்படைத்துவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்..

” என்னடி பேத்தியை ரொம்ப கொஞ்சி சமாதானப்படுத்தி விட்டுடு வந்து இருக்க. என்ன திடீர் பாசம். ” என்றான் தேவியின் கணவன்.

 ” யோவ் சும்மா வாய்கு வந்ததை பேசாத. பாசம் ஒன்னும் புதுசு இல்ல. அந்தக் குட்டிச் சாத்தான் எப்ப பிறந்து என் பொண்ணு செத்தாலோ அப்பவே இது எனக்கு வேண்டாத ஒன்னு தான். ரிஷி வரும் போது இது இப்படியே கத்தி சத்தம் போட்டுட்டு இருந்தா நம்மளை தான் தப்பா நினைச்சு வீட்டைவிட்டு அனுப்பிடுவான்.. அப்புறம் சோத்துக்கு சிங்கி தான் அடிக்கணும்.. நீயோ கிழவன் ஆயிட்ட. உன்னால இனிமே மூட்டை தூக்கி உழைக்க முடியாது.. நாமளும் இந்த பணக்கார வாழ்க்கைக்கு பழகி விட்டோம்.. அதை ஏன் கெடுத்து கொள்ளுவானே?. அப்போ அப்போ அந்த குட்டி சாத்தானை கொஞ்சம் பாசமா பார்த்துக்கொள்வது போல நடிச்சாலே நாம காலம் முழுக்க இந்த வீட்டிலேயே இருக்கலாம்.. இது கூட தெரியாத மக்கு கீழவன். நீயும் கொஞ்சம் அந்த குட்டிச்சாத்தானோட சிரித்து பேசு.. அப்போதான் இந்த வீட்ல நம்ம பொழப்பு ஓடும்.. ” என்று கூறிவிட்டு 55 வயதிலும் பியூட்டி பார்லர் சென்று விட்டார் தேவி..

 வீட்டிற்கு வந்த ரிஷிக்கே சற்று ஆச்சர்யமாகிவிட்டது..

 அவனுக்கு இருக்கும் வேலைப்பளுவின் காரணமாக அதிக நேரம் இழுத்து வேலை நேரத்தை பாதிக்காமல் எவ்வாறு நிசாவை சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான். இங்கோ அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் படி நிஷா தயாராகி வாசலில் சிரித்த முகமாக நின்று கொண்டிருந்தாள்..

 நிஷாவை காரில் ஏற்றிக் கொண்டு போகும் வழியில் பேச்சு கொடுத்து அவள் எவ்வாறு சமாதானம் ஆகினாள் என்பதை கேட்டுக் கொண்டான்..

 அவள் கேட்ட ஐஸ்கிரீமை இன்று மாலை ஸ்கூல் முடிவடைந்ததும் கட்டாயம் வாங்கித் தருவதாக உறுதி கூறிவிட்டு. நிஷாவையும் ஸ்கூலில் விட்டுவிட்டு மீண்டும் ஆபிஸிற்கு சென்றான்..

 இங்கு விக்ரமோ கமிஷனர் வரச்சொன்ன அட்ரஸ்க்கு அவர் சொன்ன நேரத்திலிருந்து அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தான்..

அதற்கு கமிஷ்னரிடம் திட்டும் வாங்கிக் கொண்டான்..

ஒரே நேரத்தில் அனைத்து கடத்தல் கும்பல்களையும் சுற்றி பிடிப்பதற்கான தீவிர ரகசிய ஆலோசனை மீட்டிங் ஆரம்பமாகியது. அதில் விக்ரமின் தலைமையில் ஒரு குழு தயார் படுத்தப்பட்டது..

 இவர்களின் ரகசிய மீட்டிங்லேயே மாமாஆஆஆஆ பையாஆஆஆஆ ஒரு உளவாளி வைத்திருந்தான்.. அது தெரியாமல் இவர்கள் அனைவரும் ரகசிய மீட்டிங் என்று நினைத்துக்கொண்டு அவனை பிடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவனை பிடிப்பதற்கு முன்பு அவன் மீண்டும் தப்பித்து விடுவான் என்பது இவர்களுக்கு தெரியவில்லை..

 மாமா பையா மற்றும் விக்ரம் சாக்கர் இருவருக்கும் இடையிலான ஆட்டம் இனி தான் அதிகமாக சூடுபிடிக்க போகின்றது..

காத்திருங்கள் பட்டூஸ் ???

Advertisement