Advertisement

 நெஞ்சுகுள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 3

 சென்னை நீலாங்கரையில் பணம் படைத்தவர்கள் வசிக்கும் தெரு.

 பண செழுமையால் அந்த மாளிகை மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது.

 பத்து வருடத்திற்கு முன்பு சென்னையில் குற்றங்களை குறைத்து அவரைக் கண்டாலே பயந்து நடுங்கும் தாதாக்கள். ரவுடிகள் கட்ட பஞ்சாயத்து காரர்கள். அனைவரையும் அடித்து வெளுத்து சென்னை மாநகரத்தில் சிம்ம சொப்பனமாக இருந்த கமிஷ்னர் ராஜேந்திரன் அவரின் துணைவி ராஜேஸ்வரியின் இல்லம் தான் இந்த மாளிகை..

  ராஜேஸ்வரியோ கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசாவார். ராஜேந்திரனை திருமணம் முடித்து பத்து வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் பணம் இருந்தும் அதை அனுபவிக்கவும் அவர்கள் மகிழ்ந்து வாழவும் குழந்தை இல்லை என்பது ராஜேஸ்வரியின் நீண்ட கால குறையாக இருந்து வந்தது..

 பத்து வருடங்களுக்கு பின் ராஜேஸ்வரி ராஜேந்திரனின் புண்ணியங்களும் அவர்களின் வம்ச முன்னோர்களின் தர்மங்கங்களும் சேர்ந்து அந்த குடும்பத்தின் நீண்ட வருட கவலையை போக்குவதற்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

 பத்து மாதங்களின் பின் அழகிய ரோஜா பூக்குவியிலாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ராஜேஸ்வரி..

 குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த காலத்தில் ராஜேஸ்வரியை அவரது சொந்தங்கள் வெறுத்து ஒதுக்கி வைத்தது. அதில் ராஜேந்திரனின் தங்கை தேவிகாவும் ஒருவர்.

 அந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததும் அண்ணனின் குடும்ப சொத்தை ஆண்டு அனுபவிப்பதற்காக தேவிகா அவரது மகன் முரளி மற்றும் அவரது குடும்பத்தோடு ராஜேந்திரனின் வீட்டுக்கே கூடி வந்து விட்டார்.

 இதற்கு இடையில் ராஜேந்திரனின் ஆண் பிள்ளை இல்லை என்ற மனக்குறையை தீர்த்து வைப்பதற்காக ராஜேஸ்வரி ராஜேந்திரன் தம்பதியினர் இவரும் தீர்மானமான முடிவு எடுத்து ராஜேந்திரன் சீர்திருத்த பள்ளி ஒன்றிற்கு சென்று இருக்கும்போது அங்கே ஒரு பையனை பார்த்தார்..

 அவனை பற்றிய அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொண்டார்.

அவனது தாய் சிவகாமி சிறுவயதில் இருந்தே மிகவும் பல துன்பங்கள் கஷ்டங்களை அனுபவித்து வளர்ந்தவர்.

 திருமண வயது வந்ததும் ஏனைய இளம்பெண்கள் போன்று அவருக்கும் குடும்பம் காதல் அன்பு குழந்தைகள் என்று ஒரு கட்டமைப்புக்குள் வாழ்வதற்கு ஆசை வந்தது.

 அவரின் எண்ணத்தை அறிந்து கொண்ட அவர் வேலை செய்யும் வீட்டின் கார் டிரைவர் காதலித்து திருமணம் செய்வதாக வாக்குக் கொடுத்து சிவகாமியை கர்ப்பவதியாக ஆக்கிவிட்டு அந்த ஊரை விட்டே சென்று விட்டான்..

 நான்கு மாதங்களுக்குப் பின்பே தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்ட சிவகாமி மிகவும் மன வருத்தப் பட்டார்.

 நான்கு மாதங்கள் கடந்து விட்டதால் குழந்தையை கலைக்கவும் முடியாமல் தந்தை இல்லாமல் குழந்தையை வளர்க்க சிரமப்பட்டு மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அந்த ஊரிலிருந்து வெளியேறி பக்கத்து ஊருக்கு வந்து அங்கும் வேறு ஒரு வீட்டில் வேலை செய்து குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

 சிவகாமியின் மகனோ தாயின் கஷ்டத்தை நன்கு உணர்ந்து படிப்பில் மிகவும் சுட்டியாக அதிக திறமையோடு படிப்பில் ஆர்வம் காட்டினான்.

 மகனை பற்றி அவன் படித்த ஊராட்சி ஒன்றிய பாடசாலை ஆசிரியர்கள் அவனது நண்பர்கள் என அனைவரும் புகழ்ந்து பேசியதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் சிவகாமி.

 அவர்களது வாழ்க்கை இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது சிவகாமி வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசியது..

 சிவகாமி தற்போது இருக்கும் வீட்டின் அருகில் இருக்கும் ஹவுஸ் ஓனர் சிவகாமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தான்.

 அவனிடமிருந்து தினமும் போராடி வாழ்க்கையை நடத்தி வந்தார். சிவகாமி வசிக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனர் என்பதால் வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தார்.

 ஒரு கட்டத்திற்கு மேல் ஹவுஸ் ஓனரின் மனைவியிடம் அவர் தவறாக நடந்து கொள்வதைப் பற்றி சொல்லிவிட்டார்.

 மனைவிக்கு பயந்து ஹவுஸ் ஓனர் சிறிது காலம் அமைதியாக இருந்தார். பின்பு மீண்டும் அவரது தொல்லை சிவகாமிக்கு ஆரம்பித்துவிட்டது. 13 வயதான சிவகாமி மகனும் ஒரு நாள் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வரும் போது ஹவுஸ் ஓனரும் சிவகாமியிடம் மிகவும் பலாத்காரமாக தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

  இதைப் பார்த்த அவன் தாயை காப்பாற்றுவதற்கு கட்டையால் ஹவுஸ் ஓனரின் தலையில் அடித்துவிட்டு தாயை அங்கிருந்து கூட்டிச் செல்ல முயன்றான்.

 சிறுவன் என்பதால் அவன் அடித்த அடி அவ்வளவு பலமாக இல்லாததால் ஹவுஸ் ஓனர் கீழே இருந்து எழுந்து சிவகாமி இடம் வந்தார்.

 அவர் வந்ததை அறியாத சிவகாமி மகனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல வாசல் கதவைத் திறக்கும் போது அங்கிருந்த சிறிய கத்தியால் சிவகாமியை குத்தி விட்டார் ஹவுஸ் ஓனர்.

 கத்தியபடி தாய் ரத்தத்தோடு கீழே விழுவதைக் கண்ட சிவகாமியின் மகன் தாய் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை கண்டு கோபத்தில் அவனும் சுயநினைவு இழந்து செய்வது அறியாது அங்கிருந்து வேறொரு அருவா கத்தியால் ஹவுஸ் ஓனரை வெட்டிவிட்டான்.

 மாற்றான் மனைவியை தொட நினைப்பவனும் பெண்ணாசை பிடித்தவனும் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள்.

 மனைவிக்கு தெரிந்தால் மனைவி விட்டு சென்று விடுவார் என்று மனைவிக்கு தெரியாமல் சிவகாமியை அடைய நினைத்த ஹவுஸ் ஓனருக்கு உயிரற்ற இந்த நிலை கட்டாயம் தேவையான ஒன்று.

 தாயை காப்பாற்ற முடியாத துன்பத்திலும் கொலை செய்த பயத்திலும் அவனே போலீஸ் ஸ்டேஷன் போய் உண்மைகளைக் கூறி சரண் அடைந்துவிட்டான்.

 சிவகாமியின் வளர்ப்பு நேர்மையானது உண்மையானது பாசத்திற்கு கட்டப்பட்டது என்பதை நிரூபித்து விட்டான்.

 அதன்பின்பு சிவகாமியின் சடலத்தை அப்புறப்படுத்தி ஹவுஸ் ஓனரின் சடலத்தை அவரின் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு.. சிவகாமியின் மகன் தாய்க்கு இறுதி காரியங்கள் முடித்தபின் அவனை கோர்ட்டில் ஒப்படைத்து நீதிபதியின் தீர்ப்புக்கு ஏற்ப சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்..

 அங்குதான் ராஜேந்திரன் அவனை கண்டார். கண்டதும் ஏனோ அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

 அவனது பழக்கவழக்கங்கள் ஒழுக்கங்கள் நேர்மை புத்திசாலித்தனம் என அனைத்தும் மிகவும் ராஜேந்திரனை கவர்ந்துவிட்டது.

 வாரத்தில் ஒருமுறை அவனை காண்பதற்காகவே சீர்திருத்த பள்ளிக்கு வர ஆரம்பித்தார்.

கணவனின் விருப்பத்தை ராஜேஸ்வரியும் ஏற்றுக்கொண்டார். ராஜேந்திரன் விரும்பிய படியே அவனுக்கு பதினெட்டு வயது முடிந்ததும் அவனை ராஜேஸ்வரி ராஜேந்திரன் தம்பதிகள் தங்களது மகனாக தத்தெடுத்து கொண்டார்கள்..

 அவன் முதலில் மறுத்த போது அவனை கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பத்தையும் தெரியப்படுத்திய பின்பே அவனும் ஒத்துக் கொண்டான்..

 அவனது 18 ஆவது வயதில் ராஜேந்திரனின் மகன் ரிஷி வந்தியனாக இந்த உலகத்திற்கு தெரியபடுத்த பட்டான்..

அதன் பின் அவனது வாழ்க்கை அந்தக் குடும்பத்தோடு ஐக்கியமாகி விட்டது.

 அவன் விரும்பியபடியே தரமான கல்வி காலேஜ் லைப் என அனைத்தும் கிடைத்து ராஜேஸ்வரி விரும்பியபடியே ரிஷியும் படித்து முடித்தான்.

 ராஜேஸ்வரியின் மகள் வந்தனாவும் ரிஷியை அண்ணனாக ஏற்றுக்கொண்டாள்..

 சிவகாமி இறந்த தினத்தன்று மட்டும் ரிஷி நாள் முழுவதும் உணவருந்தாமல் தாய்க்கு திதி கொடுத்துவிட்டு முதியோர் இல்லங்கள் சிறுவர் இல்லங்களுக்கு அவனாலும் முடிந்த உதவிகளை செய்வான்..

அடுத்த நாளில் இருந்து அவனது வழமையான வேலைகளை ஆரம்பித்து விடுவான்.

 அவனது படிப்பு முடிந்ததும் ராஜேஸ்வரியின் குடும்ப பிஸ்னஸ் அனைத்தையும் அவனது பொறுப்பில் ஒப்படைத்து விட்டார்கள்..

அவனும் அவனது திறமைகள் மொத்தத்தையும் காட்டி சரிந்திருந்த பிசினஸ் அனைத்தையும் மேல்நோக்கி வளர்ச்சி அடைய வைத்தான்..

 ரிஷியின் இருபத்தி எட்டாவது வயதில் ராஜேஸ்வரி ஒரு விபத்தில் இறந்துவிட்டார்..

 அதன்பின் ராஜேந்திரன் அனைத்து சொத்துக்களையும் அவனது பெயரிலும் வந்தனாவின் பெயரிலும் சரிபாதியாக பிரித்து எழுதிவைத்தார்..

 ராஜேந்திரன் தங்கை தேவிகாவுக்கு இது படிக்காமல் அவர் பல பல சதித் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி ரிஷியை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்தார்..

அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது..

 ராஜேந்திரனும் பதவி ஓய்வு பெற்ற பின் வயது முதிர்வினால் திருமணம் செய்து வைக்க எவ்வளவோ ரிஷியை கேட்டுப் பார்த்தார் அவன் எதற்கும் உடன்படவில்லை..

 அவனது கவனம் முழுவதும் அவர்கள் பிசினஷிலேயே இருந்தது..

 வந்தனாவின் இருபத்தி மூன்றாவது வயதில் காலேஜ் படிப்பு முடிந்ததும் ரசியின் தொழில் சார்ந்த நண்பன் மகேஷுக்கு வந்தனாவை திருமணம் செய்து வைத்தான்..

 ராஜேந்திரனுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்க ரிஷியை நினைத்து கவலை ஏற்பட்டது. மீண்டும் அவனிடம் பேசி அவனது 33வது வயதில் தங்கை தேவிகாவின் மகள் மோனிஷா வை ரிஷிக்கு திருமணம் செய்து வைத்தார்..

 ராஜேந்திரன் செய்து வைத்த திருமணம் அவரின் காலம் முடிவதற்கு முன்பே மோனிஷா நிஷாஸ்ரீ-யை மிகுந்த சிக்கலான பிரசவத்தில் பெற்றெடுத்து விட்டு இறந்து விட்டாள்..

 அவரின் கட்டாயத்தின் பேரில் அவசரமாக செய்து வைத்த திருமண வாழ்கை அவசரமாகவே முடிந்துவிட்ட கவலையில் ராஜேந்திரனும் மன உளைச்சலோடு நோயின் தாக்கமும் சேர்ந்து அடுத்த ஆறு மாதத்தில் அவரும் இறந்துவிட்டார்..

 அதன்பின் ரிஷி வந்தியனும் குழந்தை நிஷாஸ்ரீ மற்றும் அவனது பிசினஸ் வந்தனா குடும்ப சந்தோஷம் என அவனது வாழ்க்கை கடந்த ஐந்து வருடங்களாக கடந்து இதோ அவனது முப்பத்தி எட்டாவது வயதில் தமிழ்நாட்டில் இளம் தொழில் அதிபர் பட்டத்தை கடந்த மூன்று வருடங்களாக தனக்கே சொந்தமாக்கிக் வைத்திருக்கிறான் ரிஷிவந்தியன்..

 ராஜேஸ்வரி இருந்தவரைக்கும் அந்த வீடு அன்பாலும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.. இப்பொழுதோ நிஷாஸ்ரீ சத்தம் மட்டுமே கேட்கும்..

 அதேபோன்று இன்றும் தான் அழைத்தும் தந்தை ஐஸ்க்ரீம் வாங்கித் தர அழைத்து செல்லாத கோவத்தில் சத்தமாக கத்தி கொண்டிருந்தாள் நிஷா.

 இன்னும் அதிகமாக நிஷாவின் கோபத்தை அதிகரித்து விட்டு அவனது பிசினஸ் அண்ட் ஆபீஸ் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு ஆறுதலாக இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்தான்..

 கத்தி சத்தமிட்டு ஓய்ந்து ஒருவழியாக நிசா தூங்கிவிட்டாள்..

 ரிஷியும் அவளது அறைக்கு சென்று அவளை பார்த்துவிட்டு அவனது அறைக்கு சென்றான்.

 முப்பத்தி எட்டு வயது ஆண்மகனுக்கு எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல் காலத்தின் போக்கில் அவனது வாழ்க்கையும் அன்றாட தேவைகள் கடமைகள் என அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டே செல்கிறது..

 ரிஷியின் தற்போதைய மனநிலை என்ன?

 அவனின் எதிர்கால வாழ்க்கை என்ன.?

 வாழ்க்கையைப் பற்றி அவன் என்ன திட்டமிட்டு இருக்கிறான்?.

 என்று அனைத்தையும் காலத்தோடு சேர்ந்து நாமும் பார்ப்போம்..

 

Advertisement