Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 2

சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி இது. இங்கு அதிகம் ஆட்கள் நடமாட்டம் என்பது இருக்காது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது காற்று கூட அவனது அனுமதி கேட்டுதான் அந்த இரும்பு கோட்டைக்குள் செல்லவேண்டும் என்று பஞ்சபூதங்களில் ஒன்றான [வளி] காற்றையே தான்னால் கட்டுபடுத்த முடியும் என்று நினைக்கின்ற மூடன் தான் இந்த பையா என்று அவனது ஆட்களால் அழைக்கப்படும் மாமா..

மாமாவின் வலது மற்றும் இடது கையான சந்தோஷ் அப்போதுதான் நவீன ரக கை கடிகாரத்தில் எதிரில் இருப்பவனுடன் கோபத்துடன் வாதாடிக்கொண்டு கோட்டைக்குள் நுழைந்தான்..

அவனின் வரவை பார்த்து காவலாளி வணக்கம் வைத்து கோட்டை கதவை திறந்துவிட்டு அவனது வேலையை சிறப்பாக முடித்துவைத்தான்.

சந்தோஷ் அவனுக்கு மட்டுமே மாமா வை நேரடியாக பார்ப்பதற்கு அனுமதி உண்டு. அங்கு வேலை செய்யும் மற்றவர்கள் யாரும் இதுவரை மாமாவை நேரில் பார்த்தது இல்லை எனலாம்.. 

ஏனெனில் அவன் செய்யும் தொழிலுக்கு எதிரிகள் யாரேனும் அதிக தொகை பணத்தை கொடுத்து அவனை காட்டி கொடுக்க சொன்னால் கட்டாயம் பணத்தாசை பிடித்த ஒருவர் அதை செய்வதற்கு நூறுவீதம் வாய்ப்பு உள்ளது என்பது அவனின் எண்ணம். ஆனால் சந்தோஷ் மட்டும் அதற்கு அப்பாற்பட்டவன்.. 

” வணக்கம் பையா ” என்று கூறிக்கொண்டு சந்தோஷ் அவன் முன்னால் வந்து நின்றான்..

அதைகேட்டதும் அவனின் கண்கள் தீயாக எறிந்தது..

” இப்ப என்ன சொன்ன சந்தோஷ் ” என்றான் பல்லை கடித்து கத்தியபடி.

அவனின் சத்தம் கேட்டு அருகில் நின்று வேலை செய்தவர்கள் ஒருநிமிடம் நடுங்கி சற்று தள்ளி நின்றார்கள். ஆனால் சந்தோஷ் மட்டும் சிறிதளவும் நகரவில்லை அந்த சத்தம் அவனை பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.. 

இன்னும் கோபம் குறையாமல் மைக் முன்னால் வந்து அனைவரையும் இன்னும் ஐந்து நிமிடத்தில் ஒன்றுகூடல் அறையில் காத்திருக்கும் படி கர்ஜனையாக கூறிவிட்டு அவனது நீண்டகால்களால் வேக எட்டுக்கள் வைத்து அந்த அறைக்கு நடந்து சென்று அவனின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் மாமா..

சந்தோஷ் அவனின் அருகில் நின்றுகொண்டு இருந்தான்..

அவனின் சத்தம் அடங்கிய அடுத்த நிமிடம் சிறு சத்தமும் இல்லாமல் அனைவரும் அந்த அறையில் ஒன்று கூடினார்கள்..

அனைத்தையும் கண்களால் ஒரு தீவிர பார்வை பார்த்து மூளையில் பதியவைத்துக்கொண்டு அனைவரையும் பார்த்துக்கொண்டு மீண்டும் சத்தமாக கர்ஜிக்க ஆரம்பித்தான்..

” நாம என்ன தொழில் பண்ணுறோம்” என்றான்.சத்தமாக..

அவன் கேட்ட கேள்விக்கு அடுத்து என்ன பதில் சொல்லவேண்டும் என்று அனைவருக்கும் தெரியும்.. இது அங்கு தினமும் காலையில் நடக்கும் ஒன்றாகும்.

அனைவரும் சத்தமாக ” மாமா வேலை பார்க்கிறோம்.” என்றனர்..

” சத்தம் போதாது. இன்னும் சத்தமா? சொல்லுங்க என்ன தொழில் பண்ணுறோம்.” என்றான் கர்ஜனையாக.

அதற்கு அங்கு கூடி இருந்தோர் ” மாமாஆஆஆஆ வேலை பண்ணுறோம்..” என்றனர் மீண்டும் கோரஸாக..

அதை காது குளிர கேட்டவன் ” நான் ஒரு மாமா என்பது உங்க மனசுல ஆள பதிந்து இருக்கனும்.. இதுதான் முதலும் கடைசியும் இனிமேல் என்னை யாராவது பையானு சொன்னா அடுத்து பேச உங்க உடம்பில் தலை இருக்காது..” என்றான்.. 

” இப்போ சொல்லுங்க உங்களுக்கு  

நான் யாரு?..” என்றான்.

மீண்டும் அனைவரும் சத்தமாக ” மாமாஆஆஆஆ பையாஆஆஆ” என்றனர்.

அதை கேட்டவனின் உடல் ஒருகணம் அதிர்ந்து மீண்டும் அடங்கியது. அதை சந்தோஷ் மட்டும் கவனித்து யாருக்கும் தெரியாமல் அவனது கையை அழுத்தி பிடித்து கண்ணால் சைகை காட்டினான்..

அதை பார்த்து சற்று அமைதி அடைந்து அங்கிருந்து எழுந்து சென்றான் அவன் மாமாபையா என்கிற மாமனிதன்..

 அவனுக்கென்று இருக்கும் தனி அறைக்கு சென்ற பின் ” சந்தோஷ் நம்மளோட இந்த பிசினஸ்ல கடந்த நான்கு வருஷத்துல எந்த சறுக்கலும் இல்லாமல் கடந்து வந்துட்டோம். அதே மாதிரி இனி வரும் காலங்களையும் நமக்கு போட்டியோ தொல்லையோ இல்லாமல் இருக்கணும். அதுக்கு நாம ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணனும். எனி டைம் நம்ம ரொம்ப அலர்ட்டா இருக்கணும். ” என்றான்..

” யா ஓகே மாமா பையா. அந்த ஜெகன் டீம் இப்போ எல்லாம் நம்மள ரொம்ப டிஸ்டர்ப் பண்றாங்க.” என்றான் சந்தோஷ்.

” யா அவனுக்கு ஒரு பொங்கல் பார்சல் அனுப்பி விடுவோம்.. ஓகே நாம இப்போ ஐந்தாவது வருஷத்துல காலடி எடுத்து வைக்கிறதுக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கு. அதுக்குள்ள நம்மளோட டார்கெட் இன்னும் அடுத்த லெவலுக்கு கொண்டு போகணும்..” என்றான் மாமா பையா.

” ஓகே டன். நம்ம டீம் ஏஜென்ட்ஸ் எல்லாரும் ரொம்ப தீவிரமா ஹார்ட் வொர்க் பண்றாங்க மாமா பையா. எப்பவும் நம்மை ஜெகன் டீம் டச் பண்ண கூட முடியாது.” என்றான் சந்தோஷ்.

 ” ஓகே நம்மளோட மாமா திருமண சேவை எந்த லெவல்ல போகுது?.. கிராமப்புறங்களுக்கு போற புரோக்கர்கள் எல்லாரும் சரியான செட்டப் போடு தானே போறாங்க.? டெல்லி மும்பை கல்கத்தா ஹைதராபாத் அப்புறம் வெளிநாடுகளுக்கு அனுப்பின ஐட்டம்ஸ் பத்தின ரிப்போர்ட்ஸ் எல்லாம் இன்னும் அரை மணி நேரத்துல என் டேபிளுக்கு வரணும். அதை நான் செக் பண்ணி முடித்ததும் எல்லாருக்கும் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணு. கலந்து பேசி அப்புறம் ஓகே பண்ணிக்கலாம். இப்ப நீ போய் உனக்கான வேலையை பார்க்கலாம்.. ” என்று கூறி சந்தோஷ் வெளியே அனுப்பி வைத்துவிட்டு அவனுக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தான் மாமா பையா..

 சந்தோஷம் அவனிடம் இருந்து விடைபெற்று வெளியேறி அவனது அறைக்கு சென்றான்..

 அந்த அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு உள் இருந்தவளோ பயந்து கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்..

” ப்ளீஸ் தயவு செய்து என்னை எதுவும் பண்ணிடாதீங்க என்னை விட்டுடுங்க சார் நான் எங்க ஊருக்கு போயிடுறேன்” என்று கடந்த பத்து நாட்களாக இதேபோன்று அழுது கரைந்தாள் பாவை.

 அவனோ அவள் அழுவது பேசுவதும் காதில் கேட்காமல் அவன் இருக்கையில் போய் அமர்ந்து சிகிரேட் பிடித்து புகை விட்டுக்கொண்டே அவளிடம் தனது வழமையான டயலாக் பேசினான்.

” நீ எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் என் காதுல கேட்காது அப்படின்னு ரொம்ப நல்லா தெரியும். அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் பண்ற டால். அந்த டைம்ல எப்படி என்னோட கட்டிலுக்கு ஆசை நாயகியா காலம் முழுவதும் வரலாம் என்று முடிவு செய். இன்னும் உனக்கு இரண்டு நாள் மட்டும்தான் டைம் அப்புறம் உன்னோட சம்மதம் எனக்கு தேவை இல்லை. நீ மட்டும்தான் என்னோட மனசு ரொம்ப டச் பண்ணிட்ட ஓகே. அதனால் மட்டும் தான் உனக்கு இந்த இடம் இல்லேன்னா நீயும் மற்றவர்களோடு ஏதாவது ஒரு ஊருக்கு போய் இருப்ப ஓகே அண்டர்ஸ்டாண்ட். இன்னும் ரெண்டு நாள் அப்புறம் வருவேன் நல்ல பதில் சொல்லு பாய்.. ” என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டு சந்தோஷ் அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

  மாமா பையா கேட்ட அனைத்து ஃபையிலையும் எடுத்து கொண்டு அவனது அறை டேபிளில் வைத்துவிட்டு வந்தான் சந்தோஷ்.

 மாமா அனைத்தையும் மூன்று மணி நேரம் தீவிரமாக பார்த்துவிட்டு மீண்டும் சந்தோஷத்துக்கு அழைத்து மீட்டிங் ஏற்பாடு பண்ண சொன்னான்..

 அனைவரும் ஒன்று கூடியதும் அவனும் வந்து தனது இருக்கையில் அமர்ந்தான். அப்போது அனைவரும் கோரசாக ” குட் ஈவினிங் மாமாஆஆஆஆ பையாஆஆஆஆ ” என்றனர் மிகவும் சத்தமாக..

 இப்பொழுதும் அந்த சத்தத்தைக் கேட்டு ரசித்துக்கொண்டான் மாமா.

 அடுத்து அவன் மைக் முன்பு பேசுவதற்கு தயாராகினான்.

” காய்ஸ் உங்க வேலைக்கு ஏற்ப டீம் டீம் ஆக பிரிந்து நில்லுங்க. ” என்றான்.

அவனது கட்டளையே சாசனம் என்பது போன்று அவர்களது டீமோடு அவரவர்கள் சேர்ந்து நின்று கொண்டார்கள்.

” ஓகே காய்ஸ் லெட் ஸ்டார்ட் த மீட்டிங் டோண்ட் சவுண்ட். கடந்த நான்கு வருடமாக செய்து வரும் இந்த தொழிலுக்கு பல தந்திரங்களையும் யுக்திகளையும் கையாண்டு இருக்கிறோம். இப்போது இன்னும் புதுவிதமான யுக்திகளையும் செயற்படுத்த நாம் தீவிரமாக உழைக்க வேண்டும்.

 *பழைய கால திருமண புரோக்கர்கள் போன்று வெற்றிலை பாக்கு மஞ்சள் பை போட்டோஸ் இதுபோன்ற செட்டப்பில் சற்று வயது முதிர்ந்த புரோக்கர்கள் சென்னையை ஒட்டிய கிராமங்களுக்கு இந்த மாதமும் சென்று விட்டார்கள். 

* நவீன ரகமான கணணியை பயன்படுத்தி பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் ஃபேக் ஐடி வைத்து நமது தொழில் நடைபெறுகிறது.

 *ஏழை குழந்தைகளுக்கு லைட் போதை சாக்லேட் கொடுத்து நாம் கடத்தி ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.

* ஆண்களை வைத்து பெண்களுடன் ஆசை காட்டி காதல் வசனம் பேசி ஏமாத்தி அழைத்து வந்திருக்கிறோம்..

*ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வீட்டிலிருந்து சண்டை பிடித்து வெளியேறி வரும் பெண்களை கடத்தி இருக்கிறோம்.

 *பணத்திற்காக ஆசைப்பட்டு பெண்களை விலை பேசும் பெற்றோர்களிடமிருந்து அவர்களை பணம் கொடுத்து வாங்கி நாம் விற்று இருக்கிறோம்.. இது போன்று இன்னும் பல வழிகளில் நாம் பெண்களை கடத்தி மற்றும் விருப்பபட்டு வரும் பெண்களை கை மாற்றி உள்ளோம். இவை அனைத்தும் கடந்த நான்கு வருடங்களில் நமது தீவிர உழைப்பு ஆகும்.

அதுபோன்று 5 ஆவது வருட ஆரம்ப விழாவை சிறப்பிக்கும் முகமாக நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் 

‘மாங்கல்யமும் மாப்பிள்ளையும்” என்கிற பெயரில் திருமண சேவை ஆரம்பிக்க போகிறோம்.. இதற்கான வேலைகளை மிகவும் தீவிரமாகவும் துரிதமாகவும் சந்தோஷ் தலைமையில் ஆரம்பித்துவிட்டோம்.. ஓகே கைஸ் இனி இந்த மாதத்துக்கான டார்கெட் முடிக்க வேண்டும்..

நாம எல்லாரும் என்ன தொழில் பண்ணுகிறோம்.. ” என்றான்.

அதற்கு அங்கு கூடி இருந்தோர் ” மாமாஆஆஆஆ வேலை பண்ணுறோம்..” என்றனர் மீண்டும் கோரஸாக..

 அதை காது குளிர கேட்டவன் ” யா அது எப்போது நம்மளோட தாரகமந்திரம் மனசுல அழுத்தமாக பதிந்து இருக்கணும். தூக்கத்துல கேட்டாலும் சொல்ல கூடிய லெவலுக்கு இருக்கணும். ஓகே கைஸ் மீட்டிங் பினிஸ் லெட்ஸ் கோ ஸ்டார்ட் த வெர்க்.” என்று கூறி மீட்டிங்கை முடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..

திருமண சேவை என்று மக்கள் பார்வைக்கு காட்டிக்கொண்டு பெண்களை தவறான தொழிலுக்கு பயன்படுத்தும் மாமாபையா என்கிற இவன் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல பெண்களை கடத்தி இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி விற்றிருக்கிறான்..

அங்கு கூடியிருந்தவர்களும் கலைந்து சென்று அவர்களது வேலையை பார்க்க சென்று விட்டார்கள்..

அன்றைய நாளின் முடிவில்.

 நேரம் இரவு பத்து 

 அங்கு இருந்தவர்கள் அனைவரும் அப்பொழுது அவர்களது வேளையை தான் கன கச்சிதமாக செய்து கொண்டிருந்தார்கள்..

அப்பொழுது சந்தோஷ் அங்கிருந்து சற்று நகர்ந்து அவனது அறைக்கு வந்து விட்டான்.

 வந்தவன் இந்த மாமா டீமை பிடிப்பதற்காக புதிதாக வந்திருக்கும் அசிஸ்டென்ட் கமிஷனருக்கு இன்று இரவு பதினொன்று முப்பது மணிக்கு டெல்லிக்கு போக இருக்கும் ஐட்டம் ஏற்றுமதியை பற்றி தகவல் கூறிவிட்டு மீண்டும் வேலை இடத்திற்கு வந்து விட்டான்..

அவன் வந்த சற்று நேரத்தில் ஜெகன் டீமிடம் இருந்து பையா விற்கு அழைப்பு வந்தது..

” ஹலோ மாமா பையா கடத்தல் கேங் [கேகே] 5 பேசுறேன். ஜெகன்பாஸ் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 13 தொடக்கம் 18 வயதில் இருக்கும் 20 பொண்ணுங்களை அவனுடைய தனி பஸ்ல பிக்னிக் போற செட்டப்பில் மும்பை அனுப்புறான்.. தகவல் சொல்ல வேண்டியது என்னோட கடமை நீங்க உங்க சாமர்த்தியத்தை பயன்படுத்தி அந்த பொண்ணுங்களை கடத்தி அனுப்ப வேண்டியது உங்களோட வேலை.. சொன்னது போன்று என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்துடனும்.. ” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்..

 பணத்திற்காக பெண்களை தவறான வழிகளில் பயன்படுத்தும் இந்த பணப் பிசாசுகலிடமிருந்து இந்த பெண்களையும் சிறுவர்களையும் காப்பாற்றுவதற்கு யார் வருவாரோ!!..

 அந்த கூட்டத்திடம் மீராவும் சிக்கப் போவது யாரின் விதியோ? யார் அறிவர்?..

காலத்தின் கையில்..

  

 

Advertisement