காலையில் கண் விழித்தவளுக்கு தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல் அந்த கணம் கனத்தது.கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவள் அருகில் பார்க்க, அங்கு தேவ் இல்லை.
“குட்மார்னிங்” என்ற குரலில் திரும்ப, அப்போது தான் குளித்து முடித்து வந்திருந்தான்.
“குட்மார்னிங்” என்றவளின் குரலில் சுரத்தையே இல்லை. தொண்டை எல்லாம் காந்தியது. வயிறெல்லாம் எறிவைதைப் போல் இருக்க, அவளின் முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்டான் தேவ்.
தான் நைட்டி அணிந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தவள்,
“நைட் பார்ட்டி முடிஞ்சு எப்போ வந்தோம்? எனக்கு ஞாபகமே இல்லையே?” என்றாள் புரியாமல்.
“முடிஞ்ச உடனே கிளம்பிட்டோம்” என்றான். அவனுக்கு அவளை வம்பிழுக்கும் எண்ணம் இருந்தாலும், அப்போதைக்கு அதை தள்ளி வைத்தான்.
“நான் எப்படி நைட்டி?” என்று அவள் திக்கித் திணறி கேட்க,
அவனை முறைத்தவள்,”அப்படின்னாலும் வாமிட் எடுத்த மாதிரி எதுவும் எனக்குத் தெரியலையே?” என்றாள்.
“ஒன்னும் அவசரம் இல்லை. பிரேக் பாஸ்ட் இங்கயே இருக்கு. நிதானமா குளிச்சுட்டு, சாப்பிட்டு அப்பறம் உட்கார்ந்து யோசி. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்” என்றவன்,
“ஆங்.. ரொம்ப கேர்ரா இருந்தா ,லெமன் ஜூஸ் வித் சால்ட் போட்டது இருக்கு. அதை குடிச்சுக்கோ” என்றான்.
“எனக்கெதுக்கு கேர்ரா இருக்கணும்?” என்றவளுக்கு, இரவு நடந்தது மங்கலாய் விட்டு விட்டு ஞாபத்திற்கு வர, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“அப்போ நான் குடிச்சது ஜூஸ் இல்லையா?” என்றாள் அழுபவளைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு.
“இல்லை” என்று தலையை ஆட்டியவன்,
“சரக்கு டி சரக்கு. குடிகாரி குடிகாரி. நேத்து நீ என்னை படுத்தின பாட்டுக்கு, வந்து உன்னை வச்சுக்கிறேன்டி” என்று அவளின் இடுப்பைக் கிள்ளி விட்டு போக, அவளுக்குத் தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
‘என்ன? இடுப்பைக் கிள்ளிட்டு போறான்? வேற எதுவும் நடந்துச்சா’ என்று வேகமாக தன்னைப் பார்க்க, அவளின் செய்கைகளை பார்த்தும் பார்க்காதது போல் சென்றவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
வீட்டின் காலிங் பெல் சத்தத்தில்
‘யாரு விடாம பெல் அடிக்கிறது?’ என்று யோசித்துக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள் மித்ரா. வெளியே தொப்பி அணிந்து மாஸ்க் போட்டு நின்றிருந்தவனைப் பார்த்த மித்ரா தன்னையறியாமல்,
“வாங்க தேவ் சார்” என்று அழைப்பு விடுக்க, அவனின் புருவம் சுருங்கியது.
“வீட்ல வேற யாரும் இல்லையா?” என்றான் உள்ளே வந்தபடி.
“இல்ல சார். எல்லாம் திருச்சியில இருக்காங்க. ஆரா இங்க சென்னை வரும் போது இங்க ஸ்டே பண்ணுவா” என்றாள் மித்ரா.
“நோ நீட் மித்ரா. எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவனை புரியாத பாவனையில் பார்த்தாள்.
“சொல்லுங்க சார்?” என்றாள்.
“நீங்க இதுக்கு முன்னாடி என்னை எங்கையாவது பார்த்திருக்கிங்களா? ஐ மீன் எங்க மேரேஜ்க்கு முன்னாடி” என்றவனின் கேள்வியில் அவள் அதிர, இப்போது என்ன சொல்வது என்று யோசித்தாள். ஏன் என்றால் அவன் ஜெய்யாக அவள் முன் அமர்ந்திருந்தான்.
“சரி அதை விடுங்க? ஆரண்யா உங்களுக்கு பிரண்ட் தானே?” என்றான் கேள்வியாக.
“இதுல என்ன சார் டௌட் உங்களுக்கு?” என்றாள் சற்று குரலை உயர்த்தி.
“அப்பறம் எதுக்காக நேத்து அவளுக்கு ஜூஸ்ல போதை மாத்திரை கலந்த?” என்றான். அவன் கேட்ட கேள்வியில் சட்டென்று எழுந்து நின்று விட்டாள் மித்ரா.
“நா..நான் எதுவும் கலக்கலையே?” என்றாள் திணறாமல் சமாளித்தபடி.
“நீ கலந்ததுக்கு ஆதாரம் இருக்கு என்கிட்ட. உண்மையை அக்சப்ட் பண்ணிகிட்டா உனக்கு நல்லது. இல்லைன்னா நான் பர்தரா ஆக்சன் எடுக்க வேண்டியது வரும்” என்றான். அவன் தோரணையிலும், முகத்தில் தெரிந்த கடுமையிலும், எச்சில் விழுங்கினாள் மித்ரா.
“சார்” என்றவளுக்கு பேச்சே வரவில்லை.
“ஹோ, நீ நம்பலையா?” என்றவன் தனது மொபைலைக் காட்ட, அதில் மித்ரா மாத்திரை கலப்பது தெளிவாக இருந்தது.
“ஹேய் ஆரா அந்த ஜூஸ் உனக்குப் பிடிக்காது. இதைக் குடி” என்று மித்ரா நீட்டியது வரைக்கும் தெளிவாய் இருந்தது.
“ஆனா ஆரா அந்த ஜூசை குடிக்கலை சார்.” என்றாள் வேகமாய்.
“இங்க ஆரா எதை குடிச்சான்றது கேள்வி இல்லை. நீங்க ஏன் கலந்திங்க? அதான் கேள்வி” என்றான் பொறுமையாய்.
அவள் பதில் சொல்லாமல் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க, மாஸ்க்கை கழட்டியவன்,
“நம்ம கொஞ்சம் இன்னும் ஒப்பனா பேசலாமா மித்ரா?” என்றவனை பயப்பார்வை பார்த்தாள்.
“சோ நான் சந்தேகப்பட்டது சரிதான் இல்லையா?” என்றான்.