Advertisement

நீலகண்டன் ஒன்றும் சொல்லாமல் மனையாளையே பார்த்தான்.. ”இரு.. வேற யோசிக்கலாம், அவனுக்கு.. தகுந்தாற் போல.. அவன் பேச்சில் காரியம் செய்கிற ஆள்.. இந்த வேலை அவனுக்கு ஆகாது, இரு, நான் ஒரு யோசனை வைச்சிருக்கேன்.. இன்னும் இரண்டு நாள் சென்று.. அதோட ப்பாஸிபெலிட்டி பார்த்துட்டு சொல்றேன்.. சரி வரும்மான்னு கேட்க்கலாம்..” என்றான் எதோ பெரிய யோசனையில் இருப்பவன் போல.

ரஞ்சனி “அது என்ன இப்போவே சொல்லுங்களேன்.. என் அண்ணன் பாவம் எவ்வளோ கஷ்ட்டப்படுறான்.” என்றாள் நல்லவிதமாக.

நீலகண்டன் “சரி, கடைக்கு போயிட்டு வரேன்..” என்றவன் மனையாளை பார்த்து.. ‘பதில் இப்போது உனக்கு கிடைக்காது’ என தலையை அசைத்து கிளம்பினான்.

மனையாள் நொடித்துக் கொண்டாள் ‘க்கும்..’ என. கணவன் கண்டுக் கொள்ளாமல் கிளம்பினான்.

நீலகண்டன், யோசித்து.. மாதவனுக்கு ஏற்ற தொழில் என சொன்னது ரியலேஸ்டேட் தொழிலைத்தான். மாதவனின் பேச்சுக்கும்.. அவனுடைய பழகும் வட்டத்திற்கும்.. இறங்கி செய்தால் நாளை அவன் அரசியலில் வளம் வர வாய்ப்பு கூட இருப்பதாக தோன்றியது நீலகண்டனுக்கு. அத்தோடு, நஷ்ட்டம் என இருக்காது. முதலில் சிறிய அளவில், அவனும்.. தன் மனையாளும் சேர்ந்து நிலம் வாங்கி பிளாட் போடட்டும்.. விரும்புவோருக்கு வீடும் கட்டி கொடுக்கட்டும் என தானே யோசித்தான். பின்தான் மாதவனிடம் இதை பகிர்ந்தான் நீலகண்டன்.

நீலகண்டன் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் தங்கை இருவருக்கும்.. சந்தோஷம்தான். மாதவனுக்கு, நீலகண்டனின் திட்டமிடல் சரியாக வருமென தோன்றியது.. சரியான வழி தெரியாமல் தடுமாறி கொண்டிருந்தவனுக்கு.. சிறு வெளிச்சமாக நீலகண்டன் சொன்ன யோசனை பிடித்தது. அதை இனிதாக ஆரம்பித்தான் மாதவன்.

தங்களின் பூர்வீக வீட்டில் இருந்த கட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றல் செய்து.. அதை தங்கள் வசம் கொண்டு வந்தனர் அண்ணன் தங்கை இருவரும். அத்தோடு அதன் பேரில் இருவரும் சேர்ந்து கடன் வாங்கினர். 

மாதவனுக்கு அரசாங்கம் சம்பந்தமான எல்லா ஆட்களையும் தெரியும் என்பதால்.. முயன்று நான்கு மாதத்தில் தங்களுக்கு என ஒரு ப்ரோமொட்டர்ஸ் என்பதை உருவாக்கிக் கொண்டனர், மாதவன் ரஞ்சனி இருவரும்.

ரஞ்சனி, அமைதியாக வேலைக்கு மட்டும் செல்ல.. நீலகண்டனும் மாதவனும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து நிறுவனத்தை நடத்த தொடங்கினர். இன்னமும் வேலையை விடவில்லை பெண்.

முதல் முதலில் இருபத்தைந்து சென்டில் மொத்தமாக இடம் வாங்கி.. “பிருந்தாவன்” என பிளாட் போட்டிருந்தனர். நல்ல விளம்பரம் செய்தனர்.. தெரிந்தவர்கள், அரசு அலுவலகர்கள் என எல்லோரிடமும் முறையாக சொல்லி.. விற்பனையை தொடங்கினர். வேலைகளை தொடங்கி செய்தனர்.

மாதவன் திறப்பு விழாவிற்காக.. தனது கட்சி தலைவரை அழைத்திந்தான். மாதவன் வேண்டாம் என்றான் முதலில். ’எதற்கு, அவர்களை அழைத்து..’ என்ற சுனங்கினான்.

நீலகண்டன் “அப்புறம் வேற யாரை கூப்பிடுவ.. நீ எப்படி இருக்கேன்னு தெரிய வேண்டாமா அவங்களுக்கு.. அவங்களைத்தான் கூப்பிடனும் நீ.” என்றான் சிரித்துக் கொண்டே.

மீண்டும் அவனே “அரசியலுக்கும்.. இந்த தொழிலுக்கும்.. எப்போதும் நட்பு உண்டு. அதனால் பகைச்சிக்க கூடாது மாதவ்.. டேக் இட் ஈசி… இனி எவ்வளவோ இருக்கு..” என்றான் சிரித்துக் கொண்டே. விழுந்து எழுந்த மாதவனுக்கு இந்த தந்திரம் புரியாமலா போகும்.. மாதவனும் ஏற்றுக் கொண்டான், நீலகண்டனின் வார்த்தைகளை.

எனவே, கட்சியை சார்ந்தோர்கள், பெரும் மனிதர்கள் நடமாட்டம், அரசு சம்மந்தப்ட்ட மனிதர்கள் என இவர்களின் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம் ஊரில் எல்லோருக்கும் தெரிய தொடங்கியது. மாதவன் நீலகண்டனின் நிலை இன்னும் விரிவடைந்தது. முன்னேற்றம் என்ற பாதை கண்முன் விரிந்தது.

அதன் காரணமாக நீலகண்டன் வீடு வருவது இரவு பதினோருமணி என்றானது. கணவன் மனைவி இருவரும் பேசிக் கொள்ளும் நேரம் குறைந்தது.. ரஞ்சனி பத்து மணிக்கு உண்டு விடுகிறாள்.. உறக்கமும் அவளை நெருங்கி விடுகிறது. கணவன் வரும் நேரம் எரிச்சல் வருகிறது அழுகை வருகிறது. சற்று நேரம் பேசினாலும் சண்டை என வர.. இந்த ஒரு மாதமும் கண்ணாடி மேல் நடக்கும் நிலை கணவன் மனைவி இருவருக்கும். 

தொழில் தொடங்கிய முதல் ஆறு மாதம் ஏதும் தெரியவில்லை.. பெண்ணுக்கு. தொழில் ஆரம்பித்த புதிது.. ஆசையாக ரஞ்சனியும் எல்லாம் செய்தாள். கணவனை பார்க்க முடியவில்லை என்றாலும்  தன் சார்பாக எல்லாம் பார்க்கிறான் என அமைதியாக இருந்தாள். 

மாதவன் இடம் பார்க்க.. விலை பேச என அதிகம் வெளியில்  செல்லுவது.. என இருந்தான். நீலகண்டன்தான், வரும் ஆட்களுக்கு இடம் காட்ட.. விலை பேச.. என பீல்ட்டில் இருக்கும் அலுவலர்கள் அழைக்கும் நேரம் சென்று  நிற்க வேண்டும். அத்தோடு, மாதவன், இந்தாலும் இல்லை என்றாலும் கணக்கு வழக்கு நீலகண்டன் வசம்தான். எனவே, முக்கயமான இடத்தில் எல்லாம் மாதவன் உடன் நீலகண்டனும் இருக்க வேண்டிய நிலை. 

நீலகண்டன் இன்று சனிகிழமை.. என்பதால், மிகவும் லேட். ப்ரோமோட்டர்ஸ் சென்று, மாதவனோடு சேர்ந்து, லேபௌர்ஸ் எல்லோருக்கும் கூலி கொடுத்து அதன் கணக்கை பார்த்து.. பின் மளிகை கடைக்கு வந்து, அதனை பார்த்துவிட்டு.. கார்த்திக் உடன் சற்று நேரம் பேசிவிட்டு வர.. மணி பனிரெண்டை தொட இருந்தது. நீலகண்டன் வந்து உண்டு, மனையாளை அணைத்துபடி உறங்கிவிட்டான்.

மறுநாள் விடுமுறை தினம் காலையில் எழுவதற்கே லேட் ஆக.. ரஞ்சனி அவசரமாக காபியை போட்டவள், கணவனை காணாமல் கோவமாக அமர்ந்தாள்.

கடமை தவறாத நீலகண்டனோ கடைக்கு சென்றிருந்தான். கோகுல் ஞாயிறு வருவதற்கு சற்று தாமதமாகும் எனவே, எட்டு மணிக்கே சென்றுவிட்டான் கடையை திறக்க.

ரஞ்சனி கோவமாக அமர்ந்திருந்தாள்.. ஒன்றும் புரியவில்லை, கணவனின் கண்களை பார்த்து கதைத்து பலநாட்கள் ஆனா உணர்வு.. மெல்ல மெல்ல.. தொண்டையில் இறங்கியது, கணவனின் பாராமுகம்.

ஆனால், பெண்ணுக்கு புரிகிறது. அப்படி ஒன்றும் கணவன் தன்னை கவனிக்காமல்.. பார்க்காமல் இல்லை.. என. தினமும் காலையில் கிட்சென் வந்து நிற்பான்.. தனக்கு உதவிகள் செய்வான். தன்மேல் கை போடாமல் உறங்கவே மாட்டான். காலையில் எழுந்ததும் கேட்பான் “ரஞ்சி.. வேலையை விட்டுட்டேன்.. நம்ம இடத்தில் கொஞ்சம் வந்து பாரேன்.. என்னமோ கொஞ்ச நாளா.. டல்லா தெரியுற..” என ஏதேதோ பேசுகிறான். ஆனால், நான்தான் அதையெல்லாம் கேட்கவில்லை.. என ஓடிக் கொண்டே இருக்கிறது அவளுள். 

எழவில்லை.. காபியை குடித்தவள்.. அப்படியே சோபாவில் சரிந்து படுத்துக் கொண்டாள். கண்கள் மூடிக் கொண்டாள்.. தலை சுற்றியது.. கண்கள் இருண்டது.. ரஞ்சனிக்கு என்னமோ பயம் வந்தது.. கண்களை திறந்தாள்.. இன்னும் கீர்ரென்ற உணர்வு. கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.. “ஒருவேளை, இன்னமும் சாப்பிடாததால் இருக்குமோ..’ என தோன்ற.. “இப்போ போய் சமைக்கணும்..” என தோன்ற அழுகையாக வந்தது. தினமும் செய்வதுதான்.. ஆனால், ஒன்றும் புரியவில்லை கண்ணில் கடகடவென நீர் இறங்கியது. ஒன்றும் செய்ய தோன்றாமல்.. அப்படியே கண்மூடிக் கொண்டாள்.

Advertisement