Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

26

ரஞ்சனி, போகலாம் என சொல்லிவிட்டாள்.. ஆனாலும், கணவனுக்கு மனது கேட்டக்கவில்லை.. அங்கே போய், ‘ஏதேனும் தன்னையும் ரஞ்சனியையும் பேசி விடுவானோ’ என எண்ணம்.. தம்பியை பற்றி நன்றாக தெரியும் நீலகண்டனுக்கு. எனவே, யோசித்தான் நீலகண்டன்.

ரஞ்சனிக்கு, கணவனின் தம்பி மீதான பாசம் முக்கியமாகப்பட்டது.. அத்தோடு, என் கணவரென்ன தவறு செய்தார் என்ற முறையான கோவம் மனையாளுக்கு.. எனவே, வேண்டுமென்றே கிளம்பினாள்.

மாலையில் அலுவலகம் முடித்து வந்தது தொடங்கி.. புடவையை எடுத்து வைப்பது.. நகையை எடுப்பது.. என அந்த கட்டில் முழுவதும் தன் உடைகளை பரப்பி வைத்திருந்தாள், ரஞ்சனி.

நீலகண்டன் மனையாள் சொல்லியதற்கேற்ப, நேரமாக வீடு வந்தான். கணவன் வீடு வரும் போது.. சென்னை கிளம்ப ஆயுத்தமாகி இருந்தாள் பெண். 

தனது உடைகளும் பேக் செய்து தயாராக இருப்பதை பார்த்தான் “என்ன ரஞ்சி, செம பக்கிங்கா இருக்கு..” என்றான் கணவன்.

ரஞ்சனி “ம்… கெத்து காட்டறோம்” என்றாள்.

நீலகண்டன், டேபிள் மேல் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மனையாளை, அவளின் தோள் பிடித்து நிறுத்தினான் “அவன்.. அங்க.. உன்னிடம் பேசவில்லை.. பார்க்கவில்லைன்னு என்கிட்டே வருத்தப்பட கூடாது.. அங்க என்ன நடந்தாலும் அதை ஏத்துக்கணும்..” என்றான் தன்மையான குரலில். குகனுக்கு, தன்னுடைய இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையே.. எனவே, அவன் இவளிடம் கண்டிப்பாக பேச மாட்டான்.. இவள் கண்டிப்பாக அங்கே வந்து வருந்துவாள்.. அதனால், ஏன் இத்தனை  ஆர்ப்பாட்டம் என அவன் மனதில் தோன்ற, தன் மனையாளிடம் இறுதியாக எச்சரிக்கிறான். 

ரஞ்சனி “க்கும்.. உங்களையே மதிக்கலை.. என்னையா மதிக்கனும்ன்னு எதிர்பார்ப்பேன்.. அதெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.. ஏன் இவ்வளோ டென்ஷன்… ரிலாக்ஸ்” என்றாள்.

கணவனுக்கு என்னமோ தன் மனையாள் சரியில்லை எனத்தான் தோன்றியது.. தன் கைபிடியிலிருந்து சிரித்துக் கொண்டே விடைபெறும்.. ரஞ்சனியை பார்த்துக் கொண்டே நின்றான் இரண்டு நிமிடம்.

ரஞ்சனி “வாங்க, அடுத்த முறை.. சிறந்த யோசனைக்காக நோபல் பரிசு உங்களுக்குத்தான்.. நான் ரெக்மெண்ட் பண்றேன்.. வாங்க, இப்போ சாப்பிடலாம்” என்றாள், கிண்டலாக.

நீலகண்டனுக்கு மனையாளின் வார்த்தைகள் புரிய.. தன்னை தாண்டி சென்றவளின் இடுப்பில் கிள்ளி.. “கொழுப்பு கூடி போச்சிடி உனக்கு” என்றான் தன் சிந்ததனையை எல்லாம் விடுத்து.

ரஞ்சனி, கணவன் கில்லியதில் “ஆ… உங்களுக்கும் கை நீண்டு போச்சு” என்றாள் முறைத்தபடி.

நீலகண்டன் பாவனையாக தன் கையால், தன் வாயை மூடிக் கொண்டான்.. இனி பேசமாட்டேன் என்பதாக. மனையாள் “கைதான் நீண்டது சொன்னேன்” என்றாள் கண்ணடித்து.

கணவன் இப்போது அவள் வாயை மூடினான் “போதும் டி…” என்றான், பாவமாக.

ரஞ்சனி “யாருகிட்ட” என்றபடி அமர்ந்தாள்.. உணவு மேசையில். இருவரும் எப்போது கிளம்புவது என பேசியபடியே உண்டனர்.

நேரமாக கிளம்பினர் சென்னை நோக்கி.. நீலகண்டன் சொல்லிக் கொண்டே வந்தான்.. “இங்க வந்ததிலிருந்து.. ஒரு இதமான மனநிலையில் செல்லுவது இந்த ட்ரிப் மட்டும்தான்.. மத்தது எல்லாம் ஒரு பீதியிலேயே போனேன்..” என்றான் லேசாக புன்னகைத்து.

பத்து மணிக்கு, இவர்கள் வந்துக் கொண்டிருக்கும் போது.. அர்ச்சனாவின் தந்தை அழைத்தார் நீலகண்டனை.. “தம்பி கிளம்பிட்டீங்களா” என்றார் ஒரு வரவேற்பான கேள்வியாக.

நீலகண்டனும் பதில் பேசினான்.

அர்ச்சனாவின் தந்தை “சரிங்க தம்பி… காலையில் வந்திடுங்க சேர்ந்தே மண்டபம் போய்டலாம்” என்றார். 

நீலகண்டனுக்கு நிரம்ப நிம்மதி.. “சரிங்க” என்றான். கிளம்பும் போது வரை.. ரஞ்சனி “குகன் அத்தானுக்கு பிடிக்கலைன்னா, நாம ரூம் எடுத்து தங்கிக்கலாம்.. மண்டபம் மட்டும் போயிட்டு வந்திடலாம்” எனதான் சொல்லியிருந்தாள். நீலகண்டனும், மனதேயில்லாமல் தலையை உருட்டியிருந்தான். இப்போது அர்ச்சனாவின் பெற்றோர் அழைத்து முறையாக வர சொல்லவும்.. நீலகண்டன் “ரஞ்சனி, வீட்டிற்கே போகலாமே.. அர்ச்சனாவின் அப்பா கூப்பிட்டு சொல்றார்” என்றான்.

மனையாள் “கூப்பிட்டாங்கள்ள.. எனக்கு ஓகே..” என்றுவிட்டாள்.

ரஞ்சனி, தனது போன் கொண்டு.. பாடல் ஒலிக்க செய்தாள்.. வண்டியில்.. மிதமான வேகம்.. மெலிதாக இளையராஜாவின் இசை உடன்வர இரவு பயணம்.. நீலகண்டனும், இப்போது விரும்பி பாடலை கேட்க்க தொடங்கினான்.. மனதில் எந்த நெருடலும் இல்லாமல் பயணித்தனர் இருவரும்.

“மனதை மயிலிடம் இழந்தேனே..

மயங்கி தினம் தினம் விழுந்தேனே..

மறந்து 

இருந்து

பறந்து 

மகிழ

உன் பார்வையில்..” என பொழிந்தது பாடல்.

அதிகாலை நான்கு மணிக்கு முன்பே சென்றனர்.. குகன் வீட்டிற்கு. அர்ச்சனாவின் தந்தை வந்து கதவை திறந்து வரவேற்றார்.. நீலகண்டன் தம்பதியை. உறவுகள் எல்லாம் ஹாலில் படுத்திருந்தனர். இவர்களுக்கு என.. இருந்த இன்னொரு அறையை ஒதுக்கியிருந்தனர் போல.. அர்ச்சனாவின் தந்தை “அந்த ரூமில் கொஞ்சம் ஓய்வெடுங்க தம்பி..” என அந்த அறையை காட்டினார். இருவரும் சென்றனர்.

காலையில், ரஞ்சனி குளித்து பட்டு புடவை கட்டி வெளியே வந்தாள். பெண்கள் நால்வர் எழுந்து இருந்தனர். ஆண்கள் ஹாலில் இருந்தனர்.. அர்ச்சனாவின் தந்தையைத்தான், ரஞ்சனிக்கு தெரியும்.. எனவே, நேரே கிட்சென் சென்றாள். அங்கே அர்ச்சனாவின் அன்னை ”வா ரஞ்சனி.. குளிச்சிட்டியா.. தம்பி எழுந்துடுச்சா.. இரு காபி கலக்கிறேன்” என்றார்.

காபி கலந்துக் கொண்டே, தன் உடன் நின்ற பெண்மணிகளை அறிமுகம் செய்தார்.. “இது, என் ஓரகத்தி.. அர்ச்சனாவின் பெரியம்மா.. இது அவங்க மருமக.. இவங்க, என் சித்தி.. “ என ஒவ்வொருவரையாக அறிமுகம் செய்தார்.. ரஞ்சனி யாரென அவர்களுக்கும் அறிமுகம் செய்தார். 

இப்போது காபியை கையில் கொடுத்தார்.. ”தம்பிக்கு கொடுத்திட்டு வா.. உனக்கு தரேன்” என்றார்.

ரஞ்சனி காபியோடு உள்ளே சென்றாள். நீலகண்டன் சரியாக குளியலறையிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் காபியை கொடுத்தாள்.

அங்கே, அர்ச்சனா இப்போது எழுந்து வந்தாள். அர்ச்சனாவின் அன்னை அவள் கையில் குடிப்பதற்கு சத்துமாவு கஞ்சியை கொடுத்தார் “போ.. உன் மச்சாண்டார் வந்திட்டார்.. போய் வான்னு கேட்டுட்டு வா..” என்றார், அதட்டலாக. 

அர்ச்சனாவிற்கு நீலகண்டன் இங்கே வருவது தெரியாதே, அதிர்ந்து பார்த்தாள், தன் அன்னையை.

அர்ச்சனாவின் அன்னை “நான்தான் அப்பாகிட சொல்லி போன் செய்து பேச சொன்னேன். பாரு, நாங்க பேசும் முன்பே இரேண்டு பேரும் கிளம்பிட்டாங்க.. நீங்க ஒருவார்த்தை பேசியிருக்கலாம்.. நீயாவது பேசி இங்க வாங்க மாமான்னு கூப்பிட்டிருக்கலாம்” என்றார், அவளின் தவறை எடுத்து சொல்லி.

அர்ச்சனா “அவர்தான் ம்மா… நமக்கு விஷேஷம்ன்னு நாமே எப்படி கூப்பிடறதுன்னு சொன்னார்.. அதான்.” என்றவள் “நான் போய் பார்க்கிறேன்” என்றாள்.

ரஞ்சனி வெளியே வர.. அர்ச்சனா “வா ரஞ்சனி.. அண்ணா எங்க” என்றாள்.

ரஞ்சனி “அர்ச்சனா என்ன அண்ணா, மாமான்னு சொல்லுங்க..” என்றபடி மீண்டும் அறைக்குள் வந்தாள் அர்ச்சனாவோடு.

நீலகண்டன் உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான், குளிப்பதற்காக. இப்போது கதவு திறக்கவும் பார்த்தான், இரு பெண்களும் நின்றிருந்தனர். 

அர்ச்சனா “வாங்க அ.. மாமா” என்றாள்.

நீலகண்டன் “எப்படி இருக்க அர்ச்சனா” என்றான்.. நல்லவிதமாக பேச்சுகள் சென்றது மூவரிடமும்.

பின் பெண்கள் இருவரும் கிட்சேன் வந்தனர். காலை காபி மட்டும் இங்கே, காலை உணவு மண்டபத்தில் எனவே, எல்லோரும் கிளம்பினர்.

ரஞ்சனி, குளித்து விட்டதால்.. அர்ச்சனாவின் அன்னை அவளிடம் பூவை கொடுத்து பூஜை அறையில் சாமிக்கு போட சொல்லினார்.. ரஞ்சனி அதை செய்ய தொடங்கினாள். 

பெண்கள் ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர்.. கிட்சென் பூஜை அறை இருந்த பக்கம்தான். எனவே, அர்ச்சனாவின் அன்னை அவளிடம் பேசிக் கொண்டே.. எழுந்தவர்களுக்கு காபி கொடுத்துக் கொண்டு அங்கேயே நின்றார்.

குகன், இப்போது எழுந்து வந்தான்.. அர்ச்சனா குளித்துக் கொண்டிருப்பதால்.. தானே காபி வாங்கிக் குடிக்க கிட்சேன் வந்தான். பூஜை அறையை தாண்டிதான் கிட்சென், அங்கே ரஞ்சனி நிறப்பதை கவணிக்கவில்லை குகன்.. நேரே மாமியாரிடம் சென்று “அத்தை காபி” என்றான்.. மீண்டும் ஹாலுக்கு செல்ல எத்தனித்தான்.

குகனின் மாமியார், அர்ச்சனாவிடம் சொல்லி இருந்தார்.. நீலகண்டன் வரவு பற்றி.. இப்போது ரஞ்சனியை தன் மாப்பிள்ளை கவணிக்கவில்லை என எண்ணி, எப்படி சொல்லுவது என தெரியாமல், ”அர்ச்சனா ஏதாவது சொன்னாளா மாப்பிள்ளை” என்றார்.

குகன், திரும்பி பார்க்க… அப்போதுதான் ரஞ்சனி பூஜை அறையின் வாசலிருந்து தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. குகனிடம் முதலில் வந்தது அதிர்ச்சிதான்.

குகன், என்னவென புரியாமல் நொடி நின்றிருந்ததில்.. ரஞ்சனி “என்ன அத்தான், என்னை தெரியுதா” என்றாள்.

குகன், சுதாரித்து திரும்ப.. ரஞ்சனி “என்னை கல்யாணம் செய்துகிட்டதால்தான் உங்க அண்ணன்கிட்ட பேசறதில்லையா நீங்க” என்றாள் கோவமாக.

குகன், அமைதியாக நின்றான். இப்போதும் அதே கடுகடு பாவம்தான் அவன் முகத்தில்.. அத்தான் என்ற அழைப்பு உண்மையாகவே அவனுக்கு உவப்பாக இல்லை.. மாமியாரின் எதிரில் மீண்டும் இப்படி பேசுவது அவனுக்கு கடுப்பை கொடுத்தது. ஆனாலும், அவரின் எதிரில்.. சட்டென திரும்பி செல்ல தோன்றாமல் நின்றான்.

குகனின் மாமியார், குகனை தாண்டிக் கொண்டு, ஹாலுக்கு சென்றுவிட்டார்.. பேசட்டும் என்று.

 

 

Advertisement