Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

24

வீடு வந்து சேர விடியலை தொட்ட இருந்தது நேரம்.. என்னமோ இரவு முழுவதும் சலிப்பில்லை இருவருக்கும், பேச்சு.. பேச்சு.. பேச்சுதான். பேசி தீர்த்தாள் ரஞ்சனி.. நீலகண்டனுக்கு பேச்சு என்பது அவ்வளவாக வரவில்லை என்றாலும்.. நடுநடுவில் தானும் தன்னை பகிர்ந்தான். ஆனால், அவனின் எல்லா நிகழ்வுகளிலும் தம்பி முன் நின்றான்.

ரஞ்சனிக்கு அப்போதுதான் புரிந்தது.. தன் கணவனின் நிலை.. தம்பி என்பதையும் தாண்டி.. நீலகண்டன் ஒரு குழந்தை அவன்.. என பாசம் வைத்துவிட்டான். அதனால், அவனின் குறையையும் குற்றங்களையும் ஏற்க கணவனின் மனம் ஒப்பவில்லை என புரிந்தது. இப்போதும் அப்படியே, எங்கும் தம்பியை ஒரு வார்த்தை குறைத்து சொல்லவில்லை கணவன் என குறித்துக் கொண்டாள்.

ஆனால், கணவனின் கல்லூரி காலம் அவளுக்கு.. அழுகையையும் வருத்தத்தையும் தந்தது.. அதையெல்லாம் நீலகண்டன் புன்னகை மாறாமல் சொல்ல சொல்ல.. மனையாள் வருத்தமாக அவன் தோள் சாய்ந்துக் கொண்டாள்.

ஆனால், நீலகண்டனுக்கு ரஞ்சனியின் பேச்சு ஆச்சர்யத்தை தந்தது.. அவர்ளுக்கு உறவென யாரையும் தெரியவில்லை.. அம்மா இல்லை, சொந்த அண்ணன் இல்லை.. அதிகம் வீட்டில் யாரும் இவளை கண்டித்தது இல்லை.. ஆனால், எப்படி என்னோடு பொருந்தி போனாள் என்பதன் ஆச்சர்யம் அவனுக்கு வந்தது. எப்படி தந்தை சொன்ன ஒரே காரணத்தில் என்னை பிடித்ததா.. என யோசனை அவனுள்.

ஆனால், அதெல்லாம் ஒன்றுமில்லை என ரஞ்சனி தன் விருப்பு வெறுப்பு.. கல்லூரி காலம்.. அண்ணனின் அரசியல்.. பின் பிரசாந்த்.. தன் அண்ணன் நட்பு என எல்லாம் பேசினாள் பெண். ஆக, இருவருக்கும் ஒரு புரிதல் தொடங்கியது.. விடியலும் தொடங்க.. வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

ரஞ்சனி வீடு வந்ததும் ஹாலில் அப்படியே கால் நீட்டி படுத்துக் கொண்டாள்.. நீலகண்டன் உடைமாற்றிக் கொண்டு ரெஸ்ட் ரூம் சென்று வந்து, பால் இருக்கிறதா என பார்த்து.. “ரஞ்சி பால் வாங்கிட்டு வந்திடுறேன்” என பொறுப்பாக சொல்லிவிட்டு வெளியே பூட்டிக் கொண்டு சென்றான்.

ரஞ்சனிக்கு சிரிப்பாக வந்தது.. ‘எவ்வளோ பொறுப்பு’ எனதான். ரஞ்சனிக்கு, அப்படியே அமர்ந்தே வந்தது.. ஒருமாதிரி இருக்க.. உடை கூட மாற்றவில்லை, எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள் மீண்டும்  அப்படியே படுத்துக் கொண்டாள்.. உறக்கம் அவளை தழுவியது.

நீலகண்டன், பால் வாங்கி வந்து காபி போட்டுக் கொண்டு அமர்ந்தான். தம்பியிடம் நின்றது மனது.. முயன்று தம்பியை தள்ளி வைத்தான்.. எதிரில், அசந்து உறங்கும் மனையாளை பார்த்தான்.. கைகளை தலைக்கு வைத்து.. அசந்து உறங்கினாள்.. நெடிலான வனப்பான தேகம் நீட்டி, ஒருகளித்து.. அவனை மயக்கும் ஆலகாலமாக படுத்திருந்தாள்.. அவனவள். அவனின் மோக தாகம் பெருங்கடலாக வடிவெடுத்தது.

தங்களின் அறைக்கு சென்று.. விரிப்பு தலையணை எடுத்து வந்தான். அவளின் அருகில் விரித்து.. தான் படுத்துக் கொண்டான் முதலில்.. பின் அவளை மெதுவாக தன்பக்கம் திருப்பி, அவளின் தலையை தன் கைக்கு இடம் மாற்றிக் கொண்டான். வலுவான தன் கைகளில் மனையாளின் மலர் முகம் இதமாக அழுத்த.. கணவன் அவள் முகத்தை அருகில் பார்த்தான்.. எந்த ஒப்பணையும் இல்லை.. ஓய்ந்த முகம்.. எப்போது தலை வாரினாள் என தெரியவில்லை.. சிறு முடிகள் எல்லாம் இப்போது தான் அவளை இழுத்ததில்.. நெற்றியில் வந்திருக்க.. அதனை மென்மையாக காதோரம் ஒதுக்கினான்.. அவளின் மென்மை.. அவனை தூண்ட.. ‘உறங்குகிறாள்.. அவளை எழுப்பாதே’ என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டாலும்.. அவனின் விரல்கள் அந்த வேலையை செய்ய தொடங்கியது.. அவனின் பெருவிரல்.. காதோர கன்னத்தை வருட.. மனையாள் கண்விழித்தாள். விழித்தவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சி.. “ஐயோ..” என்றபடி சட்டென விலகினாள்.. ஆனால், முடியவில்லை அவளால்.. கணவன் அவளின் இடையை தன்னோடு சேர்த்திருந்தான். ரஞ்சனிக்கு குப்பென்.. முகம் சிவந்தது.. கணவனின் செய்கையில்.. உடலெல்லாம் சிலிர்க்க “என்ன பண்றீங்க” என்றாள் மனையாள்.

நீலகண்டன் இன்னும் இறுக்கமாக அவளை தன்னோடு அணைத்துக் கொள்ள.. ரஞ்சனி திணறினாள்.. அவளும் எதேதோ பேச.. “மூச்சு..” என்றாள், “வெளிச்சம் வந்திடும்..” என்றாள் “என்ன நீங்க” என்றாள். ஆனால், அவளின் கணவன் பதில் சொல்லவில்லை. அவளின் ஒவ்வொரு முனகளுக்கும்.. அவளை சிலிர்க்க வைத்தான் ஆலகாலன்.. தன்னவளை பேச்சிழக்க செய்தவன்.. தன்னை அவளிடம் இழந்து.. அவளை தனக்குள் எடுத்துக் கொண்டான். 

விஷமானது  காலை நேரம்.. ஆனந்த விஷம் எனவும் சொல்லலாம்.

முதல் கூடல்.. எதோ ஆசுவாசம் தந்து அவனுக்கு.. பற்றிய தீயில் எரிந்து தீர்த்தபின், புது சித்தம் கொண்டு மீண்டும் பிறந்த நிலையில்.. ஆழமூச்செடுத்து.. அருகில் இருந்த தன்னவளை, புது மூச்சு தந்தவளை.. வரம் தந்தவளாக திரும்பி பார்த்து.. அவள்புறம் திரும்பி.. நெற்றியில் முத்தம் வைத்து.. அவளின் கண்களை பார்த்து.. எதையோ தேடினான், ஆலகாலன். தனக்கு கிடைத்த ஆசுவாசம்.. ஆனந்தம்.. அவளிடமும் வந்ததா என தேடினான். 

அவளுக்கும், இந்த ஆலகாலன் மேல் அத்தனை காதல்தானே.. அவள் கண்ணில் அயர்வை மீறியும் ஒரு காதல்.. மெல்லிய நீர் படலாமாய்.. கீழ் இமையில் சேர்ந்து நிற்க.. அவன் இட்ட முத்தத்திற்கு அவள், லேசாக புன்னகைதாள். அந்த புன்னகை இப்போது அவளை பேரழகாகியாக காட்டியது, அவனிடம். 

கலைத்து.. சிதறி.. விளையாடி.. சேர்த்தெடுத்து வரம் பெற்றவன்.. நிம்மதியானான், அதில். அயர்வான கண்களில் இதமாக முத்தம் வைத்து.. அவளை அணைத்துக் கொண்டான். 

ரஞ்சனி, பேச்சிழந்திருந்தாள்.. கொஞ்சம் பயமும் இதமும் கலந்த நிலையில் இருந்தவளுக்கு கணவனின் அணைப்பு ஆசுவாசம் தந்தது.. அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

கணவன் ரகசிய குரலில் “ரஞ்சி… ரஞ்சி” என்றான்.

ரஞ்சனி “ம்..” என்க..

கணவன் “ஏதாவது பேசேன்..” என்றான். பேச்சிழந்தவள், கணவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க.. நீலகண்டன், புன்னகைத்த அவளின் இதழ்களை விரல் கொண்டு வருடியபடியே “பேசு.. இந்த வாய், ஓயாமல் நைட் முழுக்க பேசினுதே.. இப்போ கேட்க்கிறேன் ஏதாவது பேசேன்” என்றான், மர்மமாக சிரித்துக் கொண்டே கேட்டான். ரஞ்சனி கணவனின் அந்த மர்ம சிரிப்பை ரசித்தாள்.. பேசவில்லை.

“இதயம் ஒன்றாகி போனதே..

கதவே இல்லாமல் ஆனதே..

இனிமேல் நம் வீட்டிலே..

பூங்காற்றுதான் தினம் வீசுமே..”

இருவருக்கும் நேரம் ஓடுகிறது என கவனமேயில்லாமல் களித்துக் கொண்டிருந்தனர்.

கோகுல் போன் செய்தான், கடையை திறந்துவிட்டு. அந்த அழைப்பில்தான் இருவரும் பூலோகம் வந்தனர். 

நீலகண்டன் எழுந்து சென்று பேசி வந்தான்

ரஞ்சனி இன்னமும் எழாமல் அப்படியே இருந்தாள்.. என்னமோ அவள் இன்னமும் சரியாகவில்லை.. என கணவனுக்கு தோன்ற “என்ன ஆச்சு.. குடிக்க ஏதாவது தரவா..” என்றான்.

ரஞ்சனி “வேண்டாம் “ என தலையசைத்தாள். பின் “நீங்க கிட்சென் போங்க” என்றாள். நீலகண்டன் “எதுக்கு..” என்றான் லேசாக சிரித்துக் கொண்டே. 

ரஞ்சனி “போங்க” என்றாள் கெஞ்சலாக. அவளுக்கு, உடைகள் எல்லாம் தனியே இருக்க.. அவன் எதிரில் அதை அணிய தயக்கம், வெளிச்சம் வேறு.. மறைத்திருந்த திரை சீலையையும் தாண்டி வந்திருக்க.. சங்கடமாக நெளிந்தாள் பெண்.

அதை உணர்ந்தானோ என்னமோ.. இல்ல, என்ன நினைத்தானோ.. கணவன் அவளை போர்வையோடு அள்ளிக் கொண்டு போய்.. குளியலறை வாசலில் விட்டான். ஒரே ஓட்டமாக உள்ளே சென்றுவிட்டாள் ரஞ்சனி.

நீலகண்டன் “ரஞ்சி வரவா..” என்றான் புன்னகையான குரலில்.

பதிலில்லை மனையாளிடம். சிரித்துக் கொண்டே, பின்னதலையில் தன்னை தானே தட்டிக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

மனையாள் குளித்து வருவதற்குள், ஹாலில் இருந்த படுக்கையை எடுத்து வைத்து பெருகி இருந்தான், நீலகண்டன்.  

அவள் குளித்து ஈர தலையை துவட்டிய படியே.. வந்தாள் ஹாலுக்கு. நீலகண்டன் எழுந்து குளிக்க சென்றான்.

ரஞ்சனி மணியை பார்க்க மணி பத்து என காட்டியது சுவர் கடிகாரம். வெட்கமான சிரிப்புடன்.. சமையலறை சென்றாள் பெண். கணவன் வருவதற்குள்.. உப்புமா செய்தாள்.. நீலகண்டன் குளித்து வந்திருந்தான்.. தனக்கும் கணவனுக்கும் என காபி கலந்து எடுத்து வந்தாள்.

நீலகண்டன் இடுப்பில் துண்டுடன்.. விளக்கேற்றினான். பூக்கள் வாங்கவில்லை.. எனவே கடவுளையும் அன்னையையும் கைகூப்பி வணங்கினான்.. எப்போதும் போல குங்குமம் எடுத்து வந்து தன்னவள் நெற்றியில் வைத்துதான் அமர்ந்தான்.

இருவரும் ஏதும் பேசாமல் காபியை பருகினர்.

நீலகண்டன், கிளம்பி வந்தான்.. அதற்குள் சட்னி அரைத்து.. டேபிளில் எல்லாம் எடுத்து வைத்து இருந்தாள்.. நீலகண்டன் வந்ததும்.. இருவரும் அமர்ந்து உண்டனர்.. ரஞ்சனி “நான் வெளியே போறேன்… நீங்க வரீங்களா” என்றாள் எந்த முகாந்திரமும் இல்லாமல்.

நீலகண்டன், எங்கே என்று கூட கேட்கவில்லை.. “இல்ல, கடையில் வேலை இருக்கு.. நீ போயிட்டு வா..” என்றவன், இயல்பாக தன் கார்ட் எடுத்து வைத்தான்.. பின் “அங்க போயிட்டு கூப்பிடு, பின் சொல்றேன்” என்றவன் அவசர அவசரமாக உண்டு..  அதே அவசரமாக என்றாலும் இறுக்கமாக ஒருமுறை மனையாளை அணைத்து.. கிளம்பினான்.

ரஞ்சனி, மதியத்திற்கு என அரிசி ஊறவைத்துவிட்டு,  டாக்ஸி புக் செய்துக் கொண்டு கிளம்பினாள். அவள் சென்ற இடம் ஒரு பிரபலமான மால். நேராக ஆண்களுக்கான.. உடைகள் இருக்கும் கடைக்கு சென்றாள். கணவனின் ஷர்ட், பேண்ட் எடுத்து வந்திருந்தாள்.. அதனை வைத்து அளவு பார்த்து, சரியான அளவில் அரை டசன் எடுத்துக் கொண்டாள். தான் வேலைக்கு செல்ல இருப்பதால்.. தான் இரண்டு டாப்ஸ் எடுத்துக் கொண்டு.. கண்ணில் பட்ட தோடு வளையல் எடுத்து  கொண்டாள். கணவனுக்கு அழைத்தாள் அவனின் கார்டை உரசி.. தேய்த்தாள்.. பின் சொன்னான். பாதில் பில் கணவன் கார்டில், மத்தது தன் கார்டில் என செலுத்திவிட்டு  வந்தாள்.

வெளியே வந்து காய்கறி பழங்கள் வாங்கிக் கொண்டு டாக்ஸி புக் செய்துக் கொண்டு.. வீடு வந்து சேர்ந்தாள். 

வீடு வந்ததும் அவசமாக ஒன் பாட் டிஷ்ஷாக சமையலை முடித்து அமர்ந்தாள். வாங்கி வந்தவைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீலகண்டனும் நான்கு மணிக்கு மேல்தான் வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி.. ஹால் முழுவதும் தனக்கான உடைகள்தான் பரப்பி இருந்தது.. “ரஞ்சி என்ன இது” என்றான் ஆச்சர்யமாக.

ரஞ்சனி “உங்களுக்குத்தான்” என்றாள் கண்கள் விரிய.

நீலகண்டன் “எதுக்கு இப்போ..” என்றான், பாவமாக, உடைகள் எல்லாம் கேஷுவல்ஸ்சில் அழகாக இருந்தது.. அதிக விலை என இல்லை.. தினப்படி.. அவன் உடுத்தி செல்ல எதுவாக காட்டனில் நிறநிறமாக இருந்தது. நீலகண்டன் வாழ்நாளில் இப்படி மொத்தமாக வாங்கியதே இல்லை எனலாம். அதனால் சற்று அதிர்ந்தான்.

மனையாள் “இதென்ன கேள்வி, ட்ரெஸ் எதுக்கு, போடத்தான்.. நான் நாளைக்கு புது வேளைக்கு போறேன்ல்ல.. அதான் எனக்காக ஹாப்பிங்க போனேன்.. அப்படியே உங்களுக்கும் வாங்கினேன்..” என்றாள்.

கணவனுக்கு புரிந்தது.. எனக்காகத்தான் சென்றிருக்கிறாள் என்று.. நேற்று தம்பியை பற்றி பேசும் போது சொல்லி இருந்தான் ‘அவன்தான் எனக்கு உடைகள் எடுத்து தருவான்.. எனக்காக நான் அதிகம் வாங்கியதில்லை.. நம்ம கலயாணத்திற்கு கூட வேட்டி சட்டை மட்டும்தான் எடுத்தேன்.. என்னமோ கடைக்கு போனதும் குகன் ஞபாகம் வந்திடுச்சி.. அதான் அப்படியே வந்துட்டேன்’ என சொல்லியிருந்தான். இப்போது அதை நினைவில் வைத்து வாங்கி வந்துவிட்டாள் போல தோன்ற. கணவன், மனையாளை பார்த்தான்.. அதில் என்ன இருந்தது என ரஞ்சனியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஆனால், நிச்சயம் கோவம் இல்லை என புரிந்தது.

ரஞ்சனி “வாங்க, இதை ட்ரை பண்ணி பார்க்கலாம்” என ஒரு ஷர்ட் எடுத்துக் கொண்டு அவனை கிளப்பினாள்.

நீலகண்டனும் ஒன்றும் சொல்லாமல்.. எழுந்து சென்று உடைமாற்றி வந்து அவள்முன் நின்றான்.. மாநிறம்.. அலட்சியமில்லா அக்கறையான கண்கள் அவனுக்கு.. இறுகிய தாடைகள்தான் எப்போதும்.. உயர்ந்த நெடுமரம் போல்.. அவனின் தோற்றம்.. நெடுமரத்தில் கிளைத்த.. வளப்பான தோள்.. உரமான நெஞ்சு.. நிரம்ப உண்டாலும் ஒட்டி உலர்ந்த வயிறு.. நீண்ட இரு கைகள்.. அத்தனையையும் காலையில் உணர்ந்து கண்டவள்.. தான் தேடி எடுத்த உடையில் கணவனை காண்கையில்.. கண் நிறைந்து நின்றான் என்பார்களே அப்படி நின்றான் அவளுக்கு நீலகண்டன்.

மனையாள் தன்னை அழகு பார்ப்பதை புரிந்தவன் “ஓகேவா..” என்றான் புன்னகையோடு.

ரஞ்சனி தலையசைத்தாள். நீலகண்டன் சிரித்துக் கொண்டே இலகு உடைக்கு மாறி வந்தான் உண்பதற்கு.

சட்டென பேச்சு இருவர்க்குள்ளும் எழவில்லை.. சற்று நேரம் சென்று ரஞ்சனி “உங்காளுக்கு எல்லாம் பிடிச்சிருக்கா.. எ.. எனக்கு பிடிச்சா மாதிரி எடுத்தேன்.. உங்களுக்கு பிடிச்சிருக்கா” என்றாள்.

நீலகண்டன் “நல்லா இருக்கு ரஞ்சி..” என முடித்துக் கொண்டான். மனையாளும் அதிகம் தொல்லை செய்யாமல் வேலையை பார்த்தாள்.

நீலகண்டன் உண்டு உடனே கிளம்பிவிட்டான்.

ரஞ்சனி, ரகு அண்ணாவை அழைத்து பேசினாள்.. மாதவன் நலம் விசாரித்தாள். பின் பெரியம்மா பெரியப்பாவிடம் பேசி வைத்தாள்.

இதமான மனநிலையில் அடுத்தடுத்த நாட்கள் கடந்தது.

ரஞ்சனி வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாள். காலையில் எழுந்து தானே டிபன் லஞ்ச் எல்லாம் செய்து எடுத்துக் கொண்டு, கணவனுக்கும் வைத்து விட்டு கிளம்பினாள். கணவனும், கூடவே நின்று வெங்காயம் உரிக்க.. காய்கறி நறுக்க.. என உதவினான்.

இதெல்லாம்.. இந்த வேலையெல்லாம் கனவில் கூட ரஞ்சனி செய்ததில்லை.. ஆனால், இப்போது ஆர்பாட்டம் இல்லாமல்.. எல்லாம் செய்ய பழகினாள்.

நீலகண்டன் தானே மனையாளை அலுவலகத்தில் விட்டு, மாலையில் அழைத்து வந்தான். வீடும் அவர்களும் ஒரு ஒழுங்கு முறைக்கு வந்தனர். அத்தோடு, பேச்சு சண்டை என நேரமும் சரியாக இருந்தது அவர்களுக்கு.

ரஞ்சனிக்கு 9 டூ 6 ஜோப். எனவே, அவளை விட்டு விட்டு, கடைக்கு வருவான், மதியம் வீடு வந்து உண்டு.. பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்துதான் கடைக்கு செல்வான்.. மாலையில் அவளை அழைத்து வந்து வீடு விட்டு, டீ குடித்து மீண்டும் கடைக்கு செல்லுவான். பின் இரவு ஒன்பதரைக்கு வீடு வருவான்.

இரவு நீண்டது இருவருக்கும்.. கனவுகள் ஆசைகள்.. என அதில் நிறைய பேச்சுகளும் நீண்டது. நீலகண்டனுக்கு என ஒரு கனவு. அவளுக்கு என ஒரு கனவு.

நீலகண்டன் “உனக்கு இந்த வீடு சரியா இருக்கா.. இல்ல, மாத்தணுமா ரஞ்சி” என்றான். நீலகண்டனுக்கு, அவள் வந்த நாளிலிருந்து இந்த கேள்வி அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் கேட்டான்.

ரஞ்சி ”ஏன் இப்படி கேட்க்குறீங்க..” என்றாள்.

நீலகண்டன் “இல்ல, நீ பெரிய வீட்டில் இருந்து வந்தல்ல.. அதான், இது உனக்கு.. நீ இதில் எப்படி பில் பண்ற தெரியலை, அதான் கேட்டேன்” என்றான்.

ரஞ்சி “உங்களுக்கு வேணும்ன்னா மாத்துங்க.. எனக்கு இது கம்போர்ட்டா அண்ட் காம்பேக்கா இருக்கு..” என்றாள்.

நீலகண்டன் “நான் வீடு வாங்கலாம்ன்னு இருந்தேன், அதான் மாற்றலை.. உனக்கு ஒருவேளை.. பிடிக்கலைன்னா மாத்திக்கலாம்ன்னு கேட்டேன்.. நாம் சீக்கிரம் வீடு வாங்கிடலாம்” என்றான் திடமான குரலில்.

ரஞ்சனி, தன்னவனின் நெஞ்சில் இருந்து எழுந்து “வீட்டில் ஒரு இஞ்சினியரை வைச்சிகிட்டு.. வீடு வாங்குறீங்களா.. முடியாது, நிலம் வாங்குங்க.. இன்னும் ஒரு வருஷத்தில்.. நான் கட்டிதரன்… அதுக்குள்ள ட்ரைன் ஆடுவேன்” என்றாள், தைரியமாக.

நீலகண்டன் கீழ் கண்ணால்.. மனையாளை பார்த்தான்.. “நீ இன்னும் பீல்ட்துக்கு போனதே இல்லை..” என்றான் கிண்ட்லானக் குரலில் சொல்லியவன்.. அவளை தன்னுள் சேர்த்துக் கொண்டான்.

மனையாள் “அதென்ன அப்படி சொல்லிட்டீங்க.. நம்புங்க பாஸ்.. அடுத்த மாசத்திலிருந்து நான் பீல்ட் வொர்க்தான் நமக்கு. ஒரு வருஷத்தில் ட்ரைன் ஆகிடுவேன் நீல்ஸ்..” என்றாள்.

கணவன் “ம்.. அவ்வளோதானே.. எனக்குதான் மிச்சம்.. வெறும் லேபர் சார்ஜ்.. பொருள் மட்டும் வாங்கினால் போது, அத்தோடு.. கமிஷனும் அடிக்காத இஞ்சினியர்.. வேறென்ன வேண்டும் எனக்கு..” என நெற்றியில் முத்தம் பதித்தான், ஆசை கணவன்.

“நீ என்பதே நான்தானடி..

நான் என்பதே.. நாம் தானடி..”

Advertisement