Advertisement

நேற்று வண்டி ஒட்டி வந்தது.. மருத்துவமனையில் நின்றது எல்லாம் அலைச்சலாக இருக்க.. இங்கு கிடைக்கும் மரியாதையில், இருக்க பிடிக்காமல் கிளம்ப முடிவெடுத்தான். கொஞ்சம் உறங்கினால்தான் வண்டி ஓட்ட முடியும் என தோன்ற எதையும் யோசிக்காமல் உறங்கிவிட்டான்.

ரஞ்சனிக்கு ஒருமணி நேரம் ஆகியும் எழுப்ப தோன்றாமல் உறங்கட்டும் என இருந்தாள். 

அர்ச்சனா நேரத்திற்கு உண்ண வேண்டுமே என.. அவளின் அன்னை, “நீங்க இருவரும் சாப்பிடுங்க, நீலா தம்பி,  எழுந்ததும் மாப்பிள்ளையும் தம்பியும் சாப்பிடட்டும்..” என்றார்.

பெண்கள் இருவரும் வந்தனர் உண்பதற்காக.. குகன் வந்தான். பெண்கள் இருவரும் உண்ண தொடங்கியிருந்தனர், ரஞ்சனிக்கு, குகன் இதுவரை தன்னிடம் பேசவில்லை என புரிய.. தானும் அப்படி இருக்க கூடாது என புரிய “வாங்கங்க சாப்பிடலாம்.. “ என சட்டென எழுந்தாள், மரியாதைக்காக.

குகன், அனிச்சையாக ரஞ்சனியை பார்த்தான்.. பின் தன் பார்வையை மாற்றிக் கொண்டு, மனைவியை பார்த்து “எனக்கு சாப்பாடு ரூமில் கொடுத்திடு” என சொல்லி.. நடக்க தொடங்கினான்.

ரஞ்சனிக்கு என்னமோ போலாக அமைதியாக அமர்ந்தாள். 

அர்ச்சனா “அவருக்கு எதோ டென்ஷன்.. நீங்க சாப்பிடுங்க” என்றாள். அதன்பின் ரஞ்சனிக்கு உணவு உள்ளே இறங்கவில்லை.. ஒரு இட்லிக்கே திணறினாள். அர்ச்சனாவின் அன்னை எத்தனை சொல்லியும் உணவு இறங்கவில்லை அவளுக்கு.

நீலகண்டன் தானே எழுந்து வந்தான்.

ரஞ்சனி அமைதியாக அமர்ந்திருந்தாள்.. 

அர்ச்சனா, தங்களின் அறைக்கு சென்றாள்.. தன் கணவனை சத்தம் போட்டாள் “உங்க அண்ணன்கிட்ட என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும் இப்படி வீட்டுக்கு வந்தவர்கள் கிட்ட முகத்தை திருப்பாதீங்க, வாங்க.. உங்க அண்ணன் கூட சாப்பிடுங்க.. அம்மா என்னை முறைக்கிறாங்க, நீங்க ரஞ்சனிக் கூட பேசாமல் வந்ததற்கே.. வாங்க ப்ளீஸ்” என்றாள்.

குகனுக்கு, இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை..  என்னமோ எல்லா தவறும் என்மீதே என மனைவி சொல்லுவது தவறாக தெரிய.. அவன் “ஏய், சும்மா என்னை சொல்லாதீங்க, யார் இப்போ அவரை இங்கே கூப்பிட்டாங்க.. அவரா வந்தால் நான் என்ன செய்ய, எதோ நான் தப்பு செய்தா மாதிரி நீயும் சொல்ற. என்னை அன்னிக்கு.. நீ, ஹோஸ்ப்பிட்டலில் இருந்த போது.. அதான், நம்ம பிரச்சனை தெரிந்த போது.. எப்படி பார்த்தார் தெரியுமா.. இப்போ, இவர் என்ன செய்திருக்கார்.. அதே லவ்.. இவர் சொல்றார்.. மாமா பொண்ணுன்னு என்ன நடந்துன்னு எப்படி தெரியும்.. லவ் செய்துதானே கல்யாணம் செய்தார். அன்னிக்கு நானும் அதேதானே செய்தேன்.. என்கிட்டே சொன்னாரா, இவர். அப்போது, முதல் தரம் வந்த பார்த்த போது.. நீ ஹாஸ்ப்பிட்டலில் இருந்த போது.. உன்னை அவர் பார்க்காமலே ஊருக்கு போயிட்டார். என்னமோ நான்தான் உலகத்தில் இல்லாத தப்பு செய்த மாதிரி.. அப்படியே ஒண்ணுமே சொல்லாமல் போயிட்டார். எப்படி இருந்தது எனக்கு தெரியுமா.. என் அண்ணன்தான் எனக்கு முக்கியம்ன்னு இருந்தேன்.. நான் என்ன செய்தாலும் அண்ணன் என்னை விட்மாட்டார்ன்னு இருந்தேன்.. ஆனால், அன்னிக்கு அப்படியே போய்ட்டார். இப்போது வந்து நின்னா எ.. எனக்கும் கோவம் இருக்குமில்ல..” என்றான் வெடு வெடுவென்ற குரலில்.

அர்ச்சனாவிற்கு, தன் கணவன் பக்கம் இருந்த நியாயம் அப்போதுதான் தெரிந்தது..  ‘ஓ இவரும் லவ் மேரேஜ்ஜா..’ என தோன்ற, சின்ன சந்தோஷம் அவளுக்கு. அத்தோடு, இன்னும் ஒன்று..  அத்தனை சந்தோஷம் தந்தது.. ‘என்னை பார்க்கவில்லை..  என என் கணவனுக்கு கோவம்..’ என்பதுதான். அது மனைவியாக இருக்கும் அவளுக்கு சந்தோஷத்தை தர.. கணவனின் அருகில் வந்து.. அமர்ந்தாள். கணவனின் கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டாள்.. “எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. நான் ரொம்ப ப்ரௌட்டா பீல் பண்றேன். ஆனால், கஷ்ட்டமாகவும் இருக்கு, என்னால்தான் உங்களுக்குள் சண்டை எனும் போது கஷ்ட்டமா இருக்கு. நீங்க ஏதும் பீல் பண்ணாதீங்க.. நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன். நான் அவங்களை சாப்பிட சொல்றேன்..” என்றாள்.

குகனுக்கு நிம்மதியாக இருந்தது “தேங்க்ஸ் டா.. தேங்க்ஸ் என்னை புரிந்துக் கொண்டதற்கு. அத்தோட, அந்த பெண்.. அண்ணின்னு.. என்னால் அக்ஸப்ட் செய்துக்க முடியலை. ப்ளீஸ்.. இப்போது இவ்வளோதான். என்னை ஏதும் கேட்க்காதே” என்றான்.

அர்ச்சனா புரிந்தவள் போல.. தன் மேடிட்ட வயிற்றோடு கணவனை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.

நீலகண்டனிடம் பொறுமையாக பேச வேண்டும் என வந்தாள். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல்.. ரஞ்சனி பரிமாற.. நீலகண்டன் உண்டுக் கொண்டிருந்தான்.

அர்ச்சனா “அவருக்கு, தலை வலி, அதான் அண்ணா..” என்றாள் தயங்கிய குரலில்.

நீலகண்டன் “பரவாயில்ல ம்மா..” என்றபடி உண்டான்.

அர்ச்சனா “நீ இரு ரஞ்சனி, நான் பரிமாறுறேன்” என்றாள்.

ரஞ்சனி “இல்ல, நீங்க நிற்காதீங்க.. உட்காருங்க, எங்களால் உங்களுக்குத்தான் நிறைய அலைச்சல்.. நான் என்ன செய்யறேன்.. நீங்க உட்காருங்க” என சொல்லி நின்றுக் கொண்டாள்.

அர்ச்சனா “அப்படி இல்லை ரஞ்சனி” என்றாள்.

ரஞ்சனி “அட உட்காருங்க.. அவ்வளோதான் அவர் சாப்பிட்டார்..” என்றாள் சிரித்தபடி. உறவுகளில் அப்படிதான் இது சண்டை என வரிந்துக் கட்டிக் கொண்டு பேசவும் முடியாது. இது கோவமல்ல.. வருத்தமல்ல.. ஒன்றுமே இல்லை.. என விடவும் முடியாது. உறவில், எது நியாயம் என முடிவானால்.. அது உறவல்ல.. நீதிமன்றம். உறவு நிலைக்க.. இது சரி இது தவறு என நியாயம் பார்க்க கூடாது.

பின், எங்கோ பார்க்கும் போது அஞ்ஞானத்தால் எழும் பாச உணர்வை எப்படி சமன் செய்வர். அன்று என்பக்கம் தானே  நியாயம் இருந்தது  என திமிராக ஒருவர் நிற்க.. ஐயோ என்பக்கம் தவறான புரிதலால் தவறு நடந்து விட்டதே இப்போது எப்படி பேசுவேன் என மற்றொரு நிற்பார். எனவே உரிமையில்லா அன்பு ஆபத்தில்ல உறவாகும் போல.

ரஞ்சனி கணவனிடம் “நான் ரெடி கிளம்பலாம்..” என்றாள்.. தான் எடுத்து வந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொண்டு வந்து.

அர்ச்சனாவின் அன்னை “காலையில்  கிளம்பலாமே தம்பி” என்றார் நான்காவது முறையாக. இது சம்பிரதாய வார்த்தை என அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த அன்னை உண்மையாக சொன்னார்.. அவசரமாக வந்தவர்கள் இளைப்பாறாமல் செல்லுகிறார்களே என ஆதங்கம் அன்னைக்கு, ஆனால், சூழ்நிலை எதையும் உணர வைக்கவில்லை. இப்படி சில தப்பிதங்களும் உண்டு வாழ்வில். நல்ல மனிதர்களை நம்மால் இனங்காணமலே நம் பயணம் சில நேரங்களில் முடிவதும் உண்டு.

ரஞ்சனியும் நீலகண்டனும் கிளம்பினர். நீலகண்டன் “அவன் தூங்கவில்லை என்றால் கூப்பிடுறீயா “ என்றான்.

அர்ச்சனா “நான் சொல்லிவிடுகிறேன் அண்ணா” என்றாள்.

நல்ல விதமாக விடைபெற்று கிளம்பினர் நீலகண்டன் தம்பதி.

அடுத்த ஒருமணி நேரம் ரஞ்சனியும் பேசவில்லை நீலகண்டனும் பேசவில்லை. சிட்டி தாண்டும் வரை கவனம் சாலையில் மட்டுமே இருந்தது இருவருக்கும்.

சற்று நேரத்தில் நீலகண்டன் “ரஞ்சனி ரகுக்கு கூப்பிட்டு பேசு..” என்றான்.

ரஞ்சனியும் பேசினாள்.. “அடுத்த வாரம் வரோம் அண்ணா.. அண்ணாவை பார்த்தோகோ” என சொல்லி வைத்தாள்.

மீண்டும் மௌனம்.. இறுக்கம்.. ஏனென்றே தெரியவில்லை.. வரும்போது கூட.. ரஞ்சனிக்கு அழுகை, சோகம் என்றாலும் பேசிக் கொண்டும்.. அதட்டிக் கொண்டும் வந்தான் நீலகண்டன். இப்போது இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

ஆனால், முதல்முறை நீலகண்டனால் அமைதியாக இருக்க முடியவில்லை.. அருகிளிருந்த்வளின் பேச்சற்ற நிலை என்னமோ செய்தது அவனை. தன் மனையாளின் கையை தேடி பற்றிக் கொண்டான்.. அதனை இறுக்கி பிடித்து.. திருப்பி.. முத்தம் பதித்தான்.. “சாரி ரஞ்சி.. உன்னை கஷ்ட்டப்படுத்திட்டேனா..” என்றான் ஆழ்ந்த குரலில்.

ரஞ்சனி, கணவன் தன் கையை பிடித்துக் கொண்டதும், அவனையே பார்க்க தொடங்கியவள், அவனின் கேள்வியில், சட்டென “ச்சேச ச்சேச.. இல்லைங்க.. எனக்கு இன்னும் ஒன்னும் புரியலை.. நீங்க எதுவும் நினைக்காதீங்க” என்றாள்.

ஆனால், அந்த வார்த்தை இன்னமும் வலித்தது கணவனுக்கு.. “ம்.. உனக்கு தெரியாதுதான். நான், உன்னை கூட்டி போனால், பேசிடுவான்.. சமாதானம் செய்துவிடலாம் என எண்ணிவிட்டேன்” என்றான், தோற்றபின் சாயல் அதில் தெரிந்தது.

பின் அவனே “உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை, சொல்லி.. உன் மனசில், அவனை பற்றி தப்பாக ஏதும் நீ நினைத்திட கூடாதுன்னு எண்ணம் எனக்கு.” மீண்டும் அவளின் கையில் முத்தம் வைத்து.. “இனி, நாம அங்க போக வேண்டாம் ரஞ்சி, வேண்டாம்.. ரொம்ப சங்கடமா ஆகிடுச்சி எனக்கு. இதில் உன்னையும் கூட்டி போய் சங்கடப்படுத்திட்டேன் சாரி” என்றான் மீண்டும்.

ரஞ்சனி “என்னங்க ஏன், நீங்க ஏதும் சொல்ல வேண்டாம், எனக்கும் ஏதும் தெரிய வேண்டாம்.. நான் கேட்கல்லை.. நீங்க இப்படி பேசாதீங்க முதலில்..” என்றாள், அதட்டலாக.. இது மனைவியதிகாரம்.. கணவன் தன்னிடம் கூட இறங்கி வருவதை வேண்டவில்லை அவள்.

நீலகண்டன் கடகடவென ஆரம்பித்தான்.. பாரம் தாங்காமல் “உங்க அப்பா சீரீயஸா இருக்கும் போது, நான் உங்க வீட்டுக்கு வந்தேனே.. அப்போவே அவனுக்கு அது பிடிக்கலை.. என்கிட்டே கோவப்பட்டு வைத்துவிட்டான். அப்புறம் உங்க அப்பா, இறந்து போனார்.. என் கையில் உன்னை பிடிச்சி கொடுத்துட்டு. அதுக்கு அப்புறம் என்கிட்ட அவன் பேசவில்லை, கோவமென விட்டுட்டேன்.. அப்புறம்தான் ஒருநாள் போன் வந்தது” என நடந்தவைகளை சொல்லத் தொடங்கினான்.

அமைதியாக் எந்த கேள்வியும் கேட்டாமல் கணவனின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டாள் பெண்.

நீலகண்டன் கடைசியாக “நீ.. நீ வந்து அன்னிக்கு பேசின போது கூட அவன்கிட்ட சொல்லிட்டு முறையா பெண்கேட்க்கனும்னு, உனக்கு சம்மதம் சொல்லன்னும்ன்னுதான் அப்போது ஏதும் பேசலை.. சாரி.. ஆனால், எங்க தப்பாச்சுனு தெரியலை.. இப்போது வரை தெரியலை.. அவனை என்னால் நெருங்க முடியலை..” என்றான் ஒரு பெருமூச்சு விட்டு.

ரஞ்சனிக்கும் அதை கேட்க சங்கடமாக இருந்தது. ஆனால், கணவனின் உண்மை மிகவும் பிடித்தது,, மறைக்கவில்லை.. தம்பிக்காக காத்திருந்தேன் என சொன்னதும் பிடித்தே இருந்தது.

பின் அவனே “போகட்டும்.. இனி நாம்தான்.. எப்போது வேண்டுமானாலும் சரியாகட்டும். இல்லை, அப்படியே போகட்டும்.. இனி அவனாக வந்தால் பார்க்கலாம்.. சரிதானே.. என்னால் முடிந்தவரை இறங்கிவிட்டேன். எனக்கும் கொஞ்சம் திமிர் இருந்திருக்க்னும் போல.. அந்த ஒன்றுமில்லாத கர்வமும் இருந்திருக்கனும்ன்னு இன்னிக்கு புரிந்து போனது. அவன் என்னை.. ” என எதோ சொல்ல வர..

ரஞ்சனி “போதுங்க.. எதையும் தூக்கி சுமக்காதீங்க.. விடுங்க, நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான். என் வீட்டிலும் நெருங்க முடியலை.. உங்க வீட்டிலும் அப்படியே அவ்வளவுதானே.. கொஞ்சநாள் இப்படியே இருப்போமே.. என்ன இப்போ” என்றாள்.. ஒரு அசதியான புன்னகையோடு.. அவன் தோள் சாய்ந்தாள் மனையாள்.

“வலையாமல் நதிகள் இல்லை..

வலிக்காமல் வாழ்க்கை இல்லை..

அவரும் காலம் காயம் ஆற்றும்..”

கணவனை அந்த புன்னகை தாக்கியது.. ‘திருமணம் முடிந்து என்னை சேர்ந்து எத்தனை மாதங்கள் ஆகிறது.. என்ன செய்தாய் அந்த பெண்ணுக்கு நீ. திருமணம் முடிந்தால்.. அந்த மூன்று மாதங்கள்.. உலகை மறந்து இருப்பர் கணவன் மனைவி இருவரும். ஆனால், இங்கே எத்தனை மாதங்கள் ஆகிறது.. நீ என்ன செய்கிறாய்’ என குத்தியது அந்த புன்னகை. அதன் தாக்கத்தில் அவளின் உச்சியில் காதலான முத்தம் கணவன்  பதித்தான்.. ஆழமாக.

மனையாள் “போதும் ரோட்டை பாருங்க” என்றாள்.

நீலகண்டன் “சரி, எனக்கு..” என்றான், வாய்விட்டு தன்னை மீறி கேட்டான்..

ரஞ்சனி, கணவனிடமிருந்து நிமிர்ந்தாள்.. “கொடுத்தது எண்ணி நாலு முத்தம், இதில் கணக்கா திருப்பி கேட்க்குறீங்க” என்றாள், மனைவி அதிகாரத்தில்.

நீலகண்டன் “ஹேய்ய்… ‘முத்தம்’” என்ற வார்த்தையை மெதுவாக சொல்லி “கேட்டால் சண்டைக்கு வர” என்றான் சத்தமாக.

மனையாளுக்கு கணவன் முத்தம் என்ற வார்த்தையை கூட சத்தமாக சொல்லாமல் போனது சிரிப்பு வர.. மலர்ந்து சிரித்து “என்ன கேட்டீங்க” என்றாள், வேண்டுமென்றே.

நீலகண்டன், பக்கவாட்டில் திரும்பி மனையாளை பார்க்க. மீண்டும் ரஞ்சனி “என்ன கேட்டீங்க” என்றாள் சிரியாமல் .

நீலகண்டன் ஹஸ்கி வாய்ஸில் “முத்தம் கேட்டேண்டி” என கொஞ்சினான் கண்களால்..

ரஞ்சனி “ஐயோ கவிதை.. கவிதை..” என சொல்லி நகர்ந்து அவனின் நெற்றியில் தொடங்கி.. ரோட்டை பார்த்துக் கொண்டே, கன்னம்.. மூக்கு.. அடுத்து சின்னதாக உதட்டில் ஒரு முத்தம் தந்து அமர்ந்தாள்.

கணவன் வெட்கப்பட்டு “ஹேய்ய்.. ரஞ்சி..” என்றபடி எல்லாவற்றையும் வெட்கத்தோடு ரசிக்க முடியாமல்.. ரோட்டில் பாதி கவனம்.. இவளிடம் பாதி கவனம் என திணறினான்.

“மழை மழை என் உலகத்தில்

வருகின்ற முதல் மழை..

அலை அலை என் இதயத்தில்

அடிக்கின்ற முதல் அலை..

நீ முதல் அலை..

என்ன திண்மை.. என்ன வன்மை..

எந்த பெண்ணும் அதிசைய விண்கலம்..

போக போக புரிகின்ற போர்களம்..

ஒன்று செய்.. இப்போதே உள்நெஞ்சை உடைய செய்…”

Advertisement