Advertisement

ரஞ்சனிக்கு குரலே வராமல் “என்னோட சாப்பாட்டை நீங்கதானே சாப்பிடுறீங்க.. எப்படி இருக்கு” என்றாள் பாவமாக…

நீலகண்டன் பதில் சொல்லவில்லை.. கேலி புன்னகை அவனின் உதடுகளில் வந்து நின்றது.. ஆனாலும், தனக்காக செய்பவளிடம் உண்மையை சொல்ல மனதில்லை எனவே அமைதியாக இருந்தான்.

ரஞ்சனி “ஹலோ நீலகண்டன்.. என்ன சிரிக்கிறீங்களா..” என்றாள். மனையாளின் பேச்சு நீலகண்டனுக்கு இன்னும் சிரிப்பை தந்தது.

ஆனாலும் அவசரமாக “இல்லையே.. இல்லவே இல்லை.. உப்பு கொஞ்சம் அதிமா இருக்கும், காரம் இருக்காது.. இல்லை மஞ்சள் ரசமா இருக்கும் அவ்வளவுதானே.. நான் எதுக்கு அதுக்கு சிரிக்கணும்” என்றான் சின்ன குரலில் சொன்னான்.. அதில் அடக்கப்பட்ட சிரிப்பின் த்வனி தெரிய..

ரஞ்சனி “என்னங்க.. ஆ…அ..” என்றாள் ராகமாக.. செல்லமாக அழுகையான குரலில்.

ஐயோ கணவனுக்கு உருகித்தான் போகிற்று. கணவன் “க்கும்..” என தன் உருக்கத்தை தன்னுள் மறைத்துக் கொண்டு.. “சரி நான் வரேன்.. ஏதாவது செய்யலாம்” என்றான் பெருந்தனைமையாக.

ரஞ்சனிக்கு, நீலகண்டனின் நளபாகம் தெரியாதே.. அவள் “என்ன செய்வீங்க.. நீங்க வந்து என்ன செய்வீங்க.. எனக்கே தெரியலை.. இவர் வந்து செய்வாராம்.. கடையில் ஆர்டர் செய்துக்கலாம், ச்ச… என்ன நினைப்பாங்க” என்றாள், அவளே யோசனை சொல்லி.. அவளே பதிலும் என அவளே எல்லாமாக பேச.

நீலகண்டன் “பா… புலம்பாத.. இரு வரேன்” என்றவன்.. கிளம்பினான். மாலை நாலுமணிக்கு மேல்.

தேவையான அசைவ கறிகளை வாங்கிக் கொண்டு.. கடையிலிருந்து சாமான்கள் எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

ரஞ்சனி சாப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருந்தாள்.. கணவன் சொல்லிய அளவில்.

கணவன் வந்ததும்.. உடைமாற்றி வந்தான். வாங்கி வந்தவைகளை சுத்தம் செய்தான்.. ரஞ்சனி அமைதியாக பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளை எந்த வேலையும் சொல்லவில்லை.. அமைதியாக ஒவ்வொன்றாக செய்தான்.

ரஞ்சனி சாப்பாத்தி மாவை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அவன் செய்வதை வேடிக்கை பார்த்தாள்.. அமைதியாக ஒரு நிதானத்தோடு வேலை செய்தான்..கணவன். 

ரஞ்சனி “என்ன செய்றீங்க.. எதோ ஹோட்டல் டிஷ் மாதிரி வாசனை வருது..” என்றாள்.

நீலகண்டன் “வைட் சிக்கன்” என்றான்.

ரஞ்சனி “உங்களுக்கு சமைக்க எல்லாம் தெரியுமா” என்றாள்.

நீலகண்டன் “எதோ சுமாறா.. “ என்றான்.

ரஞ்சனி, அவனை தன் முழங்கையால் இடித்தாள் “சு..சும்மாதானே சொல்றீங்க.. நீங்க நல்லா சமைப்பீங்க.. அப்படிதானே” என்றாள், குரலே ஒரு மாதிரி அழுகையாக வந்தது..

நீலகண்டன், இட்லிக்கு, சட்னி அரைப்பதற்கு எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தான்.. லேசாக மனையாள் இடிக்கவும் அப்படியே நின்றான் அவளை திரும்பி பார்த்து..

ரஞ்சனி “எ.எனக்கு ஒருநாள் கூட சமைச்சி கொடுத்ததேயில்லை.. ஏன் சமையல் தெரியும்ன்னு கூட சொல்லவேயில்லை..” என்றாள் குறைபடும் குரலில்.

நீலகண்டன், அவளை பார்த்து திரும்பி நின்றான் “ரஞ்சி.. சொல்லியிருந்தால்.. நீ எப்படி சமைச்சிருப்ப.. இவ்வளோ டேஸ்ட்டா, ம்..” என்றான், அழமான குரலில்..

ரஞ்சனி “ஹே.. கிண்டல் பண்றீங்களா” என்றவள்.. சற்று தள்ளி நின்றாள்.. என்னமோ அவளுக்கு ஒருமாதிரி.. தன் சமையலை நினைத்தே சங்கடமாக போனது.. அத்தோடு.. அவனை வேறு.. எனக்கே தெரியலை.. உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்டது வெட்கமாக வேறு இருந்தது.. ஒரு சின்ன அவமானமாக உணர்ந்து அவனிடமிருந்து தள்ளி நின்றாள்.. ஒரு சின்ன கோவமாக.. கணவன் அவளின் விலகலை உணர்ந்து.. அவளின் முழங்கையை பிடித்து இழுத்தான்.. எதிர்பாராத இந்த இழுப்பில்.. அவன்மீதே சாய்ந்தாள் பெண்.. நீலகண்டன் அவளின் கையை விடவில்லை.. ரஞ்சனி கணவன் மேல் விழுந்த வேகத்தில் நிமிர்ந்து நின்றாள்.

அனிச்சம் மலரான நீலகண்டனுக்கு தன்னவளின் முதல் தீண்டலை, அணுவெல்லாம் மீண்டும் கேட்க.. கணவன், அவள் எழுந்ததும் இன்னொருமுறை இழுத்தான்.. மீண்டும் விழுந்தாள் அவன் மீதே.. இப்போது பெண்ணவள் முறைத்தாள். இப்போது.. கணவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. அப்பட்டமான காதல் தெரிந்தது பார்வையில்.. ரஞ்சனியின் முகம் சிவந்து போக.. கணவன் அதை பார்த்து “க்கும்.. எதுக்கு இவ்வளோ கோவம்.. “ என்றான், குரல் கனிந்து வந்தது.

மனையாளுக்கு பேச்சே வரவில்லை..

நீலகண்டன் “எனக்காக சமைக்கிற, காலையில் சீக்கிரமா எழுந்துக்கிற.. படிச்சிட்டு இருந்த பொண்ணு நீயி.. அதுவும் எவ்வளோ வசதியா இருந்திருப்ப.. எனக்காக எல்லாம் செய்யற.. நான் சமைச்சி நீ சங்கடப்பட்ட கூடாதுன்னு சொல்லல.. அத்தோடு நீ நல்லா சமைக்கிற, அதான் சொல்லல” என்றான்.

மனையாளுக்கு கணவனின் குரலில் இருந்தது என்ன என தெரியவில்லை.. ஆனால், அவன் பேசியதே பிடிக்க.. கன்னம் சிவக்க பார்த்து கீழே குனிந்துக் கொண்டாள்.

அந்த நேரம் நீலகண்டனின் போன் அழைத்தது.. இருவர்க்குள்ளும் இருந்த நெருக்கம் காணாமல் போக.. போனை எடுத்தான் நீலகண்டன். 

அர்ச்சனாவின் பெற்றோர், அவர்களும் கீழே வந்துவிட்டோம் என்றனர்.. இவன் இந்த தளம் என சொல்லி வர சொன்னான்.

ரஞ்சனி, அவசரமாக இட்லி பாத்திரத்தில் மாவு ஊற்றிவைத்தாள்.. பாதி சப்பாத்திதான் ஆகியிருக்க.. மற்றதை கவனித்தாள்.

நீலகண்டன் “மெதுவா செய்.. முகம் கழுவி வா.. நான் போட்டுகிறேன்..” என அனுப்பி வைத்தான்.

ரஞ்சனி முகம் கழுவி.. பொட்டு வைத்து.. வரவும், இவர்கள் வரவும் சரியாக இருந்தது.

குகன் வருவான் என நீலகண்டன் எதிர்பார்த்தான். ஆனால், பெரியவர்கள் நால்வரும், அர்ச்சனாவின் அண்ணனும் வந்திருந்தனர். 

ரஞ்சனி, வரவேற்று.. குடிப்பதற்கு என்ன என கேட்டுக் கொண்டு சென்றாள். நீலகண்டன் திருமணத்திற்கு தன் தம்பி அழைப்பான் என தான் போன் செய்யாமல் விட்டுவிட்டான்.. அத்தோடு, எப்படி எனக்கு திருமணம் என நானே சொல்லுவேன் என விட்டுவிட்டான். எனவே, அர்ச்சனா சொல்லி.. அதன்பின் விவரம் தெரிந்தது என்பதால்.. லேட்டாக வந்தார்கள்.

நீலகண்டன் முகம் மின்னியது.. அர்ச்சனாவின் பெற்றோருக்கு அப்படிதான் தோன்றியது. இறுக்கம்தான் அவனின் முகபாவமாக இத்தனைநாள் அவர்கள் பார்த்தார்கள். ஆனால், இப்போது முகம் பளிச்சென ஒரு கலையோடு இருந்தது. அதிலேயே புதுமண தம்பதியரின் நிலை அவர்களுக்கு தெரிந்தது.

நீலகண்டன் தன் இயல்பிலிருந்து பேசினான்.. அவசர திருமணம்.. சொல்ல முடியலை என்றான், நீங்கள் வந்தது சந்தோஷம் என்றான்.. அதை தொடர்ந்து அவர்களும் பேசினர்.. பெண்கள் இருவரும் கிட்சென் சென்று பார்த்தனர்.. ரஞ்சனியிடம் தன்மையாக பேச தொடங்கினர். என்னமோ அந்த பேச்சு வார்த்தைகள் எதார்த்தமாக சென்றது. அடுத்த இரண்டு மணி நேரம் சென்றதே தெரியவில்லை.

வந்திருந்த அர்ச்சனாவின் அன்னையும்..  பெரியம்மாவும்.. ரஞ்சனிக்கு உதவ.. எல்லோரும் உண்டனர். ரஞ்சனிக்கு வேலை வைக்காமல் அவர்களும் எல்லாவற்றையும் இயல்பாக செய்து முடித்து கிளம்பினர்.

நீலகண்டனும் ரஞ்சனியும் இரவு தங்கி போகுமாறு சொல்லியும் கேட்கவில்லை. பக்கத்தில் சொந்தம் இருக்கிறது.. அங்கே வருவதாக சொல்லிவிட்டோம் என சொல்லி கிளம்பினர்.

ரஞ்சனிக்கு, மனது நீண்டநாள் சென்று சந்தோஷமாக இருந்தது.  நீலகண்டனுக்கும் அப்படியே. ஏன் இந்த திருமணம், அவசரப்பட்டு விட்டோமோ என ஒரு மாதிரி தயக்கத்தில் இருந்தவர்களுக்கு இந்த பெரியவர்களின் வரவு ஒரு மாற்றத்தை தந்தது.

அவர்களை வழியனுப்பி விட்டு, அமைதியாக சோபாவில் அமர்ந்தான்.. மனது ஒரு துள்ளலோடு இருந்தது.

ரஞ்சனி, கிட்சென் சென்றாள்.. கணவன் “இன்னும் என்ன செய்யற அங்க” என்றான் புது உரிமையில்.

ரஞ்சனிக்கு சிரிப்புதான் வந்தது “இத்தனைநாள் கேட்க்கிட்டீங்களா.. இப்போ ஏன் கேட்க்குறீங்க” என்றாள், துடுக்காக. 

அவள் பேசுவது கோவமாக பேசுவது போல தோன்ற நீலகண்டன் ‘இவ்வளோ நேரம் நல்லாதானே இருந்தாள்’ என பயம் கொண்டான். எழுந்து உள்ளே சென்றான்.

ரஞ்சனி பால் பாக்கெட் எடுத்து வெளியே வைத்து நின்றிருந்தாள்.

நீலகண்டன் “என்னாச்சு, நல்லாதானே இருந்த” என்றான்.

ரஞ்சனி “ஏன் இப்போவும் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள்.. உதடுகள் சிரிப்பில் வளைந்தது.

கணவன், மனையாளின் முகம் பார்த்துதான் நிம்மதியானான்.. அவனும் “இத்தனைநாள் கேட்க்கலை, இனி கேட்ப்பேன்” என்றபடி அவளின் அருகில் நின்றான்.

ரஞ்சனி கணவனையே இமைக்காமல் பார்த்து “நீங்க அத்தை மாதிரி தெரியுறீங்க சிரிக்கும் போது” என்றாள்.

நீலகண்டன் “ம், நான் அம்மா மாதிரியாம், குகன் அப்பா மாதிரின்னு அம்மா சொல்லுவாங்க..” என்றான்.

ரஞ்சனி “ஏன் உங்க தம்பி உங்ககிட்ட பேசறதில்லையா..” என்றாள் சட்டென கேட்டுவிட்டாள்.

நீலகண்டனின் முகமும் சட்டென மாறிவிட்டது.. உதடுகள் விரிய சிரித்திருந்தவன், என்னமோ சட்டென தாடைகள் இருக.. முகம் சுருங்கி போகிற்று.

பார்த்த மனையாள் ‘அய்யோ, என்ன பேசனும்ன்னு தெரியாமல் பேசிட்டனோ’ என எண்ணி “இல்ல, சும்மாதான் கேட்டேன்.. வாங்க” என அவனின் கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

நீலகண்டன் அமைதியாகிவிட்டான்.

ரஞ்சனி “சொல்லுங்க, எங்க சமையல் கத்துகிட்டீங்க..” என்றாள்.

நீலகண்டன் “ம்.. எனக்கு தலை வலிக்குது.. அப்புறம் பேசலாமா” என்றான். ரஞ்சனிக்கு மனம் வாடி போனது கிட்சேன் சென்றாள்.

நீலகண்டனுக்கு, தம்பி பாரமாக இருக்கிறான்.. அவனை பற்றி யாரிடமும் பகிர முடியவில்லை அவனால். இப்போது கூட தன் மாமியார் வீட்டோடு தம்பி வந்து தன்னை பார்ப்பான் என அண்ணன் எண்ணினான். அப்படி வரவில்லை. ‘என் மேல் பாசம் விட்டு போகிற்றா.. என்னை நினைக்கவே இல்லையா’ என ஒரு மாதிரி அழுத்தம் வந்தது அவனுள். அந்த அழுத்தம்.. ரஞ்சனி ஒவ்வொரு முறை தம்பியை பற்றி பேசும் போதும், என்னமோ அவளிடம் மறைப்பது போல தோன்றுகிறது. மேலும், தம்பியின் விலகலை இன்னும் அண்ணனால் ஏற்க முடியவில்லை என்பதும் உண்மைதானே.

“அவளிடம் தோற்றக 

தெரிஞ்சவன்..

உலகம் ஜெயிக்கிறான்..” 

Advertisement