Advertisement

மாதவன் “அதெல்லாம் சரியா வரும்..” என தங்கையை முறைத்தான்.. ‘என்னை மீறி ஏதேனும் பேசி விடுவாயா’ என முறைத்தான். அப்போதும் ரஞ்சனி அழுத்தமாகதான் நின்றாள்.. ‘என்னை என்ன விளையாட்டு பொருள் என நினைத்துவிட்டாரார்களா.. ஆளாளுக்கு விளையாடுகிறார்கள்’ என தோன்ற.. மனதில் ஒரு  கணக்கிடுதலுடன் அழுத்தமாக நின்றிருந்தாள்.

மாதவனுக்கு, அந்த அழுத்தமான அவளின் பார்வைதான் எதிரியாக தெரிந்தது. ‘எப்படி பயமே இல்லாமல் நிற்கிறாள்.. பார்.. கொஞ்சமேனும்.. அண்ணனுக்கு பிடிந்திருந்தால் சரி என பேசுகிறாளா பார்’ என எண்ணிக் கொண்டு அவனும் பேச தொடங்கினான்.

மாதவன் “ரஞ்சனிக்கும் இதில் விருப்பம் இருக்கு.. பிரசாந்த் பத்தி அவளுக்கு தெரியும்.. அதனால் இது எல்லாம் பேசி முடிவு செய்துதான் நடக்குது. நீங்க வந்து நின்னு நடத்திக் கொடுங்க போதும்” என்றான்.

ரஞ்சனி இந்த நாட்களில்.. அண்ணனை கணித்திருந்தாள். நீலகண்டனை பற்றிதான் தெரியுமே என நினைக்க கண்ணில் நீர் வந்தது பெண்ணுக்கு. அவன் எதோ கண்ணில் படவில்லை.. கருத்தில் நிற்கமாட்டான் எனத்தான் எண்ணம் ரஞ்சனிக்கு. ஆனால், என்னமோ உறுத்துகிறான் உள்ளே. அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால். ஆனால், அதற்காக, அவனுக்கு தொந்திரவாகவும் தன்னால் இருக்க முடியாது எனதான் அவனை அழைப்பதில்லை.

நீலகண்டனும் போன் செய்தான்.. இவள்தான் போன் எடுக்கவில்லை.. ‘என்ன பேசுவது’ என தெரியவில்லை.. அவன் அன்று அப்படி அமைதியாக இருந்ததை அவளால் ஏற்கவே முடியவில்லை.. ‘நானாக சென்று கேட்க்கவும்தானே அவமதித்தான் என்னை’ என எண்ணிக் கொண்டாள் பெண். ‘ஒருவேளை என்னை பாரமாக எண்ணுகிறான் போல’ என  தோன்றியது அவளுக்கு. எனவே, கிட்டாதெனில் எதற்கு நினைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே நீலகண்டனை தவிர்த்தாள்.

ரஞ்சனி, அண்ணனும் தன் அரசியலுக்காக தன்னை பிரசாந்திற்கு திருமணம் பேசுகிறான் என  தெரிந்துக் கொண்டாள்.. அதனால், வேலை தேடிக் கொண்டிருந்தாள் மும்முரமாக.. எங்காவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம். எனவே, பேசுவதேயில்லை அவள் யாரிடமும்.

இப்போது, மாதவன் இப்படி சொல்லவும் யாரும் ஏதும் கேட்க முடியாமல்.. சலசலத்தனர். ரகுவின் அன்னை எழுந்து உள்ளே சென்றுவிட்டார், அது பேசிக் கொண்டிருந்த, கண்ணின் பெரியம்மாவிற்கு என்னமோ போலானது.. அவர் மகனை பார்க்க.. இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

ரஞ்சனி மேலே செல்ல.. மாதவன் “ரஞ்சி” என்று அழைத்து அவளை நிறுத்த முற்பட்டான்.

ரஞ்சனி நிற்கவில்லை.

அண்ணன்தான் மேலே சென்றான்.. அவளின் அறை கதவு திறந்துதான் இருந்தது.. ரஞ்சனி போனை சார்ஜ் போட்டிருந்தாள்.. அதை எடுக்க.. மாதவன் குரல் கேட்டது “ரஞ்சி ம்மா…” என.

ரஞ்சனி திரும்பி பார்த்தாள், ‘வா’ என வாய் திறக்கவில்லை.. முகத்தில் கூட ‘என்ன’ என்ற அசைவும் இல்லை.. வெறுமையாக பார்த்தாள் அண்ணனை.

மாதவன் தன்னை தங்கை மதிக்கவில்லை என கோவமே கொண்டான்.. “இங்க பார்… பிரசாந்த் வீட்டிலிருந்து வராங்க உன்னை பெண் கேட்டு.. என் மானத்தை வாங்கிடாத.. ஒழுங்கா பிரசாந்தை கல்யாணம் செய்துக்கிட்டு, நல்லவிதமாக வாழற வழியை பார்.. எதோ வேலைக்கு ட்ரை செய்கிறாயேமே.. அதெல்லாம் போதும்.. பிரசாந்த் உனக்கு புது பிசினஸ்சே செட் பண்ணி தரேன்னு சொல்றான்.. அவர் பேச்சை கேட்டுட்டு அமைதியா வாழற வழியை பார்.. நம்ம எல்லோருக்கும் அதுதான் நல்லது.” என பேசி சென்றான்.

ரஞ்சனியும் அப்போது கூட நீலகண்டனை அழைக்கவில்லை. ரஞ்சனிக்கு, யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என எண்ணம். எப்படியும் இந்த நிச்சயத்தை ஏற்க கூடாது என அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மாலையில் பிரசாந்த் குடும்பம் சொந்தங்களோடு.. பெண் கேட்டு வந்தது. மூன்று கார்களில் பிரசாந்த் குடும்பம் வந்து சேர்ந்தது. ரகுவின் அன்னை மட்டுமே ஹாலில் இருந்தார். எல்லோரையும் வரவேற்றார்.. மாதவன் வந்தான் அடுத்து.. மாதவனும் வரவேற்றான். 

பெரிய ஹாலில் பாய் விரித்து பெண்கள் அமர.. சோபாவில் ஆண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. குடிப்பதற்கு கேட்டு.. கொடுத்துக் கொண்டிருந்தார் வேலை செய்யும் பெண்மணி.

பிரசாந்த் பாந்தமாக வேட்டி சட்டை அணிந்து மாப்பிளையாக அமர்ந்திருந்தான்.

ரஞ்சனியை ஒருமணி நேரம் முன்பே.. அவளின் பெயரியம்மா “ரெடியாகு ரஞ்சி” என பணித்திருந்தார்.

மாதவனுக்கு, தன் தங்கையை பற்றி தெரியுமே எனவே, அவளை டென்ஷன் செய்யாமல் இருந்து, இந்த வைபவத்தை முடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு, செயல்பட்டான்.

பிரசாந்த் வீட்டார், ரஞ்சனியை பார்க்க ஆசைப்பட்டனர். மாதவன், தானே மேலே சென்றான், தங்கையை அழைத்து வருவதற்கு.

ரஞ்சனி முகம் கூட கழுவாமல்.. மதியம் அணிந்திருந்த சுடியில்.. சிகையை தூக்கி கொண்டையிட்டு அமர்ந்திருந்தாள்.

அதை பார்த்த மாதவனுக்கு எரிச்சலாக வந்தது. ‘பெண் பார்க்க வருகிறார்கள் என சொன்னேன்.. மரியாதைக்காக கூட.. முகம் கழுவி இருக்க கூடாதா.. ஏதாவது கேட்டால்..கத்தி கலாட்டா செய்துவிட்டால் என்ன செய்வது என எண்ணி “ரஞ்சி, வா.. வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க.. வந்து பார்த்திட்டு போ..” என்றான் நல்லவிதமாக,

ரஞ்சனிக்கு யாரு கெஸ்ட் எனத்தான் தெரியுமே.. “வர முடியாது.. உன் கெஸ்ட்டை  பார்க்க வரமுடியாது.. போ.. போய் அவங்ககிட்ட சொல்லு, நான் யாரையும் கல்யாணம் செய்துக்க ரெடி இல்லைன்னு சொல்லு.. போ.. இங்கிருந்து போ முதலில்” என அவனை வெளியே தள்ளினாள். கதவை சாற்ற எத்தனிக்க.. மாதவன், அந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். 

மாதவன் “ஓ.. என்ன சத்தம் பெருசா வருது.. என்ன, என்னதான் உன் பிரச்சனை. அந்த அத்தை பையனை நீ பார்த்தது மாதிரியே தெரியலை.. என்னதான் செய்ய போற.. தனியா எதுக்கு இவ்வளோ பிடிவாதம், பேசாமல் கல்யாணம் செய்துகிட்டு.. சந்தோஷமாதான் இரேன்” என்றான் அக்கறையான குரலில்.

என்னமோ அழுகையாக வந்தது.. ‘அம்மா அப்பா இல்லைன்னா.. எதுக்குமே ஆசைப்பட கூடாதா நான்’ என தோன்ற நீலகண்டன் முகம் கண்ணில் வந்து சென்றது.

அமைதியாக ரஞ்சனி அமர்ந்துக் கொண்டாள். மாதவன் “ரஞ்சி வா, சும்மா ஹலோ சொல்லிட்டு வந்திடு” என்றான் இதமான குரலில்.

இப்போது மாதவனின் போனிற்கு அழைப்பு வந்தது. அரசுதான் அழைத்திருந்தார். ‘எதுக்கு இப்போது கூப்பிடுறார்..’ என பார்த்திருந்தான். மாதவன் எடுத்து காதில் வைத்தான்.. “ஹலோ சொல்லுங்க” என.

அரசு “எங்க இருக்க..” என்றார்.

மாதவனுக்கு அரசுவின் குரல் எக்கோவாக கேட்க்க.. அரசு “கீழே வா..” என்றார்.

மாதவன் மாடிபடிகளின் மேலிருந்து பார்க்க அரசுவும் நீலகண்டனும் கீழே ஹாலில் நடுவில் நின்றிருந்தனர். அவர்களின் பின்னால், கண்ணின் பெரியம்மா.. அவரின் மகன் நின்றிருந்தான். அத்தோடு, அந்த ஊரின் கவுன்சிலர்.. அவர் எதிர்கட்சி.. அவர் நின்றிருந்தார் இரண்டு ஆட்களோடு.

மாதவன் இப்படி நேரில் வந்து நிற்பார்கள் என எண்ணவேயில்லை. ‘வீட்டோடு பெண் பார்த்து நிச்சயம் போல ஏதேனும் செய்துவிட்டால், நம்மை மீறி என்ன நடந்துவிடும் என எண்ணிக் கொண்டு மாதவன் இப்படி ஒரு ஏற்பாட்டை நடத்திவிட துணிந்தான்.

பிரசாந்தும், நீலகண்டன் சொத்துகளை விட்டு கொடுக்கவும், பெண் மீது அக்கறை காட்டவில்லை எனவும், விட்டு விடுவான் என எண்ணிக் கொண்டான். ஆனால், இப்படி வந்து நிற்பான் என எண்ணவில்லை.

 

Advertisement