Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

19

“முற்றங்களும்.. பெரியவர்களும்.. 

இல்லாத வீடுகளுக்கு.. 

சிட்டு குருவிகள் வருவதில்லை..” என எதிலோ படித்த நினைவு நீலகண்டனுக்கு. அப்படிதான் ஆனது நீலகண்டனின் வீடும், நீலகண்டனும். யாருமே வருவதில்லை.. அவனை சார்ந்தவர்கள் என யாருமே அழைப்பதில்லை அவனை. தம்பி பேசுவதேயில்லை.. அர்ச்சனா.. சிறிது நாட்கள் பேசிக் கொண்டிருந்தாள் பின் பேசுவதேயில்லை. ரஞ்சனி போனை எடுக்கவேயில்ளை. நீலகண்டன் தனியானான் இப்போது.

ரகு, அடிக்கடி போன் செய்து குகன் பற்றி கேட்க்க.. நீலகண்டன் குகனின் எண்ணை கொடுத்து பேச சொல்லிவிட்டான். எனவே, குகனிடம் ரகு பேச.. ஈசியாக ரகுவின் வேலை முடிந்தது.

ம்… குகன் குறிப்பிட்ட நாள் சொல்லி ‘அப்போது தான் வருவதாக சொல்லிவிட்டான்’. ரகுக்கு சந்தோஷம். நீலகண்டனிடம் அந்த விஷயத்தை சொல்லி.. நீலகண்டனை பத்திரபதிவிற்கு ஏற்பாடு செய்து, வர சொல்லிவிட்டான்.

நீலகண்டன், தம்பியிடம் பேச முடியாமல், தன் அன்னையின் சொத்துகளை விட்டு தரும்படி ஆகிற்று. 

குகன், நேரே பத்திரபதிவு அலுவலகத்திற்கு வந்து விட்டான். தங்களின் வீட்டுக்கு வரவில்லை. கையெழுத்து போட்டுவிட்டு, பாதி பணத்தை வாங்கிக் கொண்டு அப்படியே காரில் சென்றுவிட்டான்.

நீலகண்டனோடு கார்த்திதான் வந்திருந்தான்.. கார்த்திக்கிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு சென்றுவிட்டான். நீலகண்டன் தூரமாக நின்றுக் கொண்டான்.

அன்றிலிருந்து, நீலகண்டன் அப்படியே யாருமில்லாதவன் போல ஒடுங்கி நின்றுக் கொண்டான். தம்பி தன் பேச்சை மதிக்கவில்லை என்பதை அவனால் உள்வாங்க முடியவில்லை.. எதோ ஒரு வெறுமை அவனுள்.

நாட்கள் செல்ல செல்ல.. வேலை.. கடை.. வீடு என அவனின் உலகம் சுருங்கி போனது. முன்பெல்லாம் கூட கொஞ்சம் சம்பாதிக்க வேண்டும்.. திருமணம் என யோசித்தவன் மூளை இப்போது மங்கி போகிற்று. யாருமில்லை தனக்கு என உணர தொடங்கினான்.

கேட்டு செய்வதற்கோ.. பேசி புரிய வைக்கவோ பெரியவர்கள் இல்லாமல் அவனும் வீடும் களையிழந்துதான் போகிற்று.

ரஞ்சனியை அழைத்தான் நீலகண்டன். சென்னையிலிருந்து, பஸ்ஸில் வரும் போது.. ஆனால், ரஞ்சனி எடுக்கவில்லை. அதன்பின் ஏதேதோ நடந்துவிட அவளை அழைக்கவில்லை அவன்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

கண்ணன் இறந்து ஆறுமாதம் ஆகிற்று, அடைப்பு இன்றோடு முடிகிறது. எனவே, எல்லோரும் ஊரிலிருந்து வந்திருந்தனர். வீட்டோடு நல்லது செய்துக் கொள்ளாலாம் என. ரகுவின் அன்னை வந்தார்.. உள்ஊரில் உள்ள கண்ணின் பெரியம்மா வீடு வந்திருந்தனர்.

மிக நெருங்கிய உறவுகள் மட்டுமேதானே.. எனிவே, சமையல் நடந்துக் கொண்டிருந்தது. ரஞ்சனியே எல்லாம் பார்த்துக் கொண்டாள்.

மாதவன், தங்கையிடம் அதிகம் பேசுவதில்லை. அவள், புதிதாக வகுப்பிற்கு செல்லுவது பிடிக்கவில்லை.. எதோ தோழிகளுடம் ஊர் சுற்றுவது பிடிக்கவில்லை அண்ணனுக்கு. அதை எல்லாம் சொன்னால்.. கேட்கவில்லை தங்கை.. என் விருப்பம் இதை நீ கேட்டாதே என்பதாகத்தான் ஒரு பேச்சு அவளிடம். எனவே, தேவைக்கு மட்டுமே பேச்சு, இருவருக்குள்ளும். 

மாதவனால், உண்மையாக அவளை சமாளிக்க முடியவில்லை.. அவனை மீறிக் கொண்டே எல்லாம் செய்கிறாள்.. அதனால், சீக்கிரமே அவளை பிரசாந்திடம் ஒப்படைத்திட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தான். இந்த அடைப்பு முடிந்ததும் பிரசாந்தை பெண் கேட்டு வர சொல்லிவிட்டான், அண்ணன். 

இன்றும் அப்படியே, நேற்று இரவு வந்ததிலிருந்து இன்னமும் பேசிக் கொள்ளவில்லை அண்ணன் தங்கை இருவரும். ஒரு மஞ்சள் நிற சுடியில்.. அப்பா படத்திற்கு முன் படையலுக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பெண்.

மாதவன் குளித்து வந்து தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து.. காக்கைக்கு உணவு வைத்து என எல்லாம் அண்ணன் தங்கைதான் செய்தனர்.. பெரிதாக பேச்சுகள் இல்லை.. அமைதியாக கண் பார்த்து.. உணர்ந்து செய்து முடித்தனர்.

பெரியவர்கள் உண்டு.. பெண்களும் உண்டு அமர்ந்திருந்தனர். கண்ணனின் பெரியம்மாதான் பெரியவர். அவரே “இனி நல்லது எல்லாம் நடத்திக்கலாம் பா மாதவா.. பங்காளிக்களுக்கு எல்லா தீட்டும் விட்டு போச்சு” என பொதுவாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் பேசி முடியவும்.. மாதவன் “பாட்டி அப்படியே ஒரு விஷயம் எல்லோர் கிட்டயும் சொல்லணும்.. இன்னிக்கு ரஞ்சனியை பெண் பார்க்க வராங்க.. அடுத்த முகூர்த்தத்தில் பிரசாந்துக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம். நீங்க எல்லோரும் வந்திருந்து நல்லவிதமாக இந்த கல்யாணத்தையும் நடத்தி தரனும்..” என்றான் எழுந்து நின்று.

ரஞ்சனி அதிர்ச்சியாக அண்ணனை பார்த்தாள்.

கண்ணனின் பெரியம்மா மகனும்.. பெரியம்மாவும் என்ன சொல்லுவது என தெரியாமல் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.

மாதவனின் பெற்றோருக்கு இது முன்பே தெரியும் என்பதால்.. கண்ணின் பெரியம்மாவிடம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தனர்.. “ரஞ்சனிக்கு படிப்பு முடிந்துவிட்டது. ரஞ்சனி வேலைக்கு போகணும்ன்னு இருக்கா.. மாதவனுக்கு அடுத்து எலெக்ஷன் வருது.. அவனால் முன்போல் பார்க்க அலைய முடியாதில்லை.. அதான், பிரசாந்த் ரஞ்சனியை விரும்பி கேட்க்கவும்.. இப்போவே கல்யாணத்தை முடிக்க நினைக்கிறான். கல்யாணம் முடிந்து ரஞ்சனிக்கு தொழில் அமைச்சி கொடுக்கிறேன்னு பிரசாந்த் வீட்டில் சொல்லிட்டாங்க. அவங்களும் நல்ல குடும்பம்.. கட்சியின் பொறுப்பில் இருக்கிறவரோட மகன்தான் பிரசாந்த்.. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணா இருப்பவங்கதானே.. ரஞ்சனியை நல்லா பார்த்துப்பாங்க” என்றார் சமாதானமாக.

சரியாகத்தான் இருந்தது, ரகுவின் அன்னை சொன்னது.

ஆனாலும், பெரியம்மாவின் மகனுக்கு சந்தேகம்.. கண்ணன், தன் தங்கை மகனிடம் தானே.. ரஞ்சனியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டிக் கொண்டு சென்றார்.. அப்படிதானே அரசு சொன்னான்.. என தோன்ற.. அப்போதே கேட்டார் அந்த பெரியவர் “ஏன் பா.. மாதவா.. நம்ம வள்ளி பையனுக்குதானே பாப்பாவை உன் அப்பா பேசிட்டு போனார்.. அப்படிதானே, கண்ணன் சிநேகிதன் சொன்னான் அன்னைக்கு.. நீ என்ன புதுசா சொல்ற” என்றார்.

மாதவன் “அதெல்லாம் சரி வராது பெரியப்பா.. என் நண்பன் இவன் விரும்பி கேட்க்கிறாங்க.. நல்ல வசதிவாய்ப்பான இடம்.. என் தங்கச்சி அங்கதான் நல்லா இருக்கும்.. அதானே பெரியப்பா நமக்கு வேணும்” என்றான்.

பெரியவர் “ஹே.. அது அதை விடுப்பா.. இது ரத்த சொந்தம், உன் அப்பன் சொல்லி பேசி வைச்சிட்டு போனது.. அதை எப்படி மாத்த முடியும்.. நீ எதுக்கும் பாப்பாகிட்ட ஒரு வார்த்தை கேளு..” என்றார்.

ரஞ்சனி பேசவேயில்லை.. அழுத்தமாக மாதவனை முறைத்து பார்த்தே நின்றிருந்தாள்.

Advertisement