Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

16

குகன், அண்ணனை அழைத்தான்.. மதிய நேரம். எப்போதும் எடுத்ததும் அண்ணா இல்லை, நீலா என விளிப்பான். இப்போது அப்படி ஒரு அழைப்பு இல்லை.. நீலகண்டன் போன் எடுத்ததும், குகன் “வீடு ஒன்னு இங்கே ஆபீஸ் கிட்ட இருக்கு.. செகண்ட் சேல்ஸ்.. பேஸ்மென்ட், ஃப்ரஸ்ட் ப்ளோர் என இரண்டு பிளாட். எங்களுக்கு பிடிச்சிருக்கு, விலையும் ஓகேதான். நீ என்ன செய்யற.. வரியா, வந்து பார்க்கிறீயா” என்றான் தம்பி.

அண்ணன் என்ன சொல்லுவது என தெரியாமல் விழித்தான்.. நீலனுக்கு ‘இவன் என்னை வான்னு கூப்பிடுறான்னா.. இல்லை, எனக்கு பிடிச்சிருக்குன்னு.. தகவல் சொல்றானா..’ என ஒன்றும் புரியவில்லை. என்னமோ வார்த்தைகளில் ஒட்ட முடியாத தூரம் அவர்களுக்கு, எனவே வருகிறாயா என கேட்டது அண்ணனுக்கு இது தகவலா என தோன்றியது.

நீலகண்டன் “நான் என்ன பண்ணனும் வரணும்ன்னா வரேன்” என்றான் கேள்வியாக.

குகனுக்கு முணுக்கென கோவம் வர “உன் விருப்பம்..” என்றான். 

நீலகண்டன் அமைதியாகினான் இந்த பதிலில். அழைக்கும் போதே ‘நீ வா.. வந்து பார்..’ என அழைத்தால்.. அது சந்தோஷம் அவனுக்கு. இருக்கும் வேலைகளையும் விட்டுவிட்டு வந்துவிடுவான் அண்ணன். இப்படி ஒரு போர்மல் அழைப்பை தம்பியிடமிருந்து எதிர்பாக்கவில்லை நீலகண்டன். நான் என்ன செய்யணும் என கேட்டாலும் கோவம் வருகிறது’ என எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனாலும், பெரியவனாகிற்றே தணிந்து போனான் “நைட் கிளம்பி வரேன்” என்றான், நீலகண்டன்.

குகன் “ம், சரி.. “ என்றான்.

இருவரும் போனை வைத்தனர்.

இருவருக்கும் என்னமோ சொல்ல முடியாத அழுத்தம். நீண்ட பெருமூச்சு.

நீலகண்டன் இன்று அரசுவை பார்க்க போவதாக இருக்கிறான், மாலையில். தம்பியின் திருமண அழைப்பிதழ், அவருக்கு கொடுக்க எண்ணினான். எனவே, தம்பியிடமிருந்து வந்த அழைப்பில் கொஞ்சம் தளர்ந்து அமர்ந்தான். உடல் கொஞ்சம் முடியவில்லை. என்னமோ சரியில்லை அவனுக்கு. ‘இப்போது சென்னை செல்ல வேண்டுமா’ எனதான் தோன்றியது. தம்பியிடம், ‘முடியாது’ என சொல்ல முடியவில்லை. அவனே ஒருமாதிரி தன்னை தள்ளி நிறுத்துகிறான்.. இப்போது எப்படி சொல்லுவது என அமைதியாக இருந்தான். அசதியில் இருந்தவன், சற்று நேரத்தில் கிளம்பினான். 

அரசு அவரின் அலுவகத்தில் இருந்தார். முறையாக பத்திரிகை வைத்து அழைத்தான். பின் அவர் “கண்ணன் வீட்டிற்கு வைத்துவிட்டாயா” என்றார்.

நீலகண்டன் ஒன்றுமே சொல்லாமல் இருந்தான். அவர் அதிலிருந்து புரிந்துக் கொண்டார். அரசு “கூப்பிடனுமே நீலகண்டன்.” என்றார் அழுத்தமாக.

மாலை நேரம், அதாவது ரஞ்சனி கல்லூரியிலிருந்து வரும் வரை, நீலகண்டனுடன் பேசிக் கொண்டிருந்தவர். அதன்பின் நீலகண்டனோடு சென்றார் பத்திரிகை வைக்க.

ரஞ்சனி மட்டுமே இருந்தாள். ரஞ்சனிக்கு நீலகண்டனை பார்த்ததும் கோவமே.. ஆனாலும், ஒரு ஆனந்தம் வரத்தான் செய்தது அவளையும் மீறி.. புன்னகை முகமாக “வாங்க அரசு அங்கிள்.. வாங்க” என்றாள் நீலகண்டனையும் பார்த்தும்.

அரசு.. ரஞ்சனியிடம் “ரகுவை போன் செய்து வர சொல்லும்மா” என்றார்.

ரஞ்சனி, என்ன.. எது.. என ஏதும் கேட்கவில்லை, ரகுவை அழைத்து வர சொன்னாள். இங்கே இருவருக்கும் மாலை சிற்றுண்டி கொடுத்து உபசரித்தாள்.

ரகு சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான்.   

நீலகண்டன் முறையாக அழைத்தான். அப்போது ரஞ்சனிக்கு தெரியும் குகன் என ஒரு தம்பி நீலகண்டனுக்கு இருக்கிறான் என.. மனதுள் எண்ணிக் கொண்டாள் ‘இன்னும் யார் யார் இருக்காங்களோ’ என எண்ணிக் கொண்டாள். 

ரகு, சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

நீலகண்டன் ரஞ்சனியை தயங்கி தயங்கித்தான் பார்த்தான். அவனுக்கு அவளிடம் பேசலாமா வேண்டாமா என தெரியாவில்லை. அவளின் பார்வையே முறைப்பது போல இருந்தது.

அரசு இறுதியாக கிளம்பும் போது சொல்லிக் கொள்ள.. அப்போதுதான் ரஞ்சனி இவர்களின் அருகில் வந்தாள்.. நீலகண்டன் பார்க்க.. ரஞ்சனி அப்பட்டமாக முறைத்தாள் அவனை.. அதை உணர்ந்தவன்.. தலையசைத்து வேகமாக கிளம்பினான், நீலகண்டன்.

நீலகண்டன், அரசுவிடம்.. விடைப் பெற்றுக் கொண்டு இப்படியே ஊர் போய் சேர்ந்தான். இரவு சென்னை கிளம்ப வேண்டும்.  ட்ரைன், பஸ் என எதிலும் டிக்கெட்.. இல்லை. காரில்தான் செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டே கடையில் சென்று அமர்ந்தான்.

குகன், சொல்லுவான் ‘இந்த கார் வேண்டாம்.. கொஞ்சம் புதுசா நல்லதா வாங்குன்னு.. கேட்கவில்லை தான்’ என எண்ணிக் கொண்டே கடைக்கு சென்று.. அமர்ந்தான்.

வேலையில் நேரம் இழுத்துக் கொண்டது. ஒன்பது மணிக்கு கடையை சாற்றிவிட்டு.. கார்த்தியிடம் ‘தான் சென்னை செல்லுவதை பற்றி போனில் பேசிக் கொண்டிருந்தான்.

கார்த்திக் “என்ன ப்ரோ, குரலே சரியில்லை.. ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு  நைட் போங்க, தக்கல் டிக்கெட் ஏதாவது பார்க்கலாம்” என்றான்.

நீலகண்டன் “ம்.. இல்ல டா, அவன் நேற்றே சொல்லிட்டான்.. நான்தான் இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு, அதனால் பத்திரிக்கை வைக்கணும் என சொல்லி இருந்தேன்.. இப்போ அவனுக்கு லேட் ஆகிடும்.. நான் கிளம்பனும்.. நாலுமணிக்கு போய்டுவேன்.. அங்க போய் தூங்கிடுவேன்.” என்றான்.

கார்த்திக் அப்போதும் கேட்டான் “எங்க கார் எடுத்துக்கோங்க..” என.

நீலகண்டன் “இதுன்னா.. கொஞ்சம் பொறுமையா போய்டுவேன் கார்த்திக்.. நோ ப்ரோப்ளம்” என்றான் கௌரவமாக.

கார்த்திக்கு “மோர்னிங் கூட போங்க ப்ரோ.. குரலே சரியில்லை.. கண் விழிக்க வேண்டாம்” என மீண்டும் அக்கறையாக சொன்னான்.

நீலகண்டன் “ஆம் பைன்..” என சொல்லி பேசி வைத்து விட்டான்.

பின், தான் மட்டும் மெஸ் சென்று உண்டு வந்தான்.. அப்போதே எதோ வயிறு பிரட்டியது.. ஒரு 7up வாங்கி குடித்துவிட்டு வந்தான். 

வீடு வந்து, தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டான்.

கிளம்ப வண்டி எடுக்க வேண்டும் என்ற நிலையில்.. வாமிட். நிற்காமல் வயிற்றை புரட்டி புரட்டி எடுத்தான்.. ஓய்ந்து சோபாவில் வந்து அமர்ந்தான்.. எழவே முடியவில்லை.. அரைமணி சென்று மீண்டும் வாந்தி.. இதேதான் இரவு முழுவதும் நீலனின் நிலை.

யாருக்கும் தெரியவில்லை. நீலகண்டன் சென்னை சென்றிருப்பான் என எண்ணி, கோகுல் கடையை திறந்தான்.

குகன், அண்ணன் இன்னும் வரவில்லையே.. என்ற தன்னை அழைத்து சொள்ளவில்லையே கோவத்தில்.. போனில் அழைக்கவில்லை விட்டுவிட்டான்.. ‘அவனே அழைத்து சொல்லட்டும் ‘வரவில்லை என்றால் சொல்ல வேண்டாமா..’ என தொடர் கோவத்தில் தம்பி அமைதியாகிவிட்டான்.

இங்கே நீலகண்டன் உணர்வே இல்லாமல் இருந்தான் வீட்டில்.

!@!@!@!@!@!@!@!@!@

ரஞ்சனிக்கு, மாலையில்  நீலகண்டனை கண்ணில் பார்த்ததிலிருந்து புத்தி மாறிவிட்டாள்.. ‘தம்பிக்கு கல்யாணம், என்னை வான்னு அழைக்கலை  கூப்பிடவேயில்லை, நான் என்ன யாரோவா.. என்னதான் நினைப்பு அவருக்கு..’ என புத்தி மாறி போகிற்று காதலின் கோவத்தில்.

அவளும் நீலகண்டனின் பார்வையில் தயக்கத்தை உணர்ந்ததால்.. தன்னை தனியே அழைத்து சொல்லுவார் “நீ வரணும்” என சொல்லுவார் என எண்ணிக் கொண்டிருந்தாள், அவன் வந்து சென்ற நேரத்திலிருந்து. ரஞ்சனிக்கு, நீலகண்டன் தன் வீட்டிற்கு வந்து அழைத்தது.. எல்லாம் தனக்காகதான் என சின்னதாக அவளுள் தோன்றியது. அதனால் ஒரு எதிர்பார்ப்பு அவளுள்.

நீலகண்டன் அவளை பார்த்து வந்தானே தவிர அவளை அழைத்து பேசவில்லை. பெண்ணின் எதிர்பார்ப்பு, அவன் மேல் கோவத்தை கொடுத்தது. அன்று, அவன் போன் செய்து தன்னிடம் எதையோ பேசியது முதல்.. உறுதியானது.. நீலகண்டன் என்பவன்.. என்னவன் என. அதனால், நடப்பதை எல்லாம் அவள் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டாள். ஆனால், நீலகண்டனின் குழப்பம் வேறே.. அது இன்னும் இவளுக்கு புரியவில்லையே.

Advertisement