Advertisement

ரஞ்சனி, பொறுக்க முடியாமல்.. இரவில் அவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.. ரஞ்சனி. இரண்டுமுறை. நீலகண்டன் எடுக்கவில்லை. இன்னும் கோவம்தான் அதிகமானது. இன்னிக்கு கேட்டு விட வேண்டும் அதென்ன எப்போதும் என்னை தள்ளி வைப்பது.. நான் யார் அவருக்குன்னு கேட்கனும்’ என உறங்க முற்பட்டாள்.. பாதி உறங்கியும் உறங்காத நிலையில் சீக்கிரமாக எழுந்துக் கொண்டாள், காலையில்.

அவளுக்கு பொறுமை இல்லை, அத்தோடு.. அன்று பேசியது எதுவும் அவளுக்கு, அவனின் தரப்பை சொல்லவில்லை. தன் தரப்பு அவனுக்கு தெரியுமோ தெரியாதோ என எண்ணிக் கொண்டே வேக வேகமாக கிளம்பினாள்.

அரசுவிடம் போனில் அழைத்து நீலகண்டனின் அட்ரஸ் வாங்கிக் கொண்டாள். அவருக்கும் தெரியவில்லை.. ஆனால், கடை பெயர்.. குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் பெயர் சொன்னார். அதுவே போதுமானதாக இருந்தது பெண்ணுக்கு.

அரசு, ‘எதற்கு’ என கேட்க.. ‘ரகு அண்ணா கேட்டாங்க’ என்றுவிட்டாள். அரசுவும், சிரித்துக் கொண்டார் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.

ரஞ்சனியிடம், வேலை செய்பவர் ‘என்ன செய்யட்டும்.. என கேட்க.. ரஞ்சனி “நேரம் ஆகிடும்.. நான் சீக்கிரம் போகணும், அதனால் இட்லி மட்டும் போதும்” என்றாள்.

கீழே வந்து அவசர அவசரமாக உண்டு, “ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்.. மத்தியானம் வந்திடுவேன்” என சொல்லிக் கிளம்பினாள் பெண்.

நேரே.. நீலகண்டன் வசிக்கும் அப்பார்மெண்ட்க்குதான் சென்றாள். கடைக்கு செல்லும் முன்னே அவனை பார்த்துவிட வேண்டும் என எண்ணம். எனவே, வீடு வந்தாள். அவள் வரும் போதே மணி ஒன்பது.

நீலகண்டன் வீடு தெரியாதே.. எனவே, செக்யூரிட்டியிடம் கேட்டுக் கொண்டு.. வண்டியை எங்கே நிறுத்துவது என கேட்டு நிறுத்துவிட்டு மேலே சென்றாள்.

ரஞ்சனிக்கு முகமெல்லாம் விகாசித்து இருந்தது.. ‘எப்படியும், அவரின் தம்பி இருப்பார். அப்புறம், என்னை பார்தததும் ஷாக் ஆக போறார்…’ என கனவுகளோடு.. நீலகண்டனின் வீட்டின் முன் நின்றாள். பெல் அடித்தாள்.

இரண்டு நிமிடம் ஆகிற்று வரவில்லை அவன்.. எப்போதும் போல பொறுமை இல்லாமல் கதவை தட்ட வேகமாக.. கதவில் கை வைத்தாள் ரஞ்சனி. 

கதவு அழகாக திறந்துக் கொண்டது.

திறந்த கதவின் வழி ரஞ்சனி கண்டது.. நடு ஹாலில்.. உடைகள் கசங்கி.. மல்லாக்க படுத்துக் கொண்டிருந்த நீலகண்டனைதான்.

ரஞ்சனிக்கு இதயம் தொண்டையில் வந்து நின்றது.. ‘அய்யோ.. மொடா குடி போலவே..’ என எண்ணிக் கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள். மனது எதை எதையோ எண்ணி கலங்கியது ‘இப்படியே ஓடிடு.. இவன் சரியில்லை..’ என மூளை சொல்ல.. ரஞ்சனிக்கு கையறுநிலை. என்னவோ நம்பிவிட்டாள் இவனை.. ‘இப்படி விடிந்தது கூட தெரியாமல் கிடப்பானா.. என்னை பார்க்கவே தயங்கியவானா இப்படி..’ என கேட்க.  காதல் மனது ‘இல்லை அப்படி தெரியவில்லை.. எதோ மயங்கி கிடக்கார்.. போல’ சமாதானம் செய்துக் கொண்டு.. அவனை விட்டு செல்ல மனதில்லாமல் உள்ளே சென்றாள், பெண்.

வீட்டில் முதலில் அவள் ஆராய்ந்தது.. டேபிள் மேலே எங்கேனும் ஏதேனும் பாட்டில் குவளை இருக்கிறதா எனதான். பின் அங்கிருந்த அறையில் “ஹலோ.. யாராவது இருக்கீங்களா” என குரல் கொடுத்தாள்.

இவள் சந்தேகப்பட்டபடி யாரும் அங்கே இல்லை.. பொருளும் அங்கே இல்லை. கொஞ்சம் அவனின் அருகில் நெருங்கி சென்று “நீலகண்டன்.. நீலன்” என அழைத்தாள்.

அசையவேயில்லை அவன்.. ‘என்ன ஆச்சு’ என அவனை தொட..  கொதித்தது நெற்றி. இவளுக்கு பயம், ‘நினைவு ஏதாவது இல்லையா.. இப்படி இருக்கார்’ என தனது வாட்டர் பாட்டில் எடுத்து.. நீர் கொண்டு.. அவனின் கண்ணில் மெதுவாக துடைத்து.. ”நீலா… சர்.. நீலா.. சார்…” என அழைத்தாள். எந்த அசைவும் இல்லை. 

உடனே கீழே, செக்யூரிட்டியிடம் சென்றாள் ரஞ்சனி.  மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என கேட்டாள். அவரும் தேடி எடுத்து.. நம்பர் கொடுத்தார்.

ரஞ்சனி, அவரை அழைத்து பேச.. அவர் மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.. என்றார். கெஞ்சி அவரை ஒரே ஒரு முறை வந்து பார்க்க சொல்லினாள்.

அவரும் அடுத்த பிளாக்.. எனவே, வந்தார் பதினைந்து நிமிடத்தில். பரிசோதித்து விட்டு.. “பிவேர் அதிகமாக இருக்கு.. ஸ்ட்மொச் அப்செட்.. ஹாஸ்ப்பிட்டல் வந்தால்… ட்ரிப்ஸ் போட்டுவிடுவேன். இப்போதிக்கு பீவர் குறையட்டும், இந்த மருந்துகள் வாங்கி கொண்டுங்க.. மற்றபடி பயம் இல்லை. ஆப்டர்நூன் மேல.. ஹாஸ்ப்பிட்டல் வாங்க” என்றவர் கிளம்பிவிட்டார்.

ரஞ்சனி அவரிடம் எவ்வளவு பீஸ் என கேட்கவே தயக்கமாக இருந்தது.. அவர்.. பெரிய மருத்துவர் என அவரை பார்த்தாலே தெரிகிறது.. எனவே, ஐநூறு ரூபாய் எடுத்து மருத்துவரின் முன்னால்.. அவரின் டிரைவரிடம் கொடுத்துவிட்டாள்.

மருத்துவர்.. ஏதும் சொல்லவில்லை கிளம்பிவிட்டார். 

ரஞ்சனி, மீண்டும் செக்யூரிட்டியை அழைத்து நீலகண்டனை பார்த்துக் கொள்ள சொன்னாள். மருந்துகடை தேடி சென்று.. தானே மருந்துகள் வாங்கிக் கொண்டு.. அந்த மருந்து கடைக்காரிடம் பேசி.. அவரையே ஊசி போட சொல்லி.. கூட்டி வந்தாள். 

அந்த மருந்து கடைகாரரும் ஊசி போட்டு சென்றார். செக்யூரிட்டி கிளம்பினார்.. அவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்தாள். இப்படியே நேரம் கடந்தது.

ஒருமணி நேரம் அவளுக்கு நீலகண்டன் தவிர வேறு யோசனையே இல்லை. நீலகண்டன் அங்கேயே ஹாலில்தான் படுத்திருந்தான். ரஞ்சனி அப்படியே சோபாவில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் தளர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். இப்போதுதான் அருகில் பார்க்கிறாள்.. தாடி மீசை என இரும்பாக இருந்தான்.. ஆனால், வாய் லேசாக திருந்திருக்க.. அசந்து உறங்கிக் கொண்டிருர்ந்தவனை பார்க்க இப்போது கலைத்த தோற்றம்தான். பாவமாக இருந்தது அவளுக்கு.. நெற்றியை நீவி.. இதம் தர கைகள் பரபரத்தது.. புத்தி எங்கே போகிறது என பெண்ணுக்கு புரிய, எழுந்தாள்.. அவன் அருகிலிருந்து.

வீட்டின் உள் என்ன என்ன இருக்கிறது என ஆராய சென்றாள் பெண்.

கிட்சென் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. பார்க்கவே ஆசையாக இருந்தது.. பொருட்களை தேடி எடுத்து ஒரு ப்ளாக் டீ போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

அடுத்த ஒருமணி நேரம் சென்றுதான் நீலகண்டன் அசைந்தான்.. கண்கள் முயன்று திறந்ததில்.. எதிரே.. யட்சியாக ஒருத்தி. நீண்ட பெண் உருவம் ஒன்று.. வனத்தில் சுதந்திரமாக சுற்றும் பாவனையில்.. அங்கும் இங்கும்.. திரும்பி பார்த்துக் கொண்டு எதோ செய்துக் கொண்டிருந்தது.

நீலகண்டன்.. எதோ கனவு என எண்ணி.. கண்களை மூடிக் கொண்டான்.. அப்போதும் அதே உருவம் அவன் கண்ணில் தெரிய ‘இதுதான்  கனவு’ என தெளிந்து கண்களை திறந்தான்.

இப்போது கையில் எதையோ வைத்துக் கொண்டு.. ஹால் நோக்கி வந்துக் கொண்டிருந்தது அந்த யட்சி.. அருகில் வர வர.. ரஞ்சனி என அவனால் உணர முடிந்தது.. எதோ ஒரு இதம்.. ‘பாரேன் கனவில் கூட வருவாளா..’ என திறந்துக் கொண்டே கனவு கண்டான் நீலகண்டன். இன்னும் அவனுக்கு ஏதும் பிடிபடவில்லை.

ஒரு இரண்டு நிமிடம் எதுவென்று தெரியாத லோகத்தில் இருந்தவன் “நீலா” என குரலில் அசைந்து திரும்பினான். பெண்குரல்.. தன் தம்பி போல அழைக்கவும் சட்டென மூளை சுறுசுறுப்பானது.

அதற்குள் யட்சி.. இல்லை, ரஞ்சனி “நீலகண்டன்.. ஒகேவா.. இப்போ எப்படி இருக்கீங்க” என அவனின் நெற்றி தொட்டால் சுவாதீனமாய். ஜில்லென்ற விரல்கள் மேலே படவும்.. எதோ கனவுதான் என எண்ணம்.

மஞ்சள் வண்ண டாப்ஸ்.. ஆரஞ்சு வண்ண முழு ஸ்கேர்ட்.. சத்தமில்லாத மர வளையல் கையில் அசைய.. ரஞ்சனி “இன்னும் லைட்டா பீவர் இருக்கும் போல.. எதாவது சாப்பிடுங்க முதலில்..” என்றவள் ப்ளாக் டீ போடுவதற்காக உள்ளே சென்றாள்.

நீலகண்டனுக்கு உண்மையாகவே தெம்பில்லை.. பேசவே முடியவில்லை.. வாமிட் செய்ததில் தொண்டை வலித்தது.. அடித்து போட்டது போல உடலெல்லாம் வலி.. இதில்,  இவள் நெற்றி தொட்டத்தில்.. சுவாதீனமாய் இங்கே நிற்பதிலும்.. விட்ட காய்ச்சல் திரும்ப வந்திடும் போல அவனுக்கு.. அமைதியாக தன்னால் எழ கூட முடியாமல்.. செல்லும் அவளை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.

உள்ளே சென்றவள், அங்கிருந்தபடியே “மதியத்துக்கு கஞ்சி செய்யவா.. ஆனால், எனக்கு எப்படி செய்யனும்ன்னு தெரியாது..” என பேசிக் கொண்டே அவனின் அருகில் வந்து கேட்டாள்.

நீலகண்டன், அப்படியே பார்த்திருந்தான்.. இமைக்கவில்லை.. அசையவில்லை அப்படியே பார்த்திருந்தான்.. ‘கனவுதானே இது.. நான் இன்னும் எழவேயில்லையே..’ எனதான் நினைப்பு அவனுக்கு. எங்காவது அசைந்தால்.. கனவு கலைந்து விடுமோ என எண்ணம்.

இவன் பதில் சொல்லாமல் போகவும், மீண்டும் அவசரமாக கிட்சென் சென்றாள். டீ எடுத்து வந்தாள்.

ரஞ்சனி டீ கொடுக்கவும்.. அனிச்சையாய் வாங்கிக் கொண்டான். இது நிஜமென தெரிந்தது அவனுக்கு. வாங்கி குடித்தான். இப்போது டென்ஷன் எரிக் கொண்டது அவனுக்கு.. ‘இவ எதுக்கு இங்க வந்தா, எப்படி வந்தாள்..’ என பதைத்தது மனம்.

கனவு என எண்ணி ரசித்ததும் அவனே.. சுதாரித்து பதறுவதும் அவனே.

நீலகண்டன், டீபாய் மீதிருந்து போனை எடுத்தான். கார்த்திக்கு அழைத்துக் கொண்டே அவளைத்தான் பார்த்திருந்தான். சுதந்திரமாக உலவினாள்.. கொஞ்சமும் கூச்சமோ.. பயமோ எதுவுமே இல்லை.. நீலகண்டனுக்கு, அவளின் நேர் வகிடும்.. இருபுறமும் வழிந்த கூந்தலும்.. மூக்குத்தியும்.. உறுத்தியது அவனை.

ரஞ்சனி யாரிடமோ எதோ கேட்டுக் கொண்டிருந்தாள், போனில்.

நீலகண்டனின் அழைப்பை கார்த்திக் எடுக்கவில்லை. 

அடுத்து நீலகண்டன், குகனுக்கு அழைத்தான். குரலே வரவில்லை.. மெதுவாக “உடம்பு முடியலை” என்றான். குகனுக்கும் குரலில் மாறுபாடு புரிய.. “சரி.. உடம்பை பார்த்துக்கோ..” என சொல்லி வைத்துவிட்டான்.

ரஞ்சனியோ இங்கே அவள் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நீலகண்டன் “ரஞ்சனி” என முதல்முறை அவளை அழைத்தான். உண்மையாகவே அவனுக்கே ஆச்சர்யம்.. ‘பெயர் இப்படி நினைவு இருக்கிறதே’ என.

ம்கூம்.. அவளுக்கு காது கேட்கவில்லை.

அவள் சுற்றி சுழன்று தேடியதில்.. தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தாள் ரஞ்சனி.. நீலகண்டன் “வா..” எனுமாறு கையசைத்தான்.

ரஞ்சனி வந்து நின்றாள். 

அவனும் “எதுக்கு இங்க வந்த.. “ என்றான்.

ரஞ்சனிக்கு இந்த கேள்வியில் கோவம் வந்தது “இதென்ன கேள்வி.. எப்படி வந்தேன்னு கேளுங்க.. இல்ல, வந்துட்டியான்னு ஆசையாய் கேளுங்க.. இதென்ன.. எதுக்கு வந்தேன்னு கேட்க்குறீங்க.. திமிரு.. ஆமாம் உங்க தம்பிக்கு கல்யாணம்ன்ன.. எனக்கு சொல்ல மாட்டீங்களா.. என்ன அவசரம் அவருக்கு இப்போ. உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகலையே.. என்ன ஆச்சு, உண்மையை சொல்லுங்க..” என பொரியத் தொடங்கினாள்.

நீலகண்டனுக்கு இதெல்லாம் கேட்க கேட்க.. தலை சுற்றியது.. இந்த கனவே வேண்டாம் என தோன்றியது “நீ கிளம்பு முதலில்..” என்றான் காற்றான குரலில்.

ரஞ்சனி முறைத்தாள்.

நீலகண்டன் “ப்ளீஸ்..” என்றான், கெஞ்சலாக.

ரஞ்சனி “பயப்படாதீங்க.. உங்களை ஒன்னும் செய்திட மாட்டேன். கஞ்சி போடுறேன்.. அப்புறம் போய்டுவேன். பேய் அறைந்தா மாதிரி இருக்காதீங்க.. தூங்குங்க” என அதட்டலாக சொன்னவள், மீண்டும் அவனின் நெற்றியில் கை வைத்தாள்.. “பீவர் குறையுது.. தூங்குங்க.. கஞ்சி போடறேன்..” என இதமாக சொன்னவள்.. எழுந்து உள்ளே சென்றாள்.

நீலகண்டன் கண்களில் லேசாக கண்ணீர் கசிந்தது..

“என்னடி மாயாவி நீ..

என் தலைகேருற..

பொன் தடம் போடுற..

என் உயிராடுற..

என் நெலமாத்துற..

அதரமாக்குற..

என் நிசம் காட்டுற..”

Advertisement