Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

15

ரஞ்சனி, டூ வ்வீலரில் கல்லூரி செல்ல தொடங்கினாள். மாதவனுக்கு அவ்வளவு கோவம், ‘எப்படி! அப்பா இல்லையென்றால்.. என்னிடம் அனுமதி பெற வேண்டாமா.. பயமில்லையா.. நான் இருக்கிறேன் என தெரியவில்லையா அவளுக்கு’ என யோசனைதான் அன்று முழுவதும். ஆனாலும் வேலை அவனை தொடர்ந்து யோசிக்க விடவில்லை.

கட்சி அலுவலகம் கிளம்பிவிட்டான், மாதவன்.

அன்று இரவு மூவரும் மொட்டைமாடியில் கூடினர். பிரசாந்த் “நாம நாளை காட்பாடி கிளம்பனும்.. ஏற்பாடு எல்லாம் ஒகேவா.. மாதவா” என்றார்.

மாதவன் “எல்லாம் ஒகே.. நீங்க நம்ம கவுன்சிலர்களை கூப்பிட்டாச்சு.. உள்ளூர் பெரிய தலைகளை பார்க்கவும் ஏற்பாடு செய்தாச்சி.. மூன்று நாள் அங்கேதான்.. நமக்கு வேலை” என தொடங்கி இன்னும் விவரங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

முடித்து.. கோப்பையை கையெடுக்கும் நேரம்.. மாதவன் கீழே தங்கையை பார்க்க எண்ணி எழுந்தான். 

பிரசாந்த் “எங்க போறே..” என்றான். மாதவன் சொல்ல.. 

பிரசாந்த் “விடு மாதவா.. அவளிடம் இப்போது நீ எது சொன்னாலும் கேட்கமாட்டா.. அப்படி நிக்கறா.. நான் நம்ம ஆட்களை அவளை கவனிக்கும் படி செய்திருக்கேன்.. முதலில் அன்று மருத்துவமனையில் நடந்தது.. எல்லாம் அவளை எந்த அளவுவில், இருக்கு. பாதிச்சிருக்கா! இல்லையான்னு! தெரியனும்.. அந்த பையன் பேரென்ன.. “ என்றான், பேச்சை நிறுத்தி.

மாதவன் “நீலகண்டன் “ என்றான்.

பிரசாந்த் “ம்.. அவன் கணக்கு இன்னும் தீரலையா.. என்னப்பா நீ.. அதை முதலில் முடி.. கொஞ்சம் ரஞ்சனியை ப்ரீயா விடு.. இனி அந்த நீலகண்டனும் இவளும் மீட் பண்ண கூடாது. சீக்கரம். அவன் விஷயத்தை முடி..” என அங்கே அமர்ந்திருந்த ரகு மாதவன் இருவரையும் பார்த்து சொன்னான் பிரசாந்த்.

ரகு “அதைதான் நானும் செய்ய நினைக்கிறேன் முடியலை.. இந்த வாரத்தில் பேசிடலாம்..” என்றான்.

மாதவன் கையில் இப்போது குவளை.. ஒரு அசட்டு புன்னகையோடு “எப்படிதான் எல்லாத்தையும்  யோசிக்கிறீங்களோ.. நீங்க சொன்னது சரிதான்.. அவனை தூக்கணும் முதலில்.

பிரசாந்த் “டேய்.. நீ என்னைவிட டெரரா பேசறா.. நான் நல்லவன் பா.. என்ன ரகு சரிதானே..” என்றான் சிரித்துக் கொண்டே.

மாதவன் “ஹா.. ஹா… நான் டெரரா.. எங்க பாஸ் நீங்கதானே..” என்றான்.

பிரசாந்த் சிரித்தான் வஞ்சமாக. பிர்சாந்த்க்கு ஒரே கணக்கு ரஞ்சனிதான். மாதவனின் ஒரே கணக்கு இந்த எலெக்ஷனில் எப்படியேனும் ஒரு சீட்டு வாங்கி ஜெயித்துவிட வேண்டும் என்பது. ஆக இருவும் முறையான கொள்கையில் பிணைந்திருக்கையில்..  ஒருவரின் பாராட்டும்.. அடுத்துவருக்கு புரியும். அடுத்தவரின் சிரிப்பும் புரியும்தானே.

பிரசாந்த் கட்சி பொருளாரின் மகன். பெரிதாக படிப்பில்லை.. கட்சியின் நடைமுறைகளை கவனிப்பதுதான் அவனின் இப்போதைய வேலை. 

முன்பு வேலையே செய்யமாட்டான்.. ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன்தான். இப்போதுதான், அதவாது இந்த இரண்டு வருடமாகத்தான் கட்சி பணி என வந்து நிற்கிறான். காரணம் திருமணம். எந்த வேலையும் இல்லை, கட்சியில் பொறுப்பும் இல்லை.. எனவே, பெண் கொடுக்க எல்லோரும் யோசித்தனர். பணம் இருக்கிறது என்றாலும் பிரசாந்த் பற்றிய செய்திகள் அவ்வளவு நல்லதாக யாரும் கேள்விப்பட முடியாது. அதனால், சொந்தம்.. பார்க்கும் வரன்.. எல்லாம் மரியாதையாக.. பிரசாந்தின் தந்தையின் பெயர் சொல்லி.. ‘உங்கள் அளவுக்கு நாங்க இல்லையே’ என தப்பித்துக் கொண்டது.

காத்திருந்து காத்திருந்து பெற்றோருக்கு சங்கடமாக போனது. அத்தோடு மகனின் இந்த பொறுப்பில்லா நிலையும் தெரிய.. ஒன்றும் செய்ய முடியாமல் நின்றனர். அப்போது பிரசாந்தின் தந்தை “போதும் டா.. வயசு போகுது.. கொஞ்சம் பொறுப்பா இரு.. நம்ம தொழில் எதையாவது பாரு.. எல்லாம் உன் பேரில் இருக்கு.. போய் கொஞ்சம் அதை பாரு” என்றார்.

அதெல்லாம் அவனுக்கு சரி வரவில்லை. படிப்பு பெரிதாக இல்லை.. கணக்கு வழக்கென்ன புரியவில்லை.. பின் அவனின் தந்தை “சரி, கட்சியில் கொஞ்சநாள் இரு.. ஏதாவது சொல்லிக்கிற மாதிரி பொறுப்பாக நட.. ஏதாவது செய்யலாம்” என்றார். எனவே, கட்சியில் வந்து நின்றான் பிரசாந்த். 

அப்போது கண்ணனோடு, மாதவன்.. வந்திருந்தான் கட்சி தலைமையிடத்திற்கு. கண்ணன் கட்சியின் தலைமையோடு பேசிக் கொண்டிருக்க.. மாதவன் வெளியே நின்றான். அப்போது பிரசாந்தும் நின்றான். யாரு.. என்ன.. என பேச தொடங்கினர் இருவரும்.. அப்படிதான் இருவருக்கும் பழக்கம்.

அடுத்த முறை வரும் போது சேர்ந்து தண்ணியடிக்கும் அளவுக்கு நெருங்கியது நட்பு. அன்று அப்படிதான் மாதவன் தங்கியிருந்த அறைக்கு, பிரசாந்த் வந்திருந்தான். மாலை நேரம்.. அப்போது மாதவன் வேறு போனில் பேசிக் கொண்டிருக்க.. அவனின் இரண்டாவது போன் அழைத்தது “ஹோம்” என பெயர் இட்டு.

பிரசாந்த் இயல்பாக எடுத்தான் ‘அம்மாவாக இருக்கும் என்ன இப்போ’ என எடுத்தான் அந்த பக்கம் அழகான பெண் குரல் கேட்டது “அண்ணா… அண்ணா.. ப்ளீஸ்” என ஆரம்பமே கொஞ்சியது குரல்.

அது ரஞ்சனி, கல்லூரி சேர்ந்த முதல் வருடம் அப்போது.. எனவே பார்ட்டிக்கு செல்ல அப்பா மறுத்துவிட்டார், எனவே, அண்ணனிடம் சிபாரிசுக்கு வந்திருந்தாள் தங்கை.

பிரசாந்த் அந்த குரலில்தான் ஈர்க்கப்பட்டான்.. நண்பனின் தங்கை என தோன்றவில்லை.. “ம்..” என்றான்.

ரஞ்சனி “ஹலோ இருக்கியா டா அண்ணா..” என்றாள். அவனும் ம் கொட்டினான்.

ரஞ்சனி “நான் பார்ட்டிக்கு போகனும், அப்பா பர்மிஷன் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்.. யாருமே இல்ல வீட்டில்.. நான் தனியா இருந்து என்ன செய்யறது.. ப்ளீஸ் இந்த மந்த்.. இதுதானே ஃபஸ்ட் பார்ட்டி.. ப்ளீஸ்..” என்றாள், கொஞ்சலாக.

பிரசாந்துக்கு அதை கேட்டதும் உடலெல்லாம் புல்லரித்தது.. “அவ்வளவுதானே, போய்ட்டு வா” என்றான் தன் குரலில் ஆசையாக.

ரஞ்சனி “ஹலோ யாரு இது யாரு நீங்க” என தன் கொஞ்சல் குரலை மாற்றி வினவினாள்.

பிரசாந்த் போனின் இணைப்பை துண்டித்து விட்டான்.

மாதவன் வந்ததும் சொன்னான்.. பிரசாந்த் “அண்ணான்னு ஒரு பெண் பேசியது.. குரல் அவ்வளோ சூப்பரா இருந்தது பா.. எதோ பார்ட்டிக்கு அனுமதி கேட்டாள்.. நான் கொடுத்திட்டேன்.. நீ பேசு” என என்னமோ சிரித்துக் கொண்டே ஒரு மாதிரி பிரசாந்த் சொன்னான். மாதவன் அதை கவனித்துக் கொண்டான். 

பின் தங்கையிடம் பேசினான் மாதவன்.

அதனை தொடர்ந்து.. மாதவனிடம், நேரம் பார்த்து.. பிராசந்த், அவனின் தங்கை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டான்.. புகைப்படம் காட்ட சொல்லி பார்த்தான்.. இப்படியாக தனக்கு உன் தங்கையை பிடிக்கும் என மறைமுகமாக சொன்னான் பிரசாந்த்.. அடுத்தடுத்த சந்திப்புகளில்.

மாதவனும் புரிந்துக் கொண்டான்.. பிரசாந்த் பற்றி எந்த கெட்ட எண்ணமும் மாதவனிடத்தில் இல்லை.. பொருளாலரின் மகன்.. எப்படியும் கட்சியில் ஒரு பணி உண்டு பிற்காலத்தில்.. பசையுள்ள இடம்.. என்ன வயதுதான் சற்று அதிகம்.. மற்றபடி எல்லோரும் போல்தானே பிரசாந்தும் என எண்ணிக் கொண்டான் மாதவன். அத்தோடு.. இவர் கூட இருந்தால், தன் அரசியல் கனவு நனவாகும் என எண்ணம் எழுந்தது.. எனவே இருவரும் சொல்லிக் கொள்ளாத ஒரு ஒப்பந்தத்திற்குள் வந்தனர்.

ஆக, மாதவனுக்கு சீட் கிடைக்கும் நேரம் ரஞ்சனியை பிரசாந்த் திருமணம் பேசலாம்.. எனும் ஒப்பந்தம்தான் அது. ஆக, அதன்படி எல்லாம் சரியாக இதுவரை நடந்தது. கண்ணன்.. நீலகண்டனிம் தன் பெண்ணை கொடுத்து தவிர.. எல்லாம் நன்றாக சென்றது அவர்கள் பக்கம்.

மாதவனுக்கு ‘என் சொல்படி கேட்ப்பாள் தங்கை, அவளுக்கு இது பாதகமில்லையே.. என்ன பிரசாந்த கொஞ்சம் அப்படி இப்படி.. இரண்டு கேஸ் இருக்கிறது.. அதெல்லாம் பதவி வந்தால் ஒன்னுமில்லாமல் போகும்.. யார் இங்கே ஒழுக்கம்..’ என எண்ணிக் கொள்வான் மாதவன். அதனால் தன்மேல் உள்ள நம்பிக்கையில் துணிந்து எல்லாம் செய்தான்.

ஆனால், அவர்கள் எதிர்பாராதது நீலகண்டன். அன்று அப்பாவின் காரியத்தில் அவன் வந்து நின்றது.. தன் தங்கையின் பார்வை அவனை தொடர்ந்தது. அவனின் பார்வையும் இவளை தொடர்ந்தது என எல்லாம் பிரசாந்த் கவனித்து சொல்லியிருந்தான் மாதவனிடம். அத்தோடு, தங்கை இப்படி டூ வ்வீலரில் செல்லுவது எல்லாம் அண்ணனை கொஞ்சம் யோசிக்க வைத்தது. அதனால், அவளை அப்படி அனுமதிக்க கூடாது என எண்ணினான். ஆனால், பிரசாந்த ‘அப்படியே இருக்கட்டும்.. நீ நீலகண்டனை மட்டும் பார்’ என்றான். 

எனவே ரஞ்சனி வண்டியில் கல்லூரி சென்றாள்.. மாதவனும் பிரசாந்தும் கட்சி வேலையாக கிளம்பினர், ஒரு வாரம் ஆகிறது இன்னும் மாதவன் வீடு வரவில்லை.

ரகுதான் எப்போதும் போல, கட்சி அலுவலகம் வீடு என கவனிக்கிறான். இப்போது வீட்டில் எந்த வேலையும் இல்லை.. காலையில் ரஞ்சனி, என்ன சமையல்.. தனக்கு என்ன வேண்டும்.. என சொல்லி விடுகிறாள். அதனால் அதற்கு தேவையாது எல்லாம் தானே பார்த்துக் கொள்கிறாள். வீட்டு செலவுக்கு முன்பு கண்ணன் பார்ப்பார்.. இப்போது ரஞ்சனி பார்க்கிறாள்.

Advertisement