Advertisement

என்னவென சொல்லுவான் “ஒண்ணுமில்ல.. என்ன படிக்கிறீங்க” என்றான்.. மரியாதையாக.

ரஞ்சனிக்கு, ‘அவனின் குரலே இப்படிதானா.. இல்லை, ஏதாவது பிரச்சனையா.. எதற்காக அழைத்தான்’ என யோசனை உள்ளே ஓடுகிறது. ஆனாலும், தன்னிடம் பேசுகிறான்.. என புதிதாக முளைத்த ஆசை துளிர்.. வெளியே பச்சை கொடி காட்ட.. இப்போது அவனின் கேள்வியில்.. என்ன பேசுவது என தெரியாமல் இருந்தத, தயக்கம் விலகி ஓட “BE சிவில்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்பாகிட்ட அடம் பிடிச்சு சேர்ந்தேன். இந்த காலேஜ்ல மட்டும்தான் இருந்தது.. மற்ற எல்லாம் தூரமாகதான் இருந்தது. அதனால், இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து இந்த கோர்ஸ்தான் வேணும்ன்னு கேட்டேன்.. என் அப்பா.. வேண்டாம்ன்னு சொன்னாலும்.. எனக்காக வாங்கிக் கொடுத்தார். சூப்பர் ல்ல.. ஏன் அப்பா எப்போதுமே சூப்பர்தான்” என ஆர்பாட்டமாக சொன்னவள். 

அடுத்து அமைதியான குரலில் ”நான் ஜாலியா இருந்தா எங்க அப்பாவை கண்ணு.. டேய் கண்ணுன்னு கூப்பிடுவேன்.. அப்பா சிரிப்பார்.. ஒண்ணுமே சொல்ல மாட்டார். எனக்கும் அப்பாக்கும் லெமன் டீ ரொம்ப பிடிக்கும்.. அஹ…” என சுதாரித்தவள் “உங்களுக்கு டீ பிடிக்குமா..” என்றாள், அவனையும் பேச்சில் இழுக்கும் எண்ணத்துடன்.

நீலகண்டன், அவள் பேச்சில் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தான்.. முழுவதும் அவளின் பேச்சை கவனிக்கவில்லை.. ஆனாலும், ‘தம்பிக்கு வீடு வாங்கனுமாம் அவர்கள் சொல்லுகிறார்கள்.. நான் பார்த்து செய்ய வேண்டியது..’ என்றதில் அவன் வந்து நிற்கும் போது.. ரஞ்சனி கேள்வி கேட்க.. “ம்.. தெரியலையே..” என்றான்.

ரஞ்சனி “டீ கூட பிடிக்குமா பிடிக்காத.. தெரியாதா..“ என்றாள்.

நீலகண்டன், அந்த பேச்சை கேட்டு.. அமைதியாகினான். பின் உண்பதற்காக கையை உணவில் வைத்தான், மனதை இயல்பாக்கிக் கொண்டான். அதற்காகத்தானே அவளை அழைத்தது.

இப்போது ஆழமான குரலில் “பிடிக்குமா பிடிக்காதா அப்படின்றது.. கொடுக்கிற நபர்.. கூடயிருக்கிற  நபர்களின் ப்ரையாரிட்டி பொறுத்தது.. ம், எங்க அம்மா சத்துமாவு கஞ்சின்னு ஒன்னு கொடுப்பாங்க.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி.. அவங்க போடுகிற பொருட்கள் போட்டுதான் நான் அரைச்சு வைச்சிருக்கேன்.. ஆனால், அம்மா கொடுக்கிற மாதிரி வரலை.. என்னுன்னு தெரியலை.. எனக்கு பிடிக்கலை.. ஆனாலும், அதை அப்படி செய்து வைத்துக் கொள்ள எனக்கு பிடிக்கும்.

அதே மாதிரிதான்.. தம்பி கேட்க்கும் போதெல்லாம் அவனுக்கு பிடிக்கும்ன்னு.. கோபிமன்சூரீ செய்வேன்.. அவனுக்கு அது ரொம்ப பிடிக்கும்.. எனக்கு பெருசா ‘பிடிக்காது’. ஆனால், அவன் கூட சாப்பிடும் போது எதோ.. ஒரு பீல்.. பிடிக்கிற மாதிரியே இருக்கும்.. அது ஏன்னு இப்போது யோசிக்கும் போது கொஞ்சமா புரியுது. தெரியலை.. நான் சொல்றது சரிதானே” என்றான்.. உண்டுக் கொண்டே.

ரஞ்சனி “அஹ.. “ என்றாள்.. குழப்பத்தில், புரியாத பாவனையில்.

நீலகண்டன் “என்ன..” என்றான்.

ரஞ்சனி “இல்ல.. உங்களுக்கு சத்துமாவு கஞ்சிதான் பிடிக்குமா” என்றாள்.. யோசனையான குரலில்.

நீலகண்டன் சிரித்தான்.. உணவு உள்ளே இறங்கியது.. கொஞ்சம் நினைவு வந்தது.. “அது இப்போ எதுக்கு..” என்றான் சுதாரிப்பான குரலில்.. விளையாட்டாய் கேட்பது போல கேட்டான்.

ரஞ்சனி, என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றாள்.. இந்த சுதாரிப்பான குரலில்.

நீலகண்டன் “சரி.. காலேஜ் முடிஞ்சிதா..” என்றான், அக்கறையாக.

ரஞ்சனி “இல்ல..” என்றாள்.

அவன் “சரி.. சாப்பிட்டியா” என்றான்.. 

ரஞ்சனி “ம்..” என்றாள்.

நீலகண்டன் “கிளாஸுக்கு போகலை.. டைம் ஆச்சு.. ம், உங்க அப்பா வாங்கிக் கொடுத்த சீட்டுக்கு எப்படி கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா.. போங்க கிளாஸுக்கு” என்றான், விளையாட்டாய்தான் சொன்னான்.

ரஞ்சனி “நீங்கதான் கூப்பிட்டீங்க..” என்றாள்.. அச்சத்தோடு.

நீலகண்டன் அப்போதுதான் தான் எதற்கு அழைத்தோம் என உணர்ந்தான் “ம்.. அது.. கொஞ்சம் டென்ஷன்.. யார்கிட்ட.. இல்ல.. உன்கிட்ட பேசினால் சரியாகும்ன்னு தோணிச்சு, அதான் கூப்பிட்டேன்.. அஹ.. டிஸ்டர்ப் செய்யலையில்ல..” என்றான், பழையபடி இறுகிய குரலில் சொன்னான். ஆனால், கொஞ்சம் குற்றவுணர்ச்சி.. சின்ன இழையோடிய வெட்கம்.. மெலிதான சினேகபாவம் என எதோ ஒன்னு அந்த குரலில் இருந்தது.. அதை அவனும் உணர்ந்து.. அதை வெளிப்படுத்த கூடாது என தவித்துக் கொண்டே.. தன்னுடைய அக்மார்க் த்வனியில் பேசினான் அவளிடம்.

ரஞ்சனி, என்ன சொல்லுவது இப்படி பேசுபவனிடம்.. என புரியாமல் நின்றாள்..

நீலகண்டன் “என்னாச்சு” என்றான் அவளின் அமைதி பார்த்து.

ரஞ்சனி “இல்ல, ஒண்ணுமில்ல.. இப்போ நீங்க ஒகேவா..” என்றாள்.

நீலகண்டன் இங்கே தலையில் கை வைத்துக் கொண்டான் ‘என்ன டா பண்ற நீ’ என தோன்றியது. எங்கையோ இருக்கிற வெறுமையை நிரப்ப.. இவளிடம் என்ன தேடுகிறாய் என மனது இடித்து.

“என்னமோ ஏதோ..

எண்ணம் திரளுது கனவில்..

வண்ணம் பிறழுது நினைவில்..

கண்கள் இருளுது நனவில்..

என்னமோ எதோ முட்டி 

முளைக்குது மனதில்..

வெட்டி எறிந்திடும் பொழுதில்…

மொட்டு அவிழுது கொடியில்..”

ம்.. வழித்துணை என்பது,  நாம் நடக்கும் பாதை.. உடன் வந்து.. ‘இன்னும் எவ்வளவு தூரம்’ என கேட்காத ஒன்றாக இருந்துவிட்டால்.. வரம் நாம்தான் வாங்கி வந்திருக்கிறோம்.. அப்படிதான் இப்போது நீலகண்டனின் நிலை என்னவென கேட்டாகாமல் அவள் பேச்சு இருந்தது.

நீலகண்டன் “யெஸ்.. தேங்க்ஸ். ஆனால், சாரி” என்றான்.

ரஞ்சனிக்கு இப்போது மனது சுணங்கியது.. “நீங்க இப்போ ஒகே தானே..” என்றாள் நல்லவிதமாக, அவன் பதில் சொல்லுவதற்குள்  சத்தமாக “என்னால் ஒருவர் சிரிக்கிறார்.. என்னால் ஒருவர் ரிலாக்ஸ்சாக உணர்கிறார் என்றால்.. நான் கலக்க போவது யாரு.. போக தயாராகிட்டேன்..” என்றாள் விளையாட்டுக் குரலில்.

நீலகண்டன் சிரித்தான் அவளின் குரலில் “அந்த என்ன கலக்க போவது..” என்றான்.

ரஞ்சனி “அது தெரியாதா.. நீங்க தமிழ்நாட்டில் வாழ்வதே வேஸ்ட்.. போங்க நான் கிளாஸ்க்கு போறேன்.. இதே ஹப்பியோட போய் வேலையை பாருங்க.. பைய்..” என்றவள் போனை வைத்துவிட்டாள்.

நீலகண்டனுக்கு இன்னும் எழ மனதில்லை.. எப்படி உணர்கிறான் என அவனால் கணிக்க முடியவில்லை.. ‘விடு.. இதை அப்புறம் பார்க்கலாம்.. போய் அவனுக்கு கலயாணத்தில் என்ன பண்ணனமோ செய்..’ என தோன்றியது. எழுந்து ஹாஸ்ப்பிட்டல் சென்றான்.

!@!@!@!@!@!@!@!@!@!@

குகன், வராண்டாவில் இல்லை.. அறையில் இருப்பான் போல.. அவனின் மாமனார் மாமியார், பெரியப்பா.. என எல்லோரும் வெளியே வராண்டாவில் இருந்தனர். அந்த பெண்ணின் அண்ணனை காணவில்லை.

நீலகண்டன் அவர்கள் எதோ பேசிக் கொண்டிருக்க.. இவன் நான்கு சேர் தள்ளி அமர்ந்தான். குகனின், மாமனார் மாமியார் வந்தனர்.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

நீலகண்டன் “நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. நான் இருக்கேன்” என்றான். அதன்பிதான் மூவரும் கிளம்பி சென்றனர்.

குகன் சற்று நேரம் சென்று அறையிலிருந்து வெளியே வந்தான்.

வெளியே அண்ணன் மட்டுமே இருந்தான். மற்றபடி அர்ச்சனாவின் அப்பா அம்மா யாரும் இல்லை. 

குகன், தன் அண்ணின் அருகே வந்து அமர்ந்தான்.. இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. அமைதியாகினர். அண்ணனுக்கு அவனின் தவறை மன்னிக்க முடியவில்லை.. சொல்ல போனால்.. இன்னும் ஏற்கவே முடியவில்லை. 

குகனுக்கு, அண்ணன் இன்னமும் அர்ச்சனாவை வந்து பார்க்கவில்லையே என இருந்தது. அதிலேயே அண்ணனின் கோவம் புரிகிறது.. ஆனால், அவனின் சூழல்.. இதில், என்ன சொல்லி.. எப்படி விளக்க முடியும்.. என அமைதியாக அமர்ந்திருந்தான்.

இருவரும் இப்படி அமைதியாக இருந்ததேயில்லை.. எப்போதும், எந்த சூழ்நிலையிலும்.. அவர்கள் பிரிந்ததேயில்லை.. பேசாமல் இருந்ததேயில்லை. இந்த மௌனம் இருவருக்கும் வலித்தது.

உண்டு முடித்து எல்லோரும் வந்தனர்.. குகனுக்கு உணவை வாங்கிக் கொண்டு வந்தனர். எல்லோரும் வெளியே இருப்பதால்.. அர்ச்சனாவின் அன்னை உள்ளே சென்றார் பெண்ணை பார்க்க.

மாமனார், குகன் கையில் பார்சல் கொடுக்க.. அவன் “அண்ணா, சாப்பிட்டியா” என்றான், நீலகண்டனை பார்த்து.

நீலகண்டன் “ம்.. நீ சாப்பிடு” என்றான்.

குகன், அறைக்கு செல்ல எத்தனித்தான்.. திரும்பி அண்ணனை “வா அண்ணா, அர்ச்சனாவை பார்க்கலாம்” என்றான்.

நீலகண்டன், தயங்குகிறான்.. மனது ஒப்பவில்லை அவனிற்கு.. மற்ற மூவரும் அவனையே பார்க்க.. நீலகண்டன் எழுந்தான். குகன் முகத்தில் சின்ன புன்னகை. 

சரியாக குகனின் மாமியார் வந்து “அர்ச்சனா, நல்லா தூங்கறா மாப்பிள்ளை..” என்றார்.

குகன், முகம் வாடி போனது. நீலகண்டன் ‘அப்பாடா..’ என அமர்ந்தான்.

குகன் உள்ளே சென்றான்.

நீலகண்டனுக்கு ‘இங்கே தான் இருந்த என்ன செய்வது’ என தெரியவில்லை. எவ்வளவு நேரம் அமர்ந்தே இருப்பது.. மாலை ஐந்து மணியை நெருங்கியது நேரம். சும்மாவே எத்தனை நேரம் இருப்பது என புரியாமல்.. அமர்ந்திருந்தான்.

அர்ச்சனாவின் பெரியப்பா வந்து பேச்சு கொடுக்க.. பேசிக் கொண்டே நீலகண்டன் “நான் கிளம்பட்டுங்களா..” என்றான் தயங்கியபடியே. அவர் தன் தம்பியிடம் சொன்னார்.. அவர்களும் ஏதும் வேலை இருப்பதாக சொல்லவில்லை.. அதனால் நீலகண்டன் கிளம்ப எண்ணினான்.

குகன், வெளியே வரவும் நீலகண்டன் “நான் கிளம்பறேன்.. என்ன வேண்டும்..” என்றான். என்ன சொல்லுவான் தம்பி.. ‘நீதான் வேண்டும்’ என சொல்லும் விளையாட்டு பையன் இல்லையே இப்போது.. கண்ணில் எதோ துக்கம் அவனுக்கு. அண்ணனுக்கும் எதோ வலி.. இருவருக்குள்ளும் ஒரு இடைவெளி.. அவர்களாகவே.. தெரிந்தே ஏற்படுத்திக் கொண்டனர். ம்.. பேச்சை தவிர்த்தனர்.

குகன், பதில் சொல்லாது போகவும் “நாள் பார்த்துட்டு கூப்பிடு.. வீடு எனக்கு தெரிந்த இடத்திலும் சொல்லி வைக்கிறேன் வில்லா டைப் பார்க்கலாம்..” என பேசிக் கொண்டே இருந்தவன், தன் பாக்கெட்டில் கை விட்டு.. பார்ஸ் எடுத்து.. கார்ட் எடுத்தான்.. ‘தம்பிக்கு செலவு இருக்கும்.. கொடுக்கலாமா வேண்டாமா’ என யோசித்தான். ஆனால், ‘இத்தனை பேர் எதிரில் கொடுத்தால்.. அவனை ஏதாவது நினைத்து விடுவார்களோ’ என எண்ணி அமைதியாக வைத்துக் கொண்டான்.. “வேற..” என்றான்.

குகனுக்கு ‘வீட்டுக்கு போயிட்டு தூங்கி எழுந்து போ..’ என சொல்ல தோன்றியது.. ஆனால், சொல்லவில்லை.. அமைதியாக நின்றான்.. தம்பிக்கு இப்போது ஒரு தாங்கல்.. சின்ன கோவம் ‘என்ன இருந்தாலும் அர்ச்சனாவை பார்த்திருக்கலாம் அண்ணன்..’ என கோவம். எனவே எதையும் கேட்கவில்லை.

நீலகண்டன் “வரேன்.. “ என்றவன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

தம்பி தனித்து நின்றான்.

“அதுவே படைக்கும்

அதுவே உடைக்கும்..

மனமும் ஒரு குழந்தையே..

அதுவே மலரும் அதுவே உதிரும்

அதுபோல் இந்த கவலையே..”

Advertisement