Advertisement

குகன், அர்ச்சனாவை பற்றி சொல்லிக் கொண்டே வந்தான் ‘icuவில் இருக்காண்ணா, இப்போது ரூம்மிற்கு ஷிபிட் ஆகிடுவா.. நீ எப்போ வந்த..’ என பேசிக் கொண்டே வந்தான். எப்போதும் தம்பியின் பேச்சை ரசிப்பவன்.. இப்போது அமைதியாக வந்தான்.

இவர்கள் செல்லவும் அர்ச்சனாவை ரூமில் விடவும் சரியாக இருந்தது. எனவே, ஆண்கள் இருவரும் வெளியே நின்றனர்.

குகன், இப்போது யாருடனோ வருவதை பார்த்தனர். இந்த இரண்டு நாளும் குகன் தனியேதான் இருந்தான். எனவே, ஆர்வமாக தந்தையர் பார்த்தனர். ம்.. இப்போது பேசியதின் படி.. எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டுமே, அதனால் பார்வை சென்றது அவர்களுக்கு.

குகன் அவர்களின் பார்வை உணர்ந்து.. அவர்களின் அருகில் சென்றான்.. தயக்கமாகத்தான் சென்றான்.. “இவர் என் அண்ணன்” என அறிமுகப்படுத்தினான், அர்ச்சனாவின் தந்தையை பார்த்து.

நீலகண்டன் கை கூப்பி “வணக்கும்..” என்றான்.

பெரியவர்களும் வணக்கம் என்றனர்.. 

அர்ச்சனாவின் பெரியப்பா “என்ன ஆளுங்க நீங்க” என்றார் எடுத்த உடன், நீலகண்டன் சொல்லவும்தான் இரண்டு பெரியவர்களின் முகமும் கொஞ்சம் ஆசுவாசம் ஆனது. குகனுக்கும் அப்படி ஒரு ஆசுவாசம் அந்த முகங்களை பார்த்ததும்.

நீலகண்டன் இதனை நொடியில் படித்துக் கொண்டான்.

அர்ச்சனாவின் தந்தை, குகனிடம் “அர்ச்சனா ரூமிற்கு வந்தாச்சு, நீங்க போய் பாருங்க” என்றார். குகனுக்கு, அவர் தன்னிடம் பேசியது நிம்மதியாக இருந்தது.

குகன் “நீங்க பாருங்க, அண்ணன்கிட்ட பேசிட்டு வரேன்” என்றான்.

அண்ணன் தம்பி இருவரும் சற்று தள்ளி வந்தனர்.. என்ன பேசுவது என தெரியவில்லை. குகன் “அ..அர்ச்சனாவை பார்க்கலாமா” என்றான் தயங்கிய குரலில்.

நீலகண்டன் ஏதும் பேசவில்லை, பின் “எத்தனை நாளா இங்க இருக்க” என்றான். குகன் பதில் சொல்லவும் அண்ணன் “போ, வீட்டுக்கு போயிட்டு வா.. கொஞ்சம் பிரெஷ் ஆகி வா.. அப்புறம் பார்க்கலாம்..” என்றான்.

குகன் “இல்ல, அர்ச்சனாவை பார்த்துட்டு” என்றான்.

நீலகண்டன் ‘என்னமோ செய்’ எனும் விதமாக அங்கிருந்த சேரில் அமர்ந்துக் கொண்டான். போன் எடுத்து யாருக்கோ அழைத்து பேச தொடங்கினான்.

குகன் என்ன செய்வது என தெரியாமல்.. அண்ணன் சொன்னபடி வீடு சென்றான்.

குகன், கிளம்பியதும், நீலகண்டன் போன் பேசி முடித்தும்.. அர்ச்சனாவின் பெரியப்பாவும், அப்பாவும் அவனிடம் வந்து பேசினர்.

!@!@!@!@!@!@!@!@@!@!@!

ரஞ்சனி வீட்டில், காரியம் முடிந்த அன்றே.. அவளின் பெரியம்மாவும் ரகுவின் மனைவி குழந்தை என எல்லோரும் கிளம்பினர். 

ரகுவின் மனைவியும், பெரியம்மாவும் விடைபெற்றனர் ரஞ்சனியிடம், கலங்குவாள்.. அழுவாள் என எண்ணினாள் போல, ரகுவின் மனைவி. ஆனால், ரஞ்சனி ஒன்றும் பேசாமல் தலையசைத்து விடை கொடுத்தாள், அவர்களுக்கு.

ரகுவின் மனைவி ‘அழுத்தம் தான்..’ என எண்ணிக் கொண்டாள், மனதில்.

இந்த பிரசாந்த் சென்றுவிடுவான் இன்று என எண்ணிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ஆனால், அப்படி நடக்கவில்லை. அவன் அங்கேயே இருந்தான்.

அடுத்த இரண்டு நாளும் ரஞ்சனி கீழே வரவில்லை. 

அடுத்தநாள் அதிகாலையிலேயே கீழே வந்தாள். தங்கள் ஷெட்டில் நிறுத்தி இருக்கும்.. அக்டிவா வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். 

முகத்தை உர்ரென வைத்துக் கொண்டுதான் ஸ்டார்ட் செய்து பார்த்தாள்.. அழகாக ஸ்டார்ட் ஆனது வண்டி. ரஞ்சனிக்கு அந்த நொடியில் ஒரு புன்னகை வந்தது.. ஏனென்றே தெரியாமல் வந்தது.

கிட்சென் வந்து காபியை குடித்தாள் “பொன்ஸ்.. காபி சூப்பர்” என்றவள் புன்னகை முகமாக மேலேறி சென்றாள்.

அடுத்த ஒருமணி நேரத்தில் கிளம்பி வந்தாள்.. டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள்.. பொன்ஸ் தோசை கொண்டு வரவும், உண்டாள். அப்போது, பிரசாந்த் எழுந்து வந்திருந்தான்.. அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு சென்றார் வேலை செய்யும் அம்மாள்.

ரஞ்சனிக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. ‘எதையும் பொருட்படுத்த கூடாது அண்ணனின் நண்பன்..’ என மதில் ஒருமுறை சொல்லிக் கொண்டு உண்டாள்.

உணவு முடித்து, ஹாலுக்கு வந்தவள் தன் பேக் எடுத்துக் கொண்டு தன் தந்தையின் புகைப்படத்திற்கு முன் வந்து கைகூப்பி நின்றாள் இரண்டு நிமிடம். 

வணங்கிவிட்டு திரும்ப.. எதிரில் அவளை இடிக்கும் தூரத்தில் நின்றிருந்தான் பிரசாந்த். ரஞ்சனி அதிர்ந்தாலும், முகத்தில் காட்டாமல்.. அவனை தாண்டி செல்ல எத்தனித்தாள்.

பிரசாந்த் “ரஞ்சி, எங்க போற” என்றான், உரிமையாக.

ரஞ்சனி நிற்காமல் சென்றாள்.. ‘ரஞ்சியா.. யாரு டா நீ’ என மனதில் வசைபாடிக் கொண்டே சென்றாள்தான்.

இப்போது மாதவன் குரல் அதட்டலாக “பாப்பா நில்லு..” என்றது. வரவேற்பறையின் முடிவில், வாசலின் முகப்பில்  நின்றாள் பெண்.

மாதவன், அருகில் வந்தான். ரஞ்சனி திரும்பாமல் அப்படியே நின்றாள். மாதவன், தங்கையின் கைபிடித்து அழைத்து வந்தான் உள்ளே.. “ஒருத்தர் கேட்டுட்டே இருக்காங்க.. நீ அப்படியே போகலாமா” என்றபடி வந்தான்.. 

ரஞ்சனி அமைதியாகவே இருந்தாள்.

பிரசாந்த் “டிரைவர் இன்னும் வரலை.. நேற்றே சொல்லியிருந்தால்.. சீக்கிரம் வந்திருப்பார் மாதவா.. எப்படி போவாங்க, நான் ட்ரோப் செய்யறேன்” என்றான்.. அமைதியான குரலில் சொல்லி, கார் சாவி எடுக்க திரும்பினான்.

ரஞ்சனி “வேண்டாம் அண்ணா, என்னை யாரும் ட்ரோப் செய்ய வேண்டாம் நான் டூ வ்வீலார்ல போறேன்.. எனக்கு டைம் ஆச்சு” என சொல்லி, அண்ணின் கையிலிருந்து தன் கையை உதறினாள்.

பிரசாந்த் “என்ன டூ வ்வீலரா, இப்போ எதுக்கு காலேஜ்.. என்ன அவசரம், அதுவும் யார்கிட்டையும் சொல்லாமல்..” என கோவமான குரலில் சொல்ல..

ரஞ்சனி “என்ன அவசரமா.. ஆமாம் யார் நீங்க? உங்ககிட்ட எதுக்கு நான் சொல்லணும்..” என்றாள் நேராக பிரசாந்தை பார்த்து.

மாதவன் “என்ன பாப்பா.. பேச்சு இது.. அவங்க யாருன்னு தெரிஞ்சா இப்படி பேசமாட்ட.. “ என்றான் கோவமாக.

ரஞ்சனி “யாரு, உன் ப்ரெண்ட், அவ்வளவுதானே..” என்றாள் அசால்ட்டாக.

மாதவன் “என்ன ரஞ்சனி” என்றான் இன்னும் கோவமாக.

பிரசாந்த் “விடு மாதவ்” என்றான்.. அலட்சியமான புன்னகையோடு.

அந்த புன்னகை ரஞ்சனிக்கு இன்னும் கோவம் தந்தது.. மனதில் ஒரு இனம் புரியாத திகிலை தந்தது.

பிரசாந்தை எரிப்பவள் போல பார்த்தாள், ஆனால், பிரசாந்த் அலட்சியமாக, வஞ்சகமாக பார்த்தான்.

ரஞ்சனி நிமிர்ந்து நின்று ‘சரிதான் போடா’ என அதே அலட்சியத்தை பார்வையில் கொண்டு வந்து பிரசாந்தை பார்த்து, அண்ணன் பக்கம் திரும்பாமல் வாசல் நோக்கி சென்றாள். 

டிரைவர் வந்திருந்தார்.. ரஞ்சனி வருவதை பார்த்து “காலேஜ்க்கா பாப்பா” என்றார். ரஞ்சனி நின்று அவருக்கு பதில் சொல்லவில்லை, காதிலே வாங்காமல் வண்டி எடுத்து சென்றாள்.

மாதவனும் பிரசாந்தும் வந்து பார்த்து நின்றனர்.

ரஞ்சனிக்கு, வண்டியில் செல்ல செல்ல பயம்தான். யாரிவன்.. எதுக்கு அண்ணாகூட இருக்கான்.. என் வீட்டிலேயே என்னை கேள்வி கேட்ட்கிறான்.. அண்ணன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.. யாரிவன்.. என பயம்.

அத்தோடு கோவமும் வந்தது ‘ஏன் அப்படி பார்க்கிறான்.. நான் என்ன அசிங்கமாகவா உடுத்தியிருக்கிறேன்.. இல்லை, என் பாவனை அப்படி இருக்கிறதா.. என் வீட்டிலேயே இருந்துக் கொண்டு எப்படி பார்க்கிறான்.. அண்ணனும் அப்படியே நிற்கிறான்..’ என கோவமும் வந்தது.

எதோ சரியில்லை என எண்ணம்.

கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள். இன்னமும் யாரும் வந்திருக்கவில்லை.. அவளின் கல்லூரி தோழன் ஒருவன் மட்டும் அவளின் வகுப்பின் எதிரில் அமர்ந்து எதோ கனவு கண்டுக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்து அவனோடு பேச தொடங்கினாள். 

அதன்பின் தோழிகள் வர.. எல்லோரும் இவளுக்கு ஆறுதல் சொல்ல.. பேச என கல்லூரி வகுப்பு இதமாக சென்றது.

ரஞ்சனி, மதிய உணவு இடைவேளையில்.. கேண்டீன் சென்றாள்.. அவளின் நெருங்கிய தோழியுடன். உணவை வாங்கி வைத்துக் கொண்டு அப்படியே அளந்துக் கொண்டிருந்தாள்.

தோழி “சாப்பிடு ரஞ்சி, அப்பா உன் கூடதான் இருப்பார். நீ கவலைப்பட கூடாது” என ஆறுதலாக பேச தொடங்கினாள்.

ரஞ்சனி “அதில்ல டி, எங்க வீட்டில்” என நடப்பதை சொல்லிக் கொண்டிருந்தாள். தோழியும் ஆறுதலாக ‘சரியாகிடும்.. நீ கோவப்படாத.. அந்த ஆள் இருக்கும் இடத்துக்கு போகாத..’ என ஏதேதோ சொல்லி, பேசிக் கொண்டிருந்தாள்.

நேரம் ஆகவும், தோழி வகுப்பிற்கு சென்றாள். ரஞ்சனி அங்கேயே அமர்ந்துக் கொண்டாள். போனெடுத்து தன் அப்பாவும் தானும் இருக்கும் புகைப்படத்தை பார்க்க தொடங்கினாள். நேரம் சென்றது.

மெதுவாக அவரின் இறுதி நேரத்தில் நடந்தது நினைவு வந்தது ரஞ்சனிக்கு. நீலகண்டன் கையில் தன் கையை கொடுத்தது நினைவு வந்தது..  எதோ குழப்பத்திற்கு, மனது அந்த நிகழ்வில் விடை கண்டுக் கொண்டது சட்டென. எதோ புரிவது போலவும்.. தெளிவது போலவும் இருந்தது.

நீலகண்டன் முகமும் கண்ணில் மின்னியது அவளுக்கு.. ‘நம்பர் கொடுத்தாரே.. பேசுவாரா..’ என எண்ணிக் கொண்டே.. அவனின் எண்ணிற்கு அழைத்தாள் பெண்.

நீலகண்டன்.. அப்போதும் மருத்துவமனையில் இருந்தான். இவளின் எண்ணை பதிந்து வைத்திருந்தான்.. ‘கண்ணன் டாட்டர்’ என. அப்படி பெயர் திரையில் மின்னவும்.. எழுந்து கொஞ்சம் தள்ளி வந்த, உடனே எடுத்தான் “ஹலோ சொல்லுங்க” என்றான், கொஞ்சம் அழுத்தமான குரலில்.

அந்தபக்கம் இவ்வளவு அழுத்தமான.. கனமான குரலில்.. புதிதாக கிடைத்த விடையில்.. பெண் ஸ்தம்பித்து நின்றாள். மனதும் மூளையும் கணக்கிட தொடங்கியது.. அதன் விடை பரவசமாக தொண்டையில் இறங்கியது பெண்ணுக்கு.

நீலகண்டன் “ஹலோ, என்னாச்சு கேட்குதா..” என்றான்..

பெண் உணர்வு வரபெற்று “ஹலோ, நான் ரஞ்சனி.. அ..அது” என்றாள். திணறலாக.. என்ன பேசுவது என தெரியாமல் விழித்தாள்.

நீலகண்டன் “என்னாச்சு ரஞ்சனி சொல்லுங்க, ஏதாவது பிரச்சனையா” என்றான்.. அதே கனமான குரலில்.

ரஞ்சனிக்கு தொண்டையை அடைத்தது இந்த வார்த்தை.. அப்பாவின் செய்கை காரணமா.. அல்லது வீட்டில் நடந்த நிகழ்வுகள் காரணமா.. இல்லை, அன்று அவன் தன்னிடம் நடந்துக் கொண்ட முறை காரணமா.. இல்லை, என்ன பிரச்சனை என அவன் கேட்ட த்வனி காரணமா.. தெரியாது!.. எதோ ஒன்று, சட்டென அவனை நம்ப சொன்னது பெண்மனம்.. 

நம்பிக்கை என்பது மனதில் விழும் முத்துதுளி.. கடுகத்தனைதான் அது.. ஆனால், மலையளவு பலம் கொண்டது.

மீண்டும் அவனின் ”ஹெலோ” என்ற அழுத்தமான குரல் , காதில் விழ.. நம்பிக்கை மனதில் எழுந்தது, அவளுக்கு. ஆனாலும், எதையும் காட்டாமல் அமைதியாக “இ..இல்ல.. சும்மாதான், சாரி..” என்றாள்.

நீலகண்டன் “ஓ.. ஒன்னும் பிரச்சனையில்லையே.. நல்லா இருக்கீங்கல்ல..”  என்றான், கொஞ்சம் தளர்ந்து ஒலித்தது குரல்.

ரஞ்சனி மலர்ந்த குரலும்.. முகமுமாக.. “நல்லா இருக்கேன்.. காலேஜ் வந்திட்டேன், எதோ தோணிச்சு, நீங்க என் போனை எடுப்பீங்களான்னு டெஸ்ட் பண்ண கூப்பிட்டேன்.. எங்க இருக்கீங்க” என்றாள்.. சமாளிக்க.

நீலகண்டன் “ஓ.. ஒன்னும் பிரச்சனையில்லையே.. நான் சென்னை வந்திருக்கேன்.. ஊருக்கு வந்திட்டு கூப்பிடவா..”எ என்றான், அதே அழுத்தமான குரலில்.

ரஞ்சனி “ஓ.. ஓகே.. பை” என்றாள்.

“முகிளுமில்லை  புயலுமில்லை…

மழைவருமா..

இதயத்திலே இனம்புரியா

கலவரமா.. 

விதையுமில்லை  உரமுமில்லை.. 

மரம்வருமா..

நினைவுகளில் கிளை விரித்தே..

சுகம்தருமா..”

அவனும் பை சொல்லி அழைப்பை வைத்தான்.

Advertisement