Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

1௦

கண்ணன் வள்ளியின் பெற்றோர் கந்தசாமி பொன்னிதேவி. கண்ணனின் வாலிப வயதில் கந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு.. இறந்தார். அது முதற்கொண்டு குடும்ப பொறுப்பும் கண்ணனுடையது என ஆகியது. நிலம் குத்தகை.. தந்தை இருந்தவரை விவசாயம்.. அதனை குத்தகை விட்டார், கண்ணன். 

கண்ணன் தொழில் கார் மெக்கானிக்.  எனவே சொந்த ஊரில் மெக்கானிக் ஷாப்  வைத்திருந்தார்.. அதனால் பெரிய மனிதர்களின் பழக்கம் இருந்தது.. கலகலப்பான சுபாவம் மனிதர்களை சேர்த்தது. கோவில் திருவிழா கொடை வசூலிப்பது.. போட்டிகள் நடத்துவது என முன்னிர்ப்பார் கண்ணன். எனவே, நாலு நபர்கள் எப்போதும் உடனிருப்பார். எப்போதும் தனித்து தெரிவார் கண்ணன். 

அதனாலோ என்னமோ ராதாவிற்கு கண்ணனை பிடித்து போனது. கல்லூரி  செல்லும் போது தொடங்கி, ராதா கண்ணை பார்க்க தொடங்கினார்.. கண்ணனின் கவனமும் ராதாவின் மேல் விழ.. இருவரும்  தங்களின் மனதை பரிமாறிக் கொண்டனர்.

நான்கு ஆண்டு காதல் ராதாவுக்கும் கண்ணனுக்கும். ராதாவின் அக்காவின் திருமணம் முடிந்தது.. ஒரு வருடத்தில் ராதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர் அவர்கள் வீட்டில்.

கண்ணன் தன் அம்மாவிடம் சொல்லி.. ராதாவை பெண் கேட்டு.. மணந்துக் கொண்டார், அவசரமாக. அதனால், வள்ளியான கண்ணனின் தங்கையின் திருமணம் அடுத்த இரண்டு வருடம் சென்றுதான் நடந்தது.

தன் தங்கைக்கு முன்னே அண்ணனான கண்ணன் திருமணம் செய்துக் கொண்டார். அதனால், அவர்களுக்குள் ஒரு குற்றவுணர்வா.. என்னமோ ஒன்று  ‘தங்கையின் திருமணம் முடிந்துதான் தங்களின் வாழ்க்கை’ என கண்ணன் சொல்ல.. ராதாவுன் அதை ஒப்புக் கொண்டார், அப்போது.

அதன்பின் வள்ளியின் திருமணமும் முடிந்தது.. வருடங்கள் ஒட்டியது. பிறந்த வீடு வந்தாள்.. பிரசவத்திற்காக வள்ளி, திருமணம் முடிந்த சரியான கால இடைவெளியில்.. ராதாவிற்கு அப்போது முதல் பயம் தொடங்கியது.. 

ஆனாலும், முறையாக மருத்துவரை அணுகினர்.. மருத்தவம் பார்த்துக் கொண்டானர், கோவில் பரிகாரம் என எவ்வளவோ செய்துக் கொண்டனர். ஆனால், கடவுள் ஏனோ கண் திறக்கவில்லை.

ராதாவை குணத்தில் குறை சொல்ல முடியாதுதான். ஆனால், சூழ்நிலை எல்லோரையும் மற்றுமே. அப்படிதான் ஆனது இங்கு.

இரண்டாது குழந்தை உண்டானாள் வள்ளி.  அதுதொட்டு ஊரார், சொந்தம்.. என எல்லாம் ஏதேதோ பேச.. மனதில் ஏதோ ஒரு அழுத்தம்.. கவலை.. பொறாமை.. என எல்லாம் வந்து சேர்ந்தது, ராதாவிடம்.

மருத்துவர்களும் பெரிதாக நம்பிக்கை கொடுக்கவில்லை.. ஒன்று பிரமாண்ட செலவு.. இல்லை, பொறுமையாக மருந்து மாத்திரை என எடுத்துக் கொள்ளுங்கள் குழந்தை பிறக்கும். எனதான் பதில் சொல்லினர்.

எனவே ராதாவிற்கு, ம்… எப்படி சொல்லுவது.. பொறுமையில்லை.. குழப்பம்.. வடிகால் இல்லாத நிலை.. அவளுக்கு. யாரும் ஏதும் கேட்கவில்லை.. மாமியாரும் இல்லைதான்.. ஆனாலும், என்னமோ எல்லோரும் தன்னை பாவமாக பார்ப்பது போல எண்ணம்.. ‘பரவாயில்லை நீயும் முன்னாடி வா..’ என விஷேசங்களில் ஒரு அனுதாபம் காட்டுவது.. அது.. அந்த ‘பரவாயில்லை’ என்ற வார்த்தை அவளை பாதித்தது.. அப்போது. 

அத்தோடு, விழாக்களில் இயல்பாக வள்ளியை முன்னிறுத்துவது.. தேடுவது.. என ஒரு நடவடிக்கை.. அதைத்தொட்டு ‘வள்ளி வந்தாச்சா.. இரண்டாவது மாசமா இருக்கியா.. ம்.. பொண்ணாக பிறக்கட்டும்.. ம், இந்த பிள்ளை பிறக்கிற நேரமாவது உன் பிறந்த வீட்டில் வாரிசு வரட்டும்..’ என எழும் உரையாடல்கள் எல்லாம் ராதாவினால் கொஞ்சமும் தாங்க முடியாமல் போனது. அத்தோடு மருந்து மாத்திரைகளின் உடல்நல மாற்றம்.. அலைச்சல்.. எல்லாம் சேர.. ராதா திருமணம் முடிந்து எட்டு வருடத்தில் ‘எனக்கு குழந்தை பிறக்காது’ என முடிவு செய்துக் கொண்டாள் போல.

நிச்சயமில்லா தன்மை ராதாவை ஆட்கொண்டது.. அத்தோடு கொஞ்சம் பொறாமையும். எனவே, கண்ணனிடம் பயத்தில் ‘தன் அக்காவின் மகனை தத்தெடுக்கலாம் என்றாள்..’ மனையாள். 

கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை.. வேலைகள் நடந்தது.. அதிகார பூர்வமாக ஒருவயது கூட ஆகாத தன் அக்காவின் மகனான மாதவனை தத்தெடுத்தனர் ராதா தம்பதி.

உறவுகளுக்கு சொல்லி.. முறையாக அவனின் முதல் பிறந்தநாளை ஆடம்பர விழாவாகவே செய்தார் கண்ணன். வள்ளி, நிறை மாதமாக வந்து அத்தை சீர் செய்தாள். மாதவனை, தன் அண்ணின் மகனாகவே பார்த்தாள் வள்ளி.ம்.. ராதா அப்படி வளர்த்தாள் மகனை. 

வள்ளிக்கு, குகன் பிறந்தான்.. நாட்கள் சென்றது வள்ளியின் வாழ்வில் பிரச்சனை.. இப்போது ராதா உதவ முன்வரவில்லை. என்னமோ மனதில் தனக்கும் வள்ளிக்கும் என ஒரு ஒப்புமையை கொண்டு வந்திருந்தாரே.. அதனால், எழுந்த ஒரு சின்ன கர்வத்தில்.. தடுமாற்றத்தில்.. எந்த உதவியும் செய்யவில்லை, கணவனையும் செய்யவிடவில்லை.

ஆனாலும், கண்ணன் தங்களின் சொத்து என இல்லாமல்.. அவர்களுடையதை நல்ல முறையில் அவர்களுக்கு வர செய்து.. தெரிந்தவர்கள் மூலமாக சென்னை அனுப்பி வைத்தார்.

வள்ளிக்கு, அப்போது தெரியும்.. சொத்துகளை தான் கேட்பது முறையல்ல என்று.. ஆனாலும், இரண்டு மகன்களோடு தனியே செல்லும் என்னை பார்த்து அண்ணன் இரக்கப்பட்டிருக்கலாம் என எண்ணினாள் வள்ளி. இப்படி அப்பா தன்னை பூர்வீக சொத்தில் உரிமையாக சேர்த்திருப்பார் என தெரியவில்லை அவருக்கு.

கண்ணனும் அரசியலில் நுழைந்தார்.. அதற்கென சில சொத்துகளை விற்கவும்.. செலவு செய்யவும் என இருந்தார். அதனால், தங்களின் பூர்வீக இடத்தில் வள்ளியின் பெயர் வருமென அவர் நினைக்கவில்லை. எனவே ஆராயவில்லை.

அதனால், தன் மனைவியோடு கொஞ்சம் அவளின் விருப்பமும் நிறைவேறட்டும் என எண்ணினார். அத்தோடு புது அரசியல் வாழ்க்கை அவருக்கு போதையை தந்திருந்தது.. மகன் வந்த நேரம் கவுன்சிலர் என ஊரார் சொல்ல.. அதுவும் போதைதானே.. தங்கையை கொஞ்சம் நல்லவிதமாக கவனிக்க தவறினார்.

வருடங்கள் ஓடியது.. மாதவன் பள்ளி செல்ல தொடங்கிய நேரம்.. வள்ளி தங்களை விட்டு பிரிந்து சென்ற நேரம்.. தான் கற்பமாக இருப்பதை உணர்ந்தார் ராதா.

இது ராதாவின் கற்பனையா.. காலத்தின் சூழ்ச்சியா தெரியவில்லை.. வள்ளி அவர்களின் வாழ்வில் இல்லை என ராதா உணர்ந்த நேரம்.. கடவுள் கண் திறந்திருந்தார்.. ராதாவின் வாழ்வில். 

அஹ.. வள்ளி அனுபவித்ததும் சங்கடம்.. ராதா அனுபவித்ததும் சங்கடம். என்ன வருடங்கள் வேறுபடலாம்.. மற்றபடி மனஉளைச்சல்.. வருத்தம்.. துக்கம் எல்லாம் ஒரே தராசில் வைக்க கூடியவையே. 

ஆனாலும், ராதாவின் மனதில் எதோ ஒன்று.. அந்த திருமணம் முடிந்து கணவன் தன்னை தள்ளி வைத்தது.. அவரை பாதித்திருக்கலாம்.. இருக்கலாம்தான். கண்ணன் இத்தனைக்கும், தன் மனையாளிடம் சம்மதம் கேட்டுதான் அந்த முடிவை எடுத்தார். ஆனாலும், அவரின் மனதில் எதோ தாக்கத்தை அது கொடுத்திருக்கிறது.

கண்ணனுக்கும் அப்படிதான்.. மனைவியின் நிம்மதிக்காக.. அவளின் சந்தோஷத்திற்காக என எல்லாம் செய்திருந்தாலும்.. மனதின் ஓரத்தில்.. தங்கை மீதான அன்புதான் இப்படி யாரையும் கேட்காமல்.. தனியாக, தன் இறுதி காலத்தில்.. தன் பெண்ணை, தன் தங்கை மகனிடம் ஒப்படைத்திருக்கலாம்.. இருக்கலாம்.. மட்டுமே. 

மனித மனங்களின் எந்த செய்கைக்கும்.. இதுதான் காரணம் என துல்லியமாக சொல்ல முடியாதே. மனிதனின் ஆழ்மனதில் ஒரு ஓரமாக ஒரு நல்ல சித்தாந்தங்கள்.. விதிகள்.. இருந்திருக்கலாம். அது அவரின் இறுதி நேரத்தில் கைகூடியிருக்கலாம்.

வள்ளிக்கு, தெரிந்தவரை.. ஒரு குழந்தையை  தத்தெடுத்துக் கொண்டார்.  ஆனால், தான் படும் அவஸ்த்தைகளை.. பார்த்து, அண்ணன் பாராமுகமாக இருந்ததால்.. தன் மக்களிடம் பெரிதாக ஏதும் அண்ணனை பற்றி  சொல்லவில்லை, வள்ளி.

நாமும் சாதரண மனிதர்கள்தானே.. கோவம், வெறுப்பு, பொறாமல், சூழ்ச்சி, கர்வம், ஆணவம், சந்தோஷம், வெட்கம், புன்னகை என எல்லாம் கொண்ட சாதாரண மனிதர்கள் தானே.  இவர்களில் யாருக்கும் நாம் கருணை காட்டவோ குற்றம் சொல்லவோ முடியாது. அவரவர் வாழ்வு அவரவரை சார்ந்தது.

கண்ணன் ராதாவின் புதல்வி ரஞ்சனிதேவி. ராதாவிற்கு இத்தனை வருடங்கள் இருந்த மலடி என்ற பெயர் மாறி தாய்  என்ற பெயர் வாங்கித் தந்தாள் ரஞ்சனி. உயிர் ஜனித்து, உதிரம் குழைத்து.. ராதாவின் சஞ்சலங்களை தீர்க்கவே வந்தாள் ரஞ்சனி தேவதை.

அவர்களின் வாழ்வை வசந்தம் ஆக்கினாள். 

கண்ணன், பெண் பிறந்த சந்தோஷத்தை, தன்  ‘தங்கையிடம் சொல்லாம்‘ என்றார்.

ராதா ஏனோ ஒத்துக்கொள்ளவில்லை. வருடங்கள் வேகமாக சென்றது.. யாரும் வள்ளியை நினைக்கவில்லை.. வள்ளியை நினைக்காமல் இருக்க இருக்க.. தனது வாழ்வு சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தார் ராதா.

ரஞ்சனி பள்ளி செல்ல தொடங்கினாள்.. ராதாவின் உடல்நிலையில் கர்ப்பை பாதிப்பு காரணமாக.. ரஞ்சனியின் ஐந்தாம் வயதில் ராதா உயிரிழந்தார். 

கண்ணன் ஓய்ந்து போனார். ஆனாலும் அரசியல் வாழ்க்கை அவரை ஓய்ந்து அமரவிடவில்லை. ரஞ்சனியை தானே கவனித்துக் கொண்டார்.. அதிகமாக அரசியலில் இல்லை.. ஆனால், கட்சியில் எல்லாவற்றுக்கும் முன் நின்றார்.

முன்போல், மாதவன் வீட்டார் வந்து போக.. இப்போது கண்ணன் அதை அனுமதிக்கவில்லை.. முன்போல தங்கை வீட்டிலிருந்து, மாதவனின் அன்னைக்கு எந்த உதவியும் வரவில்லை. தள்ளி நிற்க வைத்தார் கண்ணன். ஆனால், பிள்ளைகளிடம் பேதம் பார்க்கவில்லை.

ஊரில் சிலர்.. ஏன் அரசு கூட சொன்னார்.. ‘உன் தங்கையை பற்றி விசாரிக்கலாமா’ என்றார். கண்ணன் ‘என் சோகத்தில் மட்டும் எப்படி அவளை தேடுவது.. அவளுக்கு ஒன்று எனும் போது.. என் சூழ்நிலையிலிருந்து மட்டுமே யோசித்திருந்தேனே.. வேண்டாம்.. அவ நல்லா இருக்கட்டும்’ என்றுவிட்டார்.

அதனால் எந்த முயற்சியும் வள்ளி நோக்கி எடுக்கவில்லை கண்ணன்.

மாதவன், கல்லூரி படிப்பு முடித்து வந்தான்.. மேற்படிப்புக்கு போறேன் எனத்தான் சொன்னான்.. ஆனால், இந்த அரசியல் அவனை ஈர்த்தது.. நாலு நபர்கள் நடுவில்.. ‘கண்ணன் மகன்.. மாதவன் சர்.. படிச்ச பையன்.. சரிதான் பா..’ என அந்த சிறு பையனையும் நான்கு நபர்கள் ஏற்க தொடங்க.. தன் தந்தையோடு.. காரில் கட்சி மீட்டிங்.. வேட்பாளர் தேர்வு.. பிரச்சாராம்.. என சென்றான். 

அரசியல் இந்த மூன்று வருடத்தில் அவனை பிடித்துக் கொண்டது.. இவனும் பிடித்துக் கொண்டான். அதற்காக சிலபல தகிடுதத்தங்கள் செய்யும் அளவு அவனுக்கு பிடித்தது.

Advertisement