Advertisement

” உனக்கு அதுல ஒன்னும் கோவம் இல்லையே” என்றான்.

          “அதுதான் சொல்லிட்டேன்ல…, எப்படியோ பண்ணிக் கோங்க., நான் இதில் எதிலுமே தலையிட தயாரா இல்லை., இதுதான் லைப் இன்னும் முடிவு ஆயிடுச்சி எது வந்தாலும் சந்தித்து தான் ஆகனும்., இத பத்தி இதுக்குமேல் பேசாதீங்க”…. என்றாள்.

         “எனக்கு மரியாதை எல்லாம் கொடுத்து பேசுற…, பிளஸ் டூ படிக்கும்போது நீ வா போ, ன்னு தானே பேசுவ., கடைசியில் எருமைமாடு ன்னு கூட திட்டின., எனக்கு நல்ல நியாபகம் இருக்கு” என்று சொன்னான்.,

         “கோபம் வந்தா திட்ட தான் செய்வேன். அணிமல்ஸ் பெயர் எல்லாம் சொல்லி திட்ட தான் செய்வேன்.,  இனிமேலும் திடீரென கோபம் வந்தா திட்ட தான் செய்வேன் சொல்லிட்டேன்” என்று சொன்னாள்.

           “சரி நான் சொன்னதை நீ மறந்துறாத…   ஓகே எனக்கு ஒரு போட்டோ மட்டும் மெயில் பண்றியா., நான் உன் போட்டோ கூட இப்ப  வரைக்கும்  பாக்கல”என்றான்.

         “அனுப்பி வைக்கிறேன்., என்றபடி மெயில் ஐடியை மெசேஜ் செய்ய சொன்னாள்”..,

      “ஏய்.. கத்திரிக்கா”., என்றான்.

        ஜீஃராபி…  என்றாள் கோபமான குரலில்.,

        சத்தமாக சிரித்தான்… “உன்ன கோபப்படுத்த இது தான் வழியா… இப்ப வளர்ந்துட்ட ன்னு… அம்மா கூட சொன்னாங்க”.. என்றான்.

         “நீங்க கூட ரொம்ப பேச மாட்டீங்க ன்னு., சொன்னாங்க”…  என்றாள்.

           “யார் ட்ட பேசனுமோ., அவங்க ட்ட பேசினா போதும்” … என்றான். அந்த பக்கம் அமைதியாக இருக்கவும்…

      “சரி… உனக்கு ஒரு நிக் நேம் வைச்சிருக்கேன்”… என்றான்

      “ஏதாவது ஏடாகூடமா சொன்னீங்க… இருக்கு”…

      “ஏன் கோபம் வந்தா., நீ எனக்கு அனிமல் வைச்சிருவீயா”… என்றான்….

      “ம்ம்ம்… சொல்லுங்க”. என்றாள்.

       “பௌமி” என்றான்…

       “அப்படின்னா”…

       “பௌர்ணமி” உன் பெயரோட அர்த்தம்…,

        “அப்படியா., கூப்பிட போறீங்க”…,

        “மத்தவங்க முன்னாடி இல்ல” என்றான்.

        ம்ம்ம்… என்றாள்  சத்தமே இல்லாத குரலில்…

அவனும் மெலிதான குரலில்… என்னாச்சு என்றான்.

        ம்ஹூம்… ஒன்னுமில்ல…

        நம்பிட்டேன்… என்றான். “சரி சொல்லு மூன்று மாசத்துல வேலைய விட்டுறலாமா”…

       “அதுக்குள்ள அந்த ப்ராஜெக்ட் முடிஞ்சா., சீக்கிரமே வரலாம்”…

         “அப்ப சீக்கிரம் முடிச்சிரு. அவ்வளவு தான் டைம் உனக்கு”…

       “மிரட்டுறீங்க… இல்ல” என்றாள்.

       “நான் என்ன சொல்ல வர்றேன் ன்னு., புரியுதா” என்றான்

      “நான் வைக்கிறேன்… பாய்” என்று சொன்னபடி போனை வைத்தாள்…

         கீதா விற்க்கும், சூர்யாவிற்கும்  இருவரும் பேசிட்டாங்க ன்னு தெரியும்.,  இவளே பொதுவாக சொல்லிவிட்டாள்…

    திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பாக ஊருக்கு சென்று சேர்ந்தாள்.  சென்ற மறுநாள்தான் முகிலன் வந்திருந்தான்…,

     இருவரும் இடையில் இரண்டு முறை பேசியிருந்தாலும் அதிகமாக பேசவில்லை., நல விசாரிப்புகளோடு நிறுத்திக் கொண்டனர்.

        சூர்யா முகிலனிடம் “மதியை நேரில் பார்க்க போகிறாயா” என்று கேட்டதற்கு., “இல்ல அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டான்.

         இதை பேசும்போது இனியாவும், அங்குதான் இருந்தாள். இனியாவிற்கு மிகவும் சந்தோஷமாகவே உணர்ந்தாள். தன் அண்ணன் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்ற சந்தோஷம் அவளுக்கு…

        சூர்யா தனியே பிடித்து முகிலனை கேட்டதற்கு “இனியா பக்கத்தில் இருப்பதை கவனிக்காமல் நீ கேட்ட., நான் உடனே போறேன்னு சொல்லி இருந்தா.,  அத வச்சி ஒரு பிரச்சினை கிரியேட் பண்ணி இருப்பா..  இப்ப நான் வரலைன்னு சொன்னதால  தான் அமைதியா இருக்கா.,  நான் பாத்துக்குறேன் வெளியே போறதா சொல்லிட்டு அப்புறமா போய் பார்த்துகிறேன்., நீ விடு” என்று சொன்னான்.

        அங்கு மதியின் நெருங்கிய தோழமை வட்டங்கள் மட்டுமே வந்திருந்தனர். கல்லூரியில் இருந்தும்., வேலை பார்க்கும் இடத்தில் இருந்தும்., மதுரையில் உள்ள பகுதிகளில் அவர்கள் வீடு இருந்ததால், மண்டபத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வந்திருந்த தோழர்களுக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவள் கைகளிலும், கால்களிலும் மெஹந்தி இடப்பட்டு பார்ப்பதற்கு அழகாக இருந்தது..,

     இவளோ சுடிதாரில் இருக்க தோழிகள் அனைவரும் கல்யாண பொண்ணு சுடிதார் போடலாமா என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்…

      காலை திருமணம் என்ற நிலையில் முதல் நாள் மதிய வேளை வெளியே செல்வதாக சொல்லி விட்டு வெளியே வந்த முகிலன் நேராக மதியின் வீட்டிற்கு வந்தான். நண்பர்கள் அருகில் இருந்ததால் அனைவரிடமும் சாதாரணமாகவே பேசினான்.  அவன் அதிகம் பேசாதவன் என்பது அனைவருக்கும் அவன் பேசும் விதத்திலேயே தெரிந்தது.  நேரில் பார்த்த போது ,  போட்டோவில் பார்க்கும்போது இருந்த எண்ணம் தான் இப்பொழுதும் தோன்றியது., போட்டோவில் பார்க்கும் போது அழகு என்று நினைத்தான்.. ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதும் அவன் அறிந்ததே.., ஏனெனில் அவன் தங்கைக்கு அந்த வார்த்தை அதிக கோபத்தை உண்டு பண்ணும் என்பது அவன் அறிந்த ஒரு விஷயம்..

        மனைவியாக வந்த பிறகு அவளிடம் சொல்லிக் கொள்ளலாம்., அதுவும் யார் முன்பும் வெளிப்படையாக எப்போதும் சொல்ல முடியாத ஒரு விஷயம் இது என்று அவன் உணர்ந்து கொண்டதால் அதை பற்றி பேசவில்லை…

      சாதாரணமாக பார்த்துவிட்டு ஒரு சின்ன சிரிப்பு  மட்டுமே… அவ்வளவுதான் அதற்கு மேல்இருவருமே பேசவில்லை காலையில் பார்க்கலாம் என்றபடி கிளம்பினான். நண்பர்கள் இருப்பதால் பேசவில்லை என்றே அனைவரும் நினைத்தனர்..,

    ஏனோ இருவருக்கும் பேச்சு வரவில்லை என்பதை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொண்டனர். ஏற்கனவே அவன் சில வார்த்தைகளை பேசினாலும் அதிகாரமாக தான் பேசுவான்.

   இப்பொழுது அவனுடைய உத்தியோகமும் சேர்ந்து அவனுடைய அதிகாரம் அதிகரித்திருப்பதாக, அவன் முகபாவங்கள் அவளுக்கு தோன்றியது. ஏற்கனவே உயரம் அதற்கேற்றார் போல் உடல்வாகு., இப்போது எக்சர்சைஸ் செய்த உடம்பு என்பதை பார்க்கும்போதே தெரிந்தது., அப்படி  கம்பீரம் கூடி தெரிந்தாலும்., ஏனோ அவளுக்குள் ஒரு சிறு பயம் இருந்துகொண்டே இருந்தது., தனக்கும் அவனுக்கும்   ஒத்துப் போகவேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி தலை தூக்கி கொண்டே இருந்தது…

           அவன் கண்ணில் கூர்மை, அவள் அவனை நிமிர்ந்து பார்ப்பதை தவிர்க்க வைத்தது.,எப்பொழுதும் நிமிர்ந்து பார்த்து பேசுபவள்., ஏனோ இன்று பேச முடியாமல் திணறுவது போல அவளுக்கு தோன்றியது..

        ஒருவேளை நாளை திருமணம் என்ற நிலையில் இருப்பதால் பார்ப்பதற்கு தயக்கமாக இருக்கிறது என்று  அவளுக்கு தோன்ற தொடங்கியது..

         மதி வீட்டில் இருந்து கிளம்பி வெளியே நண்பன் ஒருவனை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தவனுக்கு, வீட்டில் சிறு பிரச்சினை ஓடிக் கொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

           அவனுடைய அம்மா ஒரு பக்கம் கோபப்பட்டு கொண்டிருக்க., இனியா இன்னொரு பக்கம் மூஞ்சி திருப்பிக் கொண்டு இருந்தால் அதை பார்த்துவிட்டு என்ன பிரச்சனை என்று சூர்யாவிடம் கேட்டான்.

       இன்னும் கொஞ்ச நேரத்துல வெளிய வரும் போது தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.., சூர்யா

       ஏனென்றால் அம்மாவும் மகளும் தான் பேசி  விவாதித்துக் கொண்டிருந்தார்கள்., அதற்குத்தான் சூர்யாவிடம் இருந்து இந்த பதில்.

     வீட்டிற்கு அவ்வளவு உறவினர்கள் வந்து இருந்தாலும் யாரும் அவர்களுடைய பேச்சை கண்டு கொள்ளவில்லை.,  அனைவருக்கும் இனியாவின் குணம் தெரியும் என்பதால்.,

      சூர்யாவின் அம்மாவோ அவர்கள் சொந்தத்தில் உள்ள முகிலனுக்கு தங்கை முறை உள்ள பெண்ணை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

       அப்போதும் சூர்யா அமைதியாக இருக்க.,  முகிலன் தான் என்ன பிரச்சனை என்று சத்தமாக கேட்கவும்.,  இனியா தான் தொடங்கினாள்.

         “நான் கல்யாணம் முடியும் போது நாத்தனார் முடிச்சு எல்லாம் போட மாட்டேன்” என்றாள்.

        வந்திருந்த  உறவினர்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள். உறவு முறையில் உள்ள ஒரு பெரிய பெண்மணி தான் “இப்படி எல்லாம் பேசக்கூடாது மா..,  நீ தான்  தங்கச்சி நாத்தனார் கட்டு எல்லாம் நீ தான் செய்யணும்”… என்றார்.

      “நான் எதுக்கு செய்யணும்., எனக்கு அவள கண்டாலே பிடிக்காது., எல்லாரும் என்ன சொன்னீங்க அவ உன் விஷயத்தில் வரமாட்டா., நீ அவ விஷயத்தில் வரவேண்டாம் ன்னு சொன்னீங்க இல்ல…   அதனால இந்த கல்யாணத்துல நான் எதுவும் தலையிட்டு செய்யமாட்டேன். மத்தபடி உங்க இஷ்டம்”.., என்று சொன்னாள்.

        சூர்யாவோ அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தான்., இப்பவே ஆரம்பிச்சிருச்சு என்ன பண்ண போற என்ற அவனது பார்வையின் கேள்விக்கு., முகிலன் பேசத்தொடங்கினான்., “விடுங்க இப்ப எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.,  அவ முடிச்சு போடாட்டி விடுங்களேன்.,  எனக்கு எந்த கோவமும்  இல்ல…, தங்கச்சி கட்டு செய்ய வேண்டியதெல்லாம்  தங்கச்சி இல்லாமையா இருக்கு., அதுதான் பெரியப்பா,  சித்தப்பா பிள்ளைங்க அப்படின்னு சொந்தத்தில் இத்தனை தங்கச்சிங்க இருக்காங்க, யாராவது செய்வாங்க விடுங்க,”  என சொல்ல..,

      முதல் முறையாக இனியாவுக்கு முதலில் தன்னை ஓதுக்குகிறான் என்ற எண்ணம் வந்தது., அவள் அதைக் கேட்கவும் “உனக்கு பிடிக்காத காரியத்தை செய்ய வேண்டாம். உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன், நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்., இப்போதும் அதைத்தான் சொல்றேன் நீ செய்ய வேண்டாம்.,”என்றான்.

        “நாத்தனார் முடிச்சு யார் போடுவா” என்று அவள் கேட்கவும்., “நீ போட வேண்டாம் ஏன் மூன்று முடிச்சு நான் தான் போட போறேன்., முடிச்சு போடுறது ஒன்னும் கஷ்டம் இல்ல., நானே போட்டுக்கிறேன்., நாத்தனார் கட்டு செய்வதெல்லாம் சித்தப்பா பிள்ளைங்க செஞ்சுக்குவாங்க., நீ தள்ளி நின்னு கோ” என்று சொன்னான்.

இனியாவிற்கு அவன் தன்னை ஒதுக்க தொடங்கி விட்டான் என்ற பயமும் வந்தது ஒருபுறம்., ஆனாலும் அவனிடம் “நான் உனக்கு கல்யாணத்துக்கு  செய்யல  ங்கிறதுகாக., எனக்கு உன் மேல பாசம் குறைஞ்சிடுச்சு நினைக்காத..,  நான் கல்யாணம் பேசுறதுக்கு முன்னாடி  சொன்னதுதான் இப்பவும் சொல்றேன்.,  அவளுக்கான எதிலும் நான் தலையிடமாட்டேன்., எனக்கான எதிலும் அவளும் வரக்கூடாது” என்று உறவினர்கள் முன்பு மறுபடியும் சொன்னாள்.

       எல்லோரும் இவள் குணம் தெரிந்தது தான் என்பது போல யாரும் கண்டு கொள்ளவில்லை., முகிலனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

  முதன்முதலாக சூர்யாவிற்கு முகிலன் மேல் நம்பிக்கை வந்தது . திருமண நாளும் இனிதாக விடிந்தது.

  “திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயமாக நிச்சயம் செய்யபடுவது இல்லை. மனங்களில் தொடங்கும் அன்பு திருமணத்தை திடமாக்குகிறது. புரிதலும்., விட்டுக் கொடுத்தலும்., திருமண வாழ்க்கையில் அஸ்திவாரம்.. அஸ்திவாரம் உறுதியாகும் போது, திருமணம் எனும் பந்தம் அழகான இல்லமாகும்.

Advertisement