“நீ எதுக்கு அவளை பற்றி யோசிக்க., அவ என்ன பெரிய இவளா பேசாமல் இரு” என்று சொல்லவும்…,
“இல்ல நான் வந்து அவளுக்கு பயந்தோ இவ அண்ணனுக்கு பயந்தோ., நான் இத வந்து யோசிக்கல., சூர்யா ண்ணா இதனால வருத்தப்படக்கூடாது., அவ என்கிட்ட பிரச்சினை பண்ணும் போதெல்லாம் பாவம் சூர்யா ண்ணா தான் பீல் பண்றாரு., அங்க பாலா மாமாவும்., வசந்தி அத்தையும் கூட ரொம்ப வருத்தப்படுவாங்க…, அதனாலதான் நான் ஒதுங்கி ஒதுங்கி போறேன்., நான் திருப்பி சண்டை போடுறது பிரச்சனை இல்ல., திருப்பி பேச முடியாம இல்ல” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்….
ஆனால் இனியா ஏனோ திருமண நேரம் கூடி வரவில்லை, என்று ஒரு வருட கால தாமதத்திற்கு பிறகு இனியா விற்கு திருமணம் முடிந்தது.
அப்பொழுது வெண்மதி மூன்றாமாண்டு முடித்திருந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாள்., அந்த சமயத்தில் தான் இனியாவிற்கு திருமணம் முடிந்திருந்தது..
திருமணம் முடிந்து., அவளது முதல் தீபாவளி இதற்கு இடையில் சூர்யாவிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவள் பெயர் அமிர்தா ஆனால் வீட்டில் அனைவரும் அம்மு என்றே அழைப்பார்கள். முதலில் அவளை அம்மு என்று அழைக்க தொடங்கியது வெண்மதி தான். அவள் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வீட்டிற்கு சென்று வந்தாள். அதன் பிறகு எப்போதும் இவள் விடுமுறைக்கு வரும் சமயமெல்லாம் சூர்யா குழந்தையை இவளிடம் கொண்டுவந்து விட்டு விடுவான்..
ஒருவயது கூட ஆக வில்லை ஆனால் மதியைக் கண்டால் அவளுக்கு கொண்டாட்டம்….
அம்முறை தீபாவளி அன்று அனைவரும் கோவிலுக்கு கிளம்ப அன்று மதியால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. செல்லக்கூடாத நாள், எனவே வீட்டில் இருந்து கொண்டாள் வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பவும்., “ஸ்ரீராம் சீக்கிரம் கோயிலிலிருந்து வந்துவிடு” என்று சொல்லியே இவள் அனுப்பி வைத்தாள்…. ஏனெனில் நட்பில் உள்ள குடும்பத்தை பார்த்தால் பேசிவிட்டு எல்லோரும் தாமதமாக வருவார்கள்…
அவர்கள் தெருவில் இரண்டு தெரு தள்ளி உள்ள கோவில், அது அந்த பகுதியில் உள்ள அனைவரும் அந்த கோயிலுக்கு தான் நல்ல நாட்களில் சென்று வருவார்கள்., எனவே இவர்கள் அனைவரும் அங்கு செல்ல., அங்கு சூர்யாவின் பெற்றோரும் சூர்யா குடும்பத்தினரும் வந்திருந்தனர்..
சற்றுநேரத்தில் இனியாவும் அவள் கணவனும் தலை தீபாவளி கொண்டாட அங்கு வந்தார்கள்., அவர்களும் கோயிலுக்கு வர அதேநேரம் முகிலனும் அங்கு வந்து சேர்ந்தான். அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் இருந்து இவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போதே கீதா தன் கணவரோடு வந்திருந்தாள்… கீதாவிற்கு இப்போது சூர்யா பெண் வயதில் ஒரு குழந்தை இருக்கிறது..
கீதா நேராக மதியின் அம்மாவிடம் வந்தாள். “அத்தை மதி எங்க..? நா மதிய பார்ப்பதற்காக தான் ஊரில் இருந்து வந்தவ நேரா கோயிலுக்கு வரேன்.., நீங்க இங்க வர்றத பாத்துட்டு..” என்று சொல்லவும்
“மதி கோயிலுக்கு வர முடியாது டா., அதனால வீட்ல இருக்கா… என்று சொல்லி விட்டு நீ எப்படி இருக்க”., என்று பேசிக் கொண்டே கீதாவின் குழந்தையை வாங்கி கையில் வைத்துக்கொண்டார்…
” ஓ அப்படியா., என்று கேட்ட கீதா சரி அத்தை நான் வீட்டுக்கு வரேன் வீட்டுக்கு போயிட்டு குழந்தையை அம்மா கிட்ட விட்டுட்டு வரேன்…” என்று சொல்லவும்.,
“நீ குழந்தையை விட்டுவிட்டு வந்த னா., உனக்கு அடிதான் கொடுப்பா”. என்று சொல்லிக்கொண்டிருந்தார்…,
“நேத்து நைட் பேசும்போது கூட., நீ வருவதை சொல்லலையே என்று சொல்லவும்…” இல்ல த்த நான் மதிய பார்க்கிறதுக்காக தான் மெனக்கெட்டு வந்தேன்…, இப்ப மத்தியானத்துக்கு மேல கிளம்பி வீட்டுக்கு போயிடுவேன்..” என்று சொன்னாள்…
“மத்தியானம் வரும்போது தனியா வந்திராத அவகிட்ட அடி வாங்கிருவ.,” என்று சொல்லி அனுப்பினார்…,
கீதாவின் கணவரிடமும் நலம் விசாரித்துவிட்டு அனுப்பினர்…, இனியா மட்டும் கீதாவை பார்த்தவுடன் முகத்தை திருப்பிக்கொண்டு தள்ளி நிற்பது போல நின்று கொண்டாள்., அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை ,கவலைப்படவும் இல்லை, கடைசி வருட படிப்பு என்றவுடன் “மதியின் திருமணத்தை பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார்கள்” என்று சூர்யாவின் தாய் பேச்சை தொடங்கினாள்.
“இல்ல., மா” திருமணத்தை பற்றி பேச தொடங்கவும்., “அவள் ஏற்கனவே திருமணம் என்று சொன்னபோது அதைப்பற்றி இப்போது பேசக்கூடாது” என்று சொல்லி விட்டாள்., கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்கு முயற்சிக்கிறாள்., அதில் வேலை கிடைத்தால் இரண்டு வருடம் வேலை பார்த்த பிறகுதான்., திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி விட்டதாக ராஜன் சொல்லிக்கொண்டிருந்தாள்.,
அதே நேரம் பாலனும் “அதுவும் சரிதான் பெண் பிள்ளைகள் அவர்கள் காலில் நிற்பது நல்லது தான்., இனியா தான் பெயருக்கு படிச்சி இருக்கா அவ்வளவுதான்., வேலைக்கு போற டேலன்ட் இல்ல., ஆனா நல்ல படிச்சு நல்ல டேலன்ட் இருக்கிற புள்ள வேலைக்கு போட்டும்., அது நமக்கும் பெருமை தானே என்று வசந்தாவை பார்த்து சொல்லவும்..,” வசந்தாவும் அதை ஆமோதிக்க தலையாட்டினார்…,
இதைப்பார்த்த இனியா விற்கு முகம் மாறுவதையும்., அவள் முகிலனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்வதையும் பார்த்த சூர்யா அவர்கள் பின்னே இவனும் சென்று நின்றான்…
கலைக்கு ஓர் அளவுக்கு அவர்களுக்குள் இருக்கும் பணிப்போர் தெரியுமாதலால் அவளும் பார்த்துக் கொண்டேதான் இருந்தாள்…, அவர்கள் பின்னே சென்ற சூர்யா நேரே இருவரையும் நிறுத்தி “தனக்கு எல்லாம் தெரியும் என்று விஷயத்தை சொல்லி…, அவள் படிப்பு விஷயத்தில் இங்கு உள்ள கல்லூரியில் சேர முடியாமல் செய்ததை போல் இப்போது ஏதேனும் செய்தால் இருவரையும் தொலைத்து கட்டி விடுவேன்., என்று சத்தம் போடவும், வீட்டில் சொல்லிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டவும்.., இனியா அமைதியாக நின்றாள்., இனியா விற்கு இவ்விஷயம் சூர்யாவிற்கு தெரியும் என்று தெரியாது., எனவே அவள் பயந்துபோய் முகிலனின் முகத்தை பார்க்க.., முகிலன் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்பது போல நின்றான்., சூர்யா நேரடியாக முகிலன் இடம் எச்சரித்துவிட்டு சென்றான்., இனியாவையும் சத்தம் போட்டு உனக்கு திருமணம் ஆகிவிட்டது., உன் குடும்பம் உன்னோட வேலையை பாரு தேவை இல்லாம மதி விஷயத்துல., நீங்க ரெண்டு பேரும் தலையிடுவதை நான் விரும்பல.., அவளும் நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி போக போற பொண்ணு.., தேவை இல்லாம ரெண்டு பேரும் அவ வாழ்க்கை விஷயத்திலேயே விளையாண்டீங்க ன்னு தெரிஞ்சிருச்சு நா சும்மா இருக்க மாட்டேன்”.. என்று மிரட்டிவிட்டு சென்றான்..
இனியா சூர்யா மிரட்டியதை கண்டுகொள்ளாமல் முகிலன் இடம் “அவளை ஏதாவது செய்ய வேண்டும்.., அவள் வேலைக்கு போகக்கூடாது., அவள் வேலைக்கு போனால் அதை அனைவரும் பெருமையாக பேசிக் கொள்வார்கள்., எனக்கு அவளை யாரும் பெருமையாகப் பேசுவது பிடிக்காது., நீ ஏதாவது செய் இப்போ நீ போலிஸ்ல தானே இருக்க வேற ஏதாவது பண்ண முடியாதா.,” என்று கேட்கவும்…
முதல்முறையாக இனியாவின் எண்ணத்தை கண்டு அவனுக்குள் பயம் வந்தது.., “அவளின் பேச்சு போகும் பாதை சரியில்லை, என்று அவனது உத்தியோகம் பார்க்கும் அறிவு சொன்னது.,” எனவே இனியாவிடம் தன்மையாக பேசினான்…,
“இனியா இது நமக்கு சரிவராது.., தேவையில்லாத வேலை நாளைக்கு ஏதும் பெரிய பிரச்சனை ஆச்சு., உனக்கு தான் அசிங்கம்.., அதை விட நம்ம அப்பாம்மா க்கு தலைகுனிவு.., அதனால இத பத்தி இனிமேல் பேசாத.., அவ ஒன்னும் இங்க இருக்க போறவ கிடையாது.., அவளை கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு அனுப்பிடுவாங்க.., சோ நீ எதையும் கண்டுக்காத., இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் அவளை நீ பார்த்தது கிடையாது.., நானும் பார்த்தது கிடையாது.., நான் அவளை கடைசியா பார்த்தது ப்ளஸ் டூ முடித்து இங்க இருந்து வெளியூர் காலேஜ் போகும்போது தான்.., நீயும் அப்பதான் பார்த்திருப்பே ன்னு நினைக்கேன்.., அவ இந்த நிமிஷம் வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்குமே கண்ல கூட படல.., ஒரே தெருவில் தான் இருக்கோம்., அவளும் அப்பப்ப வந்துட்டு தான் போறா., ஆனால் பார்த்தது இல்ல., நீ பார்த்து இருக்கியா நானாவது வெளியூர் வேலைக்கு போயிட்டேன்…, நீ பார்த்து இருக்கியா.., சொல்லு,, இல்ல இல்ல அவ ஒதுங்கி தானே போறா ஒதுங்கி போறவங்க ட்ட போய் எதுக்கு வம்பு இழுக்கனும்.., இதோட பிரச்சினையை விடு அவ எப்படி இருந்தால் நமக்கென்ன., நீ கண்டுக்காத என்று சொல்லவும்”..,
எரிச்சல் வந்தாலும் சரி எப்படியும் வேறு ஒரு இடத்திற்கு செல்ல கூடியவள் தானே அவளைப் பற்றி நமக்கென்ன என்ற யோசனையோடு இனியா அமைதியானாள்…..