Advertisement

அத்தியாயம் 2

ஏதேதோ மனம் காரணம்

சொன்னாலும்

உள் மனம் அறியும்

உண்மை நிலவரத்தை.,

காற்றுக்கு கூட

காது இருக்குமோ என்று

எண்ணி மூச்சுக் காற்றில் கூட

நினைவுகள் வராதபடிக்கு

பார்த்துக் கொள்கிறேன்…

      வெண் மதியின் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஒரு முறை ஸ்பெஷல் கிளாஸ் முடித்து விட்டு அவளும் கீதாவும் வரும் போது நேரமாகிவிட்டதால் எப்போதும் அழைத்துக் கொண்டு வரும் ஆட்டோ போய் விட்டது… எனவே அன்று இருவரும் பஸ்ஸில் ஏறி வருவதாக பேசிக்கொண்டே வந்தனர்.

       அப்பொழுது பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கவும்,  அதேசமயம் அவர்கள் இடம்  செல்லும் பேருந்து வரவும் சரியாக இருந்தது., ஏறி முன் பக்கமாக நகர்ந்து கீதா சென்றுவிட இவள் படிக்கட்டுக்கு அருகிலேயே உள்ள பின்பக்கமாக நின்று கொண்டிருந்தாள்.

    ஓரளவு அந்த பஸ்ஸில் தெரிந்தவர்கள் தான் இருந்தார்கள் என்பதால்  தனியே நின்றதால் அமைதியாக இருந்தாள்..

            அப்போது நடு பாகத்தில் நின்றுகொண்டிருந்த முகிலன் அங்கே வெண்மதி  நிற்பதைப் பார்த்துவிட்டு கூட்டத்திற்கு நடுவே  இவள் அருகில் வந்து நின்று கொண்டான்..,  இவள் பிடித்துக் கொண்டு நின்ற கம்பிக்கு அருகில் அவனும் வந்து நின்றுகொண்டு., “உன்னிடம் பேச வேண்டும் வீட்டிற்கு வருகிறேன், என்று சொன்னான்”.

         “எனக்கு உங்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     “உனக்கு ஒன்னும் இல்ல., எனக்கு பேசுவதற்கு நிறைய இருக்கு”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.  இவளின் முகம் படபடப்பை காட்டுவதை பார்த்து அங்கிருந்து கீதா செய்கையில் என்னவென்று கேட்க இவள் ஒன்றும் இல்லை என தலை ஆட்டும் போது அதை பார்த்துவிட்டு முகிலன் அவளிடம் கோபப்பட்டான்.

     “என்ன உன் பிரண்டு ரொம்ப பண்றா., நான் என்ன உன்னை முழுங்கவா வந்தேன்.  வந்து பேசிட்டு தானே இருக்கேன்., நீ ஏன் முகத்தில் இப்படி ரியாக்ஷன் காட்டுற., அதனால்  உன் பிரண்டு அங்க இருந்துட்டு என்னன்னு கேட்கிறா…,  என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது” என்று அதட்டி பேசினான்.

      அமைதியாக குனிந்து கொண்டு “ப்ளீஸ் தள்ளி நில்லுங்க பக்கத்துல நினைக்காதீங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

      “ஆமா இவ பெரிய உலக அழகி இவ பக்கத்துல நிக்க எல்லாரும் ஆசைப்படுறாங்க போவியா…, உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் கண்டிப்பா நான் சொல்றதை நீ கேக்கணும்.,” என்று மிரட்டலாக சொல்லி விட்டு சென்றான்.

         அனைவரும் ஒரே பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கும் போது அவளைத் திரும்பிப் பார்த்து ஒற்றை விரலைக் காட்டி மிரட்டிவிட்டு சென்றான். முகிலன் மாடிக்கு வா என்பது போல செய்கையும் காட்டி விட்டு சென்றான்.

     அவன் செய்து விட்டுப் போவதை பார்த்த பிறகே கீதா.,  “என்னடி என்ன விசயம் என்று கேட்டாள்”.

         பின்பு பஸ்ஸில் அவன் அருகில் வந்து சொன்ன விஷயத்தை சொல்லவும்.,  “ஏதோ பேசணுமாம் வீட்ல வந்து பேசுறேன் சொன்னாங்க”, “நான்தான் பேசுறதுக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்னேன்” என்று சொன்னாள்.

        “அதுதான் இப்போ மிரட்டிட்டு., மொட்டை மாடிக்கு வா என்று சைகையில் சொல்லிட்டு போறாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “எப்படியும் வந்து பேசுவாங்க., பேசினா என்ன பேசுறாங்க ன்னு கேட்டுக்கோ., நீ எதுக்கு பயப்படுற எதுவா இருந்தாலும் உங்க அம்மா அப்பா இருக்காங்க., அவங்க அம்மா அப்பா இருக்காங்க., அதைவிட சூரியாண்ணா இருக்காங்க அப்புறம் எதுக்கு நீ பயப்படுற.”

           “அண்ணா கிட்ட சொல்லிடுவேன்., அதனால எனக்கு பயம் கிடையாது., இந்த சீடு மூஞ்ச பார்த்தாலே எனக்கு கோபம் தான் வரும்., எப்ப பாரு அதிகாரம் பண்ணுறதே வேலையா போச்சு…, நான் பயப்பட வேற செய்றேனாக்கும்.,  பயப்படல   இது வேற.., என்ன பிரச்சனை பண்ண போறாங்க ளோ ன்னு பயமா இருக்கு…,   தங்கச்சி காரி என்ன சொல்லிக் கொடுத் -தாலும் யோசிக்கிறதே கிடையாது நேரா வந்து என்னை பிடிச்சு கத்த வேண்டியது… என்ன சொல்லிக் கொடுத்தா ன்னு கூட தெரியாம நான் திட்டு வாங்கிட்டு நிப்பேன்.,  அரைலூசு  என்னை திட்டிட்டு போகும்., வேற ஒன்னும் இல்லை…”

          கீதாவோ, “ஏன்டி அவங்க அரைலூசு இல்ல., உன்னை முழுலூசு ஆக்க டிரைப்பண்ணுதுங்க., இரண்டு பேர் வீட்டுலையும் எதுவும் சொல்ல மாட்டாங்களா…”

         “சூர்யா அண்ணன் இரண்டு பேரையும் சத்தம் போட தான் செய்வாங்க… ஆனா அதையும் ஒரு பிரச்சனை ஆக்க முயற்சி நடக்கும்., வீட்டுல எல்லாம் சொல்லுறதே கிடையாது… அதுங்க குணம் தெரிஞ்சும் ஏன் வாய் கொடுக்கனும்”

               ” வீட்டுக்கு போன உடனே சூர்யா அண்ணாக்கு போன் பண்ணிடு., பேசணும்னு சொன்னாங்க அப்படிங்கிறது சொல்லிரு., அதுக்கப்புறமா பேசு….”

          ” கண்டிப்பா., ஏன்னா ரொம்ப நாளா வம்பு பண்ணாம இருந்தாங்க., இப்ப என்னவோ…”

             “என்ன ஹெல்ப் னாலும் சொல்லு நானும் இருக்கேன்…”

         “அண்ணா க்கு வொர்க் முடிஞ்சிருச்சா ன்னு தெரியல., சரி நான் போய் கேட்டுக்குறேன்” என்று சொல்லி விட்டு… அதன் பிறகு படிப்பு பரீட்சை சம்பந்தமாகவே இருவரும் பேசிக் கொண்டே அவரவர் வீடு போய் சேர்ந்தனர்.

            அவள் வீட்டிற்கு வரும்போதே வீடு நிசப்தமாக இருந்தது. அம்மா என்ற  இவளுடைய சத்தத்திற்கு பின்புறம் தோட்டத்திலிருந்து இங்கே இருக்கேன்… இங்க வா என்ற சத்தம் கேட்டது.,  இவள் பின்புறம் செல்லவும்.,

       பின்புற வாசற்படியில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருந்த சந்திரா.,

        “போ., போய் முகம் கழுவிட்டு வா…

       அம்மா,  வசந்தா அத்தை கூட கோயிலுக்கு போறேன்.., நீ  டிரஸ் மாத்திட்டு காபி குடிச்சுட்டு  படிக்க உட்காரு., தம்பி பிரண்ட்ஸ் கூட விளையாட போய் இருக்கான்.,  இப்ப வந்துடுவான்.,  அப்பா இன்னைக்கு ஆஃபிஸ்ல இருந்து லேட்டா தான் வருவாரு.,  கதவை பூட்டிட்டு படி” என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்ப போனார்..,

       போய் உடை மாற்றி விட்டு வரவும்.,  காபி கலந்து தந்து விட்டு கோவிலுக்கு சென்றார்.,  “படி தம்பி வந்தா காபி கலந்து குடு” என்று சொல்லி விட்டு சென்றிருந்தார்.

              காபியை கொடுத்துவிட்டு அம்மா கிளம்பியவுடன் கதவைப் பூட்டிக் கொண்டு வந்து அமர்ந்தவள்.,  சூர்யாவிற்கு போன் செய்ய போனை எடுக்கும் முன் மாடிப்படியில் யாரோ இறங்கும் சத்தம் கேட்டது…,

          அடுத்தடுத்து வீடு இருந்ததால் ஒரு வீட்டு மொட்டை மாடியில் இருந்து மறு வீட்டிற்கு செல்ல முடியும்., ஸ்ரீராம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாட செல்லும்போது மாடி வழியாக ஏறி போயிருப்பான்., அதனால் கதவை திறந்து போட்டுவிட்டு போயிருப்பான் போல.,  இப்போது அவன் தான் திரும்ப வருகிறான் என்று நினைத்துக்கொண்டு சூர்யாவிற்கு போன் செய்ய நம்பரை அழுத்தி விட்டு காத்திருக்கும்  போது  போனை கட் செய்தது ஒரு கை…

         இவள் யார் என்று நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு நின்றது முகிலன்.,  “எப்படி வீட்டுக்குள்ள வந்தீங்க” என்று அதிர்ந்து போய் கேட்டாள்.,

         “உன் தம்பி அங்க விளையாடி ட்டு இருக்கான்., அப்ப மாடி கதவு திறந்திருக்கும் ன்னு தெரியும்., அதனால இப்படி மாடி வழியே வந்தேன்…, உங்கம்மா எங்கம்மா கூட கோயிலுக்கு போயிருக்காங்க.,” என்றான்.

      “மாடிக்கு எந்த வழியா எப்படி வந்தீங்க., சுவர் ஏறி குதிச்சிங்களா…” என்றாள்.

       “ரொம்ப முக்கியம்., பக்கத்து வீட்டு மாடி வழியா வந்தேன்… போதுமா.”

      “அய்யோ., அந்த அத்தை அம்மா ட்ட சொல்லிருவாங்க என்று சொல்லிய படி கதவை திறக்க போகவும்….”

     “ஏய். ஒழுங்கா நான் சொல்றத கேளு உன்னை மாடிக்கு வர சொன்னேன் இல்ல..,  நீ மாடிக்கு வரல அதனால தான் நான் மாடி வழியாக கீழிறங்கி வந்துட்டேன்…, என்று இலகுவாக பதிலளித்தான்..,”

         இவளுக்கு தான் பயமாக இருந்தது,  “கதவை வேறு பூட்டி வைத்திருக்கிறேன்.,  என்று சொல்லிக் கொண்டு, முதலில் வெளியே போங்க”..,

        “யாரும் திட்ட மாட்டாங்க நீ சொல்லு நான் பேசணும், நீ மாடிக்கு வரியா என்ன” என்று கேட்டான்….,

        “சரி மேலே போங்க., நான் வர்றேன்” என்று வேகமாக விரட்டினாள்.,

      அப்போது அவன் சொன்னான்.., “என்னை அனுப்பிட்டு அண்ணனுக்கு போன் செஞ்சு சொல்லிக்கொடுத்தா உனக்கு அதுக்கப்புறம் தான் இருக்கு” என்று சொல்லி மிரட்டவும் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டே இருந்தாள்…

     அவன் வீட்டிற்குள்  நாலு படி ஏறி விட்டு., இவள் வரவில்லை என்பது தெரிந்தவுடன் “மறுபடியும் போன் செய்ய முயற்சிக்காதே.., வா என்னோடு,” என்று அவளை முன் விட்டு இவன் பின் தொடர்ந்தான்.,  இவளோ  அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மாடிக்கு போனாள்..,

      “ஒழுங்கா போ., மாடிக்கு தானே போறேன்., உன்னை என்ன கடத்திக்கிட்டா போறேன்., ஏன் இப்படி திருட்டு முழி முழிச்சிட்டு போற., மத்ததெல்லாம் வாய்கிழிய பேச தெரியுது இல்ல என்று அதட்டி பேசவும்.,” அமைதியாக விறு விறுவென்று மாடியில் போய் நின்றாள்.,

          பின்பு அவன் மாடிக்கு ஏறி வந்தவுடன் “இங்க நிக்காதீங்க…, அடுத்த வீட்டு மாடிக்கு போங்க.., என்று அவனை விரட்டி விட்டு சீக்கிரம் சொல்லுங்க எதுவா இருந்தாலும்..,” என்று பேசினாள்.

    “நான் ஒன்னும் உன் கிட்ட நின்னு கதை பேசுறதுக்கு இங்க வரல…  நான் சொல்றத தெளிவா கேளு.,  எந்த சூழ்நிலையும் டொள்த்  முடித்த  உடனே  இங்கு உள்ள காலேஜ் செலக்ட் பண்ணக்கூடாது.., நீ என் தங்கச்சி படிக்கிற காலேஜுக்கு  வரக்கூடாது..,  அது மட்டுமில்லாம இந்த ஊர்ல நீ ஒன்னும் இருக்கணும்னு அவசியம் இல்ல..,  வேற ஊர்ல போய் படிக்கிற வழிய பாரு., வெளியே இருந்து படி.,”

    “ஹலோ இந்த ஊரென்ன உங்களுக்கா பட்டா போட்டுக் கொடுத்து இருக்கு…, நீங்க இங்கே இருக்க கூடாதுன்னு சொல்றதுக்கு…, நான் எங்க இருந்து படிச்சா உங்களுக்கு என்ன…” என்று கோபமாக பேசினாள்…

       “நீ இங்கிருந்து படிக்கிறது சரி வராது., உன்னால என் தங்கச்சி டிஸ்டர்ப் ஆகிறது நான் விரும்பல…, எங்க அம்மா அப்பா எப்ப பார்த்தாலும் உன்னை கம்பெர் பண்ணி பேசுறாங்க…, படிப்பு விஷயத்தில் அது என் தங்கச்சிக்கு பிடிக்கல.,”

        “அதுக்காக எல்லாம் ஊரை விட்டு போக முடியாது.”

        “ஏய்… பதில் பேசாத., நீ என்ன பண்ற பிளஸ் டூ முடிச்சுட்டு வேற காலேஜ்ல சீட்டு வாங்கிட்டு போற., அதையும் மீறி இங்க இருந்து தான் படிப்பேன் அப்படின்னு ரெடி ஆனாலோ., இல்ல சூர்யாக்கு போன் பண்ணி சொல்லி கொடுத்து., இங்க படிக்க ட்ரை பண்ணினாளோ., நான் உன்ன பத்தி ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்து உன் படிப்பையே உண்டு இல்லை ன்னு ஆகிவிடுவேன்…, நல்ல யோசிச்சு படிக்கணுமா இல்ல படிக்காம வீட்டில் இருக்க போறியா. ன்னு முடிவு பண்ணிக்கோ…, வெளியூரில் இருந்தா படிக்கலாம்.,  உன் படிப்பு தொடரும் இங்கிருந்தா தான் பிரச்சனை உனக்கு.,   எப்படி வசதி பார்த்துக்கோ…,”

   “என்ன மிரட்டி பார்க்குறீங்களா…”

         “பதில் பேசாத ன்னு சொன்னேன் இல்ல… உங்க அப்பா அம்மா கிட்ட என்ன சொன்னா உன் படிப்ப   நிறுத்து வாங்கன்னு எனக்கு தெரியும்…, சோ ஒழுங்கா ஊரைவிட்டு போற வழிய பாரு என்று அதிகாரமாக மிரட்டிவிட்டு…,” இங்கிருந்து அவர்கள் வீட்டு மாடி தெரியும் இடத்திற்கு கையைக் காட்டினான்…,

      அப்பொழுதுதான் பார்த்தால் இனியா அங்கே  நிற்பதை….

     “ஏய்… என்ன புரியுதா… அங்க என்னத்தை பார்த்துட்டு முழிச்சிட்டு இருக்க…”

    “போங்கடா எருமைகளா…,” என்று அவனையும் அவன் தங்கையையும் சேர்த்து திட்டிவிட்டு கீழே இறங்கி போனவளை…

      “ஏய்… கத்திரிக்கா., மரியாதையா பேச பழகு…”

      “சூர்யா அண்ணன் சொன்னதுக்காக தான்… உன்னை எல்லாம் நீங்க சொல்லுறேன்… இல்லாட்டி உனக்கு யார் மரியாதை கொடுப்பா….”

    “போய் சூர்யா ட்ட சொல்லுறேன்…”

     “எதுக்கு பேசுனா ன்னு., கேட்டா என்ன சொல்லுவ… மிரட்டுற வேலை எல்லாம் இங்க வேண்டாம்…” என்று சொல்லிய படி

        மாடி கதவினை வேகமாக   சாத்திக் கொண்டு ஓடிவிட்டாள்…

           கீழே சென்ற உடன் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது…  கீதாவிற்கு எப்படி தெரியப்படுத்துவது..,சூர்யா அண்ணாவிடம் இப்போது சொல்வோமா இல்லை பரிட்சை முடிந்த பிறகு சொல்வோமா என்ற யோசனையுடன் இருந்தாள்.., பரீட்சை முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன்.., அதை அத்தோடு விட்டுவிட்டு படிப்பில் தன் கவனத்தை செலுத்தத் தொடங்கினாள்..,  இருந்தாலும் அவ்வப்போது அவனுடைய உதாசீன பேச்சு அவளுக்கு நினைவு வந்து எரிச்சலை ஊட்டியது..

     கீதாவிடம் இதை பகிர்ந்த போது கீதாவும் “தொல்லையை தூக்கி தோளில் போடுறதுக்கு  பதிலா நிம்மதியா வெளியே இருந்தே படி…. இங்க இருந்து படித்து, எப்போ எந்த நேரத்தில் அந்த ராங்கி பிடித்தவ, என்ன சொல்லி பிரச்சினையை உண்டு பண்ணுவா ன்னு தெரியாம பயந்து கிட்டே இருக்கணும்… அதனால நீ அங்க இருந்து படிக்கிறது உனக்கும் நல்லது தான்.., நீ உன் படிப்பு மட்டும் பாரு…”

     “உன்னை பார்க்க முடியாதே கீதா… நீ எல்லாம் இங்க இருப்ப…, இங்க உள்ள காலேஜ்ல சேர்வ…”

        “அப்படியே எங்க வீட்ல கிளுகிளு ன்னு காலேஜ்ல சேர்த்திர போறாங்க…, எங்க அக்காவுக்கு எப்படி ப்ளஸ் டூ முடித்த உடனே கல்யாணம் பண்ணி வெச்சாங்களோ., அதே மாதிரி தான், எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க…, அப்புறம் எதுக்கு இங்கே இருந்துட்டு.,  நீ போய் நல்ல படியா படி…, நான் உனக்கு அப்பப்ப போன் பேசுவேன், சரியா..,  பயப்படாதே.., அப்படியே நான்  படிச்சாலும் ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் சேர்த்துடுவாங்க…., அதனால நீ யோசிக்காம போய் உன் படிப்பை பாரு என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்…”

           அதன்படியே அவளது நல்ல மதிப்பெண்களுக்கு ஏற்ப சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவும்., அவளும் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.., “வீட்டில் அது தெரியாத பெற்றோர்களும் சூர்யாவும் சூர்யாவின் பெற்றோர்களும் ஏன் வெளியூரில் அப்படின்னு நினைக்கிற நம்ம ஊர் காலேஜிலேயே இடம் கிடைக்குமே இங்கே இருந்து படிக்கலாம் இல்லை என்று கேட்டுக் கொண்டிருந்தனர்”…., இவள்தான் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல்,

              “இல்ல ஹாஸ்டலில் இருந்து படிக்கிறேன்…, வெளியே இருந்தா தான் எனக்கும் கொஞ்சம் மத்தவங்களோட பழக தெரியும்…, இங்கே இருந்தா இங்க உள்ளவங்களை தவிர வேற யாரையும் தெரியாது.,” அதனால் தான் என்று சொல்லிவிட்டு தன் படிப்பிற்காக வெளியூர் செல்ல தயாரானாள்….

Advertisement