Advertisement

அப்போது கீதா தான் சொன்னாள்., முகிலனின் அழுகையும்., முகிலனின் ஏக்கத்தையும்.,

         குழந்தைகள் இருவரும் வந்து பார்த்துவிட்டு அம்மா எப்படி இருக்க சொல்லி கேட்க.,  ரிஷி ஓரளவு புரிந்து கொண்டான்..,  அம்மா விழுந்துட்டாங்க என்று ரக்ஷியிடம் சொல்ல.., அவளோ “எப்ப வீட்டுக்கு வருவம்மா” என்று கேட்டாள்..,

    “அம்மா வந்துருவேன்., நீங்க சமத்தா பாட்டி கூட வீட்டுல இருங்க”., என்று சொன்னாள்.,

    “எனக்கு நீ தான் வேணும் மா…, பாட்டிக்கு கதை தெரியாது நீ வா”., என்று கேட்டாள்., அருகிலிருந்த முகிலனை திரும்பி பார்க்க…, அவனோ.,

      இன்னைக்கு ஒரு நாளைக்கு பாட்டி ட்ட கதை கேளு சொல்லுவாங்க.., இல்லை னா கலை அம்மா, சூர்யா அப்பா சொல்லுவாங்க…, சரியா…,  அம்மா வீட்டுக்கு வந்ததும் அம்மா கதை சொல்லுவா.,  அதுவரைக்கும் சமத்தா இருக்கனும்., வீட்டுக்கு போங்க என்று சொன்னான்…,

             கலையும் சூர்யாவும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப ஸ்ரீராம் முகிலனோடு மருத்துவமனையி -லிருந்து கொண்டான்…  வீட்டினர் அனைவரும் வீட்டிற்கு செல்ல.., கீதா இனியாவின் மாமியாரோடு கிளம்பி விடுகிறேன் என்று சொல்லி கிளம்பிக் கொண்டிருந்தாள்.., இனியாவையும் இனிய கணவன் பார்க்க அழைக்க…, இன்னொரு நாள் வருகிறேன் என்று பார்க்க போகவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்…,

      மருத்துவமனையிலிருந்த நாட்கள் அனைத்தும் முகிலன் விடுப்பு எடுத்துக்கொண்டு மருத்துவமனையே கதியென்று கிடந்தான்.., மூன்று நாள்கள் ஐ.சி.யூ லிருந்து..,  நான்காவது நாள் அறைக்கு மாற்றப்பட்டாள்..,

         ஸ்ரீராமும் லீவ் சொல்லிவிட்டு அங்கே தான் இருந்தான் எனவே மருத்துவமனை மருத்துவம் சம்பந்தமாக எதுவும் சந்தேகம் என்றால் அதைக் கேட்பது., வீட்டிற்கும் ஹாஸ்பிடல் என்று அழைவது என ஸ்ரீராம் இருக்க…, முகிலன் மருத்துவமனையை தன் இருப்பிடமாக மாற்றிக்கொண்டது போல் அங்கே இருந்து கொண்டான்…,

          பிள்ளைகள் மட்டும் காலையிலும் மாலையிலும் வந்து அவளைப் பார்த்துவிட்டு செல்ல.., சூர்யா ஏற்பாடு செய்து கொண்டான்..,

       மதி தான்  “லீவு போடுங்க.., ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்…,  சின்னகுட்டி ஸ்கூல் கிளம்புவதற்கு  ரொம்ப பண்ணுவா  கஷ்டம் என்று சொல்ல போக.., வீட்டில் பிள்ளைகள் மூவரும் மதிக்கு ஒன்றுமில்லை என்று சந்தோஷத்துடன்  குழந்தைகள் அதற்குரிய மனதுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்…,

           பெரியவர்கள் தான் எவ்வளவு பெரிய விபத்தில் இருந்து தப்பி வந்திருக்கிறாள் என்று பேசிக் கொண்டிருந்தனர்..,  ஸ்ரீராம் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் செல்ல மதியின் காரை உபயோகப் படுத்திக் கொண்டிருந்தான்..,

     இதற்கிடையில் அந்த ஆக்சிடென்ட் சமந்தமான அத்தனை விபரங்களையும் முகிலன் சேகரித்துக் கொண்டிருந்தான்…, மருத்துவமனையில் இருப்பதாக தான் பெயர் மற்றபடி அதற்கு என்ன காரணம்., காரணமானவர்கள் யார்., என அத்தனையும் கண்காணித்துக் கொண்டு தான் இருந்தான்..,

     அவன் அவளை பார்த்து கொண்ட விதத்தை பார்த்து அத்தனை பேரும் அந்த வருத்தத்திலும் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தனர்.., ஏனெனில் மதியின் அருகில் யாரையும் விடவில்லை தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டான்.., அவளை கால் ஊன்ற கூடாது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்…

             மற்ற விஷயங்கள் மற்றவர்கள் பார்த்துக் கொண்டாலும் அவளுக்கு தேவையான சில விஷயங்களை இவனே பார்த்துக் கொண்டான்.., வீட்டிற்கு செல்ல நாள் கேட்டுக் கொண்டிருக்கும் போது..,  ஏற்கனவே 15 நாள் மருத்துவமனையிலேயே கழிந்து விட..,  இன்னும்  இரண்டு மூன்று நாள் கழித்து வீட்டிற்கு அனுப்புவதாக மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

          முகிலன் கூட “பரவால்ல இருக்கட்டும் நீ ஒரு வாரம் கழித்து கூட போகலாம்” என்று சொன்னான்..,

            மதியால் மருத்துவமனையில் இருக்க முடியவில்லை.., “வேண்டாம் வீட்டுக்கு போவோம்., அம்மாவும்., அத்தையும்., பாவம் புள்ளைங்க படுத்தி வைக்கிறாங்க., சூர்யாண்ணா., இதுக்காக லீவ் போட்டுட்டு இங்க இருக்காங்க., அம்மு படிப்பு வீணாக போகும்., யோசிச்சு பாருங்க., அப்பா மாமா கூட லீவு போட்டு இருக்காங்க எல்லாத்தையும் யோசிக்கணும் இல்ல., வீட்டுக்கு போலாம்” என்று சொல்லி இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்கு செல்லலாம் என்று மருத்துவர் வாயால் சொல்ல வைக்கும் வரை அடம்பிடித்து மருத்துவரிடம் பேசியிருந்தாள் மதி…,

      வீட்டிற்கு வந்தவன் அவளை அறையில் விட்டுவிட்டு அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டு அன்றே வேலையில் சேர்ந்தான்..,  மற்றவர்கள் கேட்டதற்கு “லீவு கம்மி” என்று சொன்னான்.,

      அவன் எதற்கு போகிறான் என்று புரிந்து கொண்ட சூர்யா.., முகிலனை அணைத்து “ஜாக்கிரதையா பார்த்துக்கோ.., ஏற்கனவே பிரச்சினை பண்ணி இருக்கான் என்று சொன்னதை மதி கேட்டுக்கொண்டு தான் இருந்தாலும்.., அவளுக்கு விவரம் என்னவென்று தெரியாது…,

       அந்த நேரம் அவள் தான் சத்தம் போட்டு ஸ்ரீராமையும் அவன் மனைவியும் ஊருக்கு கிளம்ப சொன்னாள்.., “வேலையை விட்டுவிட்டு சும்மா உட்கார்ந்து இருக்க கூடாது., என்று தம்பிக்கு சொல்லியது போல., சூர்யாவையும் அவள் தான் அங்கு போய் இருங்க., அம்மு ஸ்கூல் க்கு லீவு போட்டுட்டு உட்கார்ந்திருக்கீங்க என்று சொல்ல” …,

        “அதுலாம் ஒரு பிரச்சனை கிடையாது., நான் இங்க இருந்து போயிட்டு வந்துடறேன்” என்று சூர்யா சொல்லிக் கொண்டிருந்தான்…,

 “அதுலாம் ஒன்னும் இல்ல…, அம்மு ஸ்ட்டிஸ் வீணாகும்., கிளம்புங்க” …, என்று சொல்லிவிட்டு., கலையிடம்., “தப்பா எடுத்துக்காதீங்க அக்கா” … என்றாள்.,

“யாரும் தப்பா எடுக்கலை… புரியுது., நீ வொரிப் பண்ணிக்காதே” … என்றாள் கலை.

   முகிலனின் அம்மாவும்., மதியின் அம்மாவும் மட்டும் துணைக்கு இருக்க.., மற்றவர்கள் கிளம்ப தயாராகினர்.., அப்பாவையும் மாமாவையும் நாங்க பார்த்துக்கிறோம் என்று சூர்யாவும்., கலையும் சொல்லிக் கொண்டிருந்தனர்..,

      முழு மூச்சாக விபத்து கேஸ் விஷயத்தில் இறங்கும் முடிவெடுத்து தான் வேலைக்கு சொல்லத் தொடங்கினான்.., அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணும் துணைக்கு இருக்க வீட்டில் அனைவரும் அவளை நல்லபடியாகவே பார்த்துக் கொண்டனர்…

        முகிலன் வேலைக்கு சென்றாலும்.., அதிக நேரம் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டான்.., முக்கியமான வேலையை  மட்டுமே அலுவலகம் செல்வது போல பார்த்துக் கொண்டான்.,

        வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் முழுவதும் அவளுடனே இருந்தான்..,  அப்படித்தான் ஒரு முறை அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது.., “பொருட்களின் லிஸ்ட்., கடை போன் நம்பர் தேவை என்றும்., மதியிடம் இருக்கும்” என்று வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி கேட்டார்…,

       “எங்க இருக்குன்னு தெரியலையே” என்று முகிலன் சொன்னான்…,

     ரிஷி தான் சொன்னான்…, “அப்பா., அம்மா அந்த பீரோ ல தான் எல்லாம் வச்சிருப்பாங்க., அதுல தான் எல்லாம் இருக்கும்” …,

         அவன் பீரோவை திறந்து எடுக்க.., அதில் இருந்து அவள்  எப்பொழுதும் எழுதும் டைரியும்., வீட்டு வரவு செலவு கணக்கு அதைத்தவிர அருகிலேயே ஒரு சின்ன கைக்குள் அடங்கும் அளவிற்கு ஒரு குட்டி பேக்., பக்கமிருக்க அவற்றை எல்லாம் எடுத்து பார்த்து விட்டு எடுத்து தருகிறேன் என்று சொல்லி அந்த அம்மாவை அனுப்பிவிட்டு.., அவள் தூங்கிக் கொண்டிருந் -தாள்…,பீரோவில் இருந்து அதை எடுத்து அருகில் வைத்து பார்க்கும் போது தான் தெரிந்தது.., அவள் வீட்டின் வரவு செலவு கணக்கு போக மீதி பணம் அனைத்தும் அந்த பேக்கில் வைத்திருப்பது….

      அவனுடைய ஏடிஎம் கார்டை அவள் கையில் இருந்தாலும்.., இவள் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்க மாட்டாள் என்று.., அதை தவிர இவன் கையில் கொடுக்கும் பணம் எதையுமே அதிகமாகச் செலவழிப்பது இல்லை என்பதும்.., அப்படி பார்க்கும் போது தான் வீட்டின் வரவு செலவு கணக்குகளையும்., இவன் பார்த்தான்..,

      அதுமட்டுமல்லாமல் அவள் எழுதி வைத்திருந்த அவன் மேல் வைத்த அவளுடைய நேசம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கான சில வரிகள்…, அவளுடைய அன்பை ஆழ்மனதை இவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைத்தது…,

      வேலை செய்யும் அம்மா கேட்டது கிடைக்க எடுத்துக்கொண்டு போய் கொடுப்பதற்காக வெளியே சென்றவன்..,

           அங்கு அந்த அம்மா தன் அம்மாவிடமும்., மதியின் அம்மாவிடமும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டான்.., “மதி பொண்ணு அது உண்டு., அது வேலை உண்டு., என்று இருக்கும்., சாருக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும் ன்னு., நினைக்கும், பிள்ளைகளை நல்லபடியாக கவனிக்கணும் நினைக்கும்., அதைவிட வாழ்க்கையே அவரு மட்டும் தான் சுத்தி வரும்.,

     நல்ல பொண்ணுங்க., ஆனால் கடவுள் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு வலியும் வேதனையும் கொடுத்திருக்க வேண்டாம்”…, என்று அந்த அம்மா பேச..,

    சீக்கிரம் சரியாகிவிடும் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசி கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு… அதுமட்டுமல்லாமல் அந்த உதவிக்கு வரும் அம்மாவின் மூலமாக இவள் அங்கு உள்ள அனைவரிடமும் நல்ல தோழமையுடன் இருப்பதும்.., அனைவரும் அவள் மீது அன்பாக இருப்பதும் புரிந்துகொண்டான்…,

     ஏற்கனவே அவளை மருத்துவமனையில் இருக்கும்போது அத்தனை பேரும் வந்து பார்த்து சென்றனர்.., அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரும் வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்ததால்., அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.., இவள் யாரையும் பகைக்க மாட்டாள் என்று.,அதுமட்டுமல்லாமல் எல்லோருடனும் அன்போடு பழகும் இவள் தனக்கு கிடைத்த வரம் என்று நினைத்துக் கொண்டான்…,

மற்றவர்களை பற்றி பேசும் முன் பல முறை சிந்தித்து கொள்ளுங்கள்… அந்த பேச்சு நமக்கு அவசியம் தானா என்று., நல்லதோ கெட்டதோ., பேசுவதற்கு முன் உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்…

பிறரை பற்றி  விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள் அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும் பிறரை பற்றி விமர்சிக்க நமக்கு  தகுதி இருக்கிறதா என்று.

Advertisement