Advertisement

அதே நேரத்தில் தாமதமாக வந்தனர்  இனியாவும்., இனியாவின் கணவனும்..,  இனியாவின் கணவனும், மாமியாரும்  அவள் நலம் விசாரித்துக் கொண்டிருக்க.., அவனிடம் பேசும் போதே சூர்யாவிற்கும் கண்கலங்க அதே நேரம் முகிலனும் கண்ணீர் விட.,

          இனியா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்…, “அவளுக்கு தான் ஒன்னும் இல்ல ன்னு தெரிஞ்சிருச்சி இல்ல., அப்புறம் எதுக்கு நீ உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க” …, என்று தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தின் காரணமாக அவன் அழுகிறான் என்று நினைத்து சொன்னாளா இல்லை…, வேண்டும் என்று சொன்னாளா என்று தெரியாது…, வார்த்தையை விட்டாள்.

               சூர்யாவோ.., நீ பேசாத தயவு செய்து போய்ரு இங்க இருந்து என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…, “சும்மா எல்லாரும் உக்காந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்கீங்க” என்று சொன்ன அடுத்த நிமிடம் இனியா சுருண்டு மருத்துவமனையின் அந்த காரிடரின் ஒரு ஓரத்தில் விழுந்து கிடந்தாள்…,

       ஏனெனில் முகிலனின் அடி அந்த அளவு வேகமாக விழுந்திருந்தது.,  அவனுடன் வேலை பார்க்கும் ஊழியர்களும் சரி.., குடும்பத்தினரும் சரி..,  ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்..,  ஏனெனில் முகிலன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் கை நீட்டுவது கிடையாது.,

       எவ்வளவு பெரிய கேஸ் பிரச்சினை என்றாலும் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மேல் கை வைக்கும் பழக்கம் முகிலனுக்கு கிடையவே கிடையாது.., மற்றவர்கள் கை வைப்பதையும் அவன் விரும்ப மாட்டான்., அப்படிப்பட்டவன் இன்று கூடப் பிறந்த தங்கை என்றும் பார்க்காமல் அவன் அடித்த வேகத்தைப் பார்த்த பிறகு அனைவருமே பயந்து விட்டனர்..,  அவன் அடியின் வேகம் அன்று தான் அனைவருக்கும் தெரிந்தது.., இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்திருந்தால் தலை திரும்பி இருக்குமோ என்னவோ., அவன் அடித்த அடுத்த நிமிஷத்தில் அவள் கன்னம் வீங்கியிருந்தது.., அந்த அளவுக்கு வேகமாக அடித்தவனை யாரும் ஏன் என்று கேட்கவில்லை..,

      இனியாவின் கணவனும்., இனியாவின் மாமியாரும்., இனியாவை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் திரும்பிக் கொண்டனர்., வீட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற உடன் இனியாவிற்கு வருத்தமாக இருந்தது..,

       “நான் இப்ப என்ன சொல்றேன், ன்னு நீ என்னைய அடிக்கிற அவளுக்கு தான் ஒன்னும் இல்ல., இல்ல…, நீ எதுக்கு அழுற ன்னு தானே கேட்டேன்”., என்று சொல்லி அவள் தன் பக்க நியாயத்தை உணர்த்த முயற்சிக்க.,

          இனியாவின் கணவனோ., “இனிமேல் நீ ஒரு வார்த்தை பேசினா அடுத்த அடிய நான் தான் தருவேன் ன்னு நினைக்கிறேன்…, வாய மூடிட்டு வெளியே போய் உட்காரு” என்று சொன்னான்…,

           வீட்டில் உள்ள யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை.., இனியாவின் மாமியார் தான் “அடிபட்டு  உள்ள கிடக்குறவ., அவன் பொண்டாட்டி.,  உனக்கும் அவளுக்கும் சம்பந்தமே கிடையாது..,  சரியா உன் அண்ணன் பொண்டாட்டிய சொன்னா அவனுக்கு வலிக்கும்.., அந்த வலி உனக்கு தெரியாது இல்ல.., அத விட்டுட்டு அவளுக்காக நீ எதுக்கு அழுத ன்னு., அவன்கிட்ட போய் கேட்குற.., அவனுக்கு வாழ்க்கையே அவ தான்”

      “நீ கூட பிறந்தவ னா அதோடு சரி., அதுக்கு அப்பறம் உன்ன கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு கொடுத்தாச்சு…, உனக்கும் அவனுக்கும் வரவிருக்கும் சொந்தபந்தம் இருக்கலாம்., அதுக்காக எல்லாமே அவனுக்கு நீங்க யாரும் ஆக முடியாது., அவ தான் அவனுக்கு எல்லாமே., வாய மூடிட்டு பேசாம உட்காரு” …, என்று சத்தம் போட அவள் அழுது கொண்டு திரும்பிக் கொண்டாள்.

       கலையோ  உனக்கு இந்த அடியே முன்னாடியே கொடுத்திருந்தான் னா..,  இந்த வாய் பேசி இருக்க மாட்ட என்று சொல்லி சத்தம் போட்டாள்…,

     அப்போது இனியாவின் மாமியாரிடம் முகிலன் சொன்னான்., “உண்மை தான் அவ என்னோட வாழ்க்கை மட்டும் இல்ல.., என்னுடைய எல்லாமே அவ தான்..,  அவ இல்லாட்டி நான் எப்படி இருப்பேன் என்று எனக்கு தெரியாது.., என்னோட லைஃப்  அமைதியா இதுவரை போகுது னா மதி மட்டும் தான் காரணம்.., இவ என்னென்ன பண்ணிருக்கா ன்னு., வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்..,  அத்தனையும் அட்ஜஸ்ட் பண்ணி போனா..,  காரணம் இவ ட்ட சண்டை பிடிக்க கூடாது என்பதற்காக இல்லை.,  நான் மனசு வருத்தப்பட கூடாது என்பதற்காக தான்.,  அவளுக்கு திருப்பி பேச தெரியாம ஒன்னும் இல்ல அத்தை..,  நான் எதையுமே நினைத்து வருத்தப்பட கூடாதுன்னு ஒரு ரீசன் தான் எனக்காக பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சா..,  எனக்காக எல்லா விஷயத்தையும் விட்டு கொடுத்தாள்..,  அவளுக்கென்று ஒரு அடையாளம் இருந்துச்சு..,  அந்த அடையாளத்தை எல்லாம் விட்டுட்டு எனக்காக..,  நான் மட்டும் தான் உலகம் நினைச்சு என்னோடு இருந்தவ..,  வேற எங்கேயும் இதுவரைக்கும் போனது கூட கிடையாது..,  வீட்டை விட்டு  அவள் வெளியே வந்ததே கிடையாது., பிள்ளைகளை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறது., வர்றது., அப்புறம் நாங்கள் லீவுக்கு மதுரைக்கு வருவது இது தான்”..,

        “நான் இல்லாம அவ தனியா கூட வரமாட்டா., காரணம் பிள்ளைக அப்படிங்கறதை விட., நான் சாப்பாட்டுக்காக கஷ்டப்படுவேன் என்கிற ஒரு எண்ணம் அது மட்டுமில்லாமல்., என் ஹெல்த் பற்றிய நினைப்பு…. இப்படி எனக்காக பார்த்து பார்த்து செஞ்சா..,  நான் அவளை புரிஞ்சுட்டு இருந்தேன்.., ஆனால் அவளுக்காக நான் எதுவுமே செய்யல.., நான் என் வேலை பின்னாடி தான் ஒடி கிட்டு இருந்தேன்.., இப்போ எனக்கு அவளை முழுசா என்னோட பெளமியா எனக்கு கிடைச்சா போதும்.., வேற எதுவுமே எனக்கு வேண்டாம்” என்று சொல்லி அவன் பேசிக்கொண்டே கண்ணீர் விட..,  அத்தனை பேருமே அவளுக்கு ஒன்றும் செய்யாது என்று சொல்லிக் கொண்டிருந்தனர்..,

       மாலை நெருங்கும் நேரத்தில் அவளிடம் மெல்ல மெல்ல சின்ன சின்ன அசைவுகள் இருப்பதாக நர்ஸ் வந்து சொல்லி விட்டு செல்ல…, “இவ்வளவு நேரம் எந்த அசைவும் இல்லை மூச்சு மட்டும்தான் போய்க்கொண்டிருந்தது…, இப்போதுதான் மெல்ல மெல்ல சின்ன சின்ன அசைவுகள் இருக்கிறது” என்று சொல்ல…,

          அனைவரும் ஒரு நிமிடம் சந்தோஷத்துடன் பார்க்கும் போதே மீண்டும் அசைவுகள் அப்படியே நின்று விட்டது.., என்று மறுபடியும் சொல்ல அவளை பழைய படி எப்போது பார்க்க என்று தவித்துக் கொண்டிருந்தனர்..,

     இரவு நெருங்கும் நேரம் அதனால் மருத்துவமனையிலும் அதற்கு மேல் அனைவரும் நிற்கக் கூடாது என்று சொல்ல.., சூர்யா தான்  பார்த்துக் கொள்வதாகவும்..,  அனைவரும் வீட்டுக்கு செல்லச்  சொல்லவும்.., யாருமே வீட்டுக்கு செல்வதாக இல்லை..,  நாங்கள் எல்லாம் மருத்துவமனைக்கு வெளியில்  காத்திருக்கிறோம்.., அவள் முழித்தபிறகு வீட்டுக்கு போனால் போதும் என்று சொல்ல…, பிள்ளைகள் பசியோடு இருப்பார்கள் என்று சொல்லி பிள்ளைகளுக்கு மட்டும் முதலில் உணவு வாங்கி உண்ண வைத்தனர்..,

     அனைவரும் காபி என்று ஏதாவது எடுத்துக்கொண்டாலும் முகிலன் மட்டும் தண்ணீர் கூட குடிக்காமல் அமர்ந்திருந்தான்.., ஒரு கட்டத்தில் அவன் சோர்வதை பார்த்த சூர்யா தான் அவனை கட்டாயப் படுத்தி ஏதாவது குடித்துக் கொள் என்று சொன்னதற்கு முடியாது என்று சொல்லி விட்டான்.., அவனுடைய  கட்டாயத்திற்காக தண்ணீர் மட்டும் அருந்தி கொண்டான்.,

       அனைவரும் வெளியே அமர்ந்திருக்க., முகம் வீங்கிய நிலையில் தனியாக அமர்ந்திருந்தாள் இனியா.., யாரும் அவளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை., மற்ற நாள்களில் என்ன பிரச்சினை என்றாலும் அனைவரும் கண்டுகொள்ளாமல் போனாலும்..,  இன்று முகிலன் அடித்த பிறகு யாரும் அவளிடம் பேசவில்லை.., சற்று நேரத்தில் அவள் அருகில் வந்து அமர்ந்த இனியாவின் கணவன் இனியாவை அழைத்து “உனக்கு கொஞ்சம்கூட புத்தி என்கிறதே கிடையாதா” என்று கேட்டான்.

     அவள் கண் கலங்க அவனைப் பார்க்க அவன் சொன்ன விஷயம் இதுதான்.., அவனுடைய மனைவி அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவனுக்குத் தெரியும்..,  உனக்கு பிடிக்கலைன்னா நீ ஒதுங்கி போ.., உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு கேட்க ல..,

    அவனுக்கு கல்யாணம் பண்ணி இருக்காங்க… எட்டு வருஷமா அவனோட அவ வாழ்ந்த வாழ்க்கை அவனுக்கு…,  உனக்கு என்ன தெரியும்.., உனக்கு தேவையான எல்லாம் வாங்கி கொடுக்கிறான்., உனக்கு தேவையானது செய்கிறான்..,  அவளோட அனுமதி இல்லாம செய்யுறான் னு  நினைக்கிறாயா.., கண்டிப்பா இல்ல.., அவன் வொய்ஃப் வந்து ஒரு நாள்..,  ஒரே ஒரு நாள்.,  அந்த பொண்ணு மூஞ்சி காட்டி இருந்துச்சுன்னா கண்டிப்பா அதுக்கு அப்புறம் உனக்கு அவன் செய்ய யோசிச்சு இருப்பான்..,

    அவளுக்கு புடிக்கல அப்படி ன்னு தெரிஞ்சா..,  அதுக்கப்புறம் கண்டிப்பாக எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டான்..,  அது யாரா இருந்தாலும் சரி எல்லா ஆண்களும் அப்படித்தான்.., ஒரு சிலர் விதிவிலக்காக இருப்பாங்க., பொண்டாட்டிக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் செஞ்சு கொடுக்கிறவங்க., இருக்கத்தான் செய்றாங்க இல்லன்னு சொல்லல.., ஆனா  அவங்க கிட்ட நார்மலா இருக்கிற வரைக்கும் தான்., என்னைக்கு  வைஃப்  உரிமைப்போராட்டம் காமிக்க தொடங் -கிட்டா..,  அந்த நிமிஷமே அவன் அவளுக்கு மட்டும் தான் ஹஸ்பண்டா ஆ இருப்பான்.., உனக்கு அண்ணனா  இருக்க மாட்டான்..,  எல்லா பொண்ணுங்களும் என்ன நெனச்சிட்டு இருக்காங்க.,  எல்லா பொண்ணுங்களும் விட்டுக்கொடுத்து போக போய் தான்.,  எல்லாரும் அவங்க அவங்க அக்கா தங்கச்சி கூடவும்.,  அவங்க குடும்பத்துடன் சுமூகமாகப் போக முடியது..,  நல்லா யோசிச்சு பாரு எத்தனை குடும்பத்துல பொண்டாட்டிக்காக குடும்பத்தையே தொலைச்சுட்டு நிக்கிற ஆம்பளைங்க எத்தனை பேர் இருக்காங்க ன்னு..,  நீ யோசிச்சு பாரு பொண்டாட்டிக்கு பிடிக்காது என்கிற ஒரே காரணத்துக்காக அக்கா தங்கச்சி கூட பேசாம அம்மா அப்பா கூட சரியா பேசாம குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறவங்க எத்தனை பேர் ன்னு..,

         உங்க அண்ணன  உன் பாசத்துக்கு அடிமையாய்  இருக்கிறான் னு நினைக்கிறியா..,  இது பாசம் இல்லை..,  இதுக்கு பேரு அதிகாரம்..,

                சரி இத்தனை நாள் ஆகுது நீ என்னைக்காவது இத்தனை வருஷத்துல அந்த பெரிய பையன் பிறந்து ஏழு வருஷம் ஆகுது.., சின்ன பொண்ணு பிறந்து மூன்று வருஷத்துக்கு மேலாகுது..,  இன்னைக்கு வரைக்கும் அந்த பிள்ளையை தூக்கி கொஞ்சி இருக்கியா.., நீ…..

             அதெல்லாம் உங்க அண்ணன் யோசிக்காம இருப்பான்னு நினைக்கிறீயா.., அவனுக்கு எல்லாம் தெரியும் இருந்தாலும்.,  சரி உன் குணம் இதுதான் அப்படிங்கறது  தால  உன்னை கண்டுக்காம போறான்.., இனி தான் அவனை பார்க்கப் போற… நீ மாறுனா தான் உண்டு…, என்று சொல்லி அறிவுரை வழங்க அமைதியாக குனிந்தபடி அமர்ந்திருந்தாள்…,

        உணர்வுகளை புரிந்து கொண்ட உறவுகள் என்றும் அழிவதில்லை…  எந்த உறவாயினும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும் பொழுதுகளில் அங்கு வாழ்க்கை வாழ்க்கையாக வாழப்படுகிறது…  சொந்தங்களை  காத்துக் கொள்ள போராட வேண்டியது இல்லை.விட்டுக் கொடுத்தால் போதும் உறவுகள் பலப்படும்…

Advertisement