Advertisement

“நீங்க சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்க

        “அம்மா வீட்டுக்கு போயிட்டு லன்ச் முடிச்சிட்டேன்., நீ போய் கூட்டிட்டு வந்துருவீயா நான் ஆட்டோ க்கு போன் பண்ணி சொல்றேன்”., என்று சொல்லி விட்டு அவளுக்காக எப்போதும் பாதுகாப்புடன் அனுப்பும் ஆட்டோவிற்கு போன் செய்து சொல்லிவிட்டு…, மறுபடியும் அழைத்து “சீக்கிரம் வந்துடுறேன்” என்று ஒரு அழுத்தமான சொல்லுடன் போனை வைத்தான்.,

      இவளோ அவனை நினைத்து சிரித்துக் கொண்டே பள்ளிக்கு செல்லத் தயாரானாள்.., பள்ளியில் இருவருக்கும் உடைய ஆசிரியர்களிடமும் பேசிவிட்டு அதன்பிறகு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தாள்…, பிள்ளைகளை ரெப்ரஷ் செய்ய வைத்து உடைமாற்றி விட்டு விட்டு.., சிற்றுண்டி தயார் செய்து பாலை ஆற்றிக் கொண்டு வந்து பிள்ளைகளை கொடுத்து குடிக்க வைத்து சாப்பிட வைத்து விட்டு ஹோம் ஒர்க்கை எழுதுமாறு சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்…,

       அதற்குள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் வர.., அவர் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்., ஹோம் ஒர்க் செய்யும் நேரத்தில் குட்டிஸ் இரண்டும் சண்டை போட கிளம்பினர்.., சின்னவளோ மதியை “அம்மா இங்க வாயேன்., எனக்கு ஹோம் ஒர்க் சந்தேகமா இருக்கு”., என்று சொல்ல

      மதியோ கிச்சனின் நின்று சிரித்துக் கொண்டே “வெர்ட்டிக்கிள் லைன்., ஹரிஸான்டல் லைன்., ல இவளுக்கு டவுட் வருதாம் மா” என்று நினைத்துக் கொண்டாள்.., “நல்ல ஆளு காரியம் ஆகணும்னா என்ன னாலும் சொல்லும்…, அப்பா மாதிரியே” என்று எல்லாவற்றிற்கும் அவனையே நினைக்க வைத்தது சின்ன குழந்தை.,

     அதற்குள் ரிஷியோ அவளிடம் “நீ எதுக்கு அம்மாவ கூப்பிடுற ன்னு., எனக்கு தெரியும் அம்மா ஒன்னும் அப்பா மாதிரி கிடையாது., நீ கூப்பிட்டாலே பக்கத்துல உட்கார்ந்து., உன் கைய புடிச்சு எழுதிக் கொடுக்கிற ன்னு சொல்லிட்டு, அப்பாவே எழுதி கொடுப்பாங்க இல்ல.., அந்த மாதிரி வந்து அம்மாவும் எழுதித் தருவாங்கன்னு பாக்குறியா., அதெல்லாம் எழுதி தர மாட்டாங்க”., என்று சொல்ல

      “நீ ஒன்னும் வர வேண்டாம்., நான் ஒன்னும் உன்னை கூப்பிடல., அம்மாவ தான் கூப்பிட்டேன்”., என்று சொல்லி அவனிடம் சண்டைக்கு கிளம்ப. இரண்டும் சண்டை போடத் தொடங்கும் போது அவளும் வந்து விட்டாள்..,

    “என்ன இப்ப ரெண்டு பேருக்கும்”., என்று சத்தமாக ஒரு அதட்டல் போடவும்

   “நீ என்னடி இதை எழுத ஹெல்ப் கேட்க” என்று மதி கேட்க

      “அது வந்து எனக்கு இது இப்படி போட வரமாட்டேங்குது” என்று சொல்லவும்…,

     “நீ உன் நோட் ல ஒழுங்கா போட்டினா அப்படியே விட்டுவிடுவேன்., நோட் ல ஒழுங்கா போட வரமாட்டேன்னு சொன்ன…, இன்னொரு ரப் நோட் எடுத்து., இதே மாதிரி ஒரு பேஜ்க்கு போட்டுக் கொடுத்து போட வச்சுருவேன்., என்ன பண்ணுற” என்று கேட்டவுடன்

    “இல்ல நானே போட ட்ரை பண்றேன்” என்று சொன்னாள் சின்னவள் திரு திரு முழியோடு…,

     இவளோ சிரித்துக் கொண்டே வேலை பார்க்க சென்றாள்..,

     அதற்குள் ஹோம் ஒர்க் முடித்த ரிஷி “அம்மா விளையாட போலாமா” என்று கேட்க…,

     பக்கத்து வீட்டு பொடிசுகளும் அதற்குள் வந்து சேர்ந்தனர்.., “ஆன்டி விளையாட அனுப்புங்க” என்று கேட்கவும்., எப்போதும் மாலை வேளைகளில் பிள்ளைகள் அனைவரும் ஹோம் ஒர்க் அனைத்தும் முடித்துவிட்டு வெளியே விளையாடுவது வழக்கம்., அவ்விடம் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பதாலும் நம்பி தைரியமாக விளையாட விடுவாள்…,

      அதனால் முதலில் ரிஷி விளையாட சென்றவுடன்., அதற்கு மேல் உட்கார்ந்து ரக்க்ஷி யால் ஹோம் ஒர்க் எழுத முடியவில்லை.., “அம்மா ப்ளீஸ் எனக்கு போகணும்” என்று கேட்க

      “நீ ஹோம் ஒர்க் முடிச்சா தான் போகணும்”., என்று சொல்லி அவளை அமர வைத்து எழுத வைத்தாள்., அவளும் ஒரு வழியாக எழுதுகிறேன் என்ற பெயரில் கிறுக்கி தள்ளிவிட்டு விளையாட செல்லவும்.,

       இரவு உணவிற்காக கிச்சனுக்குள் செல்லும் போது முகிலனுக்கு போன் செய்து கொண்டே சென்றாள்.., “எப்ப வருவீங்க” என்று கேட்க

       “வந்துட்டே இருக்கேன்., இன்னும் மேக்சிமம் ஹாப் அன் ஹவர் ல வீட்டுக்கு வந்து விடுவேன்., நீ டிபன் செஞ்சு முடிக்கிறதுக்கு முன்னாடி நான் வீட்ல இருப்பேன் சரியா”., என்று கேட்டுக் கொண்டே “என்ன டிபன் செய்ய போறே”., என்று கேட்க

     “என்ன வேணும் சொல்லுங்க” என்று அவனிடமே இவள் பதில் கேள்வி கேட்டால்.,

      “நீ எது செஞ்சாலும் நான் சாப்பிடுவேன்” என்று அவன் சொல்ல

       “அது தெரியுமே., அப்புறம் எதுக்கு கேக்குறீங்க” என்று சொல்ல

      “சரி சரி செய்”. என்று அவன் சொல்லும் போது அவனுடைய பேச்சும் சிரிப்பும் இவளுக்கு அவன் இன்று சந்தோஷமாக இருப்பதை உணர வைத்தது..,

          இவள் அவனிடம் பேசி வைக்கவும் கலையிடம் இருந்து போன் வந்தது.., அப்போதுதான் கலையும் சொல்லிக் கொண்டிருந்தாள், “இந்த தடவை தான் தம்பி எந்த பிரச்சினையும் இல்லாமல் வீட்டுக்கு வர்றாங்க” என்று சொல்ல ஏன் என்று இவள் கேட்க..,

     “இனியா வரவும்., பின்னாடியே இனியா ஹஸ்பண்டும் தற்செயலாக ஏதோ ஒரு விஷயம் பேசணும்., தம்பி வந்திருக்காரு தெரியவும் வந்துட்டாரு., அதனால வேற எதுவும் பேச முடியல., தம்பி கிளம்புற வரைக்கும் இனியா மாப்பிள கூடவே இருந்தார்., அதனால தம்பி கிட்ட சாதாரணமா கூட பேச முடியல” என்று சொல்லி கலை சிரிக்க., அவளும் சிரித்துக்கொண்டாள்…,

          “இந்த தடவையாவது நிம்மதியா விட்டாலே ன்னு நினைச்சுக்கோங்க” என்று சொல்ல

      “நாங்களும் அப்படித்தான் இங்கே பேசிக் கொண்டோம்” என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்….

     முகிலன் சொன்னது போல அடுத்த அரை மணி நேரத்திற்குள் வந்து விட்டான்.., அவன் வந்த சற்று நேரத்தில் குளித்துவிட்டு உடைமாற்றி அவன் வந்து அமரும் போது பிள்ளைகளும் வந்தனர்.., அதற்குள் இரவு உணவை தயார் செய்து எடுத்து வைத்துவிட்டு.., மறுபடியும் பிள்ளைகளை அழைத்துச் சென்று லேசான சுடு தண்ணீர் வைத்து உடம்பையும் சேர்த்து கழுவிவிட்டாள்.., அதன்பிறகு உடை மாற்றிவிட்டு பிள்ளைகளுக்கும் அவனுக்கும் இரவு உணவை கொடுத்தாள்..,

       முகிலன் டிவியைப் போட்டுக் கொண்டு ஹாலில் அமர்ந்து விட.., இவள் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு.., பிள்ளைகளை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்று பிள்ளைகளை படுக்க வைத்து கதை சொல்லத் தொடங்கினாள்..,

      இரண்டு குழந்தைகளும் கதை கேட்டு தூங்கவும்.., எப்போதும் போல் முகிலனும் வர சரியாக இருந்தது.., குழந்தைகளை தூங்க வைத்து முடிந்தவளை அணைத்து படுத்தபடி “என்ன கதை சொல்லிட்டு இருந்த”.., என்று கேட்க

       “உங்க பிள்ளைகளுக்கு கதை சொல்ல தினமும் நான் உட்கார்ந்து பெட் டைம் ஸ்டோரி படிச்சிட்டு இருக்கேன்”., அதை சொல்லிக்கிட்டு இருந்தேன்., “என்னைக்காவது ஒரு நாள் நீங்க கதை சொல்றீங்களா., கரெக்ட் ஆ பிள்ளைங்க கதை கேட்பாங்க தெரிஞ்சே., நல்ல பிள்ளை மாதிரி போய் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்க்குறீங்க”., என்று சொல்லவும்

      “அதான் நீ சொல்லிருவ அந்த தைரியம் தான்” …

        “பாருங்க பாருங்க ஒரு நாள் நீங்க சொல்லணும் என்கிற நிலைமை வரும்போது தெரியும்”., என்று சொல்லிவிட்டு திரும்பி அவன் மார்பில் தலை வைத்து அவனை அணைத்துப் பிடித்தபடி அவனோடு பேசிக் கொண்டே இருந்தாள்…,

        வீட்டு விஷயங்களை பேசியபடி இருந்தனர்.., ஏன் என்றால் எப்போது தாவது தான் இப்படி பேசும் சந்தர்ப்பங்கள் இருவருக்குமே அமையும்…,

        மறுநாள் விடியல் சந்தோஷமாகவே இருந்தது.., காலை பிள்ளைகளுக்கு தேவையான உணவை தயார் செய்து கொண்டிருக்கும் போதே.., எழுந்து வந்தவன் அவளை இருக்கமாக அணைத்துக் கொண்டு எப்போதும் போல அவளுக்கு தயார் செய்து வைத்திருக்கும் காபியை எடுத்து கொண்டு நகர்ந்து விட..,

     இவள் தான் எப்போதும் போல சிரித்துக் கொண்டு “இது ஒரு பழக்கம் பழகி இருக்காங்க., எனக்காக கலந்து வைக்கிறத எடுத்துட்டு போயிட வேண்டியது., அப்புறம் நான் காபி எடுக்கவே பாதி நாள் மறந்துருவேன்” என்று சொல்லிக் கொண்டே பிள்ளைகளுக்கு தேவையானதை தயார் செய்து காலை நேர பரபரப்போடு பிள்ளைகளை கிளப்பினாள்.,

          முகிலனும் காலை நேரத்தில் காபி குடித்தவுடன் வெளியே சென்று விட்டு வந்தவன்.., “நான் சீக்கிரம் கிளம்பனும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்…

        “நீங்க கூட்டிட்டு போறீங்களா” என்று கேட்க

      “இல்ல நீ கூட்டிட்டு போயிடு., எனக்கு முக்கியமான கேஸ் நான் சொன்னேன் இல்ல…, அதனால நான் கிளம்புறேன் சரியா” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

      “சரி., சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட்டுட்டு கிளம்புங்க”. என்று சொல்லவும்..

      இவள் கிளம்பி வருவதை பார்த்தவன்., அவளை பார்த்து விசில் அடித்தபடி “இன்னைக்கு இந்த டிரஸ்ல செம்மையா இருக்க”.., என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தை விட…

      இவளோ சுற்றி சுற்றி பிள்ளைகளை பார்க்க..,

“பிள்ளைங்க எல்லாம் பார்க்கல கிளம்பு கிளம்பு” என்று சொல்ல அவளும் சரி என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவன் அருகில் சென்றவள்…, அவன் கழுத்தை இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டபடி “சீக்கிரம் வந்திடறேன்” என்று சொல்லி அவனை பார்த்து கண்ணடித்து விட்டு செல்ல

    அவனோ “நான் இப்போ வேலையை பார்க்க போய் விடுவேன்.., நீ சீக்கிரம் வந்து பிரயோஜனமில்லை” என்று சொல்ல

      “ஆஹா…, நீங்க சீக்கிரம் வந்துடுங்க” என்று சொல்லி அவனுக்கு அழகு காட்டிக்கொண்டே அவள் கிளம்பினாள்…,

        வெளியே வந்த அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.., முதல் நாள் இவன் அவளுடைய காரை எடுத்து சென்றவன்., வந்து விட்டு இருந்த இடத்தில் பார்க்கும் போது கார் டயரில் காற்று இறங்கியிருந்தது..,

      மறுபடி உள்ளே வந்தவளை “அதுக்குள்ள வந்துட்ட ஸ்கூலுக்கு போகல அவ்வளவு அவசரமா” என்று கேட்க

      “விளையாடாதீங்க” என்று சொல்லிவிட்டு “பிள்ளைகளை கூட்டிட்டு போகணும்…, காரை எடுத்துட்டு போனீங்க இல்ல என்ன பண்ணீங்க” என்று கேட்டு…, காற்று இறங்கி இருப்பதை சொல்லவும்…,

     “நான் தான் இறக்கி விட்டேன்” என்று சொல்லி அவளை கிண்டல் செய்தபடி ஆட்டோ கூப்பிடட்டுமா என்று சொல்ல…,

       “உங்க கார் சாவியை குடுங்க…, கார் பெரிய பொக்கிஷம் எத்தனை நாளைக்கு உள்ளே வைத்து பூட்டி வைக்கப் போறீங்க குடுங்க குடுங்க…, இன்னைக்கு ஒரு நாளைக்கு நான் எடுத்துட்டு போறேன்” … என்று கேட்க

         “சரி எடுத்துட்டுப் போ…, உனக்கு இல்லாததா எடுத்துக்கோ” என்று சொல்லி விட்டு…,

       “மெக்கானிக்கை வர சொல்லுங்க” என்று இவள் சொல்ல

       “ஆள் அனுப்புகிறேன் வந்து பார்த்து சரி பண்ணிருவாங்க” என்று சொல்ல…,

      சரி என்று இவளும் அவனுக்கு கையை காட்டிவிட்டு கிளம்பவும்.., வீட்டிற்கு வேலை செய்யும் அம்மா வரவும் சரியாய் இருந்தது.., வீட்டை பாத்துக்கோங்க.., சீக்கிரம் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு., நீங்களே வீட்டை கிளீன் பண்ண ஆரம்பிங்க என்று சொல்லிக்கொண்டிருந்தாள்..,

           அந்த அம்மாவும் “சரி மா நான் பார்த்துக்குறேன் நீங்க பார்த்து போய்ட்டு வாங்க” என்று சொல்ல

          அவனும் கிளம்ப தயாராக இருக்கும்போது.., அவள் வெளியே வந்து காரை எடுத்து பிள்ளைகள் ஏற்றிகொண்டு., அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன்.., எப்படித்தான் இப்படி பொறுப்பா இருக்காளோ.., என்று நினைத்துக் கொண்டான்..,

          அவள் கையில் ஏன் காரை கொடுத்தோம்., என்று கதற போவது தெரியாமல்..

வாழ்க்கை துணை என்பது வாழ்நாள் முழுவதும் தேவை என்பதை சில தருணங்கள் உணரவைக்கிறது…  வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்கள் அதிகம்தான்…  வாழும் காலம் வரை கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது…

Advertisement