Advertisement

காலை உணவை மட்டும் முடித்துக் கொண்டு முகிலன் காலையிலேயே  கூட வேலை செய்யும் போலீஸ்காரர்கள் இருவரோடு கிளம்பி சென்றுவிட்டான்…

           அங்கே சென்ற பிறகு இவன் அங்கு வந்திருப்பதை தெரிந்து மதிய உணவுக்கு அவன் அம்மா வீட்டிற்கு அழைக்க., சரி சென்று வரலாம் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான்.., கூட வந்த போலீஸ்காரர்கள் வெளியே சாப்பிட்டு விட்டு காத்திருக்கிறோம் என்று சொல்லி விட…  சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து வீட்டிற்கு போக…, தற்செயலாக அங்கே வந்த இனியா அவனிடம் பிரச்சினையை துவங்கி வைத்தாள்…

       “தீபாவளிக்கு உன் மச்சான் க்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்து இருக்க., என்ன நெனச்சிட்டு இருக்க., அவங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் டிரஸ் எடுத்து கொடுக்கிற அளவுக்கு நீ சம்பாதிக்கிறாயா., வைக்கிறியா”., என்று அவள் தேவை இல்லாமல் பேச முகிலனுக்கு எரிச்சல் தான் வந்தது…

      முகிலனின் அம்மா ஐயோ  தெரியாத் தனமா சாப்பிட கூப்பிட்டேனே…. இவ இப்படி வம்பு பண்ணுவா ன்னு தெரியாதே…

        முதலில்  இவ எதுக்கு இப்போ வந்தா.. என்று யோசனையோடு “ஆமா நீ எதுக்கு இப்ப வந்த” என்று கேட்கவும்

     “உங்க வீட்டுக்கு நான் வரக்கூடாது., ஏன் என்று கேட்கிற அளவுக்கு ஆயிடுச்சா”. என்று அவள் கேட்கவும்

   “இங்க பாரு தேவையில்லாத விஷயங்கள் பேசாத ன்னு…  உனக்கு படிச்சு படிச்சு சொல்லியாச்சு.., நீ பேசாம உன் வேலையை பாரு”.. என்று சொல்லவும்

     முகிலன் “அம்மா நீங்க கொஞ்சம் பேசாம இருங்க” என்று சொல்லிவிட்டு

       “இங்க பாரு உனக்கு வேண்டியத நீ வாங்கி கிட்ட சரியா… அதோட உன் வேலை முடிஞ்சுருச்சு….  நீ யாரு., நான் யாருக்கு வாங்கி கொடுத்தேன்.., என்ன வாங்கி கொடுக்கிறேன்.. எவ்வளவு ரூபாய்க்கு வாங்கி கொடுக்கிறேன்… இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை..,  புரிஞ்சிடுச்சா..,  என் சம்பாத்தியத்தில் நான் வாங்கியது.., எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு..,  தேவையில்லாத விஷயத்தில் தலையிடாத இது தான் உனக்கு கடைசி”…  என்று சொல்லிவிட்டு கோபத்தோடு மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினான்…

         கலை இதை பார்த்துக் கொண்டிருந்ததால் சூர்யாவிற்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அவசரமாக போன் செய்து மதிக்கும் சொன்னாள்… மதி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லவும்…

        கலையையும் முழு விஷயத்தையும் சொல்ல வில்லை துணி எடுத்ததற்காக சண்டை போட்டாள்..,  என்றெல்லாம் சொல்லவில்லை காரணமே இல்லாமல் சண்டை போடுகிறாள் என்று மட்டும்தான் சொல்லியிருந்தால்..,

        அவன் மதுரையிலிருந்து கிளம்பி இருக்க…  இவள் அவன் பற்றிய யோசனையோடு அமர்ந்திருந்தாள்..

       காலையில் அவன் கிளம்பிய சற்று நேரத்தில் எல்லாம் சோதனை செய்து பார்த்ததில் இரண்டு கோடுகள் இருந்தது…,

     மகிழ்ச்சியான செய்தியை நேரில்தான் சொல்ல வேண்டும் போனில் சொல்லக்கூடாது என்ற எண்ணத்தோடு அமைதியாக இருந்து கொண்டாள்…

      ஆனால் இப்படி அவன் டென்ஷனாக எரிச்சலில் வரும் நேரத்தில் எதுவும் சொல்ல முடியாதே.., என்ற எண்ணத்தோடு அமைதியாக யோசித்து கொண்டே இருந்தாள்..,

       சரி வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் சாதாரணமாக இருந்தால் சொல்வோம் இல்லை என்றால்., நாளை பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அமைதியாக இருந்து கொண்டு இரவு அவனுக்கு தேவையான உணவு தயாரிப்பதில் நேரத்தை போக்கிவிட்டு வீட்டை சுத்தம் செய்ய ஆள் வந்தவுடன் சுத்தம் செய்து., விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு  தனக்கும் அவனுக்கும் சொந்தமாக மற்றொரு ஜீவன் வரப் போவதை முதலில் தெய்வத்திடம் முறையிட்டு விட்டு எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அவன் வருகைக்காக காத்திருந்தாள்…

        அவன் வரும் போதே கோபமாகவும் டென்ஷனாகவும் வந்தான்…  ஆனால் இவள் எதுவும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாக அவனுக்கு தேவையானவற்றை கவனிக்க…

       அவனும் சற்று முகம் மாறினாலும் ஆனால் யோசனையோடு இருந்தான்… இதற்கிடையில் சூர்யா போன் செய்து பேசும் போது சூர்யாவிடம் புரியுது…, நீ சொல்றது இனிமேல் எப்படி மாற்ற முடியும் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டா…

      “என்ன செய்ய ஒரு அளவுக்கு தான் சரி சரி என்று போலாம்..  அதுக்கு மேல போகும் போது  கோபத்தை கட்டுப்படுத்த  முடியல்லை” என்று அவன் பேசிக் கொண்டிருப்பது…  கிச்சனிலிருந்த அவளுக்கு நன்றாக கேட்டது.., ஆனாலும் என்ன ஏது என்றெல்லாம் கேட்கவில்லை.

        பின்பு சூர்யா இவளிடமும் பேசினான். இவளிடம் சாதாரணமாக நலம் விசாரித்து விட்டு அவளும் அவனிடம் நலம் விசாரித்து விட்டு போனை வைத்தாள்..

           அன்று இரவு அவன் குழப்பத்தோடு குழம்பிய மனதோடு இனியாவை பற்றிய எரிச்சலோடு இருந்ததால்., அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம்., என்ற முடிவுக்கு வந்து அமைதி காத்தாள்…

     அவன் தூங்க முடியாமல் இரண்டு மூன்று முறை எழுந்து அமர்ந்து படுக்கவும்…

     என்னவென்று கேட்டவளிடம்…, தலை வலிக்குது என்று மட்டும் சொன்னான்…

            உடனே அவள் தைலம் தேய்த்து மெதுவாக தலையை பிடித்து விட்டு தலையை கோதிக் கொடுக்கவும்.., அவளை அணைத்துக்கொண்டு அப்படியே தூங்கி விட்டான்..

        அவன் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த அவளுக்கு தோன்றியது ஒன்று தான் வயிற்றிலிருக்கும்  பிள்ளைக்கும்… வெளியே அருகிலிருந்து குழப்பத்தில் தவிக்கும் பிள்ளைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்று..,

            எல்லா மனைவிகளும் ஒரு காலகட்டத்தில் கணவனை முதல் குழந்தையாக ஏற்க தொடங்கி விடுகிறார்கள்…

          முடிவெடுக்க முடியாமல் திணறும் முதல் பிரச்சினை தான்.., அவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனை என்று தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அலைவது ஆண்களின் நிலை ஆகிவிட்டது…

           எப்பொழுதும் விட்டுக்கொடுக்கும் பெண்களிடம்… ஒரேடியாக தலையில் பாரம் சுமக்கும் இந்த ஆண்கள் தான் அன்பை வெளிக்காட்ட தெரியாமல்…,  பாசத்தில் முட்டி மோதி வாங்கிக்கொண்டு நிற்பதும் அவர்கள்தான்… என்று நினைத்துக் கொண்டு, அவன் தூங்கியவுடன் அவளும் தூங்கினால் புதுவரவோடு இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்தாள்… மறுநாள் காலை அவனிடம் எப்படி  சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தூங்கி போனாள்..

    காலை காலை எழுந்தவுடன் எக்சசைஸ் மற்றும் வாக்கிங் என அவன் நேரத்தை கழித்து விட்டு வர…   இவள் அதற்குள் எழுந்து குளித்து காலை உணவிற்கான வேலைகளில் இறங்கி இருந்தாள்…

      வீட்டுக்கு வந்தவனிடம் சிரித்த முகமாக காப்பியை கொடுத்துவிட்டு இப்போது பரவாயில்லையா என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.., அவனும் சிரித்துக் கொண்டே சரியாயிடுச்சு என்று சொல்லி விட்டு டிவியில் நியூஸ் சேனலை ஆன் செய்து வைத்து விட்டு பேப்பரை கையில் வைத்து புரட்டிக் கொண்டிருந்தான்…

        இப்ப சொல்லவா என்ற யோசனையோடு காலை  உணவு தயாரிக்கும் வேலையில் கிச்சனில் இருந்தாள்..,

        அதே நேரம் அவனுக்கு வெளியே செல்ல அழைப்பு வரவும் செல்ல வேண்டும் என்ற தகவல் வரவும்… எப்படியும் ஹாஸ்பிடல் போக வேண்டும் அவன்தான் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நினைப்பில், அவரிடம் சொல்வதற்காக வந்தாள்…

         “எப்ப கிளம்புறீங்க” அவன் அருகில் வந்து நிற்கவும்…

      அவளை பார்த்து விட்டு “மெதுவாக போகலாம் அவசரமில்லை இன்னை க்கு” என்று சொல்லிவிட்டு குளிக்க சென்று விட்டான்.., அவன் குளித்து கிளம்பி வரும் வரை காத்திருந்தவள் அவனுக்கான உணவை எடுத்து வைத்துவிட்டு அவன் யூனிஃபார்ம் மாட்டாமல் இருப்பதைப் பார்த்து விட்டு

     “லீவா இல்ல போகனும் மா” …, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்…

       “முக்கியமான போன் வரனும்…., வந்தவுடனே போகனும்”……  என்று சொல்லிக் கொண்டிருந்தான்…

        அப்போது அவனிடம் இங்க பெஸ்ட் ஹாஸ்பிடல் எது என்று கேட்கவும்….

      “இருக்கும் விசாரிக்கலாம் ஏன்… யாருக்கு என்ன” என்று கேட்கவும்

          அவன் அமர்ந்திருந்த டைனிங் டேபிள் அருகில் சென்று அவன்  சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு அமர்ந்திருந்தான்., அப்போது தான்.., அவன் கையை எடுத்து மெதுவாக வயிற்றில் வைத்து  காமிக்கவும் அவன் புரிந்து கொண்டவனாக அவளை நிமிர்ந்து பார்த்து…,

       “எப்போ தெரியும்” என்று கேட்டான் சந்தோஷமாக…  அவன் முகமே அவன் அத்தனை சந்தோஷமாக இருப்பதை காட்டியது…

    “நேத்து காலைல தான் செக் பண்ணுனேன்… உங்ககிட்ட நேர்ல சொல்ல நினைத்திருந்தேன்… நீங்க ரொம்ப டென்ஷனா இருந்தீங்க…, அதனால தான் உங்க கிட்ட சொல்லல சாரி” என்று சொல்லிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும்…

        அவன்  அவள் வயிற்றில் அப்படியே முகம் புதைத்துக் கொண்டு “நான் தான் சாரி சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அவள் வயிற்றில் ஒரு முத்ததையும் வைத்துவிட்டு எழுந்து., அதன்பிறகு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்…  “சாரிடா இனிமேல் எந்த கோவமும் எந்த டென்ஷனும் காட்ட மாட்டேன் … கொஞ்சம் குழப்பம்..  நீ எனக்கு எவ்வளவு முக்கியம் அப்படிங்கிறது எனக்கும் புரியுது… உன் வயித்துக்குள்ள இருக்குற  நம்ம குழந்தை நமக்கு முக்கியம்..,  ஹாப்பியா இரு.., உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கி தரேன்” என்று கேட்க…

     “ஒன்னும் வேண்டாம் மா…  முதல்ல செக்கப் போறதுக்கு பாருங்க” என்று சொல்லவும்

       “நான் விசாரிச்சுட்டு சொல்றேன்”. என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

       “வீட்டுக்கு சொல்லுவோமா” என்று கேட்கும் போது

        “ஹாஸ்பிடல் போயிட்டு வந்து அதுக்கப்புறம் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டாள்…  அவனும் அதுதான் சரி என்று ஏற்றுக்கொண்டான்….

 இதுதான் வாழ்க்கை என்று புரிந்து கொள்ளும் வரை அனைவருமே ஒரு குழப்பத்தோடும் மற்றவர்களின் பேச்சை கேட்டு தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்கிறார்கள்…  கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாகவும்…  மன நிறைவோடும் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை என்றும் அழகான பூந்தோட்டம் தான்… வாழ்க்கை வாழ்வதற்கே

Advertisement