மதியின் வீட்டில் வந்து இறங்கியவன் அவசர அவசரமாக உள்ளே சொல்லும் போது., ஹாலில் அமர்ந்திருந்த மதியின் அம்மா அப்பா விடம்.. பொதுவாக “சாரி., லேட்டாயிருச்சி”…, என்றான்…
இருவரும் இதுக்கு போய் ஏன் சாரி சொல்லிக்கிட்டு என்று சொல்லிவிட்டு….
“சாப்பிடுகிறீர்களா., தம்பி” என்று சந்திரா கேட்க…,
“சாப்டாச்சு அத்த”., என்ற படி “ஸ்ரீராம் எங்கே” என்று கேட்டவுடன்…
ஸ்ரீராம் அறையினுள் இருந்தவன் “கூப்பிட்டீங்களா” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான்…
“இந்தா உனக்கு வாங்கினேன்” என்று சொல்லி அவன் கையில் ஒரு கவரை கொடுத்து… அதில் சட்டை இருப்பதாகவும் “உனக்கு பிடிச்சி இருந்தா பாரு… சைஸ் உனக்கு கரெக்ட்டா இருக்கான்னு எனக்கு தெரியல… நான் ஒரு கெஸ்ஸிங் ல தான் வாங்கிட்டு வந்தேன்… புடிக்கலைன்னா மாத்திக்கோ” என்று சொல்லிவிட்டு “கவர்க்குள்ளே பில் இருக்கு.., அந்த கடையில் சொல்லியிருக்கேன்., ரெண்டு நாள் கழிச்சு கூட மாத்திக்கலாம்…. என்று சொல்லி விட்டு மதி எங்கே” என்று கேட்டான்…
“மாடிக்கு இப்பதான் போனா தம்பி. கூப்பிடவா” என்று சொல்லவும்..,
“இல்லை… நான் மேலே போய் பார்த்துக்கிறேன்”…. என்று சொல்லி விட்டு அவசரஅவசரமாக மதியின் அறைக்கு ஓடினான்…
அங்கே மதி மொட்டை மாடியில் நின்று எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வெளிவாசல் பக்கம் நின்று பார்க்கவில்லை… மெதுவாக அவள் அருகில் வந்தவன் கையிலிருந்த. அவளுக்கென வாங்கிய சுடிதாரை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் அவளை பின் புறம் இருந்து அனைத்து பிடிக்கவும் முதலில் அவன் கை பட்டவுடன் பதறி நகர்ந்து செல்ல முயன்றாள்…. பின்பு அவன் தான் என்று தெரிந்த பிறகு நிதானமாக திரும்பி அவன் முகத்தை மட்டும் திருப்பி என்னவென்று கேட்டாள்….
“கோபமா” என்று கேட்டதற்கு
“எதுக்கு” என்றாள்.
“இல்ல சீக்கிரம் வரலாம் ன்னு போனேன்… லேட் ஆயிடுச்சு என் மேல் ஏதும் கோவமா இருக்கீயா”…என்று கேட்டவுடன்
“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
” என்ன அம்மணி முழுசா திரும்ப மாட்டேங்க… அப்படியே நின்னுட்டு இருக்கீங்க”. என்று சொன்னவுடன்
“நீங்க உள்ள போங்க., டிரஸ் மாத்துங்க” என்று சொல்லிக் கொண்டே பின் பக்கமாக அவன் போன உடன் சென்றாள்…
அவனும் உடை மாற்றி விட்டு அங்கிருந்த ரெஸ்ட் ரூம்ல் செய்து முகம் கை கால் கழுவிக் கொண்டு வரவும்… இவள் அறைக்குள் வந்து அமர்ந்திருந்தாள்..
” என்ன ஆச்சு” என்று கேட்டதற்கு இரண்டு கையையும் நீட்டி காட்டவும்…, சந்திரா அவளுக்கு மருதாணி அரைத்து இரண்டு கைகளிலும் தீபாவளிக்காக வைத்து விட்டிருந்தார்…
“ஹேய் அழகா இருக்கு…, இப்ப எல்லாம் யார் இது வைக்கிறது இல்ல… எல்லாரும் மெஹந்தி கோன் சொல்லிட்டு மாடல்ங்க பேர்ல ஆனா… இது எடுத்த உடன் கையில் இருக்குற வாசனை தனிதான் இல்லை”… என்று சொல்லவும்..,
“உங்களுக்கு எப்படி தெரியும்”.. என்று இவள் பதில் கேள்வி கேட்டால்
“இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கப் போறதுக்கு முன்னாடி எடுத்துட்டு தான் படுக்கணும்., இல்லை னா எனக்கு டிஸ்டபன்ஸா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…
அவள் காலைப் பார்த்தால் காலிலும் அழகாக விரல் மற்றும் பின் பக்கங்களில் வைத்து விட்டிருந்தார்… அதை பார்த்துவிட்டு அழகா இருக்கு என்று சொல்லிக் கொண்டு அவளோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்… அப்போது தான் அவளுக்கு என்று வாங்கிய சுடிதாரை எடுத்துக் காட்டினான்.., அது ரெடிமேடாக வாங்கி இருந்ததால் கையையும் சேர்த்து தைத்துக் கொண்டு வந்திருந்தான்..,
அவன் எடுத்துக் காட்டும் போது அழகு கடல் வண்ண கலரில் மிக அழகாக இருந்தது… பார்த்தவுடன் பிடித்திருக்கிறது என்று தெரிவித்தாள்…
“உங்களுக்கு எடுக்கலையா” என்று கேட்க
“உங்க வீட்டிலேயே எடுத்து இருக்காங்க…, அப்பாவும் எடுத்திருக்காரு. அப்புறம் எதுக்கு.., போடுறது என்னவோ யூனிபார்ம் அது தவிர வெளியே எங்காவது போட்ட எப்பவாது தான் நார்மல் டிரஸ் அதனாலதான் எடுக்கல”என்று சொல்லவும்
அவள் சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. “என்ன சிரிக்கிற” என்று கேட்கவும்
“சும்மா” என்று அவனைப் பார்த்து கண் சிமிட்டி கூறவும்
“சைட் அடிக்கிற” என்று கேட்க
“என் புருஷன் நான் சைட் அடிப்பேன் உங்களுக்கு என்ன” என்று கேட்டுக்கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்… மருதாணி வைத்திருந்த கையோடு அவனை பிடிக்க…
“ஏய் மருதாணி முதுகுல சுர சுர ன்னு குத்துது” என்று சொல்லிக் கொண்டிருந்தான்…
“இவளும் எடுக்கிறேன்”… என்று சொல்லி விட்டு கையில் இருந்த மருதாணி காலில் இருந்தது. அனைத்தையும் எடுத்து விட்டு கழுவி சுத்தம் செய்து விட்டு வந்து அவனோட அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்…
“அப்போது அத்தை மாமா க்கு நீங்க எடுக்கலையா”., என்று கேட்டாள்.
“இல்லை என்று எடுத்துக் கொடுக்கிறேன்”என்று சொல்லிக் கொண்டே மெதுவாக அங்கு நடந்த சில விஷயங்களை பேசத் துவங்கும் முன்…
” ப்ளீஸ் வேண்டாமே”… என்று சொல்லவும்..,
“ஓகே ஓகே” என்று சொல்லிவிட்டு அந்தப் பேச்சு அத்தோடு விட்டு விட்டான்…, அதன் பிறகு அவர்களுக்கே உண்டான பேச்சு சுவாரசியத்தில் நேரம் கழிந்தது…
“ஆமா கேட்கணும்னு நினைச்சேன்…. நீ ரொம்ப டல்லா இருக்க”., என்று கேட்கவும்
“அதுவா தூங்கி எந்திரிச்சு…, தூங்கி எந்திரிச்சு…, டயர்டாகி திருப்பி தூங்குறது க்கு ரெடியாயிட்டு இருக்கேன்” என்று சொல்லவும்…
“இது ஏதோ சினிமால வர்ற டயலாக் மாதிரி இருக்கே” என்று கேட்க
“இருக்கும் இருக்கும்., அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லி விட்டு அவன் கையில் சிரித்தபடி தூங்க தயாரானாள்….
அதே நேரம் அவள் சோர்வோடு தெரிய. அவன் அவள் தலையை தடவிக் கொடுத்து தன் தோளோடு சாய்த்து கொண்டு அவள் உச்சந்தலையில் முகம் புதைத்துக் கொண்டான்…
சற்று நேரத்திற்கெல்லாம் அவள் தூங்கியும் போனாள்… மனதில் பலவித யோசனைகள் இருந்தாலும் தன்னிடம் எந்த கேள்வியும் கேட்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் இவளுக்காக வாவது பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்…
மறுநாள் விடியல் சந்தோஷமாகவே விடிந்தது முதல் தீபாவளி சந்தோஷமாகவே தொடங்கியது..
காலை குளித்து முடித்து வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு முகிலன் வீட்டிற்கும் சென்று அங்கேயும் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு அனைவரும் சேர்ந்து கோயிலுக்கு சென்று வந்தனர்… முதல் நாள் பகலும் இரவும் நன்றாக தூங்கி எழுந்த தாளோ என்னவோ மதியும் எந்தவித சோர்வும் முகத்தில் இல்லாமல் நன்றாகவே இருந்தாள்…
அவள் கையிலிருந்த மருதாணியை பார்த்துவிட்டு அம்மு தான் எனக்கும் வேண்டும்… என்று கேட்க
சந்திரா தான் “உனக்கு பாட்டி வீட்ல வச்சு இருக்கேன் டா… நேத்து உனக்கு வச்சு விடணும்னு நினைச்சேன்.. நீ நைட்டு வரும் போது தூங்கி இருப்ப இல்ல… அதனால தான் வைக்கல.. இப்ப வைத்துவிடுறேன்” என்று சொல்லி கொண்டுஇருந்தார்.
அம்மு விற்கு பயங்கர சந்தோஷம் “பாட்டி எனக்கும் கண்டிப்பா வைக்கனும்” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“கண்டிப்பாக உனக்கும் அம்மாக்கும் எடுத்து வைத்தது வீட்ல இருக்கு” என்று சொல்லவும்…
கலை மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தால்.. முதல் நாள் இந்த இனிய செய்த வேலையால் இதுபோல சிறுசிறு சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என்று அவளுக்குள்ளும் வருத்தம் இருக்கத்தான் செய்தது..
காலை உணவு., மதிய உணவு., எல்லாமே மதி வீட்டில்தான் என்றதனால் இனியா இந்தப்பக்கம் வரவேயில்லை… அங்கேயே இருந்து கொண்டாள்.
ஏற்கனவே போய் அத்தனை பேரிடமும் இவ்வளவு துணி நகை என்று வாங்கி வந்ததற்கு இனியாவின் கணவன் அவளைத் திட்டி தீர்த்து விட்டான்.. அதை வெளியில் சொல்லாமல் மறைத்து கொண்டாள்…
அவள் இது போல சிறு சிறு காரியங்கள் செய்வது அவனுக்கு பிடிக்காது.., அவன் ஏற்கனவே அவளுக்கு தேவையான துணிகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து தான் இருந்தான்.., ஆனால் அவள் வீட்டில் வேண்டும் என்று கேட்டு போனது அவனுக்கு பாலன் மூலமாக தெரிந்து இருந்தது..,
ஆனால் இதற்காக தான் என்று காரணம் சொல்லாமல் அவள் வேண்டும் என்று அண்ணனிடம் கேட்டதாகவும் அதற்கு சென்றதாகவும் மட்டும்தான் சொல்லியிருந்தார்…. அதுவே அவனுக்கு கௌரவக் குறைவாக அவன் யோசித்துக் கொண்டிருந்தான்…,
இவளைப் பற்றி தெரிந்தால் அவளுக்கு மண்டகப்படி கொடுப்பது கண்டிப்பாக நடக்கும் என்று தெரிந்துதான் அமைதி காத்துக் கொண்டார் பாலன்….
தீபாவளி மிகவும் இனிமையாகவும் சந்தோஷமாகக் கழிந்தது… மறுநாள் மதியத்திற்கு மேல் மதியும் முகிலனும் கிளம்பு தொடங்க எல்லோரும் பொறுப்பாக பார்த்துக்கொள் என்ற அறிவுரையோடு அங்கிருந்து கிளம்பினர்.., பஸ்ஸில் செல்லும் போது முகிலனின் கையை பிடித்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்…
அவனோ இத்தனை நாட்களுக்குப் பிறகு வந்து இரண்டு மூன்று நாட்கள் மட்டும் வீட்டில் இருந்து விட்டு செல்வது அவளுக்கு வருத்தமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்… அதனால் தான் இப்படி இருக்கிறாளோ…, என்று நினைத்து கொண்டான்…
போகும் போதே கேட்டான் “வீட்டில் போய் சமைக்க வேண்டாம்… வெளியில் வாங்கி கொள்வோம்” என்று சொல்லும் போது
“இல்ல மா வரும் போது மாவு எல்லாம் அரைத்து பிரிட்ஜில் வைத்து விட்டு தான் வந்து இருக்கேன்., செஞ்சுக்கலாம், கடையில எல்லாம் எதுவும் வாங்க வேண்டாம்”… என்று சொல்லிவிட்டு அவனோடு பள்ளி கல்லூரி கதைகள் பற்றியும்., வேலையில் நடக்கும் விஷயங்கள் பற்றியும்., அவன் தேர்வுக்கு எப்படி படித்தான் என்பது பற்றி கேட்டு கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்..
வந்த மறுநாள் வேலை பார்க்கும் அம்மாவிடம் சொல்லி டெஸ்ட் செய்வதற்கு ஆன கிட்டை வாங்கிக் கொண்டாள்… அது பற்றியும்., மருந்து கடைகளில் கிடைக்கும் என்று ஏற்கனவே கீதா சொல்லி இருந்ததால்.., அதை வாங்கி வரச்சொல்லி எழுதிக் கொடுத்திருந்தால் அந்த அம்மாவும் மாலை வேளையில் வேலைக்கு வரும்போது வாங்கி வந்தார்.., என்பதால் அன்று அவள் சோதனை செய்து பார்க்கவில்லை…,
மறு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இரவு வேலையில் இருந்து வந்த முகிலன்..,
மறு நாள் காலை மதுரை கோர்ட்டில் ஒரு வேலை இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு வந்து விடுவேன் என்று சொல்லி கொண்டிருந்தான்…